12/15/2008

பதிவரின் காதல்!

காதலியத் தவிக்க விட்டுட்டு, சக பதிவர் நைசீரியாவுல போயி, அங்க அவர் கொட்டமடிக்க, திருச்சியில அவரோட காதலி அவரோட காதுக்கு எட்டுற மாதிரி என்ன பாடலாம்ன்னு யோசிக்கிறதை மேல படிச்சுப் பாருங்க.

சாமி எனக்காகுமா?
சதுரகிரி பொட்டாகுமா??
நிலாவும் பொழுதாகுமா?
நெனச்ச சாமி எனக்காகுமா?
ஆசை தீர அணைஞ்ச கையி
அவரு மேல போடுங் கையி
பன்னீரளைஞ்ச கையி
போயி ரெண்டு வருசமாச்சே?
சுக்குப் போல நானுலர்ந்து
சோறு கறி செல்லாம சீமையில‌
கொக்குப் போல் அவரிருக்க‌ நானு
சோல‌க் கிளி வாடுத‌னே?!
சாலையில‌ ச‌முத்திர‌மே
சாமி கையில் புத்த‌க‌மே
என்னைத் தொட்ட‌ ம‌ன்ன‌வ‌ர்க்கு
என்ன‌ க‌வி பாட‌ட்டும் நானு?!

60 comments:

குடுகுடுப்பை said...

காதலியையும் விட்டுட்டு போயிட்டாரு, நம்ம கடை பக்கமும் வரமாட்டேங்குறார்.ஏதோ கொபத்தில இருக்காரு போல.

நானும் அந்தக்காதலி போல பாட்டு ஒன்னு போடப்போறேன்

கபீஷ் said...

//சோறு கறி செல்லாம சீமையில‌
கொக்குப் போல் அவரிருக்க‌ //

Good joke, He told he is going to fitnessfirst to reduce overweight.

Please convey this to that innocent u_a's lover

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னது எனக்கு ஒரு காதலியா??

எங்க ?

எங்க??

எங்க??

குடுகுடுப்பை said...

//சோறு கறி செல்லாம சீமையில‌
கொக்குப் போல் அவரிருக்க‌ //

ஒருவேளை என்ன நெனச்சு பாடுன பாட்டா இருக்குமோ?

நசரேயன் said...

நைஜீரியா காதல் நம்ம காவேரி ஆறு மாதிரி வந்தா வரும், வரலைனாலும் வரும் கலவரம்

Anonymous said...

ஆமா...

இந்த ஊர்ல இருக்கிற நானே பார்க்க முடியவில்ல...

நல்லா எழுதியிருக்கீங்க..

இப்போவாவது எங்கயாவது தென்படுகின்றாரான்னு பார்க்கணும்.

Anonymous said...

// உருப்புடாதது_அணிமா said...
என்னது எனக்கு ஒரு காதலியா??

எங்க ?

எங்க??

எங்க??//

எப்படிங்க இதெல்லாம்... இப்படி நடிச்சா நாங்க நம்பிடுவோமா..

எங்க இருக்காங்கன்னு கேட்ககூடாது..

அதுதான் சரியா போட்டு இருக்காரே...

திருச்சியிலே அவரோட காதலி அப்படின்னு..

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நானும் அந்தக்காதலி போல பாட்டு ஒன்னு போடப்போறேன்
//

நல்லாப் போடுங்க...

பழமைபேசி said...

//கபீஷ் said...
//சோறு கறி செல்லாம சீமையில‌
கொக்குப் போல் அவரிருக்க‌ //

Good joke, He told he is going to fitnessfirst to reduce overweight.

Please convey this to that innocent u_a's lover
//

ஏமாத்திட்டு இருக்காரா? அங்க சொல்லுறது ஒன்னு, செய்யுறது ஒன்னு போல இருக்கு?!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
என்னது எனக்கு ஒரு காதலியா??

எங்க ?

எங்க??

எங்க??
//

இதெல்லாம் வெறும் நடிப்புன்னு வாசகர்களுக்கு தெரியாதா, என்ன?!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
//சோறு கறி செல்லாம சீமையில‌
கொக்குப் போல் அவரிருக்க‌ //

ஒருவேளை என்ன நெனச்சு பாடுன பாட்டா இருக்குமோ?
//

ஓ, தங்கமணிக்குத் தெரியாம அப்பிடி வேற ஒன்னு இருக்கா?!

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...
ஆமா...

இந்த ஊர்ல இருக்கிற நானே பார்க்க முடியவில்ல...

நல்லா எழுதியிருக்கீங்க..

இப்போவாவது எங்கயாவது தென்படுகின்றாரான்னு பார்க்கணும்.
//

பாருங்க வாசகர்களே, ஐயாதான் முதல் சாட்சி!

ஆறாம்பூதம் said...

இதெல்லாம் காதலி இருக்கிற ஆளுஙக படிக்க வேண்டிய பதிவு... அக நானூறு கனக்கா இருக்கு.. ஆக இந்த பதிவு செல்லாது.. செல்லாது...

.( மன சாட்சி) - ஏண்டா வசந்த்.. ஆளு கிடைக்காம அலையுற உனக்கு இங்க வந்து இது மாதிரி பாட்டெல்லாம் படிச்சு மத்தவங்க சந்தோசமா(நெசமாவா) இருக்கிறது புடிக்காம.. வயிரெறிஞ்சு ஒரு கமெண்ட் போடனுமா...

ஆறாம்பூதம் said...

பழமை உங்களுக்கு பல விஷயம் தெரிஞ்சு இருக்கு... பழமை குறிப்பிட்டு சொன்ன சக பதிவரானவர் நைஜீரியா ஃபிகர்களை பற்றி நன்றாக விளக்கி சொன்னால் பல நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.. .

S.R.Rajasekaran said...

ஐயோ பாவம் அவர பத்தி அப்படிஎல்லாம் தப்பா நினைக்காதிங்க அவரு நசரேயன் க்காக சரக்கு(GLENFIDDICH) டெலிவரி பண்ண போயிருக்கார்

பழமைபேசி said...

//ஆறாம்பூதம் said...
இதெல்லாம் காதலி இருக்கிற ஆளுஙக படிக்க வேண்டிய பதிவு... அக நானூறு கனக்கா இருக்கு.. ஆக இந்த பதிவு செல்லாது.. செல்லாது... //

அஃகஃகா! இப்பிடித்தான் மொதல்ல இருக்கும்.... போகப் போக நீங்களும் எழுத வேண்டி வரும்....

//.( மன சாட்சி) - ஏண்டா வசந்த்.. ஆளு கிடைக்காம அலையுற உனக்கு இங்க வந்து இது மாதிரி பாட்டெல்லாம் படிச்சு மத்தவங்க சந்தோசமா(நெசமாவா) இருக்கிறது புடிக்காம.. வயிரெறிஞ்சு ஒரு கமெண்ட் போடனுமா...
//

அது!

பழமைபேசி said...

//ஆறாம்பூதம் said...
பழமை உங்களுக்கு பல விஷயம் தெரிஞ்சு இருக்கு... //

ஃகி!ஃகி!! எல்லாம் உங்கள மாதர ஆளுங்க மூலியமா காதுக்கு வார விசயந்தேன்!!

//பழமை குறிப்பிட்டு சொன்ன சக பதிவரானவர் நைஜீரியா ஃபிகர்களை பற்றி நன்றாக விளக்கி சொன்னால் பல நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.. .
//

மலைக்கோட்டையார், இந்த வாசகரின் கோரிக்கையைக் கவனிக்கவும்.

பழமைபேசி said...

// S.R.ராஜசேகரன் said...
ஐயோ பாவம் அவர பத்தி அப்படிஎல்லாம் தப்பா நினைக்காதிங்க அவரு நசரேயன் க்காக சரக்கு(GLENFIDDICH) டெலிவரி பண்ண போயிருக்கார்
//

ஓ, தளபதி ஊட்ல சொல்லாமக் கொள்ளாம, குளிருன்னும் பாக்காம, நீயுயார்க் பாலத்துக்கடியில இந்த வேலையா?

S.R.Rajasekaran said...

\\\\ஊட்ல சொல்லாமக் கொள்ளாம, குளிருன்னும் பாக்காம, நீயுயார்க் பாலத்துக்கடியில இந்த வேலையா\\\ஐயோ சத்தியமா நம்புங்க்க பாலத்துக்கு அடியில் ப்ராஜெக்ட் விசயமாத்தான் போயிருப்பாரு

அது சரி(18185106603874041862) said...

அவிங்க பாட்றத இப்பிட்யெல்லாம் ஒட்டு கேட்கப்ப்டாது...பல்லவி சரி, அதுக்கப்புறம் சரணத்தோட டூயட் பாட்டு வரணுமெ..அது எங்கன்னேன்?

(உங்க பிளாக்ல எதுனா பிரச்சினையா தல? வர்றப்பல்லாம் பிரவுசர ஃப்ரீஸ் பண்ணிடுது...எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை இருக்கா?)

பழமைபேசி said...

//அது சரி said...
அவிங்க பாட்றத இப்பிட்யெல்லாம் ஒட்டு கேட்கப்ப்டாது...பல்லவி சரி, அதுக்கப்புறம் சரணத்தோட டூயட் பாட்டு வரணுமெ..அது எங்கன்னேன்?//

வாங்க அண்ணாச்சி! இன்னைக்கு இவ்வளவுதேன்..... இஃகிஃகி!!

//(உங்க பிளாக்ல எதுனா பிரச்சினையா தல? வர்றப்பல்லாம் பிரவுசர ஃப்ரீஸ் பண்ணிடுது...எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை இருக்கா?)
//

எனக்கு ஒன்னும் அப்பிடியாவுலைங்ளே?! நம்ப ஆட்களும் யாரும் இது வரைக்கும் எதுவும் சொல்லலை. மக்களே, அப்பிடி எதாவது இருந்தா சொல்லுங்க, நான் சரி செயயுறேன்.

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
ஐயோ சத்தியமா நம்புங்க்க பாலத்துக்கு அடியில் ப்ராஜெக்ட் விசயமாத்தான் போயிருப்பாரு
//

ஆகா, நம்பிட்டோம், நம்பிட்டோம்!!

கபீஷ் said...

// மக்களே, அப்பிடி எதாவது இருந்தா சொல்லுங்க,//

அப்படி எதுவும் இல்ல :-):-)

கபீஷ்
மக்கள் பிரதிநிதி

பழமைபேசி said...

//கபீஷ் said...
// மக்களே, அப்பிடி எதாவது இருந்தா சொல்லுங்க,//

அப்படி எதுவும் இல்ல :-):-)

கபீஷ்
மக்கள் பிரதிநிதி
//

மக்கள் பிரதிநிதிக்கு ரொம்ப நன்றிங்க!

நசரேயன் said...

/*
(உங்க பிளாக்ல எதுனா பிரச்சினையா தல? வர்றப்பல்லாம் பிரவுசர ஃப்ரீஸ் பண்ணிடுது...எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை இருக்கா?)
*/
குதிரைக்கு ஊத்திர சரக்கை கொண்டு பழமைபேசி பதிவுக்கு கொண்டு வந்தால் அப்படி தான் நடக்கும்

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
/*
(உங்க பிளாக்ல எதுனா பிரச்சினையா தல? வர்றப்பல்லாம் பிரவுசர ஃப்ரீஸ் பண்ணிடுது...எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை இருக்கா?)
*/
குதிரைக்கு ஊத்திர சரக்கை கொண்டு பழமைபேசி பதிவுக்கு கொண்டு வந்தால் அப்படி தான் நடக்கும்

//

என்னா அநியாயமா இருக்கு....சரக்கு ஊத்தினா நாந்தான ஃப்ரீஸ் ஆகணும்...பிரவ்சர் ஏன் ஃப்ரீஸ் ஆகுது?? தவிர சரக்கு ஊத்துனா தான் குதிர சும்மா குதிர மாதிரி போகும், நீங்க பார்த்ததில்ல? இங்க லண்டன்ல எல்லாம் குதிரைக்கு பிராண்டி ஊத்திட்டு தான் வெளிய கூட்டி போவாங்க...

பழமைபேசி said...

// அது சரி said...
//
என்னா அநியாயமா இருக்கு....சரக்கு ஊத்தினா நாந்தான ஃப்ரீஸ் ஆகணும்...பிரவ்சர் ஏன் ஃப்ரீஸ் ஆகுது??
//

உலாவி உறஞ்சி போனா மாதிரி உங்க கண்ணுக்குத் தெரியுதோ, என்னவோ?

ராஜ நடராஜன் said...

//சோறு கறி செல்லாம சீமையில‌
கொக்குப் போல் அவரிருக்க‌ நானு
சோல‌க் கிளி வாடுத‌னே?!//

பசலை வந்துட்டாலேப் பாட்டு சோகமாயிடுது!

நைஜீரியாக் காதலரே!சோலக்கிளி வாடும்போது இப்படி சோறு கறி செல்லாம வாடலாமா?

http://urupudaathathu.blogspot.com/ said...

///காதலியத் தவிக்க விட்டுட்டு,///

அவிங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சாம்..( சொன்னாங்க)

ஐயா, ஜாலி ஜாலி,...ஹாப்பி இன்று முதல் ஹாப்பி

http://urupudaathathu.blogspot.com/ said...

//நைசீரியாவுல போயி, அங்க அவர் கொட்டமடிக்க///

அண்ணே இப்படி அபாண்டமா என் மேல பழிய போடாதீங்க..
நான் ஒரு கற்புகண்ணன் ( கண்ணகிக்கு எதிர்பதம் )

http://urupudaathathu.blogspot.com/ said...

//அவரோட காதலி அவரோட காதுக்கு எட்டுற மாதிரி என்ன பாடலாம்ன்னு யோசிக்கிறதை மேல படிச்சுப் பாருங்க. //

மேல படிச்சி பாருங்கன்னு சொல்லிட்டு பாட்ட ஏன் கீழ போட்டீங்க??
எப்படி புடிச்சோம் பாயிண்ட்ட பாருங்க ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//சாமி எனக்காகுமா?///

ஒருவேளை இது திரிஷா பாடுற பாட்டா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஆசை தீர அணைஞ்ச கையி
அவரு மேல போடுங் கையி
பன்னீரளைஞ்ச கையி
போயி ரெண்டு வருசமாச்சே?////

நேர்ல பார்த்த மாதிரியே சொல்றீங்களே இது நியாயமா?/ தர்மமா??
அடுக்குமா??

அப்புறம் ரெண்டு வருஷம் சரிதான் ஆனா நான் தான் போன வருசமே ஊருக்கு போயிட்டு வந்துட்டேனே.. அப்புறம் எப்படி ரெண்டு வருஷம்.. கணக்கு இடிக்குதே ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//சாலையில‌ ச‌முத்திர‌மே
சாமி கையில் புத்த‌க‌மே
என்னைத் தொட்ட‌ ம‌ன்ன‌வ‌ர்க்கு
என்ன‌ க‌வி பாட‌ட்டும் நானு?!///

இதை யாரவது படிச்சி தொலசாங்கனா, எனக்கு யாருன்னே பொண்ணு குடுப்பாங்க??

அவ்வ்வ்வ்வ்வ்வ்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அவ்வ்வ்வ்

அவ்வவ்

அவ்வ

அவ்

http://urupudaathathu.blogspot.com/ said...

////குடுகுடுப்பை said...

காதலியையும் விட்டுட்டு போயிட்டாரு, நம்ம கடை பக்கமும் வரமாட்டேங்குறார்.ஏதோ கொபத்தில இருக்காரு போல.

நானும் அந்தக்காதலி போல பாட்டு ஒன்னு போடப்போறேன்////

ஐயோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்க முதல்வர்,...

கொஞ்ச பிஸி ( கொஞ்ச அப்படின்னா அந்த கொஞ்ச இல்ல)

http://urupudaathathu.blogspot.com/ said...

///கபீஷ் said...

Good joke, He told he is going to fitnessfirst to reduce overweight.

Please convey this to that innocent u_a's lover///

ஏன்.. இந்த கொலை வெறி??
நான் எதுக்கு fitness சென்டர்க்கு போகணும்..
( நான் எப்பவுமே பிட் தான்..)

http://urupudaathathu.blogspot.com/ said...

//நசரேயன் said...

நைஜீரியா காதல் நம்ம காவேரி ஆறு மாதிரி வந்தா வரும், வரலைனாலும் வரும் கலவரம்///

ஹலோ cbi ஆபீஸ்??
இங்க ஒரே terrors குரூப்பா இருக்கு..
வந்து அள்ளிகிட்டு போங்க

Unknown said...

// உருப்புடாதது_அணிமா said...
//சாலையில‌ ச‌முத்திர‌மே
சாமி கையில் புத்த‌க‌மே
என்னைத் தொட்ட‌ ம‌ன்ன‌வ‌ர்க்கு
என்ன‌ க‌வி பாட‌ட்டும் நானு?!///

இதை யாரவது படிச்சி தொலசாங்கனா, எனக்கு யாருன்னே பொண்ணு குடுப்பாங்க??//

திருச்சில யாரும் பொண்ணு கொடுக்காம இருக்க நான் கியேரண்டி.. ;))))

http://urupudaathathu.blogspot.com/ said...

///இராகவன், நைஜிரியா said...

ஆமா...

இந்த ஊர்ல இருக்கிற நானே பார்க்க முடியவில்ல...

நல்லா எழுதியிருக்கீங்க..

இப்போவாவது எங்கயாவது தென்படுகின்றாரான்னு பார்க்கணும்.///இப்படி நீங்களே same சைடு கோல் போடலாமா???

Unknown said...

// உருப்புடாதது_அணிமா said...
///ஆசை தீர அணைஞ்ச கையி
அவரு மேல போடுங் கையி
பன்னீரளைஞ்ச கையி
போயி ரெண்டு வருசமாச்சே?////

நேர்ல பார்த்த மாதிரியே சொல்றீங்களே இது நியாயமா?/ தர்மமா??
அடுக்குமா??

அப்புறம் ரெண்டு வருஷம் சரிதான் ஆனா நான் தான் போன வருசமே ஊருக்கு போயிட்டு வந்துட்டேனே.. அப்புறம் எப்படி ரெண்டு வருஷம்.. கணக்கு இடிக்குதே ??//

லாஸ்ட் இயர் வந்த போதும் அவங்கள பார்க்க நீங்க போகலியாம் எனக்கு நியூஸ் வந்தது...
;))
திருச்சியிலிருந்து
ஸ்ரீமதி

http://urupudaathathu.blogspot.com/ said...

///இராகவன், நைஜிரியா said...

எப்படிங்க இதெல்லாம்... இப்படி நடிச்சா நாங்க நம்பிடுவோமா..

எங்க இருக்காங்கன்னு கேட்ககூடாது..

அதுதான் சரியா போட்டு இருக்காரே...

திருச்சியிலே அவரோட காதலி அப்படின்னு..///

அங்க தான எனக்கு ஒரு டவுட்...
திருச்சில இருக்குற ஒரு காதலியா, இல்ல அங்க இருக்குற 1330காதலிகளா, இதுல எந்த ஒன்ன நான் தேர்ந்தெடுப்பேன்???

http://urupudaathathu.blogspot.com/ said...

//ஸ்ரீமதி said...

லாஸ்ட் இயர் வந்த போதும் அவங்கள பார்க்க நீங்க போகலியாம் எனக்கு நியூஸ் வந்தது...
;))
திருச்சியிலிருந்து
ஸ்ரீமதி///

அவங்க சொல்றது பத்தாதுன்னு இப்போ நீங்க வேற வந்து இப்படி , அது ஏதோ சொல்லுவாங்களே, என்னது ஆங் மானம்... அத பறக்க வுடுறீங்களே,

எல்லோருக்கும் மறுக்க ஒரு தடவை கூவுறேன்..
நான் ரொம்ப நல்லவன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஆறாம்பூதம் said...

பழமை உங்களுக்கு பல விஷயம் தெரிஞ்சு இருக்கு... பழமை குறிப்பிட்டு சொன்ன சக பதிவரானவர் நைஜீரியா ஃபிகர்களை பற்றி நன்றாக விளக்கி சொன்னால் பல நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.. .///

BED TIME STORY கேட்டா நல்லா இருக்கும்..
ஆனால் நண்பரே நீங்கள் கேட்பது BAD TIME STROYவா இல்ல இருக்கும்..
அதனால இந்த விசபரிட்சை எதுக்கு ??

கபீஷ் said...

உ-அ முழு வீச்சுல (full form ன் என்னாலான தமிழாக்கம்) இறங்கிட்டாரு, பாவம் அவரு, அவருக்கு வேலையே இல்லாத வேலை யாராவது வாங்கிக் கொடுங்க

பழமைபேசி said...

@@குடுகுடுப்பை
@@உருப்புடாதது_அணிமா
@@நசரேயன்
@@இராகவன், நைஜிரியா
@@பழமைபேசி
@@ஆறாம்பூதம்
@@ S.R.ராஜசேகரன்
@@அது சரி
@@கபீஷ்
@@ராஜ நடராஜன்
@@ஸ்ரீமதி

மலைக்கோட்டையாரோட காதலியின் வருத்தத்துல பங்கெடுத்துகிட்ட, என்னோட பக்கத்துக்கு வந்த உங்க எல்லார்க்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

கபீஷ் said...

உங்க பேரையும் ஏன் நன்றி அறிவிப்புல சேர்த்துக்கிட்டீங்க? நமக்கு நாமே திட்டமா? :-):-):-)

பழமைபேசி said...

//கபீஷ் said...
உங்க பேரையும் ஏன் நன்றி அறிவிப்புல சேர்த்துக்கிட்டீங்க? நமக்கு நாமே திட்டமா? :-):-):-)
//

இஃகி!ஃகி!!

http://urupudaathathu.blogspot.com/ said...

///பழமைபேசி said...

//கபீஷ் said...
உங்க பேரையும் ஏன் நன்றி அறிவிப்புல சேர்த்துக்கிட்டீங்க? நமக்கு நாமே திட்டமா? :-):-):-)
//

இஃகி!ஃகி!!///

கேள்வி கேட்டா பதில சொல்லாம என்ன இது அசத்துதனமான சிரிப்பு ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//மலைக்கோட்டையாரோட காதலியின் வருத்தத்துல பங்கெடுத்துகிட்ட, என்னோட பக்கத்துக்கு வந்த உங்க எல்லார்க்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!///

எனக்கு காதலியே கிடையாதுன்னு கூவுறேன்.. அத விட்டுட்டு நன்றி அறிவிப்பு போடுறீங்களே இது என்ன விசமத்தனம் ???

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் அம்பது..

போட்டாச்சு அரை செஞ்சுரி ..

சோடா இல்லியா??

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...

கேள்வி கேட்டா பதில சொல்லாம என்ன இது அசத்துதனமான சிரிப்பு ??
//

மொதல்ல, நீங்க உங்க வீட்டுக்குப் போயி போட்டுருக்குற மறுமொழிகளுக்கு பதில் சொல்லுங்க.... நானும் போட்டுட்டு, பதிலுக்கு எவ்வளவு நாள்தான் காத்திருக்குறது?

http://urupudaathathu.blogspot.com/ said...

///கபீஷ் said...

உ-அ முழு வீச்சுல (full form ன் என்னாலான தமிழாக்கம்) இறங்கிட்டாரு, பாவம் அவரு, அவருக்கு வேலையே இல்லாத வேலை யாராவது வாங்கிக் கொடுங்க///

எனக்கு Recommendation Letter குடுத்த கபீஷ் வாழ்க

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
எனக்கு காதலியே கிடையாதுன்னு கூவுறேன்.. அத விட்டுட்டு நன்றி அறிவிப்பு போடுறீங்களே இது என்ன விசமத்தனம் ???
//

உங்க காதலி வந்து சொல்லட்டும், நாங்க நம்புறோம்!

http://urupudaathathu.blogspot.com/ said...

///பழமைபேசி said...
மொதல்ல, நீங்க உங்க வீட்டுக்குப் போயி போட்டுருக்குற மறுமொழிகளுக்கு பதில் சொல்லுங்க.... நானும் போட்டுட்டு, பதிலுக்கு எவ்வளவு நாள்தான் காத்திருக்குறது?////

நம்ம வூட்டு அட்ரஸ் மறந்து போச்சு.. அந்த பக்கம் போனா, இன்னொரு பதிவு போட்டுடுவனோன்னு பயமா இருக்கு.. அதனால தான் வீட்ட விட்டு ஓடியாந்துட்டேன் ..

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
நம்ம வூட்டு அட்ரஸ் மறந்து போச்சு.. அந்த பக்கம் போனா, இன்னொரு பதிவு போட்டுடுவனோன்னு பயமா இருக்கு.. அதனால தான் வீட்ட விட்டு ஓடியாந்துட்டேன் ..

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
//

Hey You! I am sorry, you go to answer to our response, you know? Escapism is not a good reason...

http://urupudaathathu.blogspot.com/ said...

///பழமைபேசி said...

உங்க காதலி வந்து சொல்லட்டும், நாங்க நம்புறோம்!///

நைஜீரியா காதலி சொன்ன ஓகேவா??

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
நைஜீரியா காதலி சொன்ன ஓகேவா??
//

நீங்க நைசீரியாவுல ஒரு ஆளை வெச்சிட்டு இருக்குறத ஒத்துக்க வெக்குறதுக்கு, இவ்வளவு நேரம் ஆச்சு...அப்ப, இப்பப் போயி நான் வேலைக்கு புறப்படலாம். வணக்கம்!!

http://urupudaathathu.blogspot.com/ said...

//பழமைபேசி said...

Hey You! I am sorry, you go to answer to our response, you know? Escapism is not a good reason...///

தொரை சும்மா இங்கிலிஷ்காரன் கணக்கால மிரத்துது..

நாங்க கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவங்க..

மிரட்டாதீங்க ..

ESCAPISM எங்கள் பிறப்புரிமை..
அதை விட்டு குடுக்கமாட்டேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

///பழமைபேசி said...நீங்க நைசீரியாவுல ஒரு ஆளை வெச்சிட்டு இருக்குறத ஒத்துக்க வெக்குறதுக்கு, இவ்வளவு நேரம் ஆச்சு...அப்ப, இப்பப் போயி நான் வேலைக்கு புறப்படலாம். வணக்கம்!!///

நைஜீரியா காதலியா? அந்த பின்னோட்டம் நான் போட்டது கிடையாது.. யாரோ எதிர் நாடுக்கார்களின் சதி..

நீங்க வேலைக்கு எல்லாம் போவீங்களா??

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம், இதப் படிக்கும் சக பதிவர், உடனே விடுப்புல ஓடிவரப் போறாரு சொந்த ஊருக்கு.
அம்புட்டு நல்லாருக்கு இந்தப் பாட்டு.