9/08/2012

ஆண் காஃபி


வைகறையாமத்தில்
போயிக் காப்பி போடு
போயிக் காப்பி போடு
தொடர்ந்து கேட்பதைக்
கண்டுகொள்ளாது
இன்றைக்கென்னமோ
காக்கைகள் கரைவது
கூட்டொலியாயும்
வலுவாயுமிருக்கிறதே?

வினவியதற்கு
விடை தொடர்ந்தது
காக்கையுலகிலும்
பொருளாதார நெருக்கடி
காக்கையவை முடக்கம்
என்பது காரணமாயிருக்கலாம்!

ஆண் பெண் பேதமின்றி
சமத்துவம் போற்றும் நாளாக
அவர்கள் கொண்டாடுவதுகூட
கரைதல் பேரொலிக்கான 
காரணமாயிருக்கலாம்
பணிவாய்ப் பிறந்தது
மறுதலிப்பு!!

இதோ
வழக்கத்துக்கு மாறாய்
இன்று
ஆண் காஃபி
எங்கள் வீட்டில்!!

1 comment:

Yaathoramani.blogspot.com said...

வகையில் அனுபவம் கவிதை என இருந்ததை
மிகவும் ரசித்து அனுபவித்தேன்