12/23/2008

சொலவடை

நம்ம ஊர்கள்ல பேசுற சொலவடைங்க நெறய;அப்பப்ப ஞாபகத்துக்கு வரும். அதுல கொஞ்சத்த பாப்போம் இன்னைக்கு.

எடத்தக் குடுத்தா, மடத்தப் புடுங்குவான்.

அம்மி அடிச்சன்னைக்கே, குழவியும் அடிச்சு இருப்பான்.

கொண்டவனை அறிஞ்சுதான் கூரை ஏறி சண்டை போடணும்.

ரோசக்காரனுக்கு கடனக் குடு; மழுமாரிக்கு பொன்னக் குடு.

கம்மங்கருதக் கண்டா கை சும்மா இருக்குமா? இல்ல,
மாமன் மகளக் கண்டா வாய் சும்மா இருக்குமா??

வெதை ஒண்ணு போட சுரை ஒண்ணா முளைக்கும்?

புருசனும் பொண்டாட்டியும் சாமி ஆடுனா, புள்ள தூக்குறது யாரு?

புள்ள வேணுங்குறவ வாயக் கட்டணும்; புருசன் வேணுங்குறவ வயத்தக் கட்டணும்.

மக வரமுன்ன பூட்டிக்க கழத்திக்க; மருமக வரமுன்ன உண்டுக்க திண்டுக்க.

இனம் இனத்தோட; வெள்ளாடு தன்னோட.

ஆள் போனா அதர்மம்; மகன் போறது மததிமம்; தான் போறது தர்மம்.

பார்த்துக் கெட்டது புள்ள;பாராமக் கெட்டது பயிறு.

வெல்லந் தின்னவனை விட்டுட்டு வெரல் சூப்பினவனை
புடிச்சிட்டு போனா எப்படி?

முடி உள்ள மகாராசி முன்சடை போடுவா,பின்சடை
போடுவா;
மொட்டைத் தலைக்காரி என்ன செய்ய முடியும்?


(மனுசி வர்றா! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; போய், வேலை வெட்டி ஏதாவது செய்வோம். ராவுக்கு கஞ்சி குடிக்கணும் இல்ல?!)

1 comment:

Ranjani Narayanan said...

நீங்கள் போட்டிருக்கும் சொலவடை எல்லாமே நன்றாக இருக்கிறது. இவைகளில் பல என் பாட்டி, அம்மா பேசும்போது அனாயாசமாகச் சொல்வார்கள். நாங்கள் ரொம்பவும் ரசிப்போம்!
மறந்து போனவற்றை நினைவு படுத்தியதற்கு நன்றி!