9/09/2012

தனா


டே சின்ராசூ...
கருக்கடையா இருந்துக்கடா
பதனமாக் களத்து மேட்டைக் கூட்டி 
நறுவிசு பண்ணிப்போடு!

எறவாரத்துத் தூக்குப்போசில 
இருக்குற கஞ்சியக் குடிச்சபின்னால
மிச்சத்தை நாய்க்கு ஊத்தீட்டு
கழுவிக் கமுத்தீரு!!

சோளக்காடு
வய்க்கப்போருன்னு
கள்ளுக்கார வங்கணத்தி பொறவால திரிஞ்சி 
பொழுதை வீணாக்கீறாத!!

இன்னிக்கு மேக்க இருந்து
உங்க மாமன் வர்ற நாளு
சூதானமா இருந்துக்கடா!

எல்லாஞ்செரி
மாமங்கோட
தனா வர்றாளா??

(படம் உதவி: http://www.desipainters.com/)

2 comments:

ராஜ நடராஜன் said...

காளமேகப் புலவர் மறுபடியும் கனவில் வந்துட்டாரா:) வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

ஊர்நெனப்புங்க!!