9/16/2012

சிரிப்புச்சாயம்


ஓடாதே நில்!
ஓடாதே நில்!!
இஃகும்.. நான் நில்ல மாட்டேன்
நான் நில்லவே மாட்டேன்
ஓடிச் சென்று ஓய்ந்தபின்
மெலிதாய்ப் புன்னகைத்து நின்றவளின்
கண்களில் இருந்து வடிந்தது
பிடிவாதத்தின் தோல்வி!!
அக்கணமே அது நீங்கி
வெளியெங்கும் 
கொட்டிக்கிடந்தது
சிரிப்புச்சாயம்!
நானும் கொஞ்சமதை எடுத்து
என் உதடுகளில் பூசிக் கொண்டேன்!
நானும் கொஞ்சமதை எடுத்து
என் உதடுகளில் பூசிக் கொண்டேன்!!

2 comments:

மாதேவி said...

மழலை சிரிப்புக்கு ஈடுண்டோ.

எம்முடனும் ஒட்டிக்கொள்கிறது படமும் கவிதையும்.

யசோதா.பத்மநாதன் said...

நல்லதொரு காட்சி விரிந்தது கவிதையில்.

அழகு கவிதையும் காட்சியும்!