9/25/2012

கொழுக்கட்டை

பிள்ளையார் நாள்
மந்தமாய் நகரும்
நீண்ட வரிசை!

நீங்கொன்னு தின்னுங்க
நானொன்னு திங்கிறேன்
கொடுத்தவரிடமே
ஒன்றைக் கொடுத்துவிட்டு
அவர்மீது வைத்தகண் மாறாமல்
குழைந்து சிரித்துக் கொண்டே
தின்னுகிறது குழந்தை!!

உறைந்து
செயலற்றுப் போய்
நிற்கிறார்
கொழுக்கட்டைக்காரர்!

பாவம்
பின்னால்
நிற்கும்
அந்த நீண்ட வரிசை!!

2 comments:

வருண் said...

அதை கொழுக்கட்டைனுதான் சொல்லனுமா? நீங்கதான் சார், தமிழ் வளர்க்கும் தெய்வம்! :))))

வருண் said...

ஆமா, அதை ஏன் கொழுக்கட்டைங்கிறா?? விளக்கம் தரவும்! :))