12/15/2008

பட்டையக் கெளப்புடா மாப்ளே!

அன்பர்களே, நண்பர்களே, வணக்கம்! நாம வழக்கத்துல பேசுற பேச்சுத்தான். ஆமாங்க, அந்த பட்டையக் கெளப்புறது, பட்டையக் கழட்டுறது, பட்டய எடுக்குறது, சக்கப் போடு, போடுறது, லொள்ளுப் பண்ணுறது எல்லாம்! பேசுறோம், நம்ம செளரியத்துக்கு அதுகளப் புழங்குறோம்!! அதுகளுக்கு உண்டான விளக்கந் தெரிஞ்சா இன்னும் நல்லா இருக்குமே?

அப்ப, நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச‌ விளக்கத்தை பின்னூட்டமாப் போட்டுப் பட்டையக் கிளப்புங்க. நான் என்னோடதை நாளைக்குப் பதியுறேன். அப்ப, நாங்களும் நாளைக்கே பின்னூட்டத்துல சொல்லுறோம்ன்னு, நீங்க மொடக்கடி பேசப்படாது. இன்னைக்கே போடுங்கன்னு உங்களைக் கேட்டுக்கறதுக்கும், ஒரு விளக்கம் இருக்குது இராசா!

இராசா, என்னோட விளக்கத்தைப் பாத்துட்டு நிறையப் பேரு, அவிங்க விளக்கத்தைச் சொல்லுறதுக்குத் தயங்குறாங்க. போன வாரம், நம்ம சீமாச்சு அண்ணன் எதோ ஒன்னுக்கு அவரோட விளக்கத்தை நேர்ல பாத்தப்ப சொல்லுறாரு. அண்ணே, அதை அங்கயே பின்னூட்டத்துல சொல்லி இருக்க வேண்டியதுதானேன்னு கேட்டா, அவரு தன்(ண்)மையா சிரிச்சு சமாளிச்சுட்டாரு.

என்னோட விளக்கத்துக்கு எதிர்ன்னு ஏன் நினைக்குறீங்க? மாற்று விளக்கம் அவ்வளவுதேன். அப்பிடி சொல்லுறதையும், நான் பதிவுல ஏத்திட்டுதான வர்றேன். ஆகவே, உங்க கருத்துக்களைப் போட்டுத் தாக்குங்க, நான் நாளைக்கு எனக்குத் தெரிஞ்ச‌ விபரத்தோட வர்றேன்.

29 comments:

குடுகுடுப்பை said...

பட்டையக் கெளப்புறது, பட்டையக் கழட்டுறது, பட்டய எடுக்குறது, சக்கப் போடு, போடுறது, லொள்ளுப் பண்ணுறது//

கொஞ்ச நாள் முன்னாடி பதிவர்களுக்குள் நடந்த சண்டைய இப்படியெல்லாம் சொல்லலாமா?

பழமைபேசி said...

// குடுகுடுப்பை said...
கொஞ்ச நாள் முன்னாடி பதிவர்களுக்குள் நடந்த சண்டைய இப்படியெல்லாம் சொல்லலாமா?
//

இதுக்குப் பேரு குசும்புங்கோ!

கபீஷ் said...

//கொஞ்ச நாள் முன்னாடி பதிவர்களுக்குள் நடந்த சண்டைய இப்படியெல்லாம் சொல்லலாமா?//

குகு, இவ்விடம் அரசியல் பேச அனுமதியில்லை, நாமெல்லாம் அப்பிராணி பதிவர்ஸ் இல்லையா? பதில் தெரியலன்னா இப்படி எதாவது சொல்லி பட்டய கெளப்பறதா?

பழமைபேசி said...

//கபீஷ் said...

அஃகஃகஃகா!! இதுதான் சரியான மறுமொழி!!!

ஆறாம்பூதம் said...

//கொஞ்ச நாள் முன்னாடி பதிவர்களுக்குள் நடந்த சண்டைய இப்படியெல்லாம் சொல்லலாமா?//

அய்ய்ய... சண்டை எல்லாம் போடுவீங்களா... ஆய் பசங்க...

அது சரி(18185106603874041862) said...

அதெப்படி ரெண்டவருக்கு ஒரு பதிவு போட்டு நீங்க பட்டைய கெளப்பறீங்க? ஒரு வேளை பட்டையடிக்கிற பழக்கமே இல்லியா? :)) சரி சரி, நீங்க சக்கப் போடு போடுங்க!

பழமைபேசி said...

//ஆறாம்பூதம் said...
//கொஞ்ச நாள் முன்னாடி பதிவர்களுக்குள் நடந்த சண்டைய இப்படியெல்லாம் சொல்லலாமா?//

அய்ய்ய... சண்டை எல்லாம் போடுவீங்களா... ஆய் பசங்க...
//

குடுகுடுப்பையத்தான சொல்றீங்க?

பழமைபேசி said...

//அது சரி said...
அதெப்படி ரெண்டவருக்கு ஒரு பதிவு போட்டு நீங்க பட்டைய கெளப்பறீங்க? ஒரு வேளை பட்டையடிக்கிற பழக்கமே இல்லியா? :)) சரி சரி, நீங்க சக்கப் போடு போடுங்க!
//

அண்ணாச்சி, அது காலைப் பதிவு. இது மாலைப் பதிவு!! இஃகிஃகி!!

ஆறாம்பூதம் said...

//ஆறாம்பூதம் said...
//கொஞ்ச நாள் முன்னாடி பதிவர்களுக்குள் நடந்த சண்டைய இப்படியெல்லாம் சொல்லலாமா?//

அய்ய்ய... சண்டை எல்லாம் போடுவீங்களா... ஆய் பசங்க...
//

குடுகுடுப்பையத்தான சொல்றீங்க?//

இன்னிக்கு ராத்திரி “ நல்ல காலம் பொறக்குது .. நல்லகாலம் பொறக்குது நு’’ சொன்னாரு. பொறக்குற நல்ல காலம் குழந்தயா, கொரங்கு குட்டியா . இல்ல நிஜமாவே நல்ல காலமா..அது யாருக்கு பொறக்குதுனு கடசி வர சொல்லாமலெ போய்ட்டார்... ஆக நான் சொல்ல வரது என்னனா... வேண்டாம் வில்லங்கம் ஆகிடும்... நான் ரொம்ப ரொம்ப புதுசு...

Sridhar Narayanan said...

ஏதோ நமக்கு தோணினதையும் நாலு சொல்லி வைப்போம். :-)

பட்டைய கெளப்புறது - சமையலில மசாலா சேர்க்கும்போது ‘பட்டை’ போட்டா மணம் சுர்ருன்னு கிளம்பும் என்பதினால் இப்படியொரு சொற்றொடர் உருவாகியிருக்கலாமோ?

சக்க போடு - பழங்களை நல்லா அழுத்தி பிழியப் பிழிய நிறைய சாறு கிடைக்கும். எஞ்சுவது சக்கைதான். அது போல் நல்லா உழைத்து அதிக பலன் பெறுகிறவர்களை ‘சக்கை போடு போடறான்யா’ என்று சொல்கிறார்களோ?

இத படிச்சிட்டு நீங்க இஃகி இஃகின்னு சிரிச்சீங்கதானே? :-))

ஆறாம்பூதம் said...

// பட்டையக் கெளப்புறது, பட்டையக் கழட்டுறது, பட்டய எடுக்குறது, சக்கப் போடு, போடுறது, லொள்ளுப் பண்ணுறது எல்லாம்! //

இதுகெல்லாம் நீங்களே விளக்கம் சொல்லிடுங்க... பி காஸ் பேசிக்கலி ஐ ஆம் அ சோம்பேறி..

பழமைபேசி said...

//ஆறாம்பூதம் said...

இன்னிக்கு ராத்திரி “ நல்ல காலம் பொறக்குது .. நல்லகாலம் பொறக்குது நு’’ சொன்னாரு. பொறக்குற நல்ல காலம் குழந்தயா, கொரங்கு குட்டியா . இல்ல நிஜமாவே நல்ல காலமா..அது யாருக்கு பொறக்குதுனு கடசி வர சொல்லாமலெ போய்ட்டார்... ஆக நான் சொல்ல வரது என்னனா... வேண்டாம் வில்லங்கம் ஆகிடும்... நான் ரொம்ப ரொம்ப புதுசு...
//

நல்லா நழுவுறீங்க போங்க.... கஃக்ஃகா!!

பழமைபேசி said...

//Sridhar Narayanan said...
ஏதோ நமக்கு தோணினதையும் நாலு சொல்லி வைப்போம். :-)

இத படிச்சிட்டு நீங்க இஃகி இஃகின்னு சிரிச்சீங்கதானே? :-))
//

இல்லங்க, நம்ம பக்கத்துக்கு வந்து, மனசுல நினைச்சதை சொல்லி வெச்சீங்க பாருங்க... அதுக்கு நான் போடுறேன் சபாசு!

பழமைபேசி said...

//ஆறாம்பூதம் said...

இதுகெல்லாம் நீங்களே விளக்கம் சொல்லிடுங்க... பி காஸ் பேசிக்கலி ஐ ஆம் அ சோம்பேறி..
//

இஃகிஃகி!!

ஆறாம்பூதம் said...

பட்டையக் கெளப்புறது, பட்டையக் கழட்டுறது, பட்டய எடுக்குறது, சக்கப் போடு, போடுறது, லொள்ளுப் பண்ணுறது

இதுக்கெல்லாம் விளக்கம் சொல்றது இருக்கட்டும்...

நீங்க கஃக்ஃகா! இஃகிஃகி!னு வித விதமா சிரிக்கிறதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் சொல்லுங்க.. நக்கலா சிரிக்கிறீங்களா.. நட்பா சிரிக்கிறீங்களானு ஒரே கொழப்பமா இருக்கு...

பழமைபேசி said...

// ஆறாம்பூதம் said...

நீங்க கஃக்ஃகா! இஃகிஃகி!னு வித விதமா சிரிக்கிறதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் சொல்லுங்க.. நக்கலா சிரிக்கிறீங்களா.. நட்பா சிரிக்கிறீங்களானு ஒரே கொழப்பமா இருக்கு...
//

அதான் வெவரம் ஏற்கனவே சொன்னமே...
http://maniyinpakkam.blogspot.com/2008/12/blog-post_04.html

ஆறாம்பூதம் said...

//...அசடு வழிய சிரிப்பு: இஃகி! க்ஃகி!!
அடுத்தவன் துன்பத்துல சிரிப்பு: அஃக!ஃக!!ஃக!!!
கேனச் சிரிப்பு: இஃ!இஃகி!இஃகி!!!
ஆனந்தச் சிரிப்பு: அஃகஃகாஃஃஃஃஃஃ! அஃகஃகாஃஃஃஃஃஃ!
குழந்தைச் சிரிப்பு: கிஃகி!கிஃஃஃ!கிஃஃஃஃஃஃஃஃஃஃ!!!
மீசை இல்லாத புன்முறுவல்: :-)
மீசை இருக்குற புன்முறுவல்: :-{)
எகத்தாளச் சிரிப்பு: ஒகொஃகொஃஃகொஃ....!
இரசிச்சுச் சிரிக்குறது: இஃகிஃகிஃ...ஏஃ! இஃகிஃகிஃ...ஏஃ!! //...

ஐயோ சாமி... இத்தனை சிரிப்பா.. இதுக்கெல்லாம் என்னால தனி டிக்‌ஷ்னரி பராமரிக்க முடியாது... நீங்க உங்க இஷ்டம் போல எப்படி வேணா சிரிச்சுகுங்க..

சதங்கா (Sathanga) said...

இன்னும் ஆன்ஸர் போடலயா ... எதுக்கும் நாளைக்கு வந்து பார்க்கிறேன் :))

பழமைபேசி said...

//ஆறாம்பூதம் said...
ஐயோ சாமி... இத்தனை சிரிப்பா.. இதுக்கெல்லாம் என்னால தனி டிக்‌ஷ்னரி பராமரிக்க முடியாது... நீங்க உங்க இஷ்டம் போல எப்படி வேணா சிரிச்சுகுங்க..
//

அஃக!ஃக!!ஃக!!!

பழமைபேசி said...

//சதங்கா (Sathanga) said...
இன்னும் ஆன்ஸர் போடலயா ... எதுக்கும் நாளைக்கு வந்து பார்க்கிறேன் :))//

வணக்கம்! சாய்ங்காலம் வாங்க, பதிஞ்சு வெக்கிறேன்!!

Anonymous said...

// என்னோட விளக்கத்துக்கு எதிர்ன்னு ஏன் நினைக்குறீங்க? மாற்று விளக்கம் அவ்வளவுதேன். அப்பிடி சொல்லுறதையும், நான் பதிவுல ஏத்திட்டுதான வர்றேன் //

அட ஆமாம் ... உண்மையிலேயே பெரிய மனசு தான்னே உங்களுக்கு...

பழமைபேசி said...

//Sriram said...
அட ஆமாம் ... உண்மையிலேயே பெரிய மனசு தான்னே உங்களுக்கு...
//

வாங்க Sriram! நொம்ப புகழாதீங்க, வெக்கமா இருக்கு!! இஃகிஃகி!!

http://urupudaathathu.blogspot.com/ said...

//பட்டையக் கெளப்புறது, ///

பட்டைய ( சரக்க போட்டுட்டு) அக்கம் பக்கத்த கிளப்புறது

நசரேயன் said...

பட்ட சரக்கு மாதிரி இருக்கு

நசரேயன் said...

/*
மாற்று விளக்கம் அவ்வளவுதேன்
*/
நானும் அதைத்தான் செய்யுறேன்

Anonymous said...

//நான் என்னோடதை நாளைக்குப் பதியுறேன். அப்ப, நாங்களும் நாளைக்கே பின்னூட்டத்துல சொல்லுறோம்ன்னு, நீங்க மொடக்கடி பேசப்படாது.//

என் கருத்தை நாளைக்குத்தான் மறுமொழியில் சொல்வேன்.

நீங்கள் மட்டும் மொடக்கடி பேசலாம்; ஆனால் நாங்கள் பேசக்கூடாது. இது நியாயமே இல்லை!

பழமைபேசி said...

//நசரேயன் said...
/*
மாற்று விளக்கம் அவ்வளவுதேன்
*/
நானும் அதைத்தான் செய்யுறேன்
//

தளபதிக்கு வணக்கம்!

பழமைபேசி said...

//அ நம்பி said...
நீங்கள் மட்டும் மொடக்கடி பேசலாம்; ஆனால் நாங்கள் பேசக்கூடாது. இது நியாயமே இல்லை!
//

ஐயா, வாங்க, வணக்கம்! அஃகஃகா!! இல்லீங்யா, என்னோட விளக்கத்தைப் படிச்சுட்டு, அவிங்க அவிங்க கருத்துகளச் சொல்லாமப் போயிடுறாங்க, அதான்! ஆனா, நீங்க அப்பிடி இல்லை!! இஃகிஃகி!!