பழம்பெருமை அறிதல் ஒரு கண்டுபிடிப்பே
புத்தம் புது சாதனையும் ஒரு கண்டுபிடிப்பே
பழம்பெருமை பேசி அமர்வோர் மடிவர்
பழம்பெருமையறிந்து புதுமை காண்போர் சாதிப்பர்!

நேற்றைய பதிவுல பட்டையக் கிளப்புறதப் பத்திப் பார்த்தமுங்ளா? இன்னைக்கு பட்டையக் கழட்டுறதுன்னா என்னங்றதை பத்திப் பாப்போம். எங்க ஊர்ப் பக்கம், கோபத்துல ஒருத்தர் அடுத்தவரைப் பார்த்து சொல்றது, 'டேய், எங்கூட வெளையாடாதடா, பட்டையக் கழட்டீருவேன், ஜாக்கிரதை!'. அதாவது வந்துங்க, தோலை உரிச்சுருவேன்னு சொல்லுறது, தோல்பட்டைய உரிச்சுருவேனுங்ற அர்த்தத்துல, பட்டைய எடுத்துருவேன்னும் பட்டையக் கழட்டீருவேன்னும் ஆயிப்போச்சு. ஆக, பட்டயக் கிளப்புறது ஊக்கத்த சொல்றது, பட்டயக் கழட்டுறது (அ) எடுக்குறது கோபத்துக்கு புழங்குறதுன்னு ஆகிப்போச்சுங்க.
ஒருத்தர், அதிகப் பிரசங்கித்தனமாவோ, குறும்புத்தனமாவோ பேசிட்டு இருக்குறப்ப சொல்லுறது, அவன் ஏன் நாயாட்டம் குரைச்சிட்டு இருக்கான்னு. அதுவே கொஞ்சம் திரிஞ்சு, அவன் ஏன் லொள் லொள்ன்ட்டு இருக்கான்னு ஆச்சு. கூடவே இன்னும் அது திரிஞ்சு, அவனோட லொள்ளு தாங்க முடியலடான்னும் ஆச்சு. கடைசில, அதிகப் பிரசங்கித் தனத்துக்கும், குறும்புத் தனத்துக்குமான ஒரு சொல்லாவே ஆயிப் போச்சு பாருங்க இந்த லொள்ளு!
சுக்கு நூறா உடைச்சிட்டான்னு சொல்லுறோம். சுக்குன்னா காய வெச்ச இஞ்சி. சுக்குக் காப்பின்னு சொல்லுறோம், சுக்கு, மிளகு, திப்பிலி மூணும் திரி கடுகம்ன்னும் சொல்லுறோம். ஆனா, சுக்கு சுக்கா உடைச்சிட்டான்னு சொல்லுறப்ப வர்ற சுக்கு, அது இல்லையாமுங்க. சுக்குன்னா சிறு துண்டு அல்லது சிறு கல். அதான், ஒரு பொருளை உடைச்ச சமயத்துல சொல்லுறது, 'பாவி, இப்பிடி சுக்கு நூறா ஒடைச்சிட்டானே!'.
சுக்குன்ன ஒடனே, ஞாபகத்துக்கு வர்றது சொக்குப் பொடிங்க. சொக்குன்னா மயங்குறது. மயங்க வெக்கிறதுக்குப் பாவிக்கிற பொடிதாங்க சொக்குப் பொடி. ஒருத்தர் அடுத்தவரை எதனா சொல்லிப் பணிய வெக்கிறப்ப, சமாதானப் படுத்துறப்ப, குறும்பா சொல்லுறதுதாங்க, "என்னடா, என்னமோ சொக்குப் பொடி போட்டு ஆளை மயக்கிட்டியே!"ன்னு. இந்தத் தலைப்பைப் போட்டு, இந்த பதிவைப் படிக்க வெச்சதுகூட ஒரு விதமான சொக்குப் பொடிதாங்க. இஃகி!இஃகி!!

கெண்டையைப் போட்டு வராலை இழு!
33 comments:
/*என்னடா, என்னமோ சொக்குப் பொடி போட்டு ஆளை மயக்கிட்டியே*/
நீங்க அடிக்கடி சோள காட்டு பக்கம் போகும் போதே தெரியும்
/*
ஒருத்தர், அதிகப் பிரசங்கித்தனமாவோ, குறும்புத்தனமாவோ பேசிட்டு இருக்குறப்ப சொல்லுறது, அவன் ஏன் நாயாட்டம் குரைச்சிட்டு இருக்கான்னு
*/
வீட்டுல சகஜமா புழங்குறது
//கெண்டையைப் போட்டு வராலை இழு!
//
படிச்சத நல்லாவே பயன்படுத்தறீங்க, தலைப்பை சொன்னேன் :-):-)
கெண்டையைப் போட்டு வராலை இழு!
//
அதத்தான் பண்ணுரோம் கெண்டையுமுல்ல போச்சு இப்போ
சூடான இடுகைல வர என்ன சொக்குப்பொடி போடணும்
எனக்கு நல்லாவே சொக்கு பொடி போட்டு வச்சுயிருக்கீங்க...
எப்படா இவரு அடுத்த பதிவு போடுவாருன்னு, பட்டைய கிளப்புவாறு ன்னு பாக்க வச்சுடீங்களே அப்பு..
வாழ்க தமிழ், வளர்க அதன் கொற்றம்..
சின்ன அம்மிணி said...
சூடான இடுகைல வர என்ன சொக்குப்பொடி போடணும்
//
பதிவர் பழமைபேசியின் தலையில் முடி முலைத்த அதிசயம்.
பழனி டாக்டரிடம் சிட்டுக்குருவி....
இப்படி ஆரம்பிக்கனும் பதிவு.
// எனக்கு நல்லாவே சொக்கு பொடி போட்டு வச்சுயிருக்கீங்க...
எப்படா இவரு அடுத்த பதிவு போடுவாருன்னு, பட்டைய கிளப்புவாறு ன்னு பாக்க வச்சுடீங்களே அப்பு..
வாழ்க தமிழ், வளர்க அதன் கொற்றம்..
December 17, 2008 4:58 PM
Blogger வருங்கால முதல்வர் said...
சின்ன அம்மிணி said...
சூடான இடுகைல வர என்ன சொக்குப்பொடி போடணும்
//
பதிவர் பழமைபேசியின் தலையில் முடி முலைத்த அதிசயம்.
பழனி டாக்டரிடம் சிட்டுக்குருவி....
இப்படி ஆரம்பிக்கனும் பதிவு.//
supero super:):):)
// வருங்கால முதல்வர் said...
சின்ன அம்மிணி said...
சூடான இடுகைல வர என்ன சொக்குப்பொடி போடணும்
//
பதிவர் பழமைபேசியின் தலையில் முடி முலைத்த அதிசயம்.
பழனி டாக்டரிடம் சிட்டுக்குருவி....
இப்படி ஆரம்பிக்கனும் பதிவு. //
இஃகி..இஃகி..
// நசரேயன் said...
/*என்னடா, என்னமோ சொக்குப் பொடி போட்டு ஆளை மயக்கிட்டியே*/
நீங்க அடிக்கடி சோள காட்டு பக்கம் போகும் போதே தெரியும் //
இப்படி எல்லாம் நண்பரை காண்பித்துக் கொடுக்க கூடாது...
ரொம்ப தப்பு... ஆமாம் சொல்லிபுட்டேன்..
// நசரேயன் said...
/*
ஒருத்தர், அதிகப் பிரசங்கித்தனமாவோ, குறும்புத்தனமாவோ பேசிட்டு இருக்குறப்ப சொல்லுறது, அவன் ஏன் நாயாட்டம் குரைச்சிட்டு இருக்கான்னு
*/
வீட்டுல சகஜமா புழங்குறது //
யார் வீட்லங்க இப்படி யெல்லாம் புழங்கறாங்க...
:)
நட்சத்திர வாரம் இன்னும் முடியலையா ?
"பட்டையை கிளப்புறிங்க..."
//நசரேயன் said...
/*என்னடா, என்னமோ சொக்குப் பொடி போட்டு ஆளை மயக்கிட்டியே*/
நீங்க அடிக்கடி சோள காட்டு பக்கம் போகும் போதே தெரியும்
//
இஃகி! இஃகி!!
//நசரேயன் said...
/*
ஒருத்தர், அதிகப் பிரசங்கித்தனமாவோ, குறும்புத்தனமாவோ பேசிட்டு இருக்குறப்ப சொல்லுறது, அவன் ஏன் நாயாட்டம் குரைச்சிட்டு இருக்கான்னு
*/
வீட்டுல சகஜமா புழங்குறது
//
ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு நன்றிங்க!
நீங்க போடற சொக்குப்பொடிய விடவா?
இப்பல்லாம் நீங்க கெண்டையெல்லாம் போஒட வேண்டிய அவசியமேயில்ல. கருவாடக் காமிச்சாலே ஓடியார ஆளுக இருக்கோம் :)))
//கபீஷ் said...
//கெண்டையைப் போட்டு வராலை இழு!
//
படிச்சத நல்லாவே பயன்படுத்தறீங்க, தலைப்பை சொன்னேன் :-):-)
//
வாங்க! வணக்கம்!! நன்றிங்க!!!
சுள் - சிறுமை
சுள் * கு - சுட்கு - சுக்கு
சுக்கு - சிறுதுண்டு
நல்லா சொக்குப் பொடி போடுறீங்க!இஃகி!இஃகி!
ஆமா!சுக்கு,மிளகு ரெண்டும் உபயோகிப்பதால நினைவிருக்குது.ஆனா இந்த திப்பிலி பேர் ஞாபகம் இருக்குது.ஆனா கண்ணுக்குத் தெரியமாட்டேங்குது.ஒருவேளை இந்த கரம் மசலான்னு சொல்லி பட்டை,லவங்கம்,சோம்பு,குருமிளகு,ஏலக்காய்ன்னு சொல்லி விக்கிறாங்களே அதுக்குள்ளே ஒளிஞ்சுகிட்டு இருக்குதாங்க?விளக்கம் சொல்லுங்க.நன்றி.
//கருவாடக் காமிச்சாலே ஓடியார ஆளுக இருக்கோம் :)))//
கருவாட்டுப் பூனைகள்ன்னு ஏனுங்க மகேஷ் பின்னூட்டம் போடற எங்களையெல்லாம் கிண்டல் செய்றீங்க:)
//அ நம்பி said...
சுள் - சிறுமை
சுள் * கு - சுட்கு - சுக்கு
சுக்கு - சிறுதுண்டு
//
வாங்க, வணக்கம்! எப்பவுஞ் சொல்லுறதுதான், மேலதிகத் தகவலுக்கு நன்றிங்கோ!!
//ராஜ நடராஜன் said...
நல்லா சொக்குப் பொடி போடுறீங்க!இஃகி!இஃகி!
ஆமா!சுக்கு,மிளகு ரெண்டும் உபயோகிப்பதால நினைவிருக்குது.ஆனா இந்த திப்பிலி பேர் ஞாபகம் இருக்குது.ஆனா கண்ணுக்குத் தெரியமாட்டேங்குது.ஒருவேளை இந்த கரம் மசலான்னு சொல்லி பட்டை,லவங்கம்,சோம்பு,குருமிளகு,ஏலக்காய்ன்னு சொல்லி விக்கிறாங்களே அதுக்குள்ளே ஒளிஞ்சுகிட்டு இருக்குதாங்க?விளக்கம் சொல்லுங்க.நன்றி.
//
இல்லீங்க, நம்ம ஊர்ல திப்பிலிப் பொழக்கம் கொறைவுதாங்க.... அது நீட்டமான ஒரு காய்ங்க...ஆனா, இரசப் பொடி கடையில வாங்கும்போது அதுல இருக்கும், நமக்கு தெரியாம. அழிஞ்சு வர்றதுல இதுவும் ஒன்னு. அடுத்தவிசுக்கா, ஊருக்குப் போகும் போது ஒருக்கா அதைப் பாத்துடுங்க. இல்லாட்டி, அதுங் காணாமப் பூடும்.
http://www.aaraamthinai.com/maruthuvam/ma04maruthuvam.asp
//குடுகுடுப்பை said...
கெண்டையைப் போட்டு வராலை இழு!
//
அதத்தான் பண்ணுரோம் கெண்டையுமுல்ல போச்சு இப்போ
//
இஃகிஃகி!!
//சின்ன அம்மிணி said...
சூடான இடுகைல வர என்ன சொக்குப்பொடி போடணும்
//
நான் மூத்த பதிவர் அல்லங்க... நீங்கெல்லாந்தான் மூத்த பதிவர்! இஃகிஃகி!!
//இராகவன், நைஜிரியா said... //
எங்களையெல்லாம் வாழ வைக்குற நீங்க இருக்கும் போது, எங்களுக்கென்ன கவலை?
//rapp said... //
நன்றிங்கோ!
//கோவி.கண்ணன் said...
:)
நட்சத்திர வாரம் இன்னும் முடியலையா ?
"பட்டையை கிளப்புறிங்க..."
//
வாங்க ஐயா, வணக்கம், நன்றி!!!
//Mahesh said...
நீங்க போடற சொக்குப்பொடிய விடவா?
இப்பல்லாம் நீங்க கெண்டையெல்லாம் போஒட வேண்டிய அவசியமேயில்ல. கருவாடக் காமிச்சாலே ஓடியார ஆளுக இருக்கோம் :)))
//
நொம்பக் கூசுதுங்க... இஃகிஃகி!
கலக்கிட்டீங்க பழமைபேசி !!!!!!!
//செந்தழல் ரவி said...
கலக்கிட்டீங்க பழமைபேசி !!!!!!!//
நன்றிங்க, எதோ நம்மால ஆனதுங்க!
//சின்ன அம்மிணி said...
சூடான இடுகைல வர என்ன சொக்குப்பொடி போடணும்
//
சூடான இடுகையில, என்னோட மீள்பதிவு ஒன்னு இருக்கு பாருங்க. அதான் சொக்குப் பொடி!
//அ நம்பி said...
சுள் - சிறுமை
சுள் * கு - சுட்கு - சுக்கு
சுக்கு - சிறுதுண்டு
//
பதிவிலயும், மாற்றம் செய்துட்டேன். நன்றி!
//
கெண்டையைப் போட்டு வராலை இழு
//
அப்ப வராலுக்கு சொக்குப் பொடி கெண்டையா?
//அது சரி said...
//
கெண்டையைப் போட்டு வராலை இழு
//
அப்ப வராலுக்கு சொக்குப் பொடி கெண்டையா?
//
நீங்கதான் சரி, அது சரி அண்ணாச்சி!
Post a Comment