9/12/2012

உசாத்துணைவன்


Old madal house for sale - Tamil Nadu
பிள்ளைகளுக்குக் கண்ணாலம்
குடும்பத்தில் சண்டை சச்சரவு
ஊருக்குள் ஏட்டி போட்டி
கொடுக்கல் வாங்கல்
காதுகுத்து கெடாவெட்டு
இவைகுறித்தான
முடிவு எடுக்கவியலா
தருணங்கள் வரும் போதெலாம்
யாருடனும் பேசமாட்டார் அய்யன்!
வீட்டுக் கொட்டத்தில்
அவருக்கேயான இடமொன்று உண்டு
எளிமையான பாயில்
இலவம்பஞ்சுத் தலையணையில்
தலைவைத்து மேல்நோக்கியபடி
ஆழ்ந்திருப்பார் அய்யன்!

அய்யன் படுத்திருக்கிறார் என்றால்
யாருமே அந்தப்பக்கம்
நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்
குழப்பத்தில் உள்ளே சென்றவர்
வெளியே வருகையில்
எப்போதும் ஒரு
தெளிவோடு வருவார்!!
அவருக்குப் பின்னான
காலத்தில்
அந்த இடம் அவ்வளவான
புழக்கத்தில் இல்லாது போனது!!

நகரத்தில்
குறுகலான இடத்தில்
கூட்டுக்குடும்பம் நடத்திவருகிற
எங்கள் வீட்டில்
பிணக்கு முட்டல் மோதல் 
எழுகிற போதெலாம்
அப்பா ஊருக்குச் சென்று விடுவார்;
ஓரிரு நாளில்
அவர் திரும்பியதும்
வீடு இயல்புக்கு வந்து விடும்!!

அப்படியாக ஊரில்
அப்பாவுக்கான எதோவொன்று இருக்கிறது
அது என்னவாயிருக்கும் எனக்கண்டறிய 
நாட்கள் வெகுவாயிற்று!
எனக்கும் ஆசை வந்துவிட்டது
தன்னைப் பார்த்து
வேண்டுவோர்க்கெலாம்
தெளிவான பாதையை
திடமான முடிவினை அள்ளித்தரும் 
எங்கள் வீட்டு 
விட்டத்தைப்
பார்க்க வேண்டும்!!

2 comments:

ராஜ நடராஜன் said...

பழைய நினப்புதான்!பழம பழைய நினப்புதான்.

ராஜ நடராஜன் said...

அசல் தளப்தியெல்லாம் பெங்களூருக்கு அனுப்பி விட்டுட்டு இல்வம்பூ சர்க்கரையா இன்னொரு தளபதியா!

என்ன கொடுமை வவ்வால்!