12/23/2008

பிரபலப் பதிவும், சூடான இடுகையும்!


தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்லை!

கப்பல் வருகுதுண்ணு நான்
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற்கரையே ஆசையில்ல‌!

எலுமிச்சை வளரும் புளியங்குடி
வளர்ந்து என்ன செய்ய?
பறிக்கவும் ஆள் இல்ல,
பாதுகாக்கவும் ஆள் இல்ல!

கொச்சி மலையாளம்
கொடி படருங் குற்றாலம்
கொடிபடர்ந்து என்ன செய்ய?!
என் குணமுடையார் இல்லாம!

மஞ்சி மலையாளம்
மா படருங் குற்றாலம்
மா படர்ந்து என்ன செய்ய?!
மதிப்புடையார் இல்லாம!

பதிவு பிரபலமாகுமுன்னு
வலையுலகங் காத்திருந்தேன்
பதிவு புதைஞ்சே போவுது
அதெனக்கு ஆவுறதில்ல இனிமேலு!
அதெனக்கு ஆவுறதில்ல இனிமேலு!!


================================================

சூடான இடுகைக்கு ஒருநாளுங்
காத்திருக்க‌ வில்லை நானு!
சொக்குப் பொடியின்னானு
கேட்டு வைக்க, நானும‌தைச்
சொல்லி வெக்க, சூடாகிப்
போனெதென்ன‌ சொன்ன‌ப‌ழ‌ம‌!

பொன்னும‌ணி க‌ண்ணும‌ணி
வாய் சிரிச்சுப் பேசி வ‌ந்தா
வாழ்க்கை நெய் ம‌ண‌க்கும்
வாச‌நறும் பூ ம‌ண‌க்கும்
வாகை சூடி நீ ஆவ!
சூடான‌ துமுன்னைச் சூடிவ‌ரும்!!
சூடான‌ துமுன்னைச் சூடிவ‌ரும்!!

கண்டதே காட்சி கொண்டதே கோலம்!

27 comments:

தங்ஸ் said...

ஆனை கட்டும் அண்ணமாரு அடிப்பாங்க ஆயிரம் வோட்டு..
குதிர கட்டும் அண்ணமாரு குத்துவாங்க நூறு வோட்டு..

ராஜ நடராஜன் said...

நான் தான் முதல் போடலாமுன்னு பார்த்தா உங்க பதிவு எப்ப வருமுன்னே எனக்கு முன்னே ஆட்கள் காத்திருப்பாங்க போல இருக்குதே:)

CA Venkatesh Krishnan said...

உங்க ஸ்டைல்ல கலக்கறீங்க :)))

பழமைபேசி said...

//தங்ஸ் said...
ஆனை கட்டும் அண்ணமாரு அடிப்பாங்க ஆயிரம் வோட்டு..
குதிர கட்டும் அண்ணமாரு குத்துவாங்க நூறு வோட்டு..
//

ஆனை கட்டி அண்ணன்மாரு
ஒரு வாக்கும் பதியலியே?!
குதிரை கட்டி அண்ணன்மாரு
எட்டிக் கூடப் பாக்கலையே?!
திரட்டிக்காரவுக சொல்லுறாக‌
வெளியாளு வரலையின்னு!
வெளியாளுவ சொல்லுறாக‌
பதிவொன்னும் காணலயின்னு!!
நமக்கெதுக்கு இந்தநாரப் பொழப்பு?
ப்தியவேணாம் மெனக்கெட்டு இனிமேலு!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
நான் தான் முதல் போடலாமுன்னு பார்த்தா உங்க பதிவு எப்ப வருமுன்னே எனக்கு முன்னே ஆட்கள் காத்திருப்பாங்க போல இருக்குதே:)
//

இஃகிஃகி!!

பழமைபேசி said...

//இளைய பல்லவன் said...
உங்க ஸ்டைல்ல கலக்கறீங்க :)))
//

இஃகிஃகி!! நன்றிங்கோ!!

கோவி.கண்ணன் said...

பாட்டு சூப்பராக இருக்கு !

குடுகுடுப்பை said...

கண்டதே காட்சி கொண்டதே கோலம்!//

இப்ப நீங்க போட்டுருக்கிர உங்க படத்தை நாங்க ஏத்துக்கமுடியாது

பழமைபேசி said...

//கோவி.கண்ணன் said...
பாட்டு சூப்பராக இருக்கு !
//

வாங்க ஐயா, வணக்கம்! எளிய தமிழ்ல, தமிங்கிலக் கலப்பு இல்லாமலும் எழுத முடியும்ன்னு காண்பிக்கும் முயற்சிதானுங்க, என்னோட வலைப்பூ முயற்சி. அதுல இதுவும் ஒரு அங்கம். அவ்வளவுதானுங்க. நொம்ப நன்றிங்க!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
கண்டதே காட்சி கொண்டதே கோலம்!//

இப்ப நீங்க போட்டுருக்கிர உங்க படத்தை நாங்க ஏத்துக்கமுடியாது
//

கண்டதே காட்சி! அவ்வளவுதான், அஃகஃகா!!

நசரேயன் said...

எலுமிச்சை நிற அழகி
எலுமிச்சை வளரும் புளியங்குடி
வளர்ந்து என்ன செய்ய
பறிக்கவும் ஆள் இல்லை
பாது காக்கவும் ஆள் இல்லை


எங்க ஊரையும் சேர்க்க இது

பழமைபேசி said...

//நசரேயன் said...

எங்க ஊரையும் சேர்க்க இது!
//

ஒங்க ஆசையக் கெடுப்பானேன்? சேர்த்தாச்சு அப்பு!

Mahesh said...

பழம வந்தாச்சு
பதிவும் போட்டாச்சு
கெழம மூணாச்சு
படிக்க நானாச்சு

சலம்பல் கூடி வர
சர்ச்சையும் சேத்தாச்சு
புலம்பல் ஓடி வர
பாட்டும் படைச்சாச்சு

பழமைபேசி said...

// Mahesh said...
பழம வந்தாச்சு
பதிவும் போட்டாச்சு
கெழம மூணாச்சு
படிக்க நானாச்சு

சலம்பல் கூடி வர
சர்ச்சையும் சேத்தாச்சு
புலம்பல் ஓடி வர
பாட்டும் படைச்சாச்சு
//
பாருங்க, எப்பிடி அருவியாக் கொட்டுதுன்னு?! அருமை! அருமை!! மூனு பேர்த்துகிட்ட இருந்து, பாட்டை வர வெச்சிருச்சே இந்த பதிவு?! இஃகிஃகி!!

Anonymous said...

முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்சேன்,
இரண்டு குளம் பாழ், ஒன்னுல தண்ணியே இல்ல..

இது மாதிரியாச்சே நம் பொழப்பு..

//ஆனை கட்டி அண்ணன்மாரு
ஒரு வாக்கும் பதியலியே?!
குதிரை கட்டி அண்ணன்மாரு
எட்டிக் கூடப் பாக்கலையே?!
திரட்டிக்காரவுக சொல்லுறாக‌
வெளியாளு வரலையின்னு!
வெளியாளுவ சொல்லுறாக‌
பதிவொன்னும் காணலயின்னு!!
நமக்கெதுக்கு இந்தநாரப் பொழப்பு?
ப்தியவேணாம் மெனக்கெட்டு இனிமேலு! //

யாரு எட்டி பார்த்தாகன்னு உங்க கணக்கு சொல்லுங்களே.. இதுக்கு திரட்டி ஆளுங்களை ஏனுங்க கேட்கணும்..

ஒன்னுமே புரியலங்க..

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
யாரு எட்டி பார்த்தாகன்னு உங்க கணக்கு சொல்லுங்களே.. இதுக்கு திரட்டி ஆளுங்களை ஏனுங்க கேட்கணும்..

ஒன்னுமே புரியலங்க..
//

சோதித்து பார்த்ததில், தங்கள் பதிவுகள் உங்கள் பதிவுகள் உங்கள் நண்பர்கள் ஓட்டுக்களை தவிர பொது வாசகரின் ஓட்டுகளையும் பெற வேண்டியது முக்கியமாகிறது.

அது காமிக்குது பத்து ஓட்டு கூட... மேல சொன்னதுதான் அவிங்க சொன்ன பதிலு... ஒன்னு தெரிஞ்சுகிட்டேன்.... நட்சத்திரம் ஆவுறதுல கூட எதிர்வினை இருக்குன்னு.... இல்லேன்னு மறுக்கலாம்...ஆனா, அதான உண்மை... நேரத்தை செலவு செய்து, பழசு பரட்டைய எழுதுறது, நாலு பேர்த்துக்கு போகட்டும்ங்றதுதான் நம்ம எண்ணம். மத்தபடி இதுல ஒரு பிரயோசனமும் கெடையாது நமக்கு.... உங்களுக்கு என்னை ஒதுக்குற வாய்ப்பு இருந்தா, எனக்கும் உங்களை ஒதுக்குற வாய்ப்பு இருக்குங்கோய்... இஃகிஃகி!!

சந்தடி சாக்குல உங்க ஓட்டும் கணக்குல வரலை....இஃகிஃகி!!நீங்க பொது வாசகர் இல்லியாமுங்க... அது சரி, அது அவுங்க பாடு. நாம அவிங்களைக் குறை சொல்லுறதுல எந்த ஞாயமும் இல்லை.

Anonymous said...

//சந்தடி சாக்குல உங்க ஓட்டும் கணக்குல வரலை....இஃகிஃகி!!நீங்க பொது வாசகர் இல்லியாமுங்க... அது சரி, அது அவுங்க பாடு. நாம அவிங்களைக் குறை சொல்லுறதுல எந்த ஞாயமும் இல்லை. //

அது சரி.. நமக்கு என்ன.. அவிங்க ஞாயம் அவிங்களுக்கு, நம்ம ஞாயம் நமக்கு..

படிக்கவும், எழுதுபவர்களை ஊக்கு விக்கவும் (ஏன் என்றால் அவிங்க பின் வாங்கம இருக்கனுமில்ல) தாங்க ஓட்டு போட்றுது.. இல்லன்ன நமக்கு பொழுது போகம ஒட்டு போட்டுகிட்டு இருக்கோமான்ன..

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
நமக்கு பொழுது போகம ஒட்டு போட்டுகிட்டு இருக்கோமான்ன..
//

நீங்க சொல்லுறது சரிதானுங்க...

S.R.Rajasekaran said...

என்ன அண்ணாச்சி எங்க ஊர வம்புல இழுக்காம உங்களுக்கு தூக்கமே வரதா

ரெம்ப சூபர்ரோ சூப்பெர்

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
என்ன அண்ணாச்சி எங்க ஊர வம்புல இழுக்காம உங்களுக்கு தூக்கமே வரதா
//

ஒரு புளியங்குடி வந்து எங்க ஊரையும் சேத்துங்கன்னு சொல்லுறது....அடுத்த புளியங்குடி இப்ப்டியெல்லாம் கேள்வி கேப்பீகளோ? இஃகிஃகி!!

தங்ஸ் said...

வோட்டுப் போடறதெப்பிடீங்?நான் அப்பப்ப தமிழ்மணத்துலேர்ந்து வரும்போது 'தம்ஸ் அப்' படம் ஒண்ணு தெரியும்..அதத்தேங்கண்ணு குத்துவேன்...ஆனா நாந்தான் குத்துனேன்னு எப்படி தெரியும்?

பழமைபேசி said...

//தங்ஸ் said...
வோட்டுப் போடறதெப்பிடீங்?நான் அப்பப்ப தமிழ்மணத்துலேர்ந்து வரும்போது 'தம்ஸ் அப்' படம் ஒண்ணு தெரியும்..அதத்தேங்கண்ணு குத்துவேன்...ஆனா நாந்தான் குத்துனேன்னு எப்படி தெரியும்?
//

வாங்க தங்சு, இது தமிழ்மணம் சம்பந்தப்பட்ட பாட்டு அல்ல. வேற ஒன்னு. தமிழ்மணம் நெசமாலுமே தமிழ் மணம்.

அப்பாவி முரு said...

அண்ணே, உங்களுக்கே இந்த நிலைமையா?
அப்ப நானெல்லாம்?

பழமைபேசி said...

//muru said...
அண்ணே, உங்களுக்கே இந்த நிலைமையா?
அப்ப நானெல்லாம்?
//

சகோதரா, நீங்க அடிச்சு ஆடுங்க.... நல்லா எழுதறீங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொச்சி மலையாளம்
கொடி படருங் குற்றாலம்
கொடிபடர்ந்து என்ன செய்ய?!
என் குணமுடையார் இல்லாம!
மஞ்சி மலையாளம்
மா படருங் குற்றாலம்
மா படர்ந்து என்ன செய்ய?!
மதிப்புடையார் இல்லாம! //

அர்த்தமுடைய பாடல்
உங்கள மாதிரி கவிதையில் வாழ்த்து சொல்ல வரவில்லை.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

அர்த்தமுடைய பாடல்
உங்கள மாதிரி கவிதையில் வாழ்த்து சொல்ல வரவில்லை.
//

உங்கள் வருகையே பிரதானம், அதுவே வாழ்த்துதானுங்ளே!!

Tech Shankar said...

ஆகா. சூப்பருங்க