12/30/2008

சூந்தோ சூந்து!

நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா நொம்பப் புடிக்கும். மூனு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். அதுவும் அந்த வீதம்பட்டி வேலூர் வினாயகங் கோவில் மைதானம் இருக்கே? அட அட, சொல்லி மாளாது போங்க. கோயலைச் சுத்தியும் அரசமர வேப்பமர இணைகள், ஒவ்வொரு இணைக்கும் தனி மேடை கட்டி, அந்த மேடையில மரங்களுக்குக் கீழ சாமி சிலைகள வெச்சி, அவ்வளவு நேர்த்தியா இருக்கும். இதெல்லாம் மைதானத்துலன்னா, கோவில் வளாகத்துக்குள்ள அழகான வில்வமரம் எப்பவும் நல்ல வாசத்தோட தென்றல் காத்தை சிலு சிலுன்னு வீசிட்டே இருக்கும்.

கோயிலோட கொடி மரத்துக்கு, அழகான சிற்பக் கூடத்தை வடிவமைச்சு, அதுக்கு மேலதான் தீபம் ஏத்துறது. ஊரே கூடும், அந்த பதினாலு நாளும் வெகு விமரிசையா இருக்கும். கடைசி நாள் அன்னைக்கு தாங்க, வெடிகளும், சூந்தும், சொக்குப்பனையும் களை கட்டும். வெடிய வெடிய சிறப்பா இருக்கும். நாம பாட்டெல்லாம் பதிஞ்சிட்டு வர்றம் இல்லீங்களா, அப்ப சூந்து ஞாவகம் வர, சூர்யா அவிங்ககிட்ட அதுக்கான பாட்டைக் கேக்க, அவரு தெரியாதுன்னு சொல்லிப் புட்டாருங்க. சரிங்க, எனக்குத் தெரிஞ்ச மேலதிக விபரங்களைப் பாக்கலாம் இப்ப.

தீபம் வெச்சி, அவிசேகம் எல்லாம் குடுத்தவின்னாடி, ஆம்புளைப் பசங்க அவிங்க ஆட்டத்தை ஆரம்பிச்சிருவாங்க. அதுக்குத் தேவையான சூந்தை முன்னாடியே தயார் பண்ணி வெச்சிருப்பாங்க. திறவக்கொடி(பிரிமனை), இல்லீன்னா வட்டமா இருக்குற எதனா ஒன்னை துணியால சுத்தி, அதை தீபத்துக்கு வாங்கி வெச்சு இருக்குற எண்ணையில ஊற வெச்சிடுவாங்க. அந்த வட்டமா இருக்குறத, நாய்ச் சங்கிலி, இல்லீன்னா உறி தொங்க உடுற சங்கிலியோட ஒரு கொணை(முனை)யில கோத்து விட்டுடுவாங்க. மறு கொணைய கையில வாகாப் புடிச்சுக்குற மாதர ஒரு குச்சியோட கட்டி வெச்சிருப்பாங்க. இதைத்தாங்க சூந்துன்னு சொல்லுறது. சூந்துன்னா கொடும்பாவி எரிக்கிறதுன்னும் ஒரு அர்த்தம் இருக்கு.

தீபம் வெச்சி அவிசேகம் எல்லாம் குடுத்தவின்னாடி, இதைத் தீயில பத்த வெச்சி, லாவகமா சுழட்டி சுழட்டி வெளையாடுவாங்க. காலுக்குள்ள உட்டு சுத்துவோம். தலைமேல சர் சர்ன்னு சுத்துவோம். இப்பிடி அவனவன் அவனவன் திறமையக் காமிப்போம். சும்மா சுத்துனா, ஆட்டம் வாட்டம் அவ்வளவு நல்லா இருக்காது. சுத்தி இருக்குறவிங்க, அதுக்குன்னு இருக்குற பாட்டுகளைப் பாடுவாங்க. பாடப் பாட, சுதியும் ஏறும். ஆனா, அந்தப் பாட்டுகெல்லாம் கொச்சையாவும், பாமரத்தனமாவுந்தான் இருக்கு. கொஞ்சமா நல்லவிதமான பாட்டுகளும் இருக்கு. இஃகிஃகி! எனக்கு ஞாவகம் இருக்குறதெல்லாம், மோசமான பாட்டுகதேன்.

படக்கட்டு படக்கட்டு படுக்கையிலே
படலைச் சாத்தி இருக்கையிலே
............................... (தணிக்கை, இஃகிஃகி)
.....................................................
சூந்தோ சூந்து!

மேக்கால ஊட்டு மாரியப்பனுக்கு
தும்மல் வந்துச்சாம்
செவுட்டுச் சிவகாமிக்கு
ஒடனே மாரு வலிச்சதாம்
மாரு வலிக்குதுன்னு
மாரியப்பன் ஓடி வந்தானாம்
ஓடி வந்த மாரியப்பனுக்கும்
செவுட்டுச் சிவகாமிக்கும்
சூந்தோ சூந்து!

இப்பிடி நெறய இருக்குதுங்க. உங்களுக்கு அந்த மாதர எதனாத் தெரிஞ்சா எனக்கு மின்னஞ்சல் செய்யுங்க. இந்த வட்ட வளையத்துக்கு பதிலா, தட்டுப் போர்ல இருக்குற தட்டுக் கத்தையோட மொனையில தீயை வெச்சி, அதையும் சுத்துவாங்க. அப்புறம், மசத்தனமா கண்டதையும் எரிக்குறதுதேன். இஃகிஃகி!

சொக்கப் பனை/ சொக்கப் பானை எரிக்குற வழக்கமும் இருக்கு. அதாவது, சொக்கர் வந்து காமனை அழிச்சதை ஞாவகப் படுத்துற விதமா, பனையோலைல குச்சு கட்டி, அதையும் கார்த்திகைத் திருநாள் அன்னைக்கு எரிப்பாங்க. அந்த சூந்துப் பாட்டுக தெரிஞ்சா, எனக்கு சொல்லுங்க. அப்புறம், அடுத்த கார்த்திகைக்கு நீங்களும் சூந்து வெளயாடுங்க... இஃகிஃகி!

நீர் ஆழம் கண்டுகிட்டாலும், நெஞ்சு ஆழம் காண முடியாது!

24 comments:

நசரேயன் said...

நல்ல விளக்கு(கி) சொல்லி இருக்கியா, இப்படித்தான் கொடும் பாவி எரிக்க கத்து கிட்டாங்களா?

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்ல விளக்கு(கி) சொல்லி இருக்கியா, இப்படித்தான் கொடும் பாவி எரிக்க கத்து கிட்டாங்களா?
//

இஃகிஃகி! நாம செஞ்சது எல்லாம் சூந்துதானுங்கோ...

குடுகுடுப்பை said...

நான் என்னமோ நெனச்சிட்டேன்.

நான் நரேந்திரன்... said...

பழைய சைக்கிள் டயர் ல நல்லா துணி எல்லாம் சுத்தி சூந்து விளையாடி இருக்கீங்களா? - அப்புறம் தீவாளியிலேயே தீபத்துக்குனு பட்டாசு தனியா எடுத்து வைச்சு அதையும் வெடிச்சுக்கிட்டு...

கபீஷ் said...

//நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா நொம்பப் புடிக்கும். //

Namakkum...

தங்ஸ் said...

டயர்தான் ரொம்ப நேரம் எரியும்....படு பச்சையான பாட்டுகள்தான் இருக்கு:-)எதுகை,மோனையோட சந்தம் தப்பாம இருக்கும்...வேணுமா???!!!! :-)))))))))))))))))

அது சரி(18185106603874041862) said...

மொதல்ல, சூந்துன்னா தமிழ்ல என்ன? :0)

அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கறீங்க தல....ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்து தப்பா டைப் ஆயிருந்தா என்னா ஆயிருக்கும்?? :0)))

Anonymous said...

சுளுந்துதான் சூந்து ஆகிடுச்சூ

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நான் என்னமோ நெனச்சிட்டேன்.
//

என்னமோன்னா?

பழமைபேசி said...

//Naren said...
பழைய சைக்கிள் டயர் ல நல்லா துணி எல்லாம் சுத்தி சூந்து விளையாடி இருக்கீங்களா? - அப்புறம் தீவாளியிலேயே தீபத்துக்குனு பட்டாசு தனியா எடுத்து வைச்சு அதையும் வெடிச்சுக்கிட்டு...
//

ஆமுங்கோ...அது இல்லாமலா? இஃகிஃகி!!

பழமைபேசி said...

//கபீஷ் said...
//நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா நொம்பப் புடிக்கும். //

Namakkum...
//

வாங்க, வணக்கமுங்கோ!!

பழமைபேசி said...

//தங்ஸ் said...
டயர்தான் ரொம்ப நேரம் எரியும்....படு பச்சையான பாட்டுகள்தான் இருக்கு:-)எதுகை,மோனையோட சந்தம் தப்பாம இருக்கும்...வேணுமா???!!!! :-)))))))))))))))))
//

மின்னஞ்சல்ல அனுப்பி விடுங்க தங்சு....விபரப் பட்டை(profile)ல பாருங்க‌...for an email address

பழமைபேசி said...

//அது சரி said...
மொதல்ல, சூந்துன்னா தமிழ்ல என்ன? :0)

அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கறீங்க தல....ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்து தப்பா டைப் ஆயிருந்தா என்னா ஆயிருக்கும்?? :0)))
//

இஃகிஃகி! சின்ன அம்மணி அவிங்க சொன்ன மாதிரி...அது சுளுந்து...அப்பிடின்னா தீப்பந்தம் மாதிரி!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
சுளுந்துதான் சூந்து ஆகிடுச்சூ
//

நன்றீங்கோ.....

சரண் said...

இப்பத்தானுங்கோ கொஞ்சமா புரியுது...

எங்கூர்லியெல்லாம் தென்னோலைல கூம்பு கட்டி தீய வெச்சுத் தாண்டுவாங்க...

நானெல்லாம் அப்ப ரொம்ப சிருசுங்கோ.. பாட்டெல்லாம் பாடுனதா நியாபகம் இல்லீங்களே...

சரண் said...

//அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கறீங்க தல....ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்து தப்பா டைப் ஆயிருந்தா என்னா ஆயிருக்கும்?? :0)))//

நல்லாச் சொன்னிங்க... போங்க..

Mahesh said...

நல்ல நினைவோடை....

நம்ம போடிபட்டி முருகன் கோயில்லயும் இது உண்டு.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மாவளியோ மாவளியோன்னு அம்மா சொல்லக் கேள்வி இந்த சொக்கப்பனைப் பற்றி.

சின்னப்போ, கார்த்திகை தீபத்திருநாள் சாயங்கால்ம், ரெண்டு வீடு தள்ளி இருந்த் ஒரு அம்மணி, இது மாதிரி சுத்துனாங்க, தூரத்துல இருந்து அவங்களைப் பாத்த எனக்கு, ஏதோ அவங்களுக்கு தீப் புடிச்ச மாதிரி தெரிஞ்சுது, கூடவே அவுங்க ஏதோ பாடிகிட்டே வேற கத்துனாங்களா, டவுட்டே இல்ல,
அய்யய்யோ கொளுத்திகிட்டாங்கம்மா ந்னு எங்க அம்மாகிட்ட சொல்ல, அவங்க வெளிய வந்து பாத்து அப்புறம் வெளக்கியதுதான் மேல இருப்பது.

அளவில்லா கொசுவத்தி.............

Unknown said...

அட அப்பனு ரெம்ப பக்கத்துல வண்ட்டீன்னு நெனைக்கிறே..அதெங்கண்ணு வீ.வேலூர் சமாச்சாரம்..நமக்கு ஜக்கார்பாளையம்..இந்த ஊரு தெரியுமா? ..இப்பிடியே பழசப் பூரா கெளரி உட்டுட்டு இருந்தீன்னு வெய்யி..மறுக்கா ஊருக்கே போயி உக்காந்துக்குவேன்னு
நெனைக்கிறே..சும்மா பட்டய கெளப்புரீடா மாப்ளெ..இன்னி நொம்ப எழுதோணுமாக்கு..எரங்காட்டுலையெல்லா சுத்தியிருக்கறையா..எல்லாத்திமு எழுது போட்டு..ஆனதாகுட்டு...

பழமைபேசி said...

// சூர்யா said...
இப்பத்தானுங்கோ கொஞ்சமா புரியுது...

எங்கூர்லியெல்லாம் தென்னோலைல கூம்பு கட்டி தீய வெச்சுத் தாண்டுவாங்க...

நானெல்லாம் அப்ப ரொம்ப சிருசுங்கோ.. பாட்டெல்லாம் பாடுனதா நியாபகம் இல்லீங்களே...
//

வாங்க சூர்யா, அப்படீங்ளா? எல்லாம் நெம்ப மாறிட்டு வருது இல்ல?! அதான்!

பழமைபேசி said...

//சூர்யா said...
//அப்புறம் ஆனாலும் நீங்க ரொம்ப தான் ரிஸ்க் எடுக்கறீங்க தல....ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்து தப்பா டைப் ஆயிருந்தா என்னா ஆயிருக்கும்?? :0)))//

நல்லாச் சொன்னிங்க... போங்க..
//

இஃகிஃகி!

பழமைபேசி said...

//Mahesh said...
நல்ல நினைவோடை....

நம்ம போடிபட்டி முருகன் கோயில்லயும் இது உண்டு.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
//

மகேசு அண்ணே, வாங்க. அப்படீங்ளா? உங்களுக்கும் வாழ்த்துகள்!

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

அளவில்லா கொசுவத்தி.............
//

அஃகஃகா! நல்ல நினவோடைங்க.... நொம்ப சந்தோசம்!

பழமைபேசி said...

//senthil said...
அட அப்பனு ரெம்ப பக்கத்துல வண்ட்டீன்னு நெனைக்கிறே..அதெங்கண்ணு வீ.வேலூர் சமாச்சாரம்..நமக்கு ஜக்கார்பாளையம்..இந்த ஊரு தெரியுமா? ..இப்பிடியே பழசப் பூரா கெளரி உட்டுட்டு இருந்தீன்னு வெய்யி..மறுக்கா ஊருக்கே போயி உக்காந்துக்குவேன்னு
நெனைக்கிறே..சும்மா பட்டய கெளப்புரீடா மாப்ளெ..இன்னி நொம்ப எழுதோணுமாக்கு..எரங்காட்டுலையெல்லா சுத்தியிருக்கறையா..எல்லாத்திமு எழுது போட்டு..ஆனதாகுட்டு...
//

இதாரு... பெரிய தோட்டத்து செந்திலானா...இஃகிஃகி! சக்கார்பாளையத்து இட்டேரிலதான் நாம கில்லீந் தாண்டலு வெளையாடுறதே....அந்த வாய்க்கா மேட்டுல ஓடி ஆடுனது...இட்டேரில மேக்குமின்னா போயி கப்பினிபாளயம் போறதெல்லாம் மறந்து போயிருமாக்கூ....இஃகிஃகிஃகி!