12/24/2008

அஞ்சல கூட, மங்கம்மா!

மங்கம்மா, அஞ்சலையுடன் உரையாடுவது:

பேரு: நானு அஞ்சாத தலை, அதான் எம்பேரு அஞ்சல.

வயசு: எவடி இவ? ஒரு உழவு உழுதாலும் உழவுதான், ஒரு புள்ள பெத்தாலும், கெழவி கெழவிதாண்டி!

வேலை: எனக்கு அடுப்பே திருப்பதி, கட்டுனவனே குலதெய்வம்.

பொழுது போக்கு: யானையேற யோகம் வந்தாலும் தவ்வத் தெரியனுமே! ஒரு மண்ணும் இல்லடி மங்காத்தா!!

பிடிச்ச நபர்: சோறு சிந்துனா பொறுக்கலாம், சொல்லு சிந்துனா பொறுக்கவா முடியும்? ம்ம், கட்டுன மவராசந்தான்!

சொல்ல விரும்புறது: ரெண்டு பொண்டாட்டிகாரன் சிண்டப்பாரு, கஞ்சாக்குடிச்சவன் கண்ணப்பாரு!

பிடிக்காதது: ஆடத் தெரியாதவதான், கூடம் கோணல்னு சொல்லுவா. என்னையேன்டி வம்புக்கு இழுக்குறே?

படிப்பு: மாங்காயத்தின்னு உங்கம்மா உன்னை மடியில பெத்தாக, தேங்காயத்தின்னு எங்கம்மா தெருவிலயா பெத்தாக? நானும் படிச்சு இருக்குறன்டி, மருவாதியா பேசுடி மங்காத்தா.

சொத்து: யாரடி இவ?
கொடுத்துக்கெட்டவன் மாபலி
கொடுக்காமக்கெட்டவன் துரியோதனன்
தொட்டுக்கெட்டவன் சூரபத்மன்
தொடாமக்கெட்டவன் ராவணன்
சொத்தாசைல கெட்டவன் நெறய!
எனக்கு சொத்து, நிம்மதிதாண்டி மங்கு!!

கேள்வி கேட்டு நொந்த மங்காத்தா:
உண்டு கெட்டது வயிறு!
உண்ணாமக் கெட்டது உறவு!!
கையக் கொஞ்சம் நனச்சிட்டு போடீ இவளே!!



(இவங்க பேச்சக் கேட்ட நாம: எண்ணெ முந்துச்சா? திரி முந்துச்சா?? எதுக்கும் மெதுவாவே பேசுவோம். காதுல விழுந்திடப் போவுது?!)

2 comments:

கபீஷ் said...

ஐ! நாந்தான் முதல்லயா?

அப்பாவி முரு said...

அண்ணே FULL FORM-ல இருக்கீங்க...