12/18/2008

தமிழ்ப் பிரபலம் சுத்தி விடப்பட்டாரா?

வணக்கம்! இன்று இந்தப் பதிவின் மூலமாக, தமிழ்ப் பிரபலம் ஒருவரைப் பற்றிய நிகழ்வு ஒன்றைப் பதிவிடுகிறேன். அதன் முன்பாக, யாம் கனடா நாட்டில் இருந்த பொழுது, எமது நண்பரிடம் நடந்த ஒரு உரையாடலைத் தெரிந்து கொள்வது அவசியம். அன்று காலையில், வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்டு, பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் நூலகம் சென்றடைந்து, அங்கிருக்கும் வெண்குழல் ஊது மூலையை நோக்கிச் சென்றேன். அங்குதான் பெரும்பாலும் எமது நண்பர்கள் இருப்பர்.

அங்கேதான் நண்பர் பராபரன் இருந்தார், முகம் சற்றுப் பேயறைந்தாற்ப் போல இருந்தது. அதைக் கண்டதும், எமக்குள் நடந்த உரையாடல்,

"வணக்கம், பராபரன்! ஏன் மொகம் வெளிரிப் போய் நிக்கறீங்க‌?"

"ஒன்னும் இல்ல மணி, நம்ம‌ சுதன், மனுசனை நல்லாச் சுத்தி விட்டுட்டான், அதான்!"

"ச‌ரி, விடுங்க‌! இப்ப‌ எங்க‌ அவ‌ன்?"

"இங்க‌தான் இருந்தான் இந்நேர‌ வ‌ரைக்கும், நாயி! இப்ப‌த்தான் உள்ள‌ போயிருக்குறான் அந்த நாயி!!"

"ச‌ரி, ச‌ரி, எதுக்கு இவ்வ‌ள‌வு கோப‌ம்? அப்பிடியென்ன அவன் பொய் சொல்லிட்டான்?"

"சுத்தி விட்டுட்டானுங்றேன், நீங்க‌ என்ன‌ பொய் சொன்னான்னு கேட்டுப் ப‌டுத்துறீங்க‌ளே? இதுல‌ நீங்க‌ வேற‌?!"

"ப‌ரா, ஏன் இப்ப‌ நீங்க‌ எம்மேல‌ ச‌லிச்சுகிறீங்க‌? பொய் சொல்ற‌வ‌ங்க‌ளைத்தான‌, அவ‌ன் reel சுத்துறான்னு, கையில‌ reel சுத்துற‌ மாதிரி செஞ்சி காமிச்சி சொல்லுற‌து? அதான் கேட்டேன், அவ‌ன் என்ன‌ பொய் சொன்னான்னு!"

"அய்யோ ம‌ணி, இது சுத்துற‌து இல்ல‌! சுத்தி வுடுற‌து!!"

"ஒன்னும் புரிய‌லை நீங்க‌ சொல்லுற‌து!"

"ம‌ணி, நான் அவ‌ங்கிட்ட‌ நேத்து மென்ட‌ல்பாம்(Mandelbaum) சொல்லிக் குடுத்த‌ பாட‌த்துல‌ இருந்த‌ ச‌ந்தேக‌த்தைக் கேட்டேன். அவ‌ன், எதெதோ சொல்லிக் குழ‌ப்பி விட்டுட்டான். இன்னும் அஞ்சு நிமிச‌த்துல‌ தேர்வுக்கு போக‌ணும், அதான்! ஒருத்த‌னை சுத்தி விட்டா, எப்பிடி த‌லை சுத்துற‌மாதிரி கிறுகிறுன்னு இருக்குமோ, அந்த‌ மாதிரி எனக்கு இருக்கு இப்ப‌!"

இப்ப‌டியாக‌ ந‌ட‌ந்த‌ உரையாட‌லில், சுத்துவ‌து என்றால் பொய் சொல்வ‌து (கதை விடுவது) என்றும், சுத்தி விடுவ‌து என்றால், விப‌ர‌ம் தெரியாத வேளையில், அதைச் ச‌மாளிக்க‌, க‌ண்ட‌தையும் சொல்லிக் குழ‌ப்பி, கேள்வி கேட்ட‌வ‌ரையே பின்ன‌ங் கால்க‌ள் பிட‌ரியில் ப‌டும்ப‌டி ஓட‌ச் செய்வ‌து என்ப‌தையும் தெரிந்து கொண்டேன்.


இப்போது சொல்லுங்க‌ள், இந்த‌ உரையாட‌லைப் ப‌டித்த நீங்கள், த‌லை கிறுகிறுவென்ற‌ உண‌ர்வோடு, சுற்றி விட‌ப்ப‌ட்ட‌து போல‌ உண‌ர்கிறீர்க‌ளா? அப்ப‌டியானால், த‌லைப்பில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ அந்த‌ பிர‌ப‌ல‌ம் நீங்க‌ளே! இஃகிஃகி!! அப்படிக் குழப்பம் ஏதும் இல்லையா? அப்படி எனில், நான் உங்களிடம் சுற்றி விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அஃகஃகா!!!

வாயுள்ள புள்ளை பொழச்சிக்கும்!

41 comments:

Anonymous said...

வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும். அது சரி

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும். அது சரி
//

வணக்கமுங்க! யாரு, நம்ம‌ அது சரி அண்ணனை வாயுள்ளவர்ன்னு சொல்றீங்ளா?

அப்பாவி முரு said...

பிரபலமானத்தில் சந்தோசமானாலும், சுத்திவிட்டத்தில் தலை கிர்ர்ர்ர்ர்-னு இருக்கு....

பழமைபேசி said...

//muru said...
பிரபலமானத்தில் சந்தோசமானாலும், சுத்திவிட்டத்தில் தலை கிர்ர்ர்ர்ர்-னு இருக்கு....
//

அப்பாட, இப்பத்தான் நிம்மதி. நான் எதையும் சுத்தலை, உண்மையத்தான் சொல்லி இருக்கேன்னு. பிரபலங் கிடைச்ச சந்தோசம் எனக்கு! பிரபலம் ஆன சந்தோசம் உங்களுக்கு!! இஃகிஃகி!!!

Dr. சாரதி said...

ஐயோ அம்மா.....தலை சுற்றுது.....

பழமைபேசி said...

// Dr. சாரதி said...
ஐயோ அம்மா.....தலை சுற்றுது.....
//

வாங்க, வணக்கம்!! இப்பத்தான் தெரியுது, நிறைய பிரபலங்கள் சுத்தி விடப்பட்டு இருக்காங்கன்னு.

நசரேயன் said...

/*
வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்டு
*/
ஏன் பல் விளக்க மாட்டீங்களா ?

நசரேயன் said...

/*
இங்க‌தான் இருந்தான் இந்நேர‌ வ‌ரைக்கும், நாயி! இப்ப‌த்தான் உள்ள‌ போயிருக்குறான் அந்த நாயி!!"
*/
எதுக்கு எங்களை எல்லாம் இப்படி திட்டுறீங்க

பழமைபேசி said...

//நசரேயன் said...
/*
இங்க‌தான் இருந்தான் இந்நேர‌ வ‌ரைக்கும், நாயி! இப்ப‌த்தான் உள்ள‌ போயிருக்குறான் அந்த நாயி!!"
*/
எதுக்கு எங்களை எல்லாம் இப்படி திட்டுறீங்க
//

ஆகா, தளபதி ஆரம்பிச்சுட்டாரய்யா, ஆரம்பிச்சுட்டாரு!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// த‌லைப்பில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ அந்த‌ பிர‌ப‌ல‌ம் நீங்க‌ளே!//நாங்கதானா,,,, அது...........

பாலு மணிமாறன் said...

சுத்தி விடுறது பத்தி சும்மா நல்லாவே சுத்தியிருக்கியள் போங்கோ!

பழமைபேசி said...

//SUREஷ் said...
// த‌லைப்பில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ அந்த‌ பிர‌ப‌ல‌ம் நீங்க‌ளே!//

நாங்கதானா,,,, அது...........
//

ஆமாங்கோ...

பழமைபேசி said...

//பாலு மணிமாறன் said...
சுத்தி விடுறது பத்தி சும்மா நல்லாவே சுத்தியிருக்கியள் போங்கோ!
//

வாங்கோ அண்ணன். நல்ல சுகந்தானே? எல்லாம் நம்ம பொடியங்கள்ட்ட கத்துகிட்டதுதானென்ன...

பழமைபேசி said...

//நசரேயன் said...
/*
வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்டு
*/
ஏன் பல் விளக்க மாட்டீங்களா ?
//

எது எதுக்கு விளக்கம் கேக்குறதுன்னு இல்லையா? பல்லுக்கு கூட விளக்கம் வேணுமோ?

Mahesh said...

சுத்தறதும் சுத்தி விடுறதும் இருக்கட்டும்.... நீங்க ஊர் சுத்தப் போகலயா? 3 நாளைக்கி கணிணியா அபிடின்னா என்னன்னு கேப்பீங்கன்னு நினைச்சேன் :))))))

பழமைபேசி said...

//Mahesh said...
சுத்தறதும் சுத்தி விடுறதும் இருக்கட்டும்.... நீங்க ஊர் சுத்தப் போகலயா? 3 நாளைக்கி கணிணியா அபிடின்னா என்னன்னு கேப்பீங்கன்னு நினைச்சேன் :))))))
//

வாங்க மகேசு, கூட வர்ற ஆந்திராவாடு, ஒரு நாள் தாமதம் செய்துட்டாரு. அதனால, நாளைக்குப் போய்ட்டு, ஒரு நாள் தள்ளி வர்றோம்! வந்து படமாப் போட்டு கடைய நடத்த வேண்டியதுதான்!! இஃகிஃகி!!!

நசரேயன் said...

நீங்க சுத்தி விட்டாலும் சுத்தலை

பழமைபேசி said...

// நசரேயன் said...
நீங்க சுத்தி விட்டாலும் சுத்தலை
//

இன்னும் மப்புலதான் இருக்கீயளா?

CA Venkatesh Krishnan said...

நமக்கு சுத்தவேயில்லைங்க. ரொம்ப தெளிவா இருக்கு.

பழமைபேசி said...

//இளைய பல்லவன் said...
நமக்கு சுத்தவேயில்லைங்க. ரொம்ப தெளிவா இருக்கு.
//

வாங்க இளைய பல்லவன்! அப்ப நொம்ப சந்தோசம், நான் சுத்தி வுடுறவன் இல்லன்னு நாலு பேருக்கு எடுத்து சொல்லுங்க என்ன?!

தமிழ் தோழி said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அய்யோ தலை சுத்துதே.

Anonymous said...

// அங்கிருக்கும் வெண்குழல் ஊது
மூலையை நோக்கிச் சென்றேன். //

வெண் குழல் ஊது மூலை என்றால் ஸ்மோகிங் ஜோன் தன்னே அண்ணே!!!

Anonymous said...

அன்று காலையில், வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்டு ?????????!!!!!!!!!!!!!!, பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் நூலகம்????????????!!!!!!!!!!! சென்றடைந்து,

பழமைபேசி said...

//தமிழ் தோழி said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அய்யோ தலை சுத்துதே.
//

பிரபலம் ஆன சந்தோசம் உங்களுக்கு!! இஃகிஃகி!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

சூடான இடுகையில் ...
வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

// Sriram said...
// அங்கிருக்கும் வெண்குழல் ஊது
மூலையை நோக்கிச் சென்றேன். //

வெண் குழல் ஊது மூலை என்றால் ஸ்மோகிங் ஜோன் தன்னே அண்ணே!!!
//

வாங்க Sriram! கண்டு புடிச்சிட்டீங்களே?! போடு ஒரு சபாசு!!

http://urupudaathathu.blogspot.com/ said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தலை சுத்துதே.

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்லா தான் சுத்துராங்கையா

http://urupudaathathu.blogspot.com/ said...

//அங்கேதான் நண்பர் பராபரன் இருந்தார், முகம் சற்றுப் பேயறைந்தாற்ப் போல இருந்தது.///

ஒருவேளை உங்கள பார்த்ததனால அப்படி இருந்திருப்பாரோ ?? என்னவோ ??.

பழமைபேசி said...

// உருப்புடாதது_அணிமா said...
சூடான இடுகையில் ...
வாழ்த்துக்கள்
//

நன்றீங்கோ! ச்ச்ம்கும்...ச்ச்க்கும்...நன்றீங்கோ!

நன்றீங்கோ! ச்ச்ம்கும்...ச்ச்க்கும்...நன்றீங்கோ!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தலை சுத்துதே.
//

த்மிழ்ப் பிரபலம் ஆவுறதுக்கு என்னா போட்டி?

http://urupudaathathu.blogspot.com/ said...

எதுக்கு இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறீங்க??
என்ன பாவம் செய்ஞ்சேன் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//பழமைபேசி said...
நன்றீங்கோ! ச்ச்ம்கும்...ச்ச்க்கும்...நன்றீங்கோ!

நன்றீங்கோ! ச்ச்ம்கும்...ச்ச்க்கும்...நன்றீங்கோ!///

பாட்டு பாட போறீங்களா?

மூஜிக் பலமா இருக்கு ??

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...

பாட்டு பாட போறீங்களா?

மூஜிக் பலமா இருக்கு ??
//

சும்மா நன்றின்னா, நீங்க கோவிச்சுகுவீங்களே? அது மட்டுமா, ஊட்டுக்கு வேற ஆள் அனுப்புவீங்களே?? அதான்!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
எதுக்கு இப்படி சுத்தி சுத்தி அடிக்கிறீங்க??
என்ன பாவம் செய்ஞ்சேன் ??
//
சுத்தி வுட்டதுதான் காரணம்!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
ஒருவேளை உங்கள பார்த்ததனால அப்படி இருந்திருப்பாரோ ?? என்னவோ ??.
//

அப்பிடின்னா, எப்பிடி?

குடுகுடுப்பை said...

நீங்க சுத்தி விட்டா கேட்டுக்கவேண்டியதுதான்

ராஜ நடராஜன் said...

இஃகி1இஃகி(தொத்திகிச்சி)

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
இஃகி1இஃகி(தொத்திகிச்சி)
//

அஃகஃகா!

பழமைபேசி said...

//வருங்கால முதல்வர் said...
நீங்க சுத்தி விட்டா கேட்டுக்கவேண்டியதுதான்
//

இஃகிஃகி!!!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
நல்லா தான் சுத்துராங்கையா

//

:-o)