9/24/2012

தீர்மானம்

Tamil Literature Ilakkiyam Papers
கிராமியப் பெருவெளியில்
கைவினைப் பொருட்கள் பெருமன்றத்தில்
ஒல்லு
உலக்கை
மத்து
அம்மி
உரல்
இராயிக்கல்
குழவிக்கல்
கொக்கரை
சவடிமுள்
சிவிறி
விசிறி
ஏற்றம்
கமலை
முதலான எல்லாமும்
ஊக்கக் களிப்புடன் பங்கேற்று
நிறைவேற்றி அனுப்பின
ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றை!
14 மணிநேர மின்வெட்டு 
கல்நெய் விலையுயர்வு
முதலானவற்றைப் பாராட்டி
நன்றி தெரிவிப்பதோடு
அவற்றை இன்னும் 
அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல 
வலியுறுத்துகிறோம் என்று!!

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடுத்த கட்டத்துக்கு தயாராக சொல்லுங்க...

மின் வெட்டு 324 மணிநேரம் ஆகும் நிலை வரும்...

வாருங்கள் கற்காலம் நோக்கி செல்வோம்...

பூங்குழலி said...

பார்த்து உங்க கவிதையை அரசு கொள்கையா அறிவிச்சிட போறாங்க