நாம சித்தங்கூரம் பேசாமிருந்தம்ன்னு வெச்சிக்கோ, அவிங்க அந்த சொல்லுக தமிழே இல்லைன்னும் சொல்லிப் போடுவாங்க கண்ணு. அப்பிடி, நானு அவிங்க செஞ்ச மொடக்கடில பாத்த சில சொல்லுகள இப்பப் பாப்பமா கண்ணு?! அந்த நேரத்துல கண்ணு, இந்தத் தமிழ் அகராதி நம்ம கையில இல்ல கண்ணு. இப்பத்தான் ஒரு பத்து நாளைக்கி முன்னாடி VSK ஐயாவிங்க குடுத்தாங்கோ. அதுக்கு அவிங்களுக்கு நன்றி சொல்லிக்கிறன்.
அறமாலும்: கண்ணு, நான் சிங்கப்பூர்ல இருந்தப்ப அங்கிருந்தவிங்களோட நம்மூர்ல போயி விமானத்துல எறங்கின ஒடனே நடக்குற கலால் வரி அதிகாரிக பண்ணுற அட்டகாசத்தைப் பத்தி பேசிட்டு இருந்தோம். அப்ப பாரு கண்ணு, "இவிங்க பண்றது அறமாலும் அநியாயம்!"ன்னு நாஞ்சொல்ல ஒரே சிரிப்பு. ஏன்டப்பா, சிரிக்குறீங்கன்னு கேட்டேன். அதென்னடா அநியாயத்துல அறம், அது எங்க இருந்து வந்ததுன்னு கேட்டு ஒரே கிண்டலு. டேய், அறமாலும்ன்னா எங்க ஊர்ல, ஒன்னை அழுத்திச் சொல்றதுக்கும், முழுமைப் படுத்திச் சொல்லுறதுக்கும் சொல்லுவம்டான்னு சொன்னேன். நம்பலையே?
அற aṟa , adv. < அறு¹-. 1. Wholly, entirely, quite; முழுதும்.
உப்புசம்: ஐயோ கண்ணு, இதைச் சொல்லுறப் எல்லாம் சுத்தி இருக்குறவிங்களுக்கு ஒரே சிரிப்புத்தேன். அட, எங்க ஊர்ப் பக்கம் அப்பிடிதான் சொல்லி என்ன வளத்தி ஆள் ஆக்கியிருக்காங்கன்னும் சொல்லி பாத்தேன். ம்ம், கேக்காமச் சிரியோ சிரின்னு சிரிச்சுப் போட்டாங்க. இந்தக் கோடையில கூட என்னோட சோட்டாலிக, இங்க என்னைக் கிண்டலு செஞ்சி போட்டாங்க கண்ணு. ஆனா, அகராதி சொல்லுது இது ஒரு நல்ல தமிழ் வார்த்தைன்னு. அசாதரணமா இருக்குறத உப்புசம்ன்னு சொல்லுலாமாக்கூ.
உப்பசம் [ uppacam ] சவாசகாசம்.
ஓர்சல்: நான் எதோ ஒரு நாளு, "ஊட்டுல போயி எல்லாம் ஓர்சல் பண்ணோனும், நேரமாச்சு!"ன்னு சொல்ல, அதென்ன ஓர்சல்ன்னு கேள்வி. ஆனா, இதுக்கு யாருங் கிண்டல் செய்யலை. ஊர்ல, ஊட்டுல அல்லாத்தையும் ஒழுங்கு படுத்துறதுக்கும், பிரச்சினைகளை செரி பண்ணுறதுக்கும் பொழங்குற ஒரு வார்த்தை. அகராதியும் அதேதாஞ் சொல்லுது கண்ணு.
ஓர்சல்ஆக்க, --பண்ண, to settle or decide a quarrel or other matters, to bring to conclusion.
அஃக!ஃக!! எப்பிடியோ, நொம்ப நாளா மனசுக்குள்ளயே இருந்து அரிச்சிகிட்டு இருந்த விசியத்தை, இன்னைக்கு ஒரு ஓர்சலுக்கு கொண்டுவன்ட்டன்! நொம்ப சந்தோசமாயிருக்கு!! இஃகி!ஃகி!! என்ன, உங்களுக்கும் ஓர்சல் பண்ண வேண்டிய வேலைக நெறய இருக்குதாக்கூ? போங்க கண்ணுகளா, போயி நல்ல படியா ஓர்சல் பண்ணுங்க, சந்தோசமாயிருங்க!!
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
29 comments:
நான் தான் மொத போனி
வந்துட்டோம்ல.. இனி அடிச்சி ஆடிட வேண்டியது தான்
இருங்க மொதல்ல படிச்சிட்டு வந்துடுறேன்
ரொம்ப 'அகராதி' புடிச்சவரா இருப்பீங்க போல இருக்கே ..
இப்போ நான் போயி ஒர்சல் பண்ணிட்டு வந்துடுறேன்
நட்சத்திர வாரத்திற்கு பாராட்டுக்கள்
//உருப்புடாதது_அணிமா said...
வந்துட்டோம்ல.. இனி அடிச்சி ஆடிட வேண்டியது தான்
//
வாங்க மலைக்கோட்டையார்! வணக்கம்! நீங்க இல்லாம நல்லாவே இல்ல. என்னோட ஒரு வாரத்துப் பதிவு எல்லாம் படிச்சுட்டு வாங்க.
கொஞ்ச வேலை அதனால தான் உங்க வூட்டு பக்கம் வர முடியாமல் போய் விட்டது..
( கொஞ்ச என்றால் சிறிது என்று அர்த்தப்படுத்தி கொள்ளவும்)
//பழமைபேசி said...
வாங்க மலைக்கோட்டையார்! வணக்கம்! நீங்க இல்லாம நல்லாவே இல்ல. என்னோட ஒரு வாரத்துப் பதிவு எல்லாம் படிச்சுட்டு வாங்க.///
அதுதாங்க என்னோடைய மொத வேலையே..
எல்லா பதிவுகளையும் நான் தலைய காட்டியே ஆகணும்
அது எப்படிங்க வார்த்தையிலே சும்மா புகுந்து விளையாடுறீங்க....
வந்துட்டனப்பா... விருந்தெல்லாம் ஒண்ணுமில்லீங்.. என்ற எசமானரு ரெண்டு நாளா அகராதி பண்ணிட்டிருக்கானப்ப்பா... இது பொருள் விளக்கம் தர அகராதி இல்லியப்ப்போய்...லொல்லு பண்றதாக்கும்.. அதான் அந்த வேலையை முடிச்சு தந்து போட்டு சாவகாசமா வல்லானுதேன்...
வெய்யக் காலத்துல காத்தில்லாம புழுக்கமா இருந்தாலும் "உப்புசமா" இருக்குன்னு சொல்றதுண்டுதானே?
இது மாதர விசியமெல்லாம் ஒரு ஓர்சலா எழுதறது நீங்க மட்டுந்தாண்ணே...
//Sriram said...
அது எப்படிங்க வார்த்தையிலே சும்மா புகுந்து விளையாடுறீங்க....
//
வாங்க Sriram! வணக்கம்!! நல்லா இருக்கீங்ளா?? எதோ, நம்மால ஆனதுங்க. நன்றிங்க!!
//வசந்த் கதிரவன் said...
வந்துட்டனப்பா... விருந்தெல்லாம் ஒண்ணுமில்லீங்.. என்ற எசமானரு ரெண்டு நாளா அகராதி பண்ணிட்டிருக்கானப்ப்பா... இது பொருள் விளக்கம் தர அகராதி இல்லியப்ப்போய்...லொல்லு பண்றதாக்கும்.. அதான் அந்த வேலையை முடிச்சு தந்து போட்டு சாவகாசமா வல்லானுதேன்...
//
ஆமாமா! பொழப்பு முக்கியம், அப்புறந்த்தான் மத்ததெல்லாமு...பாத்துச் செய்யுங்...
//Mahesh said...
வெய்யக் காலத்துல காத்தில்லாம புழுக்கமா இருந்தாலும் "உப்புசமா" இருக்குன்னு சொல்றதுண்டுதானே?
இது மாதர விசியமெல்லாம் ஒரு ஓர்சலா எழுதறது நீங்க மட்டுந்தாண்ணே...
//
மகேசு அண்ணே, வாங்கோ! நாம கத்துக்குறதை, அப்பிடியே வலையிலயே போட்டு, நம்ம கண்ணுகளும் படிக்கட்டுமுன்னுதான்.... இஃகி!இஃகி!!
//வந்துட்டோம்ல.. இனி அடிச்சி ஆடிட வேண்டியது தான்//
Welcome back உருப்புடாதது_அணிமா! Pazama didn't have food for a day missing you. Somehow thangs managed to make him eat.
வின்ட்டர்-ல ரொம்ப கூதலா இருக்குற சமயத்துல உப்பச பதிவு போடுறீங்களே...உங்குளுக்கு அறமாக்குறும்புங்கோவ்..
நீங்க சொல்லற மாதிரி.. நானும் ‘ஒட்டுக்கா' போலாம்ன்னு சொல்லி மாட்டிக்கிட்டதுண்டு...
இதுக்கும் ஏதாவது நல்ல வார்த்த இருக்கானு பாத்து சொல்லுங்க புலவரே...
//சூர்யா said...
நீங்க சொல்லற மாதிரி.. நானும் ‘ஒட்டுக்கா' போலாம்ன்னு சொல்லி மாட்டிக்கிட்டதுண்டு...
இதுக்கும் ஏதாவது நல்ல வார்த்த இருக்கானு பாத்து சொல்லுங்க புலவரே...
//
வாங்க சூர்யா! ஆமா, இது நம்ம ஊர்ல சர்வ சாதரணமாப் பொழங்கற வார்த்தைதான். அதே சமயத்துல, எளிதான சொல்தான். ஒட்டுக்கா என்றால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து, குழுவாக!
ஒட்டு (p. 157) [ oṭṭu ] , s. & v. n. patch;
உப்புசமா இருக்குன்னு புழுக்கமா இருக்கறதை இல்ல சொல்வாங்க !!
நீங்க பண்றது அறமாலும் நியாயம்
/ஓர்சல்: நான் எதோ ஒரு நாளு, "ஊட்டுல போயி எல்லாம் ஓர்சல் பண்ணோனும், நேரமாச்சு!"ன்னு சொல்ல, அதென்ன ஓர்சல்ன்னு கேள்வி. ஆனா, இதுக்கு யாருங் கிண்டல் செய்யலை. ஊர்ல, ஊட்டுல அல்லாத்தையும் ஒழுங்கு படுத்துறதுக்கும், பிரச்சினைகளை செரி பண்ணுறதுக்கும் பொழங்குற ஒரு வார்த்தை. அகராதியும் அதேதாஞ் சொல்லுது கண்ணு./
நான் சிறுவனாக இருக்கையில் பயன்படுத்திய சொல் , பல ஆண்டுகளாக மறந்த சொல்
நினைவுப் படுத்திற்கு நன்றிகள்
மறைந்துவரும் சொற்கள் நினைக்கையில் உள்ளம் உடைகிறது
//சின்ன அம்மிணி said...
உப்புசமா இருக்குன்னு புழுக்கமா இருக்கறதை இல்ல சொல்வாங்க !!
//
ஆமுங்க, உப்புக்கரிச்சிக் கொட்டுற அசாதாரணம் அது.
//கபீஷ் said...
//வந்துட்டோம்ல.. இனி அடிச்சி ஆடிட வேண்டியது தான்//
Welcome back உருப்புடாதது_அணிமா! Pazama didn't have food for a day missing you. Somehow thangs managed to make him eat.
//
:-o)
//தங்ஸ் said...
வின்ட்டர்-ல ரொம்ப கூதலா இருக்குற சமயத்துல உப்பச பதிவு போடுறீங்களே...உங்குளுக்கு அறமாக்குறும்புங்கோவ்..
//
வாங்க தங்சு!
//நசரேயன் said...
நீங்க பண்றது அறமாலும் நியாயம்
//
:-o))
//திகழ்மிளிர் said...
நான் சிறுவனாக இருக்கையில் பயன்படுத்திய சொல் , பல ஆண்டுகளாக மறந்த சொல்
நினைவுப் படுத்திற்கு நன்றிகள்
மறைந்துவரும் சொற்கள் நினைக்கையில் உள்ளம் உடைகிறது
//
ஆமுங்க, இப்பிடிச் சொல்லிப் பாத்து நிலை நிறுத்த முயற்ச்சி செய்ய வேண்டியதுதான்.
//உப்புசம்: ஐயோ கண்ணு, இதைச் சொல்லுறப் எல்லாம் சுத்தி இருக்குறவிங்களுக்கு ஒரே சிரிப்புத்தேன்.//
நம்மூருப் பழமையத்தானெ பேசுறீங்க!இதுக்கெல்லாம சிரிப்பாங்க!புழக்கத்தில இல்லின்னா எல்லாமே இப்படித்தான்:(
//ராஜ நடராஜன் said...
நம்மூருப் பழமையத்தானெ பேசுறீங்க!இதுக்கெல்லாம சிரிப்பாங்க!புழக்கத்தில இல்லின்னா எல்லாமே இப்படித்தான்:(
//
ஆமுங்க ஐயா, நீங்க சொல்லுறதும் சரிதான்!
Post a Comment