பறவையானது
மரத்தின் கிளையில்
அமர்ந்திருப்பது
கிளையின் மீதான
நம்பிக்கையில் அல்ல!
தன்னால் பறந்துவிட
முடியும் என்பதாலே!!
பறக்கும் விமானத்தில்
அமர்ந்திருந்த நான்
எதன் மீது
நம்பிக்கை வைப்பது?
இருப்பினும்
எனக்கே தெரியாத
எதோ ஒன்றின் மீது
ஊன்றிய என் நம்பிக்கையின்
விளைவாகப் பிறக்கிறது
இக்கவிதை!!
1 comment:
அதானே...?
நம்பிக்கை மீது நம்பிக்கை வைக்க வேண்டியது தான்...!
Post a Comment