12/13/2008

வாசித்தல் அனுபவம்

வணக்கம்! அண்ணன் குடுகுடுப்பையார் என்னோட வாசித்தல் அனுபவம் பத்தி எழுதச் சொல்லி கொக்கி போட்டு இருக்கார். அதனோட விளைவுதான் இந்தப் பதிவு. நான் ஒன்னாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும் போது, எங்க வீட்லயும் பக்கத்து வீட்லயும் எல்லாருமாச் சேர்ந்து, சோமனூர்க்குப் பக்கத்துல இருக்குற வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்குப் போனோம்.

அப்பிடிக் கோயிலுக்குப் போய்ட்டு திரும்புற வழியில ஒரு மணி நேரத்துக்கு மேலயே சூலூர் பேருந்து நிலையத்துல, தெற்குப்புற கிராமங்களுக்குப் போற சிந்திலுப்பு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்துச்சு. அப்ப, சூலூர் இப்ப இருக்குற மாதிரி இல்லங்க. அது ஒரு பெரிய கிராமமா இருந்துச்சு அவ்வளவுதான். அந்த பேருந்து நிற்குமிடத்துல‌, தி.மு.க வாசகம் பொருந்தின ஒரு சாப்பாட்டுக் கடை மட்டும் இருந்ததா நினைவு. இன்னைக்கு அந்த இடம் பேருந்து நிலையமா மாறி, சுற்றிலும் எத்துனை கடைகள், ஏ அப்பா?

அந்த‌க் க‌டையில‌ ஒரு க‌யிறுல‌ புத்த‌க‌ங்க‌ள் எல்லாம் தொங்கிட்டு இருந்துச்சு. நான் சும்மா இங்க‌யும் அங்க‌யும் ஓடிட்டு இருக்குற‌த‌ப் பாத்த‌ ப‌க்க‌த்து வீட்டு அக்கா, அந்த‌க் கொடியில‌ இருந்த‌ பொம்மை வீடுங்ற‌ புத்த‌க‌த்தை வாங்கிக் குடுத்தாங்க‌. அதுதாங்க‌, நான் வாழ்க்கையில‌ பார்த்த‌ முத‌ல் புத்த‌க‌ம். கிட்ட‌த்த‌ட்ட‌ மூணாம் வ‌குப்பு வ‌ரை அதை நான் வெச்சிட்டு இருந்ததா நினைவு. அதுக்க‌ப்புற‌ம் நாங்க‌ வீடு மாறினோம், அப்ப‌ எப்பிடியோ தொலைஞ்சு போயிருச்சுன்னு நினைக்குறேன்.

அதுக்க‌ப்புற‌ம், என‌க்கு க‌ருணாநிதின்னு ஒரு ந‌ண்ப‌ன் இருந்தான். அவிங்க‌ப்பா, ஒரு தி.மு.க‌ பிர‌முக‌ர். அவிங்க‌ வீட்டுக்கு போகும் போதெல்லாம் முர‌சொலியும், தின‌க‌ரனும் வாசிக்கிற‌து உண்டு. அதுக்க‌ப்புற‌ம் எங்க‌ சொந்த‌க்கார‌ அக்கா, தாய் வார‌ இத‌ழை இனியொருத்த‌ங்க‌ வீட்ல‌ இருந்து வாங்கிட்டு வ‌ர‌ச் சொல்லி அனுப்புவாங்க‌. அப்ப‌, வ‌ர்ற‌ வ‌ழில‌ அதுல‌ இருக்குற‌ துணுக்குக‌ள வாசிப்பேன்.

இப்பிடியே இப்ப‌ ஆறாம் வ‌குப்பு வ‌ந்து சேர்ந்துட்டேன். ஒரு நாள் ஊருக்குப் போடான்னு எங்க‌ம்மா என்னை, எங்க‌ அமுச்சிய‌விங்க‌ வீட்டுக்கு அனுப்பி வெச்சாங்க‌. நான்காம் எண் பேருந்துல‌ வ‌ந்து உடுமலைப் பேட்டையில‌ இற‌ங்கி, மூணாம் எண் பேருந்துல‌ லெட்சுமாபுர‌ம் போக‌ணும் நான். அப்ப‌, உடும‌லைப் பேருந்து நிலைய‌த்துல‌ ஒரு மூலைல‌ புத்த‌க‌க் க‌டை ஒன்னு இருக்கும். வெறும் புத்த‌க‌ங்க‌ளும், செய்தித் தாள்க‌ளுமா அவ்வ‌ள‌வு நேர்த்தியா ப‌ர‌ப்பி வெச்சு இருப்பாங்க‌. அவ்வ‌ள‌வு அழ‌கா இருக்கும் அதைப் பார்க்க‌வே. மேலதிகமா இருந்த ரூபாய்க்கு, இராணி முத்தும் குமுதமும் வாங்கினேன். இப்பிடி சொந்தமா அன்னைக்கிதான் புத்தகம் வாங்கினேன்.

அதுக்கப்புறம், இலட்சுமி எழுதின நாவல்கள், இராணி, இராணி முத்துல வர்ற கதைகள்ன்னு நிறைய படிச்சிட்டு, பள்ளிக் கூடம் போகும்போது அதைப் பத்தி பேசிட்டுப் போவோம். இப்பிடியே, பத்தாம் வகுப்பு விடுமுறையும் வந்துச்சு. அப்ப நான், கிட்டத்தட்ட ஒரு மாதம், பல்லடம் பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல எங்க பெரியம்மாவிங்க ஊர்ல இருந்தேன். எங்க பெரியப்பா, இராமாயணம், பெரிய புத்தகம் வெச்சி இருந்தாரு. வெறுமை(boredom) மனுசனைக் கொல்லவே, அதை வாசிக்க ஆரம்பிச்சேன். ப‌தின‌ஞ்சு நாள் பிடிச்ச‌து அதை முடிக்க‌. அதுக்க‌ப்புற‌ந்தாங்க‌, புத்த‌க‌ம் ப‌டிக்கிற‌ ப‌ழ‌க்க‌ம் ஒரு வேக‌ம் எடுத்துச்சு. கூட‌வே, மனசுல வேற‌ மாதிரியான‌ எண்ண‌ங்க‌ளும்!!

(தொடரும்...)

18 comments:

கபீஷ் said...

படிச்சிட்டு கருத்து(?!) சொல்றேன் :-
நான் தான் முதல்ல வந்தேன்?

கபீஷ் said...

என்னது, எழுத்தாளரா ஆகணும்னு தோண ஆரம்பிச்சிட்டுதா? சஸ்பென்ஸ் வச்சு நிறுத்திட்டீங்களே :-(:-(

கபீஷ் said...

ஆறாம் வகுப்பிலேயே சொந்தமா புத்தகம் வாங்கியிருக்கீங்களா, பெரிய ஆளுங்க!!!

பழமைபேசி said...

// கபீஷ் said...
படிச்சிட்டு கருத்து(?!) சொல்றேன் :-
நான் தான் முதல்ல வந்தேன்?
//

வாங்க, வணக்கம்!!

பழமைபேசி said...

//கபீஷ் said...
என்னது, எழுத்தாளரா ஆகணும்னு தோண ஆரம்பிச்சிட்டுதா? சஸ்பென்ஸ் வச்சு நிறுத்திட்டீங்களே :-(:-(
//

இஃகி!ஃகி!!

பழமைபேசி said...

//கபீஷ் said...
ஆறாம் வகுப்பிலேயே சொந்தமா புத்தகம் வாங்கியிருக்கீங்களா, பெரிய ஆளுங்க!!!
//

ஒரு ஆர்வந்தான்!

கபீஷ் said...

நான் யார் வீட்டுல எல்லாம் புத்தகம் வாங்குவாங்களோ அவங்க வீட்டுக்கு, புத்தகம் வர்ற நாள்ல சரியா அந்தந்த நாள்ல ஆஜர் ஆயிடுவேன். அவங்க ஒருவேளை வாங்க மறந்துட்டாங்கன்னா என்ன பாத்ததும் வாங்க போய்டுவாங்க :-):-):-):-)
(எங்க வீட்டுல காசு கிடைக்காது அதனால)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இன்னைக்கு அந்த இடம் பேருந்து நிலையமா மாறி, சுற்றிலும் எத்துனை கடைகள், ஏ அப்பா?
////////////////////////////////
ரீபீட்டு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

(தொடரும்...) //நல்ல யோசனையாக இருக்கே

பழமைபேசி said...

//SUREஷ் said...
(தொடரும்...) //
நல்ல யோசனையாக இருக்கே
//

வாங்க (கலப்பட)SUREஷ்! இஃகி!ஃகி!!

நசரேயன் said...

மனசுல வேற‌ மாதிரியான‌ எண்ண‌ங்க‌ளும்!!??

பழமைபேசி ஆகனும்முன்னா ?

பழமைபேசி said...

//நசரேயன் said...
மனசுல வேற‌ மாதிரியான‌ எண்ண‌ங்க‌ளும்!!??

பழமைபேசி ஆகனும்முன்னா ?
//

அதுக்கு முன்னாடி நிறைய சொல்ல வேண்டி இருக்குது ராசா!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மணி, எப்படி இருங்கிறீங்கள்.. நலமா..நானும் நலமே... நீண்ட காலத்துக்குப் பின்னர் திரும்பவும் வலைப்பக்கம் வருகிறேன்... உங்களுக்கு நிறைய வாசகர்கள் வந்திருக்கிறாங்கள்... சந்தோசமா இருக்கு... இனி தொடர்ந்து சந்திப்போம்..

மதுவதனன் மௌ.

குடுகுடுப்பை said...

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல போலருக்கு

Mahesh said...

உடுமலைப்பேட்டைல முக்காவாசி பேருக்கு பஸ் ஸ்டாண்ட் சாரதா புக் ஸ்டால் தான் லைப்ரரி !!

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
மணி, எப்படி இருங்கிறீங்கள்.. நலமா..நானும் நலமே... நீண்ட காலத்துக்குப் பின்னர் திரும்பவும் வலைப்பக்கம் வருகிறேன்... உங்களுக்கு நிறைய வாசகர்கள் வந்திருக்கிறாங்கள்... சந்தோசமா இருக்கு... இனி தொடர்ந்து சந்திப்போம்..

மதுவதனன் மௌ.
//

வாங்க, வாங்க! நலமா?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
இன்னும் ஆரம்பிக்கவே இல்ல போலருக்கு
//

ஆமுங்க அண்ணே!

பழமைபேசி said...

//Mahesh said...
உடுமலைப்பேட்டைல முக்காவாசி பேருக்கு பஸ் ஸ்டாண்ட் சாரதா புக் ஸ்டால் தான் லைப்ரரி !!
//

வாங்க மகேசு! பேரு எல்லாம் மறந்து போச்சுங்க... மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!!