5/19/2008

இறைவணக்கம்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென்கடிக் குங்கும தோயம் -என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத்துணையே!


வணக்கம்! எனக்கென ஒரு சிறு இடத்தை இணையத்தில் பிடித்து, அதில் எனக்கு தெரிந்தவற்றை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்வு கொள்கிறேன். மேலும், எனது முயற்சிக்கு ஊக்கத்தையும் பாராட்டுக்களையும் அளித்த அன்பர்களை நன்றி பாராட்டி, பயணத்தை துவங்கும் உங்கள் பழமைபேசி.