சாப்புட்டீங்களாப்பா
உதிர்ந்த வாஞ்சையான
சொல்லோடு
நெஞ்சுக்கதகதப்பில்
பொரிந்தது!
பொரிந்து உயிர்த்த
முத்தக்குஞ்சினை
தன்னுள் வாங்கியபின்
யாதுமறியாததாய்
துள்ளிக்குதித்து உள்ளே ஓடி
அம்மா இங்கே வா வா...
சொல்லிக்கொண்டிருக்கிறது
தாய்ப்பறவை!!
1 comment:
அருமையான சிந்தனை வரிகள்... பாராட்டுக்கள்...
Post a Comment