9/05/2012

விடை தெரியாத் தகப்பன்


பள்ளிக்கதவு மூடிவிடுமென்கிற
அம்மாவின் விரட்டுதலில்
தங்கையைக் கட்டியணைக்காமல்
வந்து விட்டேனே?
தவியாய்த் தவிப்பாளே??
வீட்டுக்குப் போனதும்
எனதன்பைத் தெரிவியுங்களப்பா!
அது உங்களால் முடியாது!!
ஒரு குழைந்தைக்கும்
ஒரு குழைந்தைக்கும்
இடையில் நீங்கள் 
குழைந்தை மொழி தெரியாத
வேற்றாள்தானே அப்பா??

8 comments:

வருண் said...

நான் கவிதையை சரியா புரிஞ்சுக்கிட்டு அப்புறம் பின்னூட்டம் இன்னொண்ணு போடுறேன். இன்னும் புரியலைனு சொல்லத்தான்..

மருதநாயகம் said...

இன்று பள்ளி திறந்துவிட்டதா?

பழமைபேசி said...

அகோ... டென்னசியில பள்ளி திறந்து வெகுநாட்கள் ஆச்சுது!!

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி

குழந்தைக்கும் குழந்தைக்கும் நடுவில் நீங்கள் ஏன் வேற்றாளாக ... அப்பா - கவிதை அருமை - ( ஆமாம் குழந்தையா குழைந்தையா ) நல்வாழ்த்துகள் மணி - நட்புடன் சீனா

பழமைபேசி said...

வணக்கம் அய்யா! நலமா??

குழைமை - குழமை - குழந்தை

குழைந்து பேசும் மழலையைச் சுட்டும் பொருட்டே “குழை”ந்தை எனக் குறிப்பிட்டேன். நன்றி!!

vasu balaji said...

yes

திண்டுக்கல் தனபாலன் said...

குழைந்து குழைந்து ஒரு கவிதை... அருமை...

வருண் said...

*** பழமைபேசி said...

வணக்கம் அய்யா! நலமா??

குழைமை - குழமை - குழந்தை

குழைந்து பேசும் மழலையைச் சுட்டும் பொருட்டே “குழை”ந்தை எனக் குறிப்பிட்டேன். நன்றி!!***

தலைவர் சீனாவுக்கே தமிழ்ப் பாடமா!

நானும் கேகலாம்னு இருந்தேன். அவரு கேட்டுட்டாரு!! :)

------------


நன்றி, சீனா ஐயா, கடைசியில் கவிதையை புரிய வச்சுட்டீங்க! :))