












எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
==================================
நேற்றைக்கு வீட்டுக்கு தெரிஞ்சவங்க வந்திட்டு இருக்காங்கன்னு சொன்னவுடனே, எத்தனை பேர் வர்றாங்கன்னு கேட்டோம். அவரும், அவரோட பொண்டாட்டி ரெண்டு பேரும் வர்றாங்கன்னு பதில் வந்துச்சு. நாமளும் மேலதிகமா மூனு இருக்கைகளை எடுத்துப் போட்டோம்.
“இப்ப எதுக்கு இங்க எச்சா ஒரு இருக்கையப் போட்டு இருக்கீங்க?”
”அவரும், அவர் பொண்டாட்டி ரெண்டு பேர்னு சொன்னீங்களே?”
”அடக் கடவுளே! அவரும் அவர் பொண்டாட்டியுமா மொத்தம் ரெண்டு பேர் வர்றாங்கன்னு சொன்னேன்! அவர் ஒன்ன வெச்சிட்டே படாத பாடு பட்டுட்டு இருக்காரு பாவம், நீங்க வேற!”
“இஃகி!”
==================================
படிச்சவங்ககூட, தான் பிறந்த தேதிய சர்வ சாதரணமா சொல்றாய்ங்க ஊர்ல... பிறந்த தேதி என்பது பேணிப் பாதுக்காக்க வேண்டிய தகவல்னு யாருக்கும் தெரியுறதே இல்ல. கணினி யுகத்துல இது அதிமுக்கியமான தகவல்யா.... அல்லாங்காட்டி, உங்களைப் பற்றின தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கு!
அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!
==================================
அன்பர்களுக்கு, நத்தார் தின நல்வாழ்த்துகள்!
மக்களே, வணக்கம்! மனநிறைவோடு தாயகம் வந்து சேர்ந்தேன். தொலைபேசியில் அழைத்த அன்பர்களுக்கு நன்றி; நெடுநேரம் அளவளாவ இயலாமைக்கு பொறுத்துக் கொள்ளவும்.
வந்து சேர்ந்த உடனேயே டில்லி சென்றாக வேண்டிய அலுவல். அங்கே தமிழக அரசின் விருந்தினராக தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அனுபவம் மற்றும் மேலதிக நிழல்படங்களை வாய்ப்புக் கிட்டும் போது இடுகையாக இட வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் பூனா நகருக்கு வந்திருந்தேன். அதன் பின்னர் தற்போதுதான் வங்து இருக்கிறேன். ஆக மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே எமது கோவை வாசம்.
கோவையிலே வளர்ச்சி என்பதை விட, டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக ஓங்கி இருப்பதைக் காண முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.
எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு!