4/27/2012

நன்றி

வாழிய நற்றமிழ்!

எனக்கான வலைதளத்தில், என் நினைவுகளையும் சிந்தனைகளையும் வடித்துக் கொண்டிருந்த இவ்வெளியவனுக்கு, பல மேடைகள், அரங்கங்கள், தமிழ் விழாக்கள், பள்ளி நிகழ்ச்சிகள் என எண்ணற்ற இடங்களில் எனக்கானதொரு இடம் கொடுத்து, இன்றைக்கு நாடளாவிய இருபத்து ஐந்தாண்டு கால வரலாற்றுப் பின்னணி கொண்ட ‘வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை’யின் நிர்வாகக் குழுவில் இடம் பெறச் செய்த வட அமெரிக்காவாழ் தமிழர்கட்கும், வெள்ளி விழா கண்டு கொண்டிருக்கும் பேரவை ஆர்வலர்களுக்கும், தமிழ்க்கட்டமைப்புக்குப் பணியாற்ற ஏதுவாய் இருக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

பேரவைத் தேர்தல் அலுவலரின் அறிக்கை:

9 different Sangams & Life Members nominated the 9 FeTNA board members. 26 total Delegates and Life Members were involved in this nomination process either as "Proposed by", "Seconded by" or "the nominee" himself.

This represents the wide involvement of more than 1/3 of the total voting eligible members of 2012.

Silver Jubilee year of FeTNA really show the enthusiasm and greater involvement of majority of the Tamil Sangams, let us all work together and strengthen FeTNA and plan for the next 25 years.

Thanks again for all your participation and co-operation.

Congratulations to President Dr.Dhandapani and his entire team.

President : Dr.Dhandapani Kuppusamy - Pani Nilam Tamil Sangam - Charleston SC
Vice President : Thiru.Peter Yeronimuse - Greater Washington Tamil Sangam - DC
Secretary: Thiru. Manivasagam M(பழமைபேசி)- Mid-South Tamil Sangam - Memphis - TN
Joint Secretary : Thirumathi. Senthamarai Prabhakar - Charlotte Tamil Sangam - NC
Treasurer : Thiru. Thangamani Paulsamy - Greater Atlanta Tamil Sangam - GA
Director 1 : Thiru.karu MalarSelvan - FeTNA Life Member - Houston - TX
Director 2 : Thiru.Job Daniel - Missouri Tamil Sangam - MO
Director 3 : Thiru.Piragal Thiru - Canadian Tamil Congress - Canada
Director 4 : Thiru.Sarangapani Kugabalan - Ilangai Tamil Sangam - USA

This concludes the Election process of 2012-14, the new board will assume office during the FeTNA Silver Jubilee Convention at Washington DC.

Nandri
Sivanandam Mariyappan
2012-14 FeTNA Election Officerசெய்தியறிந்து பாராட்டியவர்களுக்கு மிக்க நன்றி! நன்றிக்குக் கைமாறாக இயன்ற அளவு உழைப்பினைத் தரவும் முயற்சிக்கிறேன்!!

4/21/2012

கவனகக் கலை!!

தமிழ் மக்களின் பழங்கலைகளில் கவனகக் கலையும் ஒன்று. கவனகம் என்பது ஒரே நேரத்தில் தன்னைச்சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி முடிவில் தொகுத்துக் கூறுவதாகும். இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவம்.

நமது முன்னோர்கள் நூறு நிகழ்வுகள்வரை நினைவில் நிறுத்திச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசர்களை மகிழ்விக்கவும், செல்வந்தர்கள் மத்தியிலும் இருந்து இந்தக் கவனகக் கலையைச் செய்திருக்கின்றார்கள்.அவர்களுள் முக்கியமானவர்கள்.

செய்கு தம்பிப் பாவலர்
சிறிய சரவணக்கவிராயர்
தே.போ. கிருட்டிணசாமி
பாவலர் நா.கதிர்வேல் பிள்ளை
அட்டாவதானியார்
அச்சுத உபாத்தியாயர்
அரங்கநாதக்கவிராயர்
அப்துல்காதர்
அரங்கசாமி அய்யங்கார்
சரவணக் கவிராயர்.

அரண்மனைகளிலும் அடுக்குமாடிச் செல்வந்தர்கள் வீடுகளிலும் மட்டுமே காண முடிந்த கவனகக்கலையைத் தமிழகத்தில் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் கோவில்பட்டி இராமையா அவர்களையே சாரும். அவர் கண்பார்வை இல்லாதவர். பத்து வகையான கவனகக்கலை நிகழ்ச்சி நடத்துவதில் வல்லவர். அவர் இன்று உயிருடன் இல்லை.

அவருக்குப்பின் கவனகக்கலையைத் தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் (தசாவதானி) இராமையா அவர்களுடைய புதல்வர் பதினாறுகவனகர் திருக்குறள் கனகசுப்புரெத்தினம் அவர்களையே சாரும். அவரை இன்றைய கவனகக் கலையின் தந்தை என்று சொல்லலாம்.

அடுத்த கவனகர் செங்கல்பட்டு திருக்குறள் இரா.எல்லப்பன் அவர்கள். இவர் திருக்குறளில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட கவனகங்களைச் செய்யக் கூடியவர்.

எண் கவனகம், எழுத்து கவனகம், வண்ண கவனகம், பெயர் கவனகம், கூட்டல் கவனகம், கழித்தல் கவனகம், பெருக்கல் கவனகம், தொடுதல் கவனகம், மணியடித்தல் கவனகம், ஈற்றடிக்கு வெண்பா எழுதுதல், சிலேடை வெண்பா எழுதுதல், கட்டளைக் கலித்துறை எழுதுதல், சூழ்நிலைக்கேற்ப இசைப்பாடல் எழுதுதல், மாயக் கட்டம், பிறந்த நாளுக்குக் கிழமை கூறல், கனமூலம் கூறல், இருமடி கூறல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், நாலடியார், திருக்குறள் கூறுதல், கழித்தல் கவனகம், கனமூலம் கூறுதல், இருமடி கூறுதல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், சூழ்நிலைக்குப் பாடல் எழுதுதல் எனப் பலவகையான கவனகங்கள் உள்ளன.

கணினியின் செயலியைப் போல மனிதனின் மூளையானது செயல்படுவதை இக்கலை வெளிப்படுத்துகிறது. கீழ்க்கண்ட காணொலியைக் கண்டு கவனகத்தின் கூறுகளை நாம் அறிந்து கொள்ளலாம். நம்மில் சிலர் இதுவரை கவனகம் நிகழ்ச்சியைக் காணாதவர்களாக இருக்கக் கூடும் கீழ்க்கண்ட சுட்டியைச் சொடுக்கி அதனை நுகர்ந்து பயன் பெறலாம்.
 

இந் நிகழ்ச்சியில் இருப்பவர் (கனக சுப்புரத்தினம் பதினாறு நிகழ்ச்சிகளை நடத்துபவர். இவரின் தந்தையின் (இராமையாப் பிள்ளை) நிகழ்ச்சி ஒன்றினை, பள்ளி மாணவனாக இருந்த வேளையில் இராமச்சந்திராபுரம் உயர்நிலைப் பள்ளியில் வைத்துக் கண்டிருக்கிறேன். அவர் பார்வையற்றவராய் இருந்தும் இந் நிகழ்ச்சியை மிக அருமையாக நடத்துவார்.

அவர்தம் வரிசையில், எழுபது கவனகங்களை நடத்தும் ஆற்றல் கொண்ட மற்றுமொரு வல்லவர்தான் முனைவர் கலை.செழியன் அவர்கள் ஆவார். அமெரிக்கத் தமிழர்களுக்கும், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் இவ்வரிய கலையைக் கற்பிக்க வருகிறார் முனைவர் கலை.செழியன் அவர்கள்.

நீங்கள் அனைவரும், அவரைக் கண்டு, பழகி, அவர்தம் பயிலரங்கத்தில் பங்கேற்றுப் பயன்பெற இன்றே வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழாவுக்கு முன்பதிவு செய்து கொள்ளூங்கள். நுழைவுக் கட்டணத்துக்கான பத்து விழுக்காட்டுக் கழிவு பெற, ஏப்ரல் முப்பதாம் நாள் கடைசி நாள் என்பதைக் கவனத்தில் கொள்க. வெள்ளி விழாவுக்கு வாங்க! கலைகளை எல்லாம் போற்றுங்க!! விபரங்களுக்கு: www.fetna.org

தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

4/17/2012

FeTNA: வெள்ளி விழாக் கொண்டாடுவோம்!!
அமெரிக்கத் தமிழர் திருவிழா

2012 July 6, 7, & 8

The Joseph Meyerhoff Symphony Hall
1212 Cathedral Street Baltimore 21201

Welcome to FeTNA Silver Jubilee Celebrations!

Don't miss it!! Register early and Get 10% discount before April 30, 2012 www.fetna.org

வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள்
வைகைப் புயல் வடிவேல்
பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
அயன்கரன் இசைக்குழு
பலகுரல் மன்னன் முகேசு
வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை
பகடிக் கலைஞன் மதுரை முத்து
இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன்
பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி
முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை
மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர்
தமிழ் இலக்கியக் கூட்டம்
வலைஞர் கூடல்
தொடர் மருத்துவக் கல்வி
இலக்கிய விநாடி வினா
தொழில் முனைவோர் கூட்டம்
யோகாசனப் பாசறை
தமிழ்த்தேனீ
மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள்
பாட்டரங்கம்
பட்டி மண்டபம்
உரைவீச்சு
வெள்ளி விழா மலர் வெளியீடு
பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு
தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள்
இன்னும் பல நிகழ்ச்சிகள்

Don't miss it!! Register early and Get 10% discount before April 30, 2012 www.fetna.org

திருமண வாழ்த்து


நற்துணை கொண்டு இல்லறம் புகுந்த நண்பன், பேரன்புமிக்க வலைஞர் தரங்கம்பாடி வட்டம் தலைச்சங்காடு கண்ணன் என்கிற T.M.R.யோகேசுவரன் அவர்களைக் கீழ்க்கண்ட பதினாறு பேறுகளும் உற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!!

கலையாத கல்வி;கபடட்ற நட்பு
குறையாத வயது;குன்றாத வளமை
போகாத இளமை;பரவசமான பக்தி
பிணியற்ற உடல்;சலியாத மனம்
அன்பான துணை;தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி;மாறாத வார்த்தை
தடையற்ற கொடை;தொலையாத நிதி
கோணாத கோல்;துன்பமில்லா வாழ்வு
எனப்பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்வாயே!

Your wedding day is full of joy;
Tomorrow you can't see.
But one thing's sure for the two of you:
The best is yet to be!
May you obtain the SIXTEEN wealths
Education, Age
Friendship, Prosperity
Youth, Physique
Mind, Companion
Perseverance, Popularity
Truthiness, Charitableness
Funds, Management
Life and Love
and wish you a happy married life!!

இவண்,
வட அமெரிக்க தமிழ் வலைஞர் பேரவை.

4/14/2012

அமெரிக்கத் தமிழர் திருவிழா அழைப்புஅமெரிக்கத் தமிழர் திருவிழா

2012 July 6, 7, & 8

The Joseph Meyerhoff Symphony Hall
1212 Cathedral Street Baltimore 21201

Welcome to FeTNA Silver Jubilee Celebrations!

Don't miss it!! Register early and Get 10% discount before April 30, 2012 www.fetna.org

வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள்
வைகைப் புயல் வடிவேல்
பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
அயன்கரன் இசைக்குழு
பலகுரல் மன்னன் முகேசு
வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை
பகடிக் கலைஞன் மதுரை முத்து
இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன்
பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி
முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை
மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர்
தமிழ் இலக்கியக் கூட்டம்
வலைஞர் கூடல்
தொடர் மருத்துவக் கல்வி
இலக்கிய விநாடி வினா
தொழில் முனைவோர் கூட்டம்
யோகாசனப் பாசறை
தமிழ்த்தேனீ
மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள்
பாட்டரங்கம்
பட்டி மண்டபம்
உரைவீச்சு
வெள்ளி விழா மலர் வெளியீடு
பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு
தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள்
இன்னும் பல நிகழ்ச்சிகள்

Don't miss it!! Register early and Get 10% discount before April 30, 2012 www.fetna.org