6/08/2008

சிலேடைப்புதிர்

  • முத்துஇருக்கும் கொம்புஇருக்கும் மூரித்தண்டு ஏந்திவரும் கொத்துஇருக்கும் நேரே குலைசாய்க்கும் - அது என்ன?
  • யாவருக்கும் ரஞ்சனை செய்து யாவருக்கும் அவ்வவராய்ப் பாவனையாய்த் தீதுஅகலப் பார்த்தலால் - மேவும் எதிரியைத்தன் னுள்ஆக்கி ஏற்ற ரசத்தால் ஆகும் - அது என்ன?
  • வாரிக் களத்துஅடிக்கும் வந்த பின்பு கோட்டை புகும்,போரில் சிறந்து பொலிவு ஆகும் - அது என்ன?

(இதற்கான விடைகள், 'புதிர் விடைகள்' எனும் பதிப்பில்)

3 comments:

Kumar said...

Hi You are doing a very great work.
let me know how to comment in tamil. i used google transliteration to get the below text...

தன்னை வியந்து...... பாடலின் பொருளை முழுமையாக கொடுக்க வேண்டுகிறேன்.

Thanks

மறத்தமிழன் கன்னியப்பன் said...

எனக்கு பதில் தெரியவில்லை.... இறுதியில் தாங்கள் பதில் கொடுத்திருப்பீர்கள் என்று பாத்தாலும் காணவில்லை... இனியும் யாரும் பதில் அளிப்பதாகத் தெரியவில்லை... தங்களால் விடையை வெளியிட இயலுமா?

பழமைபேசி said...

1.வைக்கோலும் யானையும்

2. கூத்தியருக்கும் குரங்குக்கும்

3.பாம்புக்கும் வாழைப்பழத்துக்கும்