12/04/2008

கூட்டாஞ்சோறு!

வணக்கமுங்க! ரெண்டு நாட்களா, வாசகர்களோட நொம்பத்தான் பேசிப்புட்டேன். அப்ப பாருங்க நெறைய விசயங்களுக்கு விளக்கம் கேக்குறாங்க. அதான், இந்த கூட்டாஞ்சோறு. கூட்டாஞ்சோறுக்கும் வெளக்கம் வேணுமா? குடுத்துர்றேஞ் சாமி! கோவிக்கக் கூடாதுன்னு அய்யன் நேத்துதான சொல்லுச்சு?!

நான் நெறய இடத்துல சிரிக்கப் போயி, சனங்க அந்த சிரிப்புகளுக்கும் வெளக்கம் கேக்குறாங்க. அதான், கொஞ்ச சிரிப்புகளுக்கு இன்னைக்கி வெளக்கம். இன்னும் நெறய சிரிப்பு இருக்கு, அதுகளை எல்லாம் மொத்தமா வேற ஒரு நாளைக்குத் தாறேன்ஞ் சரியா?!

அசடு வழிய சிரிப்பு: இஃகி! க்ஃகி!!
அடுத்தவன் துன்பத்துல சிரிப்பு: அஃக!ஃக!!ஃக!!!
கேனச் சிரிப்பு: இஃ!இஃகி!இஃகி!!!
ஆனந்தச் சிரிப்பு: அஃகஃகாஃஃஃஃஃஃ! அஃகஃகாஃஃஃஃஃஃ!
குழந்தைச் சிரிப்பு: கிஃகி!கிஃஃஃ!கிஃஃஃஃஃஃஃஃஃஃ!!!
மீசை இல்லாத புன்முறுவல்: :-)
மீசை இருக்குற புன்முறுவல்: :-{)
எகத்தாளச் சிரிப்பு: ஒகொஃகொஃஃகொஃ....!
இரசிச்சுச் சிரிக்குறது: இஃகிஃகிஃ...ஏஃ! இஃகிஃகிஃ...ஏஃ!!

அடுத்து தளபதி நசரேயன், "காண்டுல இருக்காரு!"ங்றது தமிழா, இல்லை ஆங்கிலமான்னு கேட்டு இருந்தாரு. காண்டுங்றது தமிழ் அகராதியில இருக்குற சொல்தான். காண்டுன்னா கோபம் இல்லை. ஆனா, கிட்டத்தட்ட அந்த உணர்வுதான். இப்ப புலி ஒரு சீற்றத்துல உறுமுது. அதுக்கு யார் மேல கோபம்? இல்லீங்ளே! ஆனா, மனசு தகிச்சுப் போயி ஒரு மார்க்கத்துல இருக்கு. அதுதாங்க காண்டு. இதை கதம்ன்னும் சொல்லுறதாம். ஆக, மனுசன் எதோ ஒன்னைப் பாத்து, அதை சகிச்சுக்க முடியாம காண்டு நிலைக்கு வந்துருவான். இந்த வெளக்கத்தைப் பாத்து, இனி எத்தினி பேருக்கு காண்டு வருதோ தெரியலை?! இஃகி!ஃகி!ஃகி!!!

பாருங்க சின்ன வயசுல நாங்க சின்னப் பசங்க எல்லாம் தனியா வெளையாடிட்டு இருப்போம். திடீல்ன்னு ஒரு நாள் எதிர் அணியில இருந்து, அதாங்க பொம்பளைப் புள்ளைக தரப்புல இருந்து ரெண்டு பேர் வந்தாங்க. வந்து, நாங்க வழுக்காம் பாறைக்கு கூட்டாஞ் சோறு எடுத்துட்டுப் போறோம், நீங்களும் எங்ககூட வரோணும்னு சொன்னாங்க. அய்யோ, எங்க அம்மா அடிக்கும்னு நான் பதற, அந்த அம்மினி சொல்லுச்சு, "இல்ல, நாங்க அத்தையவிங்க கிட்ட கேட்டுட்டுத்தான் வந்தோம்!"னு. என்னா சந்தோசம்? சொல்லி மாளாது போங்க! அப்புறம் எல்லாரும் வழுக்காம் பாறையில போயி, நல்லா கால்சட்டை பொறவால‌ கிழியற அளவுக்கு வழுக்கி, ஓடியாடின்னு நெறய வெளையாடிட்டு ஒரு மரத்து நெழல்ல ஒக்காந்தோம். எல்லாரும் அவிங்க அவிங்க ஊட்டுச் சோத்துப் போசி(தூக்குப் பாத்திரம்)ய எடுத்து, எல்லார்த்துக்கும் பங்கு போட்டுக் குடுத்தாங்க. அப்பத்தான் ஒரு அம்மினி சொல்லுச்சு, இப்பிடி நாலு ஊட்டுச் சோத்தையும் ஒன்னு கூடி பங்கு போட்டுத் திங்கிறதுதான் கூட்டாஞ் சோறுன்னு. அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, இதுக அத்தை, சொத்தைன்னு எல்லாம் சொல்லி ஆசைகாட்டி, ஆம்பளைப் பசங்களை காவக்கார நாய்களாட்டம் காவலுக்கு கூட்டிட்டு வந்திருக்குன்னும், எங்க மேல அதுக மனசுல ஒரு இது இல்லைன்னும்! இஃ!இஃகி!இஃகி!!!

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு! பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு!!

40 comments:

Anonymous said...

நான் தான் முதலாவது ... (me the first க்கு தமிழ்!!)

நண்பரே இப்படி போட்டது சரியான தமிழா?

Anonymous said...

முதல் ஓட்டும் என்னுடையதுதான்...

Anonymous said...

பல விதமான சிரிப்பு போட்டு சிரிப்பா சிரிக்க வச்சுட்டீங்க...

Anonymous said...

// அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, இதுக அத்தை, சொத்தைன்னு எல்லாம் சொல்லி ஆசைகாட்டி, ஆம்பளைப் பசங்களை காவக்கார நாய்களாட்டம் காவலுக்கு கூட்டிட்டு வந்திருக்குன்னும், எங்க மேல அதுக மனசுல ஒரு இது இல்லைன்னும்! இஃ!இஃகி!இஃகி!!! //

இப்படியெல்லாம் ஏமாந்திருங்கன்னு, படிச்சாலே.. மனசு ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா !! -:)

M.Rishan Shareef said...

ஹா ஹா ஹா
நீங்க பொண்ணுங்கக்கிட்ட ஏமாந்ததைப் பார்த்து இந்தச் சிரிப்பு தன்னால வந்துடுச்சு..இதுக்கு என்ன அர்த்தமுங்?

♥ விஜி ♥ viji♥ said...

//ஆம்பளைப் பசங்களை காவக்கார நாய்களாட்டம் காவலுக்கு கூட்டிட்டு வந்திருக்குன்னும், எங்க மேல அதுக மனசுல ஒரு இது இல்லைன்னும்///

:-)))))))))))))))))

கபீஷ் said...

எப்படியோ நல்லா சாப்டீங்கள்ள? அப்புறம் என்ன வேண்டியிருக்கு?

கபீஷ் said...

நீங்க ஏமாந்த கதை நல்லாருக்கு.
இதுமாதிரி நிறைய இருக்கும், கண்டிப்பா, அதெல்லாம் அப்பப்ப பதிவா போட்ருங்க. அப்பதான நாங்க இப்படி சிரிக்க முடியும்

அஃகஃகாஃஃஃஃஃஃ! அஃகஃகாஃஃஃஃஃஃ!(ஆனந்தச் சிரிப்பு)

Mahesh said...

இஃகி... இஃகி....

ராஜ நடராஜன் said...

அய்யே கூட்டாஞ் சோறு இப்படியா ஆக்குவாக? ஒவ்வொரு வீட்டுலேர்ந்தும் அரிசி,மொளகா,பருப்பு,வெங்காயம்,உப்புன்னு கொண்டாறச் சொல்லி அக்கம் பக்கமிருக்கற குச்சிகளைப் பொறுக்கி அதஅடுப்பு பத்த வைக்கவும்,ஊதறதுக்கும் மட்டும் அம்மணிகள வுட்டுட்டு தண்ணிய சூடு பண்ணி எல்லாத்தையும் கலக்கி விட்டுகிட்டு பொங்கி வச்சு சுண்ட வச்சா கூட்டாஞ் சோறு.

நாக்கு மறத்துப் போகமா இருக்க இன்னொரு நாளைக்கு முதல்ல ஆத்துல துண்டைப் போட்டு மீனு பிடிச்சிட்டு வரணும்.அப்புறம் வயித்தக் கிழிக்க ஒருத்தன்,செதில செவுக்க ஒருத்தன்னு கொளம்பு செய்யனும்.அப்புறம் ஊட்ல போய் சாப்பிடல்லின்னோ ஊரச் சுத்திட்டு வாரான்னு ரெண்டு மொத்தும் வாங்கணும்.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...

//

வாங்க, வணக்கம்! நீங்க சொல்லுறது, கூட்டாஞ்சோத்துல இனியொரு வகை! இது மாதிரியான அனுபவமும் இருக்கு.... அதையும் இனியொரு பதிவுல போடுறேன்.

பழமைபேசி said...

//Mahesh said...
இஃகி... இஃகி....
//

அப்பிடி!! இனியெல்லாம் தமிழ்ச் சிரிப்பா சிரிங்க அப்பு!!

பழமைபேசி said...

//கபீஷ் said...
எப்படியோ நல்லா சாப்டீங்கள்ள? அப்புறம் என்ன வேண்டியிருக்கு?
//

வாங்க, வாங்க! காய்ச்சலும் தலைவலியும் அவன் அவனுக்கு வந்தாத்தான தெரியும்?!

பழமைபேசி said...

//viji said...
//ஆம்பளைப் பசங்களை காவக்கார நாய்களாட்டம் காவலுக்கு கூட்டிட்டு வந்திருக்குன்னும், எங்க மேல அதுக மனசுல ஒரு இது இல்லைன்னும்///

:-)))))))))))))))))
//

இஃகி... இஃகி....

பழமைபேசி said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
ஹா ஹா ஹா
நீங்க பொண்ணுங்கக்கிட்ட ஏமாந்ததைப் பார்த்து இந்தச் சிரிப்பு தன்னால வந்துடுச்சு..இதுக்கு என்ன அர்த்தமுங்?
//

அடுத்தவன் துன்பத்துல வர்ற சிரிப்பு! நன்றிங்க!!

பழமைபேசி said...

//இராகவன், நைஜிரியா said...

இப்படியெல்லாம் ஏமாந்திருங்கன்னு, படிச்சாலே.. மனசு ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா !! -:)
//

அப்பாட, உங்களுக்காவது என்னோட வலி புரிஞ்சுதே!

தீரன் said...

//மீசை இருக்குற புன்முறுவல்: :-{)//

மீச நல்ல தான் வரஞ்சுருக்கீங்க......அப்படியே கம்மஞ்சோறு, ராகிகல்லு , மொட்ட வண்டி , சவாரி வண்டி, கொநூசி, தூரி...மூக்கனாக்ங்கயிறு.....ஒரு ஒழவு மழை, இதுக்கெல்லாம் விளக்கம்குடுங்க....கேட்டு ரோம்பனாலச்சு..

பழமைபேசி said...

//தீரன் said...

வாங்க தீரன்! வணக்கங்க!! நல்லாச் சொன்னீங்க, அதுவும் திட்டத்துல இருக்கு. வரும்ங்க சீக்கிரம்!!

நசரேயன் said...

அஃகஃகாஃஃஃஃஃஃ! அஃகஃகாஃஃஃஃஃஃ!

நசரேயன் said...

கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்திலே வேலை வெட்டி இல்லாமா இதே சோலியாயாத்தான் அலைந்து திருஞ்சீங்க போல

குடுகுடுப்பை said...

பாட் லக்கோ என்னமோங்கிறாங்களே அதுவா?

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்திலே வேலை வெட்டி இல்லாமா இதே சோலியாயாத்தான் அலைந்து திருஞ்சீங்க போல
//
அந்தக்காலம் இந்தக்காலம்னு பிரிச்சு பேசுனா பழமையாருக்கு பிடிக்காது

பெருசு said...

மணீ அண்ணா

கூட்டாஞ்சோறு நல்லாத்தான் சமைச்சிருக்கீங்க.

1.அங்கராக்கு
2.மயிலாஞ்சி
3.மெரவணம்
4.போத்தாலை

இதுக்கும் விளக்கம் சொன்னீங்கன்னா
நல்லாயிருக்கும் .

கேட்டு ரொம்ப நாளு ஆச்சுங்க.

ஆறாம்பூதம் said...

அத்தை கிட்ட சொல்லிட்டனு அந்த புள்ளைக சொல்லும்போதெ ... உனக்கு விசியம் தெரிய வேண்டாமா கண்ணு... இப்படி ஏமாந்தாங்கோலியா நீ இருந்து போட்டு ,, கடசில அந்த புள்ளைக மேல பழிய போடறியே சாமி.. நாயமா.

Natty said...

மீசை முறுக்கி விட்டிருக்கோம்ல ;)

இஃகிஃகிஃ...ஏஃ! இஃகிஃகிஃ...ஏஃ!!

.........சாரி விக்கல்ஸ் மாதிரிதான் தோணுது

இஃகி! இஃகி!இஃகி!

பழமைபேசி said...

//நசரேயன் said...
கூட்டாஞ் சோறுன்னு -அந்த காலத்திலே வேலை வெட்டி இல்லாமா இதே சோலியாயாத்தான் அலைந்து திருஞ்சீங்க போல
//

நாந்தான் சொன்னனே, வெளையாடிட்டு இருந்த பையன அப்பிடி செஞ்சிபோட்டாங்கன்னு...

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
பாட் லக்கோ என்னமோங்கிறாங்களே அதுவா?
//

ஆமாங்ண்ணே!

பழமைபேசி said...

//பெருசு said...
மணீ அண்ணா

கூட்டாஞ்சோறு நல்லாத்தான் சமைச்சிருக்கீங்க.

1.அங்கராக்கு
2.மயிலாஞ்சி
3.மெரவணம்
4.போத்தாலை

இதுக்கும் விளக்கம் சொன்னீங்கன்னா
நல்லாயிருக்கும் .

கேட்டு ரொம்ப நாளு ஆச்சுங்க.
//

ராசு, நம்மூர்ப் பழம நெறயப் பேசவேண்டியது இன்னும் இருக்கு இராசா!
ஆமா, நாள் முச்சூடும் வேலை, இப்பத்தான் இராசா பொட்டி தட்ட குக்கியிருக்கேன்!

பழமைபேசி said...

//வசந்த் கதிரவன் said...
அத்தை கிட்ட சொல்லிட்டனு அந்த புள்ளைக சொல்லும்போதெ ... உனக்கு விசியம் தெரிய வேண்டாமா கண்ணு... இப்படி ஏமாந்தாங்கோலியா நீ இருந்து போட்டு ,, கடசில அந்த புள்ளைக மேல பழிய போடறியே சாமி.. நாயமா.
//

வசந்து கண்ணு, இப்பிடி நீ சொல்லுலாமா இராசா! அவிங்கதான் ஆச காட்டி மோசம் பண்ணிப்போட்டாங்கன்னா, நீயும் இப்பிடிப் பரும்படியாப் பேசலாமா சின்னு?!

பழமைபேசி said...

//Natty said...
மீசை முறுக்கி விட்டிருக்கோம்ல ;)
.........சாரி விக்கல்ஸ் மாதிரிதான் தோணுது

இஃகி! இஃகி!இஃகி!
//

இஃகி! இஃகி!இஃகி!

Anonymous said...

//// அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, இதுக அத்தை, சொத்தைன்னு எல்லாம் சொல்லி ஆசைகாட்டி, ஆம்பளைப் பசங்களை காவக்கார நாய்களாட்டம் காவலுக்கு கூட்டிட்டு வந்திருக்குன்னும், எங்க மேல அதுக மனசுல ஒரு இது இல்லைன்னும்! இஃ!இஃகி!இஃகி!!! //

ஹையா நல்லா ஏமாந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா சந்தோசமா இருக்குது.

ஆறாம்பூதம் said...

\\ ..ராசு, நம்மூர்ப் பழம நெறயப் பேசவேண்டியது இன்னும் இருக்கு இராசா!
ஆமா, நாள் முச்சூடும் வேலை, இப்பத்தான் இராசா பொட்டி தட்ட குக்கியிருக்கேன்! ..//

குக்கு - (உட்கார்) என்ற வார்த்தை தற்போது நமது கொங்கு வட்டாரத் தமிழில் இருந்து கிட்டத்தட்ட அழிந்து விட்டது... எல்லோரும் உட்காருங்கள் என்று தான் சொல்கிறார்கள்... எனது அம்மச்சி தான் இன்றும் நான் சென்று பார்க்கும் போது ..குக்குடா என்று சொல்கிறார்.. அவரும் மறைந்த பிறகு என்னை குக்க சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள்... நாகரீகம்என்று கருதி உட்கார சொல்லுவார்கள்... நாசமாகப் போன நாகரீகம்...

பெருசு said...

சென்றமவர்வது - குக்குதல்

cookie - இந்த வார்த்தையும் தமிழில் இருந்து சென்றிருக்குமோ.!!!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
ஹையா நல்லா ஏமாந்திருக்கீங்கன்னு தெரிஞ்சா சந்தோசமா இருக்குது.
//

என்னா சந்தோசம், அடுத்தவன் துயரத்துல? இஃகி... இஃகி....

பழமைபேசி said...

//நாகரீகம்என்று கருதி உட்கார சொல்லுவார்கள்... //

ஐயோ கண்ணு, வருத்தப்படாத கண்ணு! அதான், நாம வலையில அல்சித் தொவச்சிக் காயப்போடுறமுல்லோ?!

பழமைபேசி said...

//பெருசு said...
சென்றமவர்வது - குக்குதல்

cookie - இந்த வார்த்தையும் தமிழில் இருந்து சென்றிருக்குமோ.!!!
//

நல்ல பழமக்கி நன்றிங்கண்ணா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு! பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு!!

ரொம்ப புதுசா இருக்கு.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு! பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு!!

ரொம்ப புதுசா இருக்கு.
//

ஆமுங்க, பொழக்கத்துல குறைவு! ஆனா, இது பழசுதானுங்க!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

// ஒவ்வொரு வீட்டுலேர்ந்தும் அரிசி,மொளகா,பருப்பு,வெங்காயம்,உப்புன்னு கொண்டாறச் சொல்லி அக்கம் பக்கமிருக்கற குச்சிகளைப் பொறுக்கி அதஅடுப்பு பத்த வைக்கவும்,ஊதறதுக்கும் மட்டும் அம்மணிகள வுட்டுட்டு தண்ணிய சூடு பண்ணி எல்லாத்தையும் கலக்கி விட்டுகிட்டு பொங்கி வச்சு சுண்ட வச்சா கூட்டாஞ் சோறு.//

இதை எங்கள் ஈழத்தில் "சிறுசோறு" என்போம். சுமார் 45 வருடங்களுக்கு முன் நானும் நண்பர்களும் அதில் அக்கம் பக்கத்து பெண்பிள்ளைகளும் அடக்கம்; சமைத்து உண்டுள்ளோம்.

பழமைபேசி said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris)

இதை எங்கள் ஈழத்தில் "சிறுசோறு" என்போம். சுமார் 45 வருடங்களுக்கு முன் நானும் நண்பர்களும் அதில் அக்கம் பக்கத்து பெண்பிள்ளைகளும் அடக்கம்; சமைத்து உண்டுள்ளோம்.
//

மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!!