12/10/2008

அலைய‌விட்ட‌ ச‌ண்டாளி!!

வணக்கம்! இன்னைக்கு ஒரே வேலைங்க. பதியறதுக்கு ஒன்னும் தயார் செய்யலை. ஆனாலும் நம்ம வாசகர்கள், ந்ம்ம ஊட்டுக்கு வந்துட்டு, 'பொக்'குனு போயிருவாங்களே? அதான், நம்மூர்ல வடக்கால ஊட்டு வஞ்சியாத்தாவும், தெக்கால ஊட்டுத் திருமனும், மேக்கால இருக்குற வயக்காட்டுல எப்பிடியெல்லாம் பேசி, சமாதானம் ஆகுறாங்கன்ற‌ பழமய்களப் போடலாமுன்னு இந்த பதிவு. மொதல்ல வஞ்சியாத்தா தான் பாட்டை ஆரம்பிக்குறா,


அடுப்புநக்கி துடுப்புநக்கி
அடுப்பங்கரை சாம்பல்நக்கி
பருப்பு பலகநக்கி
பாடிவாடா ஒம்பாட்டை!

பச்சைப்பட்ட தூக்கிபுள்ள‌
பனங்காட்டை சுத்திபுள்ள‌
எச்சிப்பட்ட நக்கிப்புள்ள‌
எடுத்துவாடி ஒம்பாட்டை!

சாலையில‌ ச‌வுக்கும‌ர‌ம்
ச‌ருக்காரு வ‌ச்ச‌ம‌ர‌ம்
ஓங்கி வ‌ள‌ந்த‌ம‌ர‌ம்
ஒன‌க்கேத்த‌ தூக்கும‌ர‌ம்
ச‌ம்ம‌ங்கி எண்ண‌தேச்சு
சாட்ட‌போல‌ முடிவ‌ள‌த்து
பாவிப்ப‌ய‌ வாச‌லுல‌
ப‌ஞ்சா உதுத்த‌னடா!

குருதாலி காட்டுக்குள்ள‌
குனிஞ்சு க‌ளை எடுக்க‌யிலே
குத்துக்க‌ல்லு மேல‌நின்னு
கூப்புட்ட‌து நாந்தான‌டி
கும்ம‌ப் ப‌னைக்கும்
காளியாத்தா கோயிலுக்கும்
அலைய‌விட்ட‌ ச‌ண்டாளி!!

அதுக்க‌ப்புற‌ம் ரெண்டு பேரும் ஒரு வ‌ழியா ச‌மாதான‌மாயி, ஒரு எட்டுத் த‌னியா இருக்க‌லாமுன்னு சோள‌க் காட்டுப் ப‌க்க‌ம் ஒதுங்க‌, மேக்கால‌ ஊட்டு ம‌யில‌க்கா, ஆடு ஓட்டிட்டு வார‌து தெரியுது. ரெண்டு பேருக்கும் ம‌ன‌சு பொசுக்குனு தாம்போச்சு. அதுக்கப்புறம் அவிங்க‌விங்க‌, அவிங்க‌ அவிங்க‌ வேலைய‌ப் பாக்க‌ப் போய்ட்டாங்க‌. வாங்க‌, நாம‌ளும் ந‌ம்ம‌ வேலைய‌ப் போய்ப் பாக்கலாம், என்ன‌ சொல்றீங்க‌?!

பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

29 comments:

அது சரி(18185106603874041862) said...

//
ஒரு எட்டுத் த‌னியா இருக்க‌லாமுன்னு சோள‌க் காட்டுப் ப‌க்க‌ம் ஒதுங்க‌
//

:0))

ஆறாம்பூதம் said...

ஓ ஓ.... இதுக்குத்தான் சோளம் வெதைக்குறாங்களா.. ஆமா வடக்கால ஊட்டு வஞ்சியாத்தாவுக்கும் தெக்கால ஊட்டு திருமனுக்கும் கலியாணம் ஆச்சா... தப்பா நெனைக்கப்படாது.நானெப்பவும் ரெண்டர்த்தமா பேசமாட்டேன்..மயிலக்கா வந்தெப்பொ இண்டர்வல்.. கிளைமேக்ச்சுல கலியானம் ஆச்சானு கேட்டேன்..

Mahesh said...

//வடக்கால ஊட்டு வஞ்சியாத்தாவும், தெக்கால ஊட்டுத் திருமனும், மேக்கால இருக்குற வயக்காட்டுல//

இதயெல்லாம் கெளக்கால இருந்து பாத்துக்கிடுருந்தீகளா??

நசரேயன் said...

//சோள‌க் காட்டுப் ப‌க்க‌ம்//
ஹும்.. நடக்கட்டும் நடக்கட்டும் மலரும் நினைவுகள்

பழமைபேசி said...

//அது சரி said...
//
ஒரு எட்டுத் த‌னியா இருக்க‌லாமுன்னு சோள‌க் காட்டுப் ப‌க்க‌ம் ஒதுங்க‌
//

:0))
//

நன்றிங்க அது சரி அண்ணே!

பழமைபேசி said...

//வசந்த் கதிரவன் said...
கிளைமேக்ச்சுல கலியானம் ஆச்சானு கேட்டேன்..
//

ஆயிருக்கும்னு ஒரு நம்பிக்கை!

பழமைபேசி said...

//Mahesh said...

//கெளக்கால//
//

வாங்க மகேசு! கிழக்கால மகேசு, கிழக்கால!!

பழமைபேசி said...

//நசரேயன் said...
//சோள‌க் காட்டுப் ப‌க்க‌ம்//
ஹும்.. நடக்கட்டும் நடக்கட்டும் மலரும் நினைவுகள்
//

இஃகி!ஃகி!!

Anonymous said...

குத்தடி குத்தடி ஜைனக்கா
குனிஞ்சு குத்தடி ஜைனக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கு
---- ஏனோ இந்தப்பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு. இந்தப்பாட்டு தெரியுமா உங்களுக்கு

Viji said...

:)

தேவன் மாயம் said...

அடுப்புநக்கி துடுப்புநக்கி
அடுப்பங்கரை சாம்பல்நக்கி
பருப்பு பலகநக்கி
பாடிவாடா ஒம்பாட்டை!
பாட்டு நல்லா இருக்கு!!!!
தேவா.

தங்ஸ் said...

வஞ்சியாத்தா புருசனுக்கு இந்த விசயம் தெரீமா?

Anonymous said...

பொட்டு கடலை நிலக் கடலை வேர்கடலை
இந்த பாட்ட படிச்சிட்டு எனக்கு தூக்கமே வரலை ...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

கும்ம‌ப் ப‌னைக்கும்
காளியாத்தா கோயிலுக்கும்
அலைய‌விட்ட‌ ச‌ண்டாளி!!

அழகான ராட்சசி மாதிரியே இருக்கு இதுவும்.

எப்படி எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருக்கீங்க நீங்க.

ராஜ நடராஜன் said...

//மொதல்ல வஞ்சியாத்தா தான் பாட்டை ஆரம்பிக்குறா, //

சில சமயங்களில் கோழியும் கொக்கரிப்பதுண்டு:)

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
குத்தடி குத்தடி ஜைனக்கா
குனிஞ்சு குத்தடி ஜைனக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கு
---- ஏனோ இந்தப்பாட்டு ஞாபகத்துக்கு வந்துச்சு. இந்தப்பாட்டு தெரியுமா உங்களுக்கு
//

வாங்க! தெரியுமுங்கோ!!

பழமைபேசி said...

// Viji said...
:)
//

வாங்க Viji !

பழமைபேசி said...

// thevanmayam said...
அடுப்புநக்கி துடுப்புநக்கி
அடுப்பங்கரை சாம்பல்நக்கி
பருப்பு பலகநக்கி
பாடிவாடா ஒம்பாட்டை!
பாட்டு நல்லா இருக்கு!!!!
தேவா.
//

வாங்க தேவா, நன்றிங்க!!

பழமைபேசி said...

//தங்ஸ் said...
வஞ்சியாத்தா புருசனுக்கு இந்த விசயம் தெரீமா?
//

ஆகா! தங்சு பாருங்க, எப்பிடியெல்லாம் யோசனை செய்யுதுன்னு?!

பழமைபேசி said...

// Sriram said...
பொட்டு கடலை நிலக் கடலை வேர்கடலை
இந்த பாட்ட படிச்சிட்டு எனக்கு தூக்கமே வரலை ...

:)
//

வாங்க Sriram! இஃகி!ஃகி!!

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
எப்படி எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருக்கீங்க நீங்க.
//

கொஞ்ச நஞ்சம் மறந்திருந்தாலும், அப்பிடியே கொஞ்சம் இட்டுக் கட்டுறதுதானுங்ளே?!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
//மொதல்ல வஞ்சியாத்தா தான் பாட்டை ஆரம்பிக்குறா, //

சில சமயங்களில் கோழியும் கொக்கரிப்பதுண்டு:)
//

அது!

குடுகுடுப்பை said...

பெரிய நாக்கு தூக்கியா இருப்பிய போலருக்கு.

நசரேயன் said...

அப்படியே "ரோ ரோ ரோன்கு பாப்பாத்தி" பாட்டு தெரிஞ்சா போடுங்க

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
பெரிய நாக்கு தூக்கியா இருப்பிய போலருக்கு.
//

இஃகி!ஃகி!!

கபீஷ் said...

அண்ணி பதிவு படிக்கறது தெரிஞ்சும் எப்படிங்க நீங்க இதையெல்லாம் எழுதறீங்க, நொம்ப தெகிரியந்தான் :-):-)

(பதிவு படிச்சு சந்தேகம் வரலேன்னா,இந்த கமெண்ட் படிச்சப்புறம் வந்துரும்:-):-) )

கபீஷ் said...

உ_அ வை எங்கே காணோம் இந்த பக்கம்?வேலை செய்ய சொல்லிட்டாங்களா?

http://urupudaathathu.blogspot.com/ said...

present sir

கபீஷ் said...

ஏன் தாமதம்? (பழம பேசியால என் தமிழ் பாசம் அதிகமாயிருச்சி)