12/06/2008

சல்லடங் கிழிஞ்சு போச்சு!

மாந்தநேய அன்பர்களே! வணக்கம்!! உங்கள் அன்போடும, ஆதரவோடும் தமிழ்மணம் நிர்வாகம் எம்மை நட்சத்திரப் பதிவராக்கி இருக்கிறார்கள். நானும் என்னால் இயன்ற அளவு பதிவுகளை இட்டு வருகிறேன். அவற்றுக்கு நீங்களும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். மிக்க நன்றி! நாளொன்றுக்கு இரு பதிவுகள் என்பது எம் இலக்கு, காலையில் ஒன்று, மாலையில் ஒன்று. ஆனால், இன்று எமக்கு இங்கு உள்ள நவசக்தி தமிழ பண்பாட்டுக் குழுமத்தில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் இது ஒரு முன் கூட்டிய பதிவு, அதாவ‌து காலையிலேயே இடும் இரண்டாவது பதிவு.

நாம் அவ்வப்போது காண்கின்ற சொற்களில் சிலவற்றையும், அவ‌ற்றுக்கான‌ கிராம‌, நாட்டுப்புற‌ ந‌டையையும் பார்க்க‌லாம்.

டிஸ்கி: பொறுப்பி (பொறுப்பு அறிவித்த‌ல், பொறுப்பி ஆகிவிட்ட‌து! இஃகி!ஃகி!!)
டவுசர்: ச‌ல்லட‌ம்
பாஸ்: மொத‌லாளி
ஈஸி: சுலுவு (சுல‌ப‌ம்)
ஸாரி: ம‌ன்னிக்க‌ணும்
ஃபேமஸா?: பிர‌ப‌லிய‌மா(பிர‌ப‌ல‌மா?)
த‌ம்ப்ஸ் அப்: மேல்ப் புடி
த‌ம்ப்ஸ் ட‌வுன்: கீழ்ப் புடி
ஃபுல்: முழு
ஆஃபீஸ்: வேலையெட‌ம்
ப்ளீஸ்: த‌ய‌வு செஞ்சி

சரிங்க, என்னோட‌ ச‌ல்லட‌ங் கிழிஞ்ச‌ க‌தைய‌ப் பாக்க‌லாங்க‌ இனி, எப்ப‌வும் போல‌ ந‌ம்ம‌ளோட‌ எழுத்து ந‌டையில‌.

நான் பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சுட்டு, மேல கோயமுத்தூரு போயிப் படிக்குறதா, இல்ல மேக்க பொள்ளாச்சீல போயிப் படிக்குறதான்னு ஒரெ கொழப்பரேசன். ஆமுங்க, அப்பிடி ஒரு கொழப்பரேசன்! மாக்கினாம்பட்டி அண்ணங் கிட்டப் போயி என்ன படிக்குறது, எங்க படிக்குறதுன்னு வெவரமாக் கேட்டுட்டு வாடான்னு சொல்லிச் சொன்னாரு எங்க அப்பா.

நானும் அந்தியூர்ல இருந்து கெளம்பி, மாக்கினாம்பட்டி நாச்சிமுத்து பல்தொழில்க் கல்லூரிகிட்ட எறங்கி, அவிங்க தோட்டத்துக்கு நடந்து போனன். அண்ணன், தேங்கா மஞ்சில இருந்து கவுறு, அது இதுன்னு பலதுஞ் செய்யுற தொழிலும் தோட்டத்துலயே செய்யுது.

நான் போன ஒடனே, அவிங்க வீட்ல வேலை செய்யுற ருக்மணி ஒரு தட்டத்துல உளுந்து வடை, அதானுங்க மெதுவடை ஒரு தட்டத்துல, சிறுசு சிறுசா நாலோ அஞ்சோ இருக்கும்னு நெனைக்குறேன், கொண்டு வந்து வெச்சது. அப்பொறம் லோட்டாவுல தண்ணியுமு. அண்ணனும் வந்துச்சு. வந்து பேசிட்டு, நீ கோயமுத்தூருக்கே போயர்றான்னு சொல்லுச்சு. எனக்கும் அதுல சந்தோசந்தேன்.

அப்பறம், எதுக்கு எல்லா வடையயும் காஞ்ச மாடு கம்புல பூந்த மாதர திங்கோணுமின்னு, தட்டத்துல இருந்த வடைல ரெண்டோ மூணோ தின்னு போட்டு, மிச்சத்தை வெச்சுட்டேன். அப்புறம் நங்கை(அண்ணி)யா காப்பி கொண்டாந்து குடுத்தாங்க. குடிச்சுப் போட்டு, நான் போய்ட்டு வாறேன்னு சொல்லிக் கெளம்பி தோட்டத்து வாசக் கதவுக்கே வந்துட்டேன். தோட்டத்துல வேலை செய்யுற சின்னான் ஓடி வந்து, உங்களப் பண்ணாடி கூப்புடுறாங்கன்னு சொன்னான்.

நானும் நங்கையாதான், காய்கறி எதனாச்சும் எங்கம்மாகிட்ட தரச் சொல்லிக் கூப்புடுதாக்கும்னு நம்பிப் போனேன். அண்ண‌ன் வந்து, "என்னடா, எங்கிருந்து வந்தது இந்த பழக்கம்? இப்பவே வெளிநாட்டுக் கனவோ?? உங்களுக்கு எல்லாம் இப்பவே நாகரிகங் கேக்குதோ?"ன்னு வெய்யு வெய்யுன்னு வெய்யுதுங்கோ. எனக்கு ஒன்னும் புரியலை!

அப்பறமாக் கடைசில சொல்லுறாரு, "ஏண்டா, ஒனக்கு அந்தத் தட்டுல இருக்குற அந்த ரெண்டு வடை எச்சாப் போச்சோ? ஏன்டா, தலைக்கு செருப்பு கேக்குறீங்க??"ன்னாரு. அது மட்டுமா? அந்தத் தட்டுல இன்னும் ரெண்டு வடை வெயுங்கோ, திங்றானா, இல்ல என்ன பன்றான்னு பாப்போம்ன்னு சொல்ல, அந்த ருக்கு வந்து மறுக்காவும் ரெண்டு வடை சேத்தி வெக்க, இருந்து தின்னு போட்டுத் தானுங்க வந்தன் நானு. இப்பிடி அன்னைக்கி என்னோட சல்லடங் கிழிஞ்சு போச்சுங்க! அந்த பயம் இனியும் என்னியவுட்டுப் போகுலைன்னா பாத்துகோங்க!!

மொழி தப்பினவன், வழி தப்பினவன்!

18 comments:

Mahesh said...

நல்லா அரை டசன் வடையத் தின்னு போட்டு பாடம் படிச்ச கதை வேற...

ஆமா...அதென்ன தலைக்குச் செருப்பு?

பழமைபேசி said...

//Mahesh said...
நல்லா அரை டசன் வடையத் தின்னு போட்டு பாடம் படிச்ச கதை வேற...//

அஃக!ஃகா!! வாங்கிக் கட்டுன எனக்கல்ல தெரியும்? அண்ணன் நொம்பக் கண்டிப்பு, இன்னும்! அவரைக் கண்டாலே பயம்!!!

//ஆமா...அதென்ன தலைக்குச் செருப்பு?
//

அதுக்கொரு பதிவு வரும்.... :-o)

ஆறாம்பூதம் said...

அப்புனு ஆர அடிக்க இந்த விளக்கம்... ஏஞ் சாமி... கடசில போட்டு தாக்கிட்டியே கண்ணு... ஆமா தமிழ் பண்பாட்டு கலகத்தில ... ஐயோ சாமி .. கழகத்தில ... என் சந்தேகத்தயும் கேளு ராசு.. இந்த நமீதா புள்ள .. ஏன் எல்லாரயும் மச்சான் மச்சானு சொல்லுது... மச்சானு சொன்னா நம்ம ஊரு பக்கம் அதுக்கு அர்த்தம் வேர... ஆனா இந்த நமீதா புள்ள அல்லாரயும் சொல்லுதாம்ம்... பொன்னு பையா நல்லா இருப்ப..அஙக இங்க கேட்டு கொஞ்சம் விளக்கம் சொல்லு சாமி... நீ சொல்ற விளக்கத்துல தான் நான் வர தை மாசம் பூ பொரிக்கிர நோம்பிக்கு போயி வேர மாமன் புள்ளய கணக்கு பன்ரதா.. இல்லியானு முடிவு பண்ணோனும்...பாத்தியா கண்ணு என் பொழப்ப..

கபீஷ் said...

//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//

தேவையான கிழியல் தான். இல்லாட்டி இன்னமும் அதே மாதிரி தானே இருந்திருப்பீங்க. :-):-):-):-)

நல்ல அண்ணங்க அவரு...

கபீஷ் said...

//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//

தேவையான கிழியல் தான். இல்லாட்டி இன்னமும் அதே மாதிரி தானே இருந்திருப்பீங்க. :-):-):-):-)

நல்ல அண்ணங்க அவரு...

பெருசு said...

அப்பவே டவிசர் கிழிஞ்சு போச்சா.

கோயந்த்தூர் போனீங்ளா இல்லீயா.

அடுத்த பதிவுல சொல்லுங்க சாமி

கபீஷ் said...

//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//

தேவையான கிழியல் தான். இல்லாட்டி இன்னமும் அதே மாதிரி தானே இருந்திருப்பீங்க. :-):-):-):-)

நல்ல அண்ணங்க அவரு...

பழமைபேசி said...

//பெருசு said...
அப்பவே டவிசர் கிழிஞ்சு போச்சா.
கோயந்த்தூர் போனீங்ளா இல்லீயா.
அடுத்த பதிவுல சொல்லுங்க சாமி
//

அண்ணஞ் சொன்னதைத் தட்டாம கோய்ன்த்தூரு போய்ட்னல்லோ....

பழமைபேசி said...

//கபீஷ் said...
//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//
தேவையான கிழியல் தான். இல்லாட்டி இன்னமும் அதே மாதிரி தானே இருந்திருப்பீங்க. :-):-):-):-)
நல்ல அண்ணங்க அவரு...
//

வாங்க! ஆமுங்க!!

பழமைபேசி said...

//வசந்த் கதிரவன் said...
நீ சொல்ற விளக்கத்துல தான் நான் வர தை மாசம் பூ பொரிக்கிர நோம்பிக்கு போயி வேர மாமன் புள்ளய கணக்கு பன்ரதா.. இல்லியானு முடிவு பண்ணோனும்...பாத்தியா கண்ணு என் பொழப்ப..
//

வாங்க வசந்த்! காலத்தே பயிர் செய்!! இதும் பெரியவிங்க சொல்லி வெச்சதுதான். காலந் தப்பிடப் போகுது, போயி மொதல்ல சொந்தத்தை வளைச்சிப் போடுங்க!!!

ஆறாம்பூதம் said...

பொன்னான்..நான் சித்த பரும்படியா பேசற ஆளு.. அப்ப ..என்ற அப்புச்சி அடிக்கொசரம் சொல்லுவாரு ... ஏண்டா ..தலைக்கு செருப்பு கேட்டுச்சாக்கும்னு...

பழமைபேசி said...

//வசந்த் கதிரவன் said...
பொன்னான்..நான் சித்த பரும்படியா பேசற ஆளு.. அப்ப ..என்ற அப்புச்சி அடிக்கொசரம் சொல்லுவாரு ... ஏண்டா ..தலைக்கு செருப்பு கேட்டுச்சாக்கும்னு...
//

அஃக்!ஃகா!!

நசரேயன் said...

இதுக்குதான் கோவம் கட்டணுமுன்னு சொல்லுறது

பழமைபேசி said...

//நசரேயன் said...
இதுக்குதான் கோவண‌ம் கட்டணுமுன்னு சொல்லுறது
//

இதையாவது கிழிச்சாங்க, அதை உருவி விட்டுடுவாங்களே தளபதி?

அது சரி said...

ஹும்....எங்க டவுசரு ச்சே சல்லடமெல்லாம் நெதம் கிளிஞ்சிக்கினு தான் இருக்கு...

அதை விடுங்க...உங்க அண்ணன் வீட்டு அட்ரஸ் குடுங்க...வடை சாப்ட்டு நெம்ப நாளாச்சி!

அது சரி said...

//
பழமைபேசி said...
//
இதுக்குதான் கோவண‌ம் கட்டணுமுன்னு சொல்லுறது
//

இதையாவது கிழிச்சாங்க, அதை உருவி விட்டுடுவாங்களே தளபதி?

//

அது அப்பிடியில்ல...டவுசருக்கு உள்ள ஒரு கோமணம் கட்டணும்...அப்ப தான் டவுசரு கிளிஞ்சாலும் கொஞ்சம் சேஃபா இருக்கும்!

பழமைபேசி said...

//அது சரி said...
அது அப்பிடியில்ல...டவுசருக்கு உள்ள ஒரு கோமணம் கட்டணும்...அப்ப தான் டவுசரு கிளிஞ்சாலும் கொஞ்சம் சேஃபா இருக்கும்!
//

அனுபவம் பேசற மாதிரி இருக்குங்ண்ணா?! அப்பிடீங்ளா?

பழமைபேசி said...

//ஆமா...அதென்ன தலைக்குச் செருப்பு?//

காலுக்குத்தான செருப்பு.... யாராவது, அதிகப்பிரசங்கம் செய்தா அவிங்களச் சொல்லுறது இவன் தலைக்கு செருப்புக் கேக்குறான்னு...