பாடு ஒரு பாட்டு
சில்லரைய நீட்டு
சிவகாசி வேட்டு
திண்டுக்கல்லுப் பூட்டு
திருப்பித்தலைய ஆட்டு
================================================
மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்!
ஒன்னு
ஓடிவா கண்ணு
ரெண்டு
ரோசாப்பூச் செண்டு
மூனு
முகட்டுமேல தேனு
நாலு
நாய்க்குட்டி வாலு
அஞ்சு
அவரக்காப் பிஞ்சு
ஆறு
அதாபாரு தேரு
ஏழு
பானையில கூழு
எட்டு
டமடமக் கொட்டு
பத்து
படுக்கப் போட்டு மொத்து!
================================================
மழை வருது மழை வருது
நெல்லுக் குத்துங்க!
முக்காப்படி அரிசி எடுத்து
முறுக்குச் சுடுங்க!
ஏர் ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க!
சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு போடுங்க!
பொக்கைப் பல்லு டோரியா
பட்சி பாக்கப் போறியா?
பட்டாணி வாங்கித் தாறேன்
பள்ளிக்கூடம் வாறியா?
அவரவர் வீட்டுக்கு
அவரைக்கா சோத்துக்கு
பிள்ளைபெத்த வீட்டுக்கு
புளியங்கா சோத்துக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வர்றேன் விளையாட்டுக்கு
================================================
கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு
ஈரிரிண்டைப் போடடா
இறுக்க மாட்டைக் காட்டடா
பருத்திக் கொட்டை வையடா
முக்கட்டு வாணியஞ் செக்கடா
செக்கும் செக்கும் சேந்தாட
வாணியன் வந்து வழக்காட
வாணிச்சி வந்து கூத்தாட
நாலைவச்சி நாலுஎடு
நாரயணன் பேரெடு
பேரெடுத்தபின்ன பிச்சையெடு
அஞ்சுவரளி பசு மஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
பத்தாதமஞ்சள் பசு மஞ்சள்
ஆக்குருத்தலம் குருத்தலம்
அடுப்புத்தண்டலம் தண்டலம்
வேம்பு சுட்டா வெங்கலம்
ஏழுபுத்திரச் சகாயம்
எங்கபுத்திரச் சகாயம்
மாட்டுப்புத்திரச் சகாயம்
எட்டும் பொட்டும்
எடக்கண்ணு பொட்டை
வலக்கண்ணு சப்பட்டை
ஒம்போதுநரி சித்திரத்தை
பேரன் பொறந்தது பெரியகதை
பெதப்பம்பட்டிப் பெரியத்தை
பத்துரா சித்திரா கோலாட்டம்
பங்குனி மாசங் கொண்டாட்டம்!
ஆடிவெள்ளி வந்துச்சுன்னா
அம்மனுக்கல்ல கொண்டாட்டம்!!
தலைவாசல்ல படிக்கிறது தினமலரு!
பின்வாசல்ல தாண்டுறது மதில்சுவரு!!
46 comments:
நான் தான் பஸ்டு....
அண்ணனுக்கு அபார ஞாபக சக்தி...
என்ன சாமி கேப்பே விடாம அடி பின்னியெடுத்துக்கிட்டு இருக்கீக!!!
தேவா...
பனமரமே பனமரமே பச்சக் கண்ணாடி
பல்லுப் போன கெழவனுக்கு டபிள் பொண்டாட்டி !!
பாட்டு எல்லாம் நல்லாருக்கு! எப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க?
//தலைவாசல்ல படிக்கிறது தினமலரு!
பின்வாசல்ல தாண்டுறது மதில்சுவரு!! //
இது என்னது? அப்புறம் தலைப்பு சூடான இடுகைக்கா?
//muru said...
நான் தான் பஸ்டு....
//
இஃகிஃகி!
//thevanmayam said...
என்ன சாமி கேப்பே விடாம அடி பின்னியெடுத்துக்கிட்டு இருக்கீக!!!
தேவா...
//
எல்லா ஆட்டமும் இனி ஒரு வாரத்துக்குதானுங்க... அப்புறம் வேலை வெட்டி, வெளியூர்ன்னு நேரம் கெடைக்காதுங்கோய்....
//Mahesh said...
பனமரமே பனமரமே பச்சக் கண்ணாடி
பல்லுப் போன கெழவனுக்கு டபிள் பொண்டாட்டி !!
//
அஃகஃகா! நல்லா இருக்கு பாட்டு!!
// கபீஷ் said...
இது என்னது? அப்புறம் தலைப்பு சூடான இடுகைக்கா?
//
வாங்க! ச்சும்மா வெள்ளையுஞ் சொல்லையுமா தலைவாசல்ல ஒக்காந்து வெட்டி ஞாயம் பேசிட்டு, கடன்காரன் வந்தா பின்னாடி வழியா ஓடி ஒளியுறவனைப் பாத்து சொல்லுற சொலவடைங்க இது!!
பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்க
ங்கொப்பம் பேரென்ன?
"முருங்கைப்பூ"
முருங்கைப்பூவும் தின்னவனே
முன்னூறு காசு கொடுத்தவனே
பாம்புக்கைய மடக்கு
"மாட்டேன்"
// தங்ஸ் said...
பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்க
ங்கொப்பம் பேரென்ன?
"முருங்கைப்பூ"
முருங்கைப்பூவும் தின்னவனே
முன்னூறு காசு கொடுத்தவனே
பாம்புக்கைய மடக்கு
"மாட்டேன்"
//
நன்றிங்க தங்சு!
மனுஷன் எவ்வளவு பாட்டு ஞாபகம் வச்சு இருக்காரு
கலக்குறீங்க.
//நசரேயன் said...
மனுஷன் எவ்வளவு பாட்டு ஞாபகம் வச்சு இருக்காரு
//
கொஞ்சம் கேட்டு எழுதினதுதான் அப்பு...
நாங்க பாடி விளையாண்ட பாட்டை எல்லாம் ஞாபக படுத்திட்டிங்க நன்றிங்க
பழஸ்
// ...
பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்க
ங்கொப்பம் பேரென்ன?
"முருங்கைப்பூ"
முருங்கைப்பூவும் தின்னவனே
முன்னூறு காசு கொடுத்தவனே
பாம்புக்கைய மடக்கு
"மாட்டேன்"
//
இந்த version சரியா பாருங்க
முருங்கைப்பூ தின்னவனே
முள்ளாங் கஞ்சி குடிச்சவனே
பாம்புக்கைய படக்குன்னு மடக்கு
"மாட்டேன்"
மாட்டேனா மாட்டேன்
மாதுளங் கொட்டை
இன்னும் சில வரிகள் வரும்
நரேன்
மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்! //
யாரு அந்த இன்னொருத்தர்
தல கொங்கு ஒன்னு இறக்குங்க. சூட்டோட சூடா
முருங்கைப்பூவை தின்னவனே
முள்ளங்கண்ணியைக்குடிச்சவனே
பாம்புக்கையை படக்குனு எடு
மாட்டேன்
மாட்டேன்னா மாட்டேன்
மாதுளங்கா தோட்டேன்
பூ ச் சோ று ஒ ரு கை யை எ டு
இப்படி விளையாடுவோம். ஞாபகமிருக்கு.
இப்படியும் பாடராங்க
முருங்கைப்பூ தின்னவனே
முள்ளாங் கஞ்சி குடிச்சவனே
சீப்பு சித்தர வாங்கித்தாரேன்
சின்ன புள்ள கையெடு
சரியான்னு தெரியல,
காலைரைக்கால் கூத்து நல்லாத்தான் இருந்திச்சி. பழச மறந்து வாழ்ந்துகிட்டிருக்கிறதால வர்ர வினை.
எழுதுங்க எங்களால வாசிக்கத்தான் முடியும்
வாசி
//தாரணி பிரியா said...
நாங்க பாடி விளையாண்ட பாட்டை எல்லாம் ஞாபக படுத்திட்டிங்க நன்றிங்க
//
நம்மூட்டுப் பக்கம் வந்தததுக்கு உங்களுக்கு நன்றி...இஃகிஃகி!
//Naren said...
பழஸ்
இந்த version சரியா பாருங்க
முருங்கைப்பூ தின்னவனே
இன்னும் சில வரிகள் வரும்
நரேன்
//
நன்றிங்க நரேன்! இஃகிஃகி!!
//குடுகுடுப்பை said...
மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்! //
யாரு அந்த இன்னொருத்தர்
//
உங்கள விட்டுடுவேனா...எதுக்கு இந்த சந்தேகம்?
//சின்ன அம்மிணி said...
இப்படி விளையாடுவோம். ஞாபகமிருக்கு.
//
நன்றிங்க நம்மூர் அம்மினி!
//வாசி said...
பழச மறந்து வாழ்ந்துகிட்டிருக்கிறதால வர்ர வினை.
எழுதுங்க எங்களால வாசிக்கத்தான் முடியும்
வாசி
//
இஃகிஃகி! வருகைக்கும் பழமக்கிம் நன்றிங்கோ!!!
நாங்கள்ளாம் இதெல்லாம் பாடியதில்ல ..கேள்விப்பட்டிருக்கோம்.. அப்பவே தொலைச்சாச்சு இப்ப எங்க பிள்ளைங்க இந்தியில் தான் பாடுதுங்க.. கேக்க நல்லா இருக்கு.. எனக்கு தெரிஞ்சு ஒரு விளையாட்டு விளையாடுவோம் அந்த பாட்டு தெரிஞ்சா சொல்லுங்க..
ஒரு பிள்ளை போய் கண்னை மூடிக்கனும் .. மத்தவங்க வட்டமா உக்காந்துகிட்டு ஒரு கல்லை யாராச்சும் ஒளிச்சுவச்சிக்கனும்.. அந்த பிள்ளை வந்து சொல்லனும் யாருகிட்ட இருக்குன்னு.. அப்ப பாடற பாட்டு ஆரம்ப்ம " சிந்தாமணி கண்டுபிடின்னு " எதோ வரும்..
முத்துலக்ஷ்மி அக்கா, அது கொலை கொலையா முந்திரிக்கா, நரிய நரிய சுத்தி வா - பாட்டு-னு நினைக்கிறேன், பழ்ஸ் சரியான்னு சொல்லுங்க
அருமையான நினைவுகள் :)
//
மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்!
//
நீங்க எழுதுனதுல எனக்கு இந்த ஒரு பாட்டு மட்டும் தான் தெரியுது...
பாட்டுக்கு நன்றி பழம்பெரும் கவிஞரே :0)
//
தலைவாசல்ல படிக்கிறது தினமலரு!
பின்வாசல்ல தாண்டுறது மதில்சுவரு!!
//
ஏன், தலைவாசல் காரங்க மட்டும் தான் தினமலர் படிக்கிறாங்களா? நானுந்தேன் படிக்கேன் :0)
பின்வாசல்ல இல்ல முன்வாசல்லயும் நாங்க மதில் சுவரை தான் தாண்டுவோம்...
//முத்துலெட்சுமி-கயல்விழி //
வாங்க வணக்கம்! குலை குலையா முந்திரிக்காங்ற பாட்டு....அதையும் பதியணும்.
//Naren said...
முத்துலக்ஷ்மி அக்கா, அது கொலை கொலையா முந்திரிக்கா, நரிய நரிய சுத்தி வா - பாட்டு-னு நினைக்கிறேன், பழ்ஸ் சரியான்னு சொல்லுங்க
//
வாங்க நரேன்...நீங்க சொல்லுறதுதான் நானும் நினைக்குறேன்...
//தில்லாலங்கடி said...
அருமையான நினைவுகள் :)
//
நன்றிங்கோ......
//அது சரி said...
பாட்டுக்கு நன்றி பழம்பெரும் கவிஞரே :0)
//
வாங்க அது சரி அண்ணாச்சி, நன்றிங்கோ...
இஃகிஃகி!
அய்யோ அய்யோ மறந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சே...
பழைய கூட்டாளிகளுக்கு நான் எங்க போவேன் இப்ப..
எட்டு
தலையப் பாத்துக் கொட்டு.
கொட்டிட்டு ஓடு ஒரு ஓட்டம்.
அதோ பாரு காரு
காருக்குள்ள யாரு
நம்ம நாட்டு நேரு
நேரு என்ன சொன்னாரு
நல்லா படிக்க சொன்னாரு
ஆமா,,, நீங்க எழுதினதையெல்லாம்
கொல கொலயா முந்திரிக்கா
பாட்டு பதியறீங்களா... ப்ளீஸ்.
// அமிர்தவர்ஷினி அம்மா said...
ஆமா,,, நீங்க எழுதினதையெல்லாம்
//
???????????
//அமிர்தவர்ஷினி அம்மா said...
கொல கொலயா முந்திரிக்கா
பாட்டு பதியறீங்களா... ப்ளீஸ்.
//
நீங்க சொன்னதுக்கு அப்புறம் விட்டுடுவமா?
//அமிர்தவர்ஷினி அம்மா said...
கொல கொலயா முந்திரிக்கா
பாட்டு பதியறீங்களா... ப்ளீஸ்.
//
// நீங்க சொன்னதுக்கு அப்புறம் விட்டுடுவமா? //
கொல கொலயா முந்திரிக்கா...
ஒரு அரசியல் பாட்டா வும் இருந்தது ஒரு காலத்துல
//மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்! //
பாடுனது நினைவுக்கு வருது:)
புதுசு ஒண்ணும் காணோமே?
//Naren said...
//அமிர்தவர்ஷினி அம்மா said...
கொல கொலயா முந்திரிக்கா
பாட்டு பதியறீங்களா... ப்ளீஸ்.
//
// நீங்க சொன்னதுக்கு அப்புறம் விட்டுடுவமா? //
கொல கொலயா முந்திரிக்கா...
ஒரு அரசியல் பாட்டா வும் இருந்தது ஒரு காலத்துல
//
இஃகிஃகி! வெளயாட்டுல பாடுறதப் போட்டாச்சு....
//ராஜ நடராஜன் said...
//மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்! //
பாடுனது நினைவுக்கு வருது:)
புதுசு ஒண்ணும் காணோமே?
//
வரும்..வரும்..வரும்...
இது கொஞ்சம் விவகாரமான பாட்டு..
என்ற மருமவன் சிருசா இருந்தப்போ ஒரு கெழுட்டு அப்பச்சி இத சொல்லிகொடுத்து.. நாங்கெல்லாம் பாடச் சொல்லிக் கேட்டு சிரிப்பாச் சிரித்துண்டு...
”தந்தனத்தான் தோப்புலே
தயிரு விக்கிற பொம்பளே
தயிரு போனா மயிரு போச்சு
கிட்ட வாடி பொம்பளே..”
ஹி..ஹி...
//சூர்யா said...
இது கொஞ்சம் விவகாரமான பாட்டு..
என்ற மருமவன் சிருசா இருந்தப்போ ஒரு கெழுட்டு அப்பச்சி இத சொல்லிகொடுத்து.. நாங்கெல்லாம் பாடச் சொல்லிக் கேட்டு சிரிப்பாச் சிரித்துண்டு...
”தந்தனத்தான் தோப்புலே
தயிரு விக்கிற பொம்பளே
தயிரு போனா மயிரு போச்சு
கிட்ட வாடி பொம்பளே..”
ஹி..ஹி...
//
ஆமாங்க சூர்யா, நானுங்கோட இந்தப் பாட்டை ஒரு பதிவுல சொல்லி இருக்கேன். சூந்துப் பாட்டு எதனா உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க...
//சூந்துப் பாட்டு எதனா உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க...//
சூந்துப்பாட்டுன்னா என்னன்னு தெரியலீங்களே..
//சூர்யா said...
//சூந்துப் பாட்டு எதனா உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க...//
சூந்துப்பாட்டுன்னா என்னன்னு தெரியலீங்களே..
//
பரவாயில்லைங்க....உங்க பேரைச் சொல்லி அது சம்பந்தமா பதிவும் போட்டாச்சு...இஃகிஃகி!
மாட்டேன்னா மாட்டேன்
மாதுளங்கா கோட்ட
தார்வார் வாழக்காய்
தம்பூர் வாழக்காய்
பூ போல ஒரு கைய எடுத்து வச்சுக்கோ
Post a Comment