12/29/2008

கொல கொலயா முந்திரிக்கா...

இன்னைக்கு நாம பதியுறது அமிர்தவர்ஷினி அம்மா அவிங்களுக்கான வாசகர் விருப்பம். தொகுப்பில் உதவிய நண்பர், ROCKFORT மகேந்திரன் அவ்ர்களுக்கு நன்றி!

சுத்தி வர்றவரும், வட்டமா ஒக்காந்து இருக்குறவிங்களும் பாடுற பாட்டுங்க இது:


கொல கொல(குலை)யா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா

கொல கொலயா முந்திரிக்கா
கோலார்பட்டிக் கத்திரிக்கா

கொல கொலயா முந்திரிக்கா
கொழ(குழை)ஞ்சு போச்சு கத்திரிக்கா

மாமரத்துல மாங்கா
உன்வாயில ஊறுகா

புழுங்கரிசியத் திம்பேன்
பூட்டத்தான ஒடப்பேன்

வடிச்சதண்ணி சிந்துச்சே
வாரி வாரி நக்கிக்கோ

கொல கொலையா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி!

கொல கொல(குலை)யா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா!!

இந்தப் பாட்டு பாடுறதுக்கு முன்னாலே, அம்மணிகளையும் ஆட்டத்துல சேத்திகிட்டு வட்டமா உக்கார வச்சிட்டு ஆட்டத்துல ஒருத்தர் கொல கொலயா சொல்லிகிட்டே உருமா (துண்டு)மாதிரி ஏதாவதை யாராவது ஒருத்தர் பின்னாடி போட்டுட்டு ஓடி தொட்டு விளையாடறதும் சேர்ந்தாதான் பாட்டுக்கே ஒரு கம்பீரம் வரும்! சொன்ன மகராசரு: ராஜ நடராஜன்

கிட்டி விளையாடுற‌ப்ப‌ பாடுற‌ பாட்டு:


ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!
ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!!

நாலுக‌ர‌ண்டி நல்லெண்ணெய்
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பய்யா
வழிவிடுங்க மீனாட்ச்சி
மீனாட்ச்சியம்மன் கோயில்ல‌
மில்லல் வாங்கிப் போட்டு
காமாட்ச்சியம்மன் கோயில்ல‌
கம்மல் வாங்கிப் போட்டு
தும்பி, துளசி, தூக்கிப்போட்ட நம்பட்டி!

ஈச்சி.. எலுமிச்சி.. டண் டண் டாமுச்சி!!


சின்ன அம்மிணி / முத்துலெட்சுமி-கயல்விழி அவிங்க‌ நினைவூட்டிய‌ பாட்டு:


குத்த‌டி குத்த‌டி சைன‌க்கா
குனிஞ்சு குத்த‌டி சைன‌க்கா
ப‌ந்த‌லிலே பாவ‌க்கா
தொங்குத‌டி டோலாக்கு
அண்ண‌ன் வாராம் பாத்துக்கோ
ப‌ண‌ங்குடுப்பான் வாங்கிக்கோ
சில்ல‌றைய‌ மாத்திக்கோ
சுருக்குப் பையில‌ போட்டுக்கோ
சிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ!

தாயின் மன‌ம் குழந்தையின் பள்ளிக்கூடம்!

43 comments:

குடுகுடுப்பை said...

மறுபதிவா? படிச்ச மாதிரியே இருக்கு

நசரேயன் said...

பாட்டு ரெம்ப நல்லா இருக்கு

நசரேயன் said...

எனக்கு ச்சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சு, நீங்க ரெம்ப பழசு..நீங்க ரெம்ப பழசு..

ராஜ நடராஜன் said...

//கொல கொல(குலை)யா முந்திரிக்கா
நரிய நரியச் சுத்தி வா //

தினமலர் பதிவு போயிட்டு இங்கே ஒடியாறேன்!

இந்தப் பாட்டு பாடுறதுக்கு முன்னாலே அம்மணிகளையும் ஆட்டத்துல சேத்திகிட்டு வட்டமா உக்கார வச்சிட்டு ஆட்டத்துல ஒருத்தர் கொல கொலயா சொல்லிகிட்டே உருமா (துண்டு)மாதிரி ஏதாவதை யாராவது ஒருத்தர் பின்னாடி போட்டுட்டு ஓடி தொட்டு விளையாடறதும் சேர்ந்தாதான் பாட்டுக்கே ஒரு கம்பீரம் வரும்:)

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
மறுபதிவா? படிச்ச மாதிரியே இருக்கு
//

இல்லீங்ளே...இதான் மொதவாட்டி....

பழமைபேசி said...

//இல்லீங்ளே...இதான் மொதவாட்டி....//

இஃகிஃகி!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
//கொல கொல(குலை)யா முந்திரிக்கா
நரிய நரியச் சுத்தி வா //

தினமலர் பதிவு போயிட்டு இங்கே ஒடியாறேன்!

இந்தப் பாட்டு பாடுறதுக்கு முன்னாலே அம்மணிகளையும் ஆட்டத்துல சேத்திகிட்டு வட்டமா உக்கார வச்சிட்டு ஆட்டத்துல ஒருத்தர் கொல கொலயா சொல்லிகிட்டே உருமா (துண்டு)மாதிரி ஏதாவதை யாராவது ஒருத்தர் பின்னாடி போட்டுட்டு ஓடி தொட்டு விளையாடறதும் சேர்ந்தாதான் பாட்டுக்கே ஒரு கம்பீரம் வரும்:)
//

வாங்க அண்ணே, காடி கழுவப் போற அவசரத்துல பதிஞ்சதுல வெவரம் எதையும் சொல்லலை...வந்து சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன்...நீங்களே சொல்லிட்டீங்க, நல்லதாப் போச்சு.

ஆளவந்தான் said...

மெயாலுமே நீர் பழமை பேசி தான்

கபீஷ் said...

//நசரேயன் said...
எனக்கு ச்சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சு, நீங்க ரெம்ப பழசு..நீங்க ரெம்ப பழசு..
//
புதுசு சொல்றாரு கேட்டுக்கோங்க:-)

கபீஷ் said...

கொல கொலயா முந்திரிக்கா எனக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு, இதை போட சொன்ன அமித்து அம்மாவுக்கு நன்னி

தேவன் மாயம் said...

ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!
ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!!///

ஈமிச்சி இலிமிச்சி, இண்டாண்டான்
டாமிச்சி என்று எங்க ஏரியாவில
கபடி ஆடும்போது பாடுவாங்க...

நான் நரேந்திரன்... said...

பழ்ஸ் உங்க வார்த்தையிலேயே சொல்லணும்னா பின்னி பெடல் எடுக்கிறீங்க...அப்புறம் உங்க blog la சின்ன பண்ணாடி போட்டோ புடிச்சி போட்டிருக்கீங் ..அதை எடுத்துட்டு உங்க படத்தை போடுங் சாமி

ஓட்டு பொறுக்கி said...

"குத்த‌டி குத்த‌டி சைன‌க்கா
குனிஞ்சு குத்த‌டி சைன‌க்கா"

நீங்க இன்னும் பள்ளியோடத்த விட்டு வெளிய வரவே இல்ல போல இருக்கு
எப்படிங்க இத எல்லாம் இன்னும் மனசுல வச்சுருக்கீங்க?

பழமைபேசி said...

// ஆளவந்தான் said...
மெயாலுமே நீர் பழமை பேசி தான்
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

//கபீஷ் said...
//நசரேயன் said...
எனக்கு ச்சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சு, நீங்க ரெம்ப பழசு..நீங்க ரெம்ப பழசு..
//
புதுசு சொல்றாரு கேட்டுக்கோங்க:-)
//

அதான!

பழமைபேசி said...

//thevanmayam said...
ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!
ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!!///

ஈமிச்சி இலிமிச்சி, இண்டாண்டான்
டாமிச்சி என்று எங்க ஏரியாவில
கபடி ஆடும்போது பாடுவாங்க...
//

ஆமுங்க....சடுகுடு(கபடி)க்கான பாட்டுகளும் அடுத்தடுத்த பதிவுகள்ல வரும். இஃகிஃகி!

பழமைபேசி said...

//Naren said...
பழ்ஸ் உங்க வார்த்தையிலேயே சொல்லணும்னா பின்னி பெடல் எடுக்கிறீங்க...//

விளக்கங் குடுத்த பின்னாடியும் இப்பிடிச் சொல்லலாமா கண்ணு? சித்த, ஒரு எட்டு இதைப் பாருங்கோ...

//அப்புறம் உங்க blog la சின்ன பண்ணாடி போட்டோ புடிச்சி போட்டிருக்கீங் ..அதை எடுத்துட்டு உங்க படத்தை போடுங் சாமி
//

அட சாமிகளா, இதுக்கு விளக்கங் குடுத்தே நான் ஓஞ்சி போயிருவம்போல இருக்கே.... நம்புங்க ஐயா, நம்புங்க....

நான் நரேந்திரன்... said...

மன்னிச்போடுங் மணி அண்ணா, அதை மொதலையே படிசிட்டேனுங், ஆனாலும் கிரகம் டைப் பண்றப்போ பழைய குருடி கதவை திறடிங்கற மாதிரி வந்து போடுச்சுங்...இனி பதனமா இருப்பேனுங்...

அப்பாவி முரு said...

அண்ணே., இதை இப்படியே குழந்தை பருவத்தோட நிப்பாட்டிடக் கூடதண்ணே.,
அப்படியே மெதுவா நாம வட்டழுதுல படிச்சதையும் ஞாபக படுத்தணும்ண்ணே...

பழமைபேசி said...

//Naren said...
மன்னிச்போடுங் மணி அண்ணா, அதை மொதலையே படிசிட்டேனுங், ஆனாலும் கிரகம் டைப் பண்றப்போ பழைய குருடி கதவை திறடிங்கற மாதிரி வந்து போடுச்சுங்...இனி பதனமா இருப்பேனுங்...
//

கண்ணு, இதுக்கெல்லாம் மாப்பு கேக்குறது நல்லாவே இல்ல... ஆமா, அங்க கூதல் நெம்பவாக்கூ?

பழமைபேசி said...

//muru said...
அண்ணே., இதை இப்படியே குழந்தை பருவத்தோட நிப்பாட்டிடக் கூடதண்ணே.,
அப்படியே மெதுவா நாம வட்டழுதுல படிச்சதையும் ஞாபக படுத்தணும்ண்ணே...
//

வாங்க தம்பி வாங்க... அதுல ஏறகனவே ஒன்னு ரெண்டு எடுத்து விட்டு இருக்கேன்...மறுபடியும் கொஞ்சத்தைப் போட்டாத்தான் போகுது?! காசா, பணமா? இஃகிஃகி!!

நான் நரேந்திரன்... said...

இல்லீங்...இங்க போன விசாழ கிழமைலிருந்து கொஞ்சம் கம்மிதான்..அதும் நேத்திக்கு நெம்ப கம்மி...

பழமைபேசி said...

//Naren said...
இல்லீங்...இங்க போன விசாழ கிழமைலிருந்து கொஞ்சம் கம்மிதான்..அதும் நேத்திக்கு நெம்ப கம்மி...
//

பரவாயில்ல அப்ப...

♥ விஜி ♥ viji♥ said...

:)

பழமைபேசி said...

// viji said...
:)
//


இஃகி!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நன்றிண்ணே, பாட்டும் பதிவும்
யப்பா கண்களில் நீர் பனிக்கிறது
நினைவுகளை அசையிடும்போது..,,
இப்படி ஒரு நினைவாக்கம் உருவாக்கித் தந்ததற்கு மிக்க நன்றி.

RAMYA said...

பாட்டெல்லாம் ரொம்ப
நல்லா இருந்திச்சி
சின்னப்போ இந்த விளையாட்டு
ரொம்ப பிரபலம் ஆனா
முழு பாட்டு எல்லாம் தெரியாது
இப்போ இதை படிக்கும்போது
அந்த வயது அந்த விளையாட்டு
முடியுமா என்று மிகவும்
ஏக்கமாக இருக்கு

புதுகை.அப்துல்லா said...

//யப்பா கண்களில் நீர் பனிக்கிறது
//

எனக்கு இதயம் இனிக்கிறது :)

நான் நரேந்திரன்... said...

மணி அண்ணணுக்கு ரவுண்டா கிடைச்சுதோ என்னமோ? ஆனாலும் ரவுண்டு கட்டி ஆடறாரு...கலக்குங்ணா

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ரொம்ப நன்றிண்ணே, பாட்டும் பதிவும்
யப்பா கண்களில் நீர் பனிக்கிறது
நினைவுகளை அசையிடும்போது..,,
இப்படி ஒரு நினைவாக்கம் உருவாக்கித் தந்ததற்கு மிக்க நன்றி.
//

வாய்ப்பை உண்டு செய்த உங்களுத்தான் நான் நன்றி சொல்லணும்.

பழமைபேசி said...

//RAMYA said...
//

வாங்க இரம்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

பழமைபேசி said...

//புதுகை.அப்துல்லா said...
//யப்பா கண்களில் நீர் பனிக்கிறது
//

எனக்கு இதயம் இனிக்கிறது :)
///

அண்ணே, வணக்கம். நன்றிங்கோ!

பழமைபேசி said...

//Naren said...
மணி அண்ணணுக்கு ரவுண்டா கிடைச்சுதோ என்னமோ? ஆனாலும் ரவுண்டு கட்டி ஆடறாரு...கலக்குங்ணா
//

எல்லாம் நீங்க குடுக்குற ஊக்கந்தான் கண்ணூ!

Unknown said...

சின்னப்போ இது வெள்ளாடியிருக்கேனே! பின்னிப் படல் எடுக்கறதெல்லாம் தெரிஞ்சவங்கங்கிறதால, இதையும் சொல்லிப்போடறேன்: "நிறைய நிறைய சுத்தி வா"னு ஒருத்தங்க திருத்தினாங்க, சரியா?

பழமைபேசி said...

//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
சின்னப்போ இது வெள்ளாடியிருக்கேனே! பின்னிப் படல் எடுக்கறதெல்லாம் தெரிஞ்சவங்கங்கிறதால, இதையும் சொல்லிப்போடறேன்: "நிறைய நிறைய சுத்தி வா"னு ஒருத்தங்க திருத்தினாங்க, சரியா?
//

அப்பிடீங்ளா? நரிய நரியன்னுதான் எனக்கு மகேந்திரன் சொன்னான்....நீங்க சொல்லுறதுதான் சரியாப்படுது.... நொம்ப நன்றிங்க... இப்பவே திருத்திப் போடுறேன்...

Udhayakumar said...

//தொங்குதடி டோலாக்கு//

எங்கூர்ல லோலாக்குன்னு சொல்லுவோமே???

A N A N T H E N said...

தொகுப்பு நல்லாருக்கு!

புதுகை.அப்துல்லா said...

புத்தாண்டு வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெறைய நெறைய என்பதுதான் சரி,

கூட்டத்தில் வேகமாக சொல்லும்போது நெறைய என்பது மருவி நரிய என்றாகிவிட்டது.

ஆனால் நரிய என்று சொல்லும்போதுதான் அந்த வெளையாட்டு ஞாபகம் வருகிறது, நெறைய என்று சொல்லும்போது அது வெறும் பாட்டாய் போய்விடுகிற்து..
இது என் கருத்து.

நேத்து எம் பொண்ணுக்கு நரிய நரிய என்றுதான் பாடிக்காட்டினேன்.
ஒன்றும் புரியவிட்டாலும் ஒரு சிரிப்பு அவளிடம் வந்தது.

பழமைபேசி said...

//Udhayakumar said...
//தொங்குதடி டோலாக்கு//

எங்கூர்ல லோலாக்குன்னு சொல்லுவோமே???
//

வாங்க உதயரு! எங்க ஊர்லீமு அப்பிடித்தான் சொல்லுறதுங்க....இஃகிஃகி!

பழமைபேசி said...

// A N A N T H E N said...
தொகுப்பு நல்லாருக்கு!
//

ஆனந்தரு வாங்கோ...நன்றீங்கோ...

பழமைபேசி said...

//புதுகை.அப்துல்லா said...
புத்தாண்டு வாழ்த்துகள்
//

புதுகை அண்ணாச்சி வாங்க, நன்றி, உங்களுக்கும் எமது வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

நேத்து எம் பொண்ணுக்கு நரிய நரிய என்றுதான் பாடிக்காட்டினேன்.
ஒன்றும் புரியவிட்டாலும் ஒரு சிரிப்பு அவளிடம் வந்தது.
//

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா! சிரிச்சாங்ளா? பதிவே அவிங்களுக்குத்தானுங்ளே! நொம்ப சந்தோசமாயிருக்கு....