Showing posts with label பள்ளயம். Show all posts
Showing posts with label பள்ளயம். Show all posts

1/02/2011

பள்ளயம் 01/02/2011

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

-----------------------

பதிவுலகத்தில் காலடி எடுத்த வைத்ததின் வழியாக, நிறைய அனுகூலங்கள். ஆம், இதன் மூலம் பொருளீட்டுவது என்பதைத் தவிர்த்து, மனநிறைவானவை நிறைய! தெரியாதன தெரிந்து கொளல், அறியாதன அறிந்து கொளல், நட்பும் பேணுதலும், சகிப்புத்தன்மைப் பெருக்கம், எழுத்துப் பயிற்சி, சமூக ஈடுபாடு முதலானவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதன் தொடர்ச்சியாக, 2011ம் அதேவிதமாய்க் கழிய வேண்டும் என்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.

-----------------------

துவையல்? தொவையல் எனப் பேச்சு வழக்கில் குறிப்பிடுவது உண்டு. துவைத்து எடுப்பதால் துவையலா? தொகுத்து வழங்குவது, தொகையல் என ஆகிப் பின், தொவையல் ஆகிற்றா? வினா எழுப்பியவர், அண்ணன் சீமாச்சு அவர்கள். விடையை அனுமானித்தாலும், உறுதிப்படுத்தாமல் சொல்வதில் வழு நேர்ந்திடுமென வாளாதிருந்தோம்.

கூடவே..... முனையில் நீளும் கரம் என்னுடையது அல்ல; எங்கள் ஆருயிர் அண்ணனுடைய கையா என்பதும் எனக்குத் தெரியாது. விருந்தை நல்கிய மருத்துவர் அசோக் மற்றும் குடும்பத்தாருக்கு உளம்கனிந்த நன்றிகள்!

நேற்றைய இரவுக்கான விடை இதோ மறுநாள் விடியலில்....

தொகுத்து வழங்கும் எதுவும் தொகையல். வெற்றிலை பாக்கு முதலானவற்றைத் தொகுத்துக் கொடுப்பது, வெற்றிலைத் தொவையல். தேங்காய், கடலைப் பருப்பு, மிளகாய், வெங்காயம் முதலானவற்றைத் தொகுத்துக் கொடுப்பது தேங்காய்த் தொவையல். Salad எனச் சொல்லும் இலை, தழை மற்றும் பழச்சீவல்கள் முதலானவற்றைக் கொண்டு தொகுத்து அளிப்பது, எலக்கூட்டுத் தொவையல்! ஆக, தொவையல் என்பதும் துவையல் என்பதும் ஒன்றே! மேலும் இது ஒரு வினையாகு பெயராகும்.

துவைத்து, துவைத்தல் என்பது, இருக்கும் எதோ ஒன்றை மொத்தமாய்க் கூட்டி அதன்மேல் சக்தியைப் பிரயோகம் செய்திடுவதாகும். இது ஒரு வினைச்சொல். பெயர்ச் சொல் அன்று!

-----------------------

சென்ற ஆண்டின் இறுதியில் பனிச்சுமை காரணமாக, பதிவில் இடுகைகள் இடுவதில் தொய்வு ஏற்பட்டமை அனைவரும் அறிந்ததே. அதன் விளைவாய், தொடர்கள் எனும் பாங்கில் எழுதப்பட்டு வந்த, “கனவில் கவி காளமேகம்”, “பள்ளயம்”, ”கவி காளமேகத்தின் தாக்கம்” ஆகியனவை மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.

”கவி காளமேகத்தின் தாக்கம்” எனும் தலைப்பின் கீழ், சித்திரகவி வகையில் சில படைப்புகள் இடம் பெற்றன. அவற்றோடு, கீழ்க்கண்ட கவி வகைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், வகைக்கு ஒரு பாடல் இடம் பெறும்
.
சாதகம், பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம், அகப்பொருட் கோவை, ஐந்திணைச் செய்யுள், வருக்கக் கோவை, மும்மணிக் கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அனுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணி மாலை, நவமணிமாலை, நான்மணிமாலை, நாமமாலை, பல்சந்தமாலை, பன்மணி மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சிமாலை, வருக்கமாலை, மெய்க் கீர்த்திமாலை, காப்புமாலை, வேனின் மாலை, வசந்த மாலை, தாரகைமாலை, உற்பவமாலை, தானைமாலை, மும் மணிமாலை, தண்டகமாலை, வீரவெட்சிமாலை, வெற் றிக்கரந்தைமஞ்சரி, போர்க்கெழுவஞ்சி, வரலாற்று வஞ்சி, செருக்களவஞ்சி, காஞ்சிமாலை, நொச்சிமாலை, உழிஞைமாலை, தும்பைமாலை, வாகைமாலை, ஆதோரணமஞ்சரி, எண்செய்யுள், தொகைநிலைச்செய்யுள், ஒலியலந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, உலா, உலா மடல், வளமடல், ஒருபாவொருபஃது, இருபாவிரு பஃது, ஆற்றுப்படை, கண்படைநிலை, துயிலெடை நிலை, பெயரின்னிசை, ஊரின்னிசை, பெயர்நேரிசை, ஊர்நேரிசை, ஊர்வெண்பா, விளக்குநிலை, புறநிலை, கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து, தசாங்கத் தியல், அரசன்விருத்தம், நயனப்பத்து, பயோதரப் பத்து, பாதாதிகேசம், கேசாதிபாதம், அலங்கார பஞ்சகம், கைக்கிளை, மங்கலவெள்ளை, தூது, நாற் பது, குழமகன், தாண்டகம், பதிகம், சதகம், செவி யறிவுறூஉ, வாயுறைவாழ்த்து, புறநிலைவாழ்த்து, பவ னிக்காதல், குறத்திப்பாட்டு, உழத்திப்பாட்டு, ஊசல், எழுகூற்றிருக்கை, கடிகைவெண்பா, சின்னப்பூ, விருத்தவிலக்கணம், முதுகாஞ்சி, இயன்மொழி வாழ்த்து, பெருமங்கலம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம்

தொண்ணூற்று ஆறு வகையான செய்யுள்கள் கொண்டது, தமிழ்ப் பிரபந்தம். இலக்கணப் பிழையின்றிக் கட்டுவதென்பது இந்தச் சாமன்யனுக்கு இயலாத காரியம். எனினும், இயன்றவரை முயற்சி செய்வோம்!

-----------------------

நனவுகள்” எனும் தொடரும் கிடப்பிலேயே கிடக்கிறது. அதையும் மீளக் கொண்டு வர வேண்டும். டோண்டு ஐயா மற்றும் பாலாண்ணன் ஆகியோரது விருப்பங்கள் அவை. அத்தோடு புதிதாய்த் தொடரவிருக்கும் தொடரின் ஈடானது, அறிவியலைச் சார்ந்த புனைவாக இருக்கும். Specturm என்பதையொட்டி, Humatrum (ஃக்யூமேட்ரம்) என்பதுதான் கதையின் ஈடு.

திறம்மிக்க வெள்ளொளியை ஊடகத்தின் வழியாகச் செலுத்தினால், வெள்ளொளியானது, வீரியத்துக்கொப்ப ஏழு வணணங்களாப் பிரிந்து, ஒவ்வொரு வண்ணமும் தனித்தனியே நிற்கும். இதனை நிறப்பிரிகை என அழைக்கிறோம்.

நாகர்கோயில், வெட்டூர்னி மடத்தைச் சார்ந்த விஞ்ஞானி சுப்பையா வெனான்சியசு என்பார், திருமூர்த்திமலைச் சாரலை ஒட்டிய கிராமங்களான கொடுங்கியம், விளாமரத்துப்பட்டி, கரட்டுமடம் முதலான ஊர்களில் சுற்றித் திரிகிறார். அப்போது, வேடங்கோயில் எனும் இடத்தில் நல்லதொரு இடம் அமைய, தன் ஆய்வுக்கூடத்தை அங்கே நிறுவுகிறார்.

ஒரு மானுடன், தியானம் எனும் ஊடகத்தின் வழியாக தன்னுள் இருக்கும் பல்வேறு தரப்பட்ட குணங்களையும்,  குணப் பிரிகைக்கு ஆட்படுத்துகிறான். தியானம், அணுப்பிரதி(cloning), குணப்பிரிகை முதலானவற்றைக் கையாண்டு, தன்னுள் இருக்கும் ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு மானுடனை உருவாக்குகிறான்.

Character, Property, Attribute, அதாவது பண்பு, குணம், தன்மை முதலானவற்றின் வேறுபாடுகள் நன்கு ஆராயப்பட்டு, ஒவ்வொரு குணத்திற்கு ஒப்ப, ஒரு பிரதி(clone) மானிடனாக தயானந்த், மகிழானந்த், காமானந்த், சூரானந்த், கோபானந்த், வெகுளானந்த் முதலானவர்கள் பிறக்கிறார்கள்.

மானுடனை மகிழ்வின் ஆழ்நிலைக்குத் திருப்பி, அத்தருணத்தினாலான அவனது அணுக்களின் பிரதியைக் கொண்டு மகிழானந்த்தாவை உருவாக்குவார் விஞ்ஞானி வெனான்சியசு.

அப்படிப் படைக்கப்பட்ட பிரதி மானுடன் ஒவ்வொருவனும், சில பல காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு, இந்திய சமூக நல்லுறவுக்குத் துணை போவான். இப்படியாக, ஒவ்வொரு குணத்தைக் கொண்டவனும் ஒவ்வொரு காரியத்துக்க்குப் பாவிக்கப்பட்டு, இந்தியா வல்லரசு ஆவதுதான் கதை!

(அப்பு, இப்படி ஒரு படம் இன்னும் வரலைன்னு நினைக்கிறேன்...)

-----------------------

முகமறியா உறவுகள் சிலர் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது அடையும் அகமகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோ ஒட்டார் - பலநாளும்
நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தன் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு!

6/12/2010

பள்ளயம் - 06/12/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

========================================

காணுதல், பார்த்தல், நோக்குதல் முதலான சொற்களை நாம எந்த சூழ்நிலையில புழங்குறோம்? கண்களால எதோ ஒன்னைப் பார்க்கும் போது பரும்படியாப் பாவிக்கிறது நம்ம வழக்கம். அந்த மூன்று சொற்கள்லயும் இருக்குற நுண்ணியத்தைப் பெரும்பாலானவர்கள் தெரிஞ்சி வெச்சிருக்கிறதும் இல்லை. சரி, அப்படி அதுல என்ன நுண்ணியம் இருக்கு?

மலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, உலாவிய மானைக் கண்டேன். திரையை நோக்கியதும், திகில்க் காட்சியைக் கண்டேன். அவளை நோக்கியதில், பின்னணியில் இருந்த எழிலார்ந்த வெளியைப் பார்க்க முடியவில்லை.

மேம்போக்கா, மொத்தமா ஒன்னை விழிகளால தரிசிக்கிறது பார்த்தல்; வானத்தைப் பார்த்தேன். நகரும் காட்சி அல்லது குறிப்பிட்ட ஒன்றை மட்டும் பிரதானமாகக் கண்களால் தரிசிப்பது காணுதல் அல்லது கண்டு கொள்தல். முன் தீர்மானத்தோடு, நோக்கத்தோடு, கண்களால் தரிசிப்பது நோக்குவது.

இப்படி நுண்ணியங்களைப் புரிஞ்சி, அதற்கான சொற்களைப் புழங்கினா, மொழியின் வளம் கூடும். தமிழ்நாட்டுல என்ன சொல்றோம்? அவளைப் பார்த்து பேசிட்டு வந்தேன். அதுவே ஈழத்தமிழ்ல?? அவளைக் கண்டு, இருந்து, நாலு கதை கதைச்சிட்டு வந்த நான்!


========================================

தமிழ் ஒரு செம்மொழி! கூடவே நுண்ணிய மொழின்னும் சொல்றோம். ஆங்கிலத்துல சொல்லணுமுன்னா, it is sensitive language too! அப்படின்னா? அதாவது, சொல்ல வந்ததை, எந்த விதமான மாற்றுப் பொருள் கொள்தலும் இல்லாம, குழப்பம், திரிபுமில்லாமச் சொல்றது. Communicating without any ambiguity....

ஆனாலும் பாருங்க, சிலேடை, பல பொருள்ச் சொற்கள்னும் நிறைய தமிழ்ல இருக்கு. ஆக, மேல சொன்ன கூற்றுக்கு இது முரண்பாடா இருக்கு. கூடவே, மொழியின் விழுமியத்தில் ஒரு நடைமுறையும் இருக்கு. அது என்ன??

உலகளாவிய ஒப்பந்தங்கள் போடும் போது, அந்த ஒரு குறிப்பிட்ட மொழியிலதான் ஒப்பந்தத்தை வரையறுப்பாங்களாம்! காரணம் என்ன?? ஒன்னைச் சொன்னா, சொன்னதுதான்! அதை வேற பொருள்கொண்டு புரிதலுக்கான இடமே இல்லையாம். It is very sensitive with no ambiguity. அப்படிப்பட்ட மொழியா? அது எது?? ஃபிரெஞ்ச்!!!


========================================

Blackmail! தமிங்கிலத்துல ப்ளேக்மெயில்னும் சொல்றோம். அதென்ன இந்த ப்ளேக்மெயில்?? ஒருவரைப் பற்றிய மறைபொருள் ஒன்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதை வெளியிட்டு, விழுமியக்கொலை(character assasination) நிகழ்த்தி விடுவேன் என அச்சுறுத்துவது. அல்லது, செய்த குற்றமிகு செயலை வெளியிட்டுச் சட்டத்தின் முன்னால் நிறுத்தி விடுவேன் என மிரட்டுவது.

சரி, அப்படியான் ஆங்கிலத்துல இருந்து தமிழுக்கு கருப்பு அஞ்சல்னு மொழியாக்கம் செய்யலாமா? அபத்தமாத் தெரியுதே? மொழியாக்கம் செய்யும் போது, எதையும் சொல்லுக்கு சொல்னு செய்தா, அது அபத்தமாத்தான் முடியும். ஆகவே, இடம், பொருள், ஏவல் மற்றும் மரபு தெரிஞ்சி மொழியாக்கணும் செய்யணும்.

சரி, இந்த சொல்லுக்கான இடம், பொருள், ஏவல் பத்தி நாம பேசவேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா, இது வெகுவாப் புழக்கத்துல இருக்கிற சொல்தான்! மரபு??

Blackmailங்ற இச்சொல், இசுகாட்லாந்து நாட்டுக்கு உரிய சொல். mail அப்படின்னா, அவங்க மொழியில, வரி, கையூட்டு அல்லது குறியாப்பு என்று பொருள். ஒன்றைப் பெறுவதற்கான மாற்றுப் பொருள். ஆகவே, நாம இதை எதோ அஞ்சல்னு நினைக்கப்படாது பாருங்க.

இப்படியாக, இசுகாட்லாந்து நாட்டுல, தொழில் நிமித்தமாகவும், அன்றாடப் பிழைப்பு நிமித்தமாகவும் அமைதி வேண்டி, அங்கிருந்த அடாவடிப்பேர்வழிகள் கையூட்டு, அதாவது அச்சுறுத்திப் பணம் பறிச்சாங்க.

அப்படிப் பணம் பறிக்கும் போது, தம்வசம் இருந்த கால்நடைகளைக் கொடுத்தாங்க. அவைகள் பொதுவா கறுப்பு வண்ணத்துல இருந்ததால, கறுப்புக் கையூட்டுன்னு சொல்றது வாடிக்கை ஆச்சு, அதான் இந்த Blackmail! அதுவே, தன்வசம் இருந்த வெள்ளியைக் கையூட்டாத் தரும்போது வெண்மைக் கையூட்டு, அதாவது whitemailனும் சொல்ல ஆரம்பிச்சாங்க.

ஆகவே, இச்சொல்லை மொழியாக்கம் செய்யும் போது இப்படியான மரபுகளையும் தெரிஞ்சி வெச்சி, மொழியாக்கம் செய்யுறது மிக அவசியம். அதெல்லாஞ்செரி, இதுக்கு இணையான தமிழ்ச் சொல்? அவன், அவளோட நிர்வாணப்படத்தை வெச்சே, அவளை சூட்சுமகந்தம் செய்யுறான். திருடினதை வெளில சொல்லிடுவேன்னு சொல்லிச் சொல்லியே சூட்சுமகந்தம் செய்ததுல, அவன் பைத்தியமாவே ஆயிட்டான்.


========================================

லாபியிங்(lobbying): இந்தத் தமிங்கிலச் சொல் என்னா சொல்லுது? அவன் செஞ்ச லாபியில, இவனோட நியாயமெல்லாம் செத்துப் போச்சு. இப்படிப் பேசிப் புழங்குறதைக் கேட்டும், படிச்சும் இருப்பீங்க.

மேலை நாடுகள்ல, சட்ட முன் வரைவுகள் ஓட்டெடுப்புல வெல்றதுக்கான, தனக்கு ஏதுவான சரிக்கட்டுதல் வேலைகளை எங்க செய்வாங்க? ஓட்டெடுப்புத் துவங்குறதுக்கு முன்னாடி, அரங்க முன்றல், முற்றத்துல சக உறுப்பினர்கள்கிட்டச் செய்வாங்க. இந்த இடத்துல(lobby) செய்யுற காரியமே, பெயராகு பெயரா மாறவும் செய்தது.

அதாவது, சரிக்கட்டுதல்ங்ற வினையாகு பெயர்தான், முற்றப்படுத்துதல்ங்ற பெயராகுபெயர்ல புழக்கத்துக்கு வந்திடுச்சு. தமிழ்ல, வினையாகு பெயர்லயே, அதாவது, சரிக்கட்டுதல்ன்னே புழங்கலாம்; கையாள்றதுக்கு வாட்டமாவும் இருக்குதல்ல?!


========================================

அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கு!

4/07/2010

பள்ளயம் 04/07/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

----------------------------

அமெரிக்காவுல பொருளாதார நிலைமை முன்னேறின மாதிரி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கு. அது நிதர்சனமா? அல்லது மாயத் தோற்றமான்னு தெரியலை! நான் இருக்கும் சார்லட் மற்றும் அண்டி இருக்குற பகுதியில வேலையற்றோர் எண்ணிக்கை உயர்ந்து கிட்டத்தட்ட 12% ஆகியிருக்காம். இதுல வேற, வேலையற்றோர் நல உதவி காலாவதி ஆகிப் போச்சுதாம் நிறையப் பேருக்கு.

பங்குச் சந்தை நிலவரம் பொருளாதாரததைப் பிரதிபலிக்கும் குறியீட்டுமானியா? இந்தியாவுல பண வீக்கம், இங்க அமெரிக்க வெள்ளியோட மதிப்போ கீழ்வரம்... ஒன்னும் புரியலை போங்க!

----------------------------

நாம அடிக்கடி போறது வர்றது எல்லாமே U.S.Airwaysலதானுங்க. நெம்ப நாளாவே அது குத்துசுரும், குலைவுசுருமாத்தான் இழுத்திட்டு இருக்கு. பொசுக்குன்னு பொழிஞ்சு போயிட்டேன்னு மஞ்சக் கடுதாசி குடுத்தான்... போச்சு, என்னோட பேர்ல இருக்குற இலட்சக்கணக்கான மைலுக கோவிந்தா ஆயிடும்... அப்பப்ப இது நல்லபடியா இருக்கோணுமின்னு நினைச்சுக்கிறது உண்டு.

U.S.Airwaysம் United Airlinesம் ஒன்னுகூடறதுக்கு மறுபடியும் பேச்சுவார்த்தை நடக்காம். யெப்பா, சாமி... கொஞ்சம் ஒன்னுகூடுங்க... நிறைய வேலை வாய்ப்புகளை உண்டாக்குங்க... ஒன்னுகூடுறது உங்களுக்கும் நல்லது... உங்களுக்கு வேலை பாக்குறவுங்களுக்கும் நல்லது... எனக்கும் நல்லது!

----------------------------

சீன அரசாங்கம், அந்த நாட்டு தொலைக்காட்சி, வானொலிகள்ல ஆங்கிலப் பதங்களையும் சுருக்காங்களையும் பாவிக்கத் தடை விதிச்சு இருக்காம். அங்க செயல்பட்டுட்டு இருக்குற தமிழ் வானொலி மற்றும் இன்னபிற ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். ஏம்ப்பா, சீனாவுலயே தமிழ் மொழியில ஆங்கிலக் கலப்பு இல்லன்னு ஆகுறப்ப, தமிழ்நாட்டுல? இஃகிஃகி!!

----------------------------

மக்களே, வர்ற 04/11 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு ச்சட்டனூகா, டென்னசியில என்ன? பதிவர் சந்திப்புதான்! இஃகிஃகி!! அதனால நேஷ்வில், கூடவே அலபாமா ப்ரம்மிங்காம் பக்கத்துல இருக்குற மக்கள் எல்லாம் வந்து கலந்துக்குங்கப்பு... இடம்: Marriott Residence Inn, 215 Chestnut Street, Chattanooga, TN. மேலதிகத் தகவலுக்கு எனக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டுங்க!!

----------------------------



----------------------------
(எழுத்து)அறிவுள்ளவன் எழுத்தாளன்!
அறிவும் திறமும் கொண்டவன் படைப்பாளன்!!
அறிவுடன் கூடிய திறமும், ஆளுமையும் கொண்டவன் முன்னோடி!
அறிவு, திறம், அறமுடன் கூடிய ஆளுமையும் கொண்டவன் தலைவன்!!


இது யார் சொன்னது? உடனே, பெரிய அளவுல யோசிச்சு இருப்பீங்களே? அரிஸ்டாட்டில், சேக்சுபியர் அளவுக்கு... இப்படி யாராவது பெரிய தலையச் சொன்னா நம்புவாங்க... நானே சொந்தமா சிந்திச்சு சொன்னதுன்னா, நம்பவா போறாங்க?! இஃகி!

3/28/2010

பள்ளயம் 03/29/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

===============================

ஏன்?
எதற்கு??
யோசனையெதுவுமின்றி
ஓயாமல் பாவிக்கிறோம்
இவ்விரண்டையும்!
இவ்விரண்டுக்குமான வேறுபாட்டை
என்றேனும் கண்டு கொண்டதுண்டா??
ஏன்?
எதற்கு??

ஆம்; இவ்விரண்டு வினவுச் சொற்களும் இடம் மாறிப் புழங்குகிற ஒரு நிகழ்வு சர்வ சாதாரணமாக நிகழ்வதுதான் நமது அன்றாட வாழ்க்கையில. ‘ஏன்’ (why)எனும் சொல், காரணத்தை அறிய பாவிக்கப்படுறது. ‘எதற்கு’ (for what)அல்லது ‘எதுக்கு’ எனும் சொல், நிமித்தம் அறிய அல்லது எதை ஒட்டி வினையாற்ற எனப் பொருள் தாங்கி வரக் கூடியது.

சக பதிவர்கள் பலர் இருக்கையில், பதிவரான உங்களை மட்டும் அவர் வினவும் போது நீவிர் கேட்க வேண்டிய வினா, ’ஏன் என்னை மட்டும் சாடுகிறாய்?’ என்பதுதான். அதை விடுத்து ’எதுக்கு என்னை மட்டும் டேமேஜ் செய்யுற’ எனக் கேட்பதில் பொருட்பிழை உள்ளது.

ஒருவர் மற்றவரோடு இணைந்து பணியாற்றும் போது, அல்லது எதை ஒட்டி வினா விடுக்கப்படுகிறது என அறியும் பொருட்டுப் பாவிக்கப்பட வேண்டியது, ‘எதுக்கு வரச் சொன்னீங்க? சொல்லுங்க செய்யுறேன்!’.

===============================

திருவள்ளுவரின் சூட்சுமக் குறள்கள்
அன்பளிப்புப் பிரதிகள் தவிர
மற்றன யாவும்
பத்திரமாய்க் கடை இருப்பில்!
அவையே
திருவள்ளுவரின் கள்ளத்தனக் குறள்கள் எனும்
நாமதேயம் சூடவும்
பறந்தன பஞ்சாய் நாலாபுறமும்!!

எதிர்மறை என்றதும்,
விட்டில்ப் பூச்சிகளாய் போய்விழும் காலம் மாறுவதெப்போ?
நல்லதே நினைத்து உயர்மறை நாடுவதெப்போ??

===============================

இரு சொல் அலங்காரம், இரு அடிகளுக்குமான ஒரு பொதுச் சொல். இதற்கான விடைகளைக் கண்டு பிடியுங்களேன்.

ஆலிழை பழுப்பதேன்?
இராவழி நடப்பதேன்??

எருக்கிலை பழுப்பதேன்?
எருமைக்கன்று சாவதேன்?

அச்சாணி வண்டி ஓடுவதேன்?
மச்சான் உறவாடுவதேன்?

பஞ்சாமிர்தம் மணப்பதேன்?
பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்?

பற்களெல்லாம் தெரிவதேன்?

பொற்கொல்லர் தட்டுவதேன்?

===============================

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்!

===============================

மாசற்ற மனித சக்தி



3/10/2010

பள்ளயம் 03/10/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.


=======================

இன்றைக்கு நாம போசுடன்(Boston) நகருக்குப் பயணமுங்க! அதை முன்னிட்டு, போசுடனில் பதிவர் சந்திப்பு அப்படின்னு ஒரு அறிவிப்பு போடலாம்னு இருந்தேன். மக்கள், கடுப்பாகிக் காந்தலாகிக் கிளர்ந்து எழுந்துடுவாங்கன்னுதான் போடலை! இஃகிஃகி!! நீங்க யாராவது அங்கிருந்தா ஒரு மடல் அனுப்புங்க இராசா! முடிஞ்சா சந்திப்போம்!!

=======================

பேனையும் பெருமாள் ஆக்குவாய்ங்க இந்த ஊடகத்துக்காரங்க. Toyota எவ்வளவு நல்ல நிறுவனம்? அந்தலை சிந்தலை ஆக்குறாங்களே?? சீருந்துல போனாங்களாம், வேகமுடுக்கியானது அகப்பட்டுச் சிக்கி மேற்கொண்டு வேலை செய்யலையாம். உடனே காவல்துறைக்கு அலைபேசில அழைச்சு பேசினாங்களாம். இருந்தும் ஒன்னுமே செய்ய முடியலையாம்!

அதனால வண்டி பெருவேகமெடுத்துப் போயி மோதிடுச்சாம்! உயிர்ப்பலி வேற? கேட்கவே பரிதாபமாத்தான் இருக்கு. ஆனா நாம கேக்குற கேள்வி ரெண்டே ரெண்டுதாங்க!!

உடனே வண்டியோட எந்திரந்த்தை அணைக்க முடியாதா? அணைக்கச் சொல்லிச் சொல்லக் கூடாதா?? கூடவே, வேகமாற்றிய சுழிநிலைக்கு(neutral) கொண்டு வரக் கூடாதா?? பெருவேகம் எடுத்து மைல் கணக்குல போறதுக்கு ஏம்ப்பா விட்டீங்க??

அந்த நிறுவனம் இருந்துட்டுப் போகட்டுமய்யா! இன்னும் கொஞ்சம் பேர் வேலைய எதுவும் இல்லாம அலையணுமா, என்ன??




===========================

தமிழ்ல இராமன், இரவி, உருசியா முதலான சொற்களுக்கு ஏன், அந்த, அ, இ, உ இதுகள்ல எதோ ஒரு எழுத்தைப் பாவிக்கிறோம்னு கேட்டு இருந்தாங்க மக்கள். தமிழ்ல மட்டும் அல்லங்க, ஆங்கிலத்திலயும் Wrong, Wright, Whole இந்த மாதிரியான் சொற்களுக்கு முன்னாடி ஒலிப்பில்லாத எழுத்துகள் இருக்கத்தான் செய்யுது.

வேற்று மொழிச் சொற்கள், ஒரு சொல்லில் இருந்து இதை வேறுபடுத்துக் கூறுதல், அல்லது வழமையான ஒலிப்பில் இருந்து மாறுபட்டுச் சொல்வதுன்னு பல காரணங்கள் இருக்கலாம். மரபைப் பின்பற்றுவதென்பது எங்கும் இருக்குற ஒன்னுதான். தொல்காப்பிய விதி எண் தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க மக்கா!

===========================

இந்திய நயாகரா அதிரப்பள்ளி











2/15/2010

பள்ளயம் 02/15/2010


வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

=======================

ஃபாண்டு (Fondue)

நம்ம மூத்த பதிவர் சீமாச்சு, “எங்கூட வாங்க ஐயா, ஒரு விருந்துக்குப் போய்ட்டு வரலாம். ச்சும்மா தயங்காதீங்க, அவங்களும் உங்க வாசகர்தான்!!” அப்படின்னாரு.

சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இருக்குறவனுக்கு, இதுக்கு மேலான அழைப்பு வேற என்னவா இருக்க முடியும்ங்க? உடனே, “அய்ய, நம்ம வாசகர்னு வேற சொல்லிட்டீங்க, அப்ப வந்திட வேண்டியதுதான்!”, அப்படின்னு ஒரு டுமீல்ப் பேச்சோட ஒத்துகிட்டோம் நாமளும்!

போன இடத்துல, என்னா வரவேற்பு? என்னா கவனிப்பு?? சீமாச்சு அண்ணே, நீங்க மயிலாடுதுறைல மட்டும் அல்ல, அகில உலகத்துலயும் பிரபலம்தாங்க! (அப்பாட, ஒருவழியா அடுத்த விருந்துக்கு இப்பவே துண்டைப் போட்டாச்சு!)

போயிருந்த இடத்துல நாம அப்படியே சுத்தியும் முத்தியும் பராக் பார்த்துட்டு இருந்தம்பாருங்க, திடீல்னு ஃபாண்டு, ஃபாண்டுன்னு பேசிகிட்டு இருந்தாங்க.

அக்கா...ங்”ன்னு சொல்ற நம்ம பாண்டுதான் நமக்கு தெரியும்! அதென்னங்க இது புதுசா ஃபாண்டு அப்படின்னு நமக்கு தெரியாததைப் போட்டு உடைச்சோம் (இல்லேன்னா மட்டும், நமக்குத் தெரியாதுங்ற விசயம் அவங்களுக்குத் தெரியாதாக்கும்?)

ஃபாண்டு அப்படின்னா, திராட்சை இரசம், அதாங்க, இந்த வைனோட Cheeseங்ற ஒருவிதமான கொழுப்புக் கட்டியைக் கலந்து, சூடான திரவமாக்கி, அதுல ரொட்டித் துண்டைத் தொட்டுச் சாப்புடுறதுங்க.

அதேபோல, நாம போன இடத்துல நமக்குக் கண்ல காண்பிச்சது, சாக்லேட் ஃபாண்டுங்க. அதாவது சாக்லெட் நிறைய எடுத்து எண்ணெயில கலந்து சூடாக்கி, அதை ஒரு மின்னூற்றுல ஊற்றாக்கி, ஊற்றுல பொங்கப் பொங்க, அதுல நறுக்கி வெச்ச பழங்களைத் தொட்டு சாப்புடுறதுங்க.

(இது வலையில சுட்டதுங்க!)


(இதுலதான் நாங்க தொட்டு, சுட்டுத் தின்னதுங்க)


மேல பார்த்த படங்க எல்லாம், நான் என்னோட அலைபேசில பதிஞ்சுகிட்டதுங்க. நல்ல சாப்பாடு மட்டுமல்லங்க; அண்ணன் சீமாச்சு பல சுவாரசியத் தகவல்களையும் கொடுத்தாரு. அதையெல்லாம் வெளியில சொல்லி, நான் சொந்த செலவுல சூன்யம் வெச்சுகுவனா என்ன? ஆம்மா, மறுபடியும் மறுபடியும், பல விருந்துகளுக்கு போக வேண்டி இருக்கல்ல?! இஃகிஃகி!!

=======================


இதைக் கொஞ்சம் பாருங்க மக்களே!

நன்றி: ராம் குமார்

=======================

நம்ம நண்பர் ஒருத்தர், அவர் தம்பிக்கு பெண் பார்க்குறாரு, பார்க்குறாரு... பார்த்துட்டே இருக்காருங்க. “என்னடா அப்புனு, உந்தம்பிக்கு இன்னும் ஒன்னும் அமைஞ்சபாடு இல்லையா?”ன்னு கேட்டேன்.

அவர் சொல்றாரு, “அடப் போடா, கல்யாணத் தரகர்கிட்டப் போனா, அங்க 170 பையனுகளோட குறிப்புக்கு, வெறும் 60 பொண்ணுகளோட குறிப்புகதான் இருக்குது. இதுக்கும், அவர்தான் இருக்குற தரகர்லயெல்லாம் வெச்சிப் பெரிய தரகரு!” அப்படின்னு சொல்றாருங்க.

பெண்களோட எண்ணிக்கை குறைவுங்றது தெரியும். அதுக்காக, இவ்வளவு குறைவாவாங்க இருக்குது நம்ம ஊர்ல?!

=======================

வந்தாள்
பெருக்கினாள்
கழுவினாள்
துடைத்தாள்
துவைத்தாள்
எல்லாமும் தூய்மையாச்சு!
அவன் மனம் மட்டும்?
குப்பையாச்சு!

12/24/2009

பள்ளயம் - டிச 24, 2009


எமக்குப் பிரத்தியேகமாகக் கையளிக்கப்பட்ட ஒட்டு வில்லை. இனிதான் நாம உலா வர்ற வண்டியில ஒட்டணும். எல்லாம் கிட்ட இருக்குற கழகப் புள்ளிகளோட கைங்கர்யந்தான்! இஃகி!!

==================================


இது நம்ம டோண்டு ஐயா அவர்களுக்கான சிறப்புப் படம். ஆமாங்க, படத்துல இருக்குற இவர்தான் நாம எழுதின சிறுகதைத் தொகுப்புல வந்த பேச்சியோட வழித் தோன்றல்!

==================================



சார்லட்ல, எனக்கு அருகண்மையில இருக்குற சகபதிவர் கல்விமான் சீமாச்சு, ஒரு பள்ளிக்கூடத்தை மேம்படுத்துறதுக்கு ஐந்து கோடின்னு ஒரு இலக்கை வெச்சி, செயல்பட்டுட்டு இருக்காரு. முழுக்க முழுக்க சமுதாய மேன்மைக்காக மட்டுமே நடத்தப்படுகிற காரியம் அது.

இங்க வந்தா, அன்பரும் சகபதிவருமான ஆருரன் அவர்களும் அதையேதான் செய்துட்டு இருக்காரு. அவங்க பள்ளியப் பார்த்தே ஆகணும்னு அடம் புடிச்சிப் பார்த்துட்டு வந்தேன். வாழ்க பதிவர்கள்! வளர்க அவர்கள்தம் தொண்டு!!

==================================

நேற்றைக்கு வீட்டுக்கு தெரிஞ்சவங்க வந்திட்டு இருக்காங்கன்னு சொன்னவுடனே, எத்தனை பேர் வர்றாங்கன்னு கேட்டோம். அவரும், அவரோட பொண்டாட்டி ரெண்டு பேரும் வர்றாங்கன்னு பதில் வந்துச்சு. நாமளும் மேலதிகமா மூனு இருக்கைகளை எடுத்துப் போட்டோம்.

“இப்ப எதுக்கு இங்க எச்சா ஒரு இருக்கையப் போட்டு இருக்கீங்க?”

”அவரும், அவர் பொண்டாட்டி ரெண்டு பேர்னு சொன்னீங்களே?”

”அடக் கடவுளே! அவரும் அவர் பொண்டாட்டியுமா மொத்தம் ரெண்டு பேர் வர்றாங்கன்னு சொன்னேன்! அவர் ஒன்ன வெச்சிட்டே படாத பாடு பட்டுட்டு இருக்காரு பாவம், நீங்க வேற!”


“இஃகி!”

==================================

படிச்சவங்ககூட, தான் பிறந்த தேதிய சர்வ சாதரணமா சொல்றாய்ங்க ஊர்ல... பிறந்த தேதி என்பது பேணிப் பாதுக்காக்க வேண்டிய தகவல்னு யாருக்கும் தெரியுறதே இல்ல. கணினி யுகத்துல இது அதிமுக்கியமான தகவல்யா.... அல்லாங்காட்டி, உங்களைப் பற்றின தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கு!

அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!

==================================


அன்பர்களுக்கு, நத்தார் தின நல்வாழ்த்துகள்!

12/05/2009

பள்ளயம் - 12/05/2009

போன வாரத்துல, நான் வேலை முசுவுல அல்லாடிட்டு இருந்தம் பாருங்க. அப்ப, சித்த வலையுலகத்துல என்னதான் நடக்குது, ஒரு எட்டுப் பார்க்கலாம்ன்னு ஒன்னு ரெண்டு வலைப்பூக்களுக்கு போனதுதான் தாமுசம், நம்ம பொட்டிக்கு வினை வந்திடுச்சுங்க. பெரும்பாடு சிறுபாடு ஆயிப்போச்சு.

காரணம் என்ன? நம்ம மக்கள் கண்ட கண்ட வில்லைகளை தன்னோட வலைப்பூவுல சொருகிக்கிறாங்க... அதுக மத்தவங்க பொட்டியப் போட்டுத் தள்ளிடுது. மக்க, சொன்னாலுங் கேக்குறது கிடையாது. நான் எப்பவும் கூகுள் வாசிப்பு நிரல்லதான் வாசிக்கிறது. அன்னைக்கு ஏமாந்து நேரடியாப் பூக்களுக்கு வந்துட்டன். அது என்னோட தப்புத்தான்! மக்களே, என்னோட வலைப்பூவைப் பாருங்க.... ஒகே ஒகட்டிதா உன்னாதி! இஃகிஃகி!!

ஏதாவது கிருமி நிரலிகள் இருந்தாக்க, முதல்ல அதுகளைக் கண்டு பிடிச்சு வேரோட அழிச்சிடுங்க. சமீபத்துல எனக்குத் தலைவலி கொடுத்த கிருமிக்குப் பேரு ohkcsysguard.exe. அதுக கணனியில எங்க குடி கொண்டு இருக்குன்னு கண்டுபிடிப்பது எப்படின்னு தெரிஞ்சிக்க இந்த சுட்டியைச் சொடுக்குங்க http://www.wikihow.com/Alter-Startup-Programs-in-Windows-XP மக்களே தயவு செய்து கண்ட கண்ட வில்லைகளைப் (widgets) பாவிக்காமத் தவிர்க்கப் பாருங்க!


========================================

இன்னைக்கு எங்க எழில் தமிழ்ப் பண்பாட்டுக் குழுவோட தமிழ் வகுப்புல தமிழ் சொல்லிக் கொடுத்திட்டு இருக்கும் போது, சிறுவர்களுக்கான கையேட்டுல “ஏ” எழுத்துக்கு உரிய சொற்களா, ஏணி, ஏணை அப்படின்னு போட்டு இருந்துச்சு. உடனே ஒரு குழந்தை கேட்டுச்சு, ஏணைன்னா என்னா? க்கும்! குழுவுல இருந்த பெரியவங்க யாருக்குமே அதற்கான அர்த்தம் தெரியலையே?! உங்களுக்குத் தெரியுமாங்க??

========================================



வட நாட்டுல, பறவைகளை எல்லாம் எப்படிப் புடிப்பாங்கன்னு தெரியுமாங்க? நண்பர் சுப்ரா இன்னைக்குதான் விசயத்தைப் பகிர்ந்துகிட்டாரு. நீளக் கயித்து நடுவுல ஒரு குச்சியில சிறுசா எதனா தின்பண்டத்தை வெச்சி நட்டுக் குத்தலாக்(vertcal) கட்டி, க்யித்தோட இரு முனையையும் மரத்துலயோ, நட்டு வச்ச கம்புலயோ கட்டி வெச்சிடுவாங்களாம்.

இந்தப் பறவையானது அந்தக் குச்சி மேல போயி உக்காரவும், பாரந்தாங்காமக் குச்சியானது மறுபக்கம் சாயவும் பறவை தலைகீழாத் தொங்க ஆரம்பிக்குமாம். குச்சியில இருந்து காலை எடுத்தா கீழ விழுந்துடுவோம்னு அதுக்கு பயம். கூடவே டபக்னு தலைகீழாத் தொங்க ஆரம்பிச்ச அதிர்ச்சியில, அதுக்கு சிந்தனையும் நின்னுடுமாம். அப்புறம் என்ன, குருவிக்காரன் போயி ஒரு சிரமும் இல்லாம அதைப்ப் புடிச்சி ஆட்டையப் போட வேண்டியதுதான்!

ஆக, உங்கள் சிந்தனைய உயிரோட்டமா வெச்சுக்க வேண்டியது முக்கியம் மக்களே முக்கியம். பிரபல எழுத்தாளர் சொல்றாரு, அவர் சொல்றாரு, இவர் சொல்றாருன்னு எல்லாம் நாம அவங்களோட பசப்புல மயங்கிடக் கூடாது பாருங்க. வாசிங்க, ஆனா அதைப் பல தரப்பட்ட கோணத்துலயும் அலசுங்க. தப்போ, சரியோ, சரியான முறையில விமர்சனம் செய்யுங்க.

பழமைபேசி அவ்வளவு எழுதி இருக்கான், இவ்வளவு எழுதி இருக்கான்னு ஒரு பெரியவர் சிலாகிக்கறார்; அதைக் கேட்ட இன்னொருத்தர், அதுக்கென்ன எருமை கூடத்தான் தினமும் நிறைய சாணி போடுதுன்னு விமர்சனம் செய்யுறார். அதையும் ஏத்துக்குற பக்குவத்தை நாமதான் உண்டாக்கிக்கணும். நிறைவாப் பேசுறதை ஏத்துக்குற மனசு, மாறாப் பேசுறதையும் ஏத்துக்கத்தான வேணும்?! இஃகிஃகி!


========================================

வட அமெரிக்க தமிழ் மக்களே, நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன். அல்லாட்டி, நிச்சயமா டிசம்பர்-12 அன்னைக்கு, நியூஜெர்சி தமிழ் விழா விருந்துல கலந்துகிட்டு இருந்திருப்பேன். உள்ளூர்ல இருக்குற நீங்க முடிஞ்சாப் போயிக் கலந்துகுங்க.

We would appreciate if you could confirm your participation, and communicate by e- mail to natkuppuraj@yahoo.com or with any coordinators on or before Dec 9 .
Holiday party combined with our fund raising dinner for Thamizh Vizhaa 2010.

Date: December 12 th, 2009

Time: 4.30 p.m

Venue: Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

Event: CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

ஊர் மக்களே, நான் செவ்வாய்க் கிழமை(டிச-8) ஊருக்கு வர்றேன். மூனு வருசம் முன்னாடி வந்தேன். சிக்கன் குனியான்னு ஒரே களேபரம். இப்பவும் அதையே சொல்லி பயமுறுத்துறாங்களே? அவ்வ்வ்வ்.....


========================================

எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு!

10/29/2009

பள்ளயம், 10/30/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

---------------------------
”விகற்பம்! அப்படின்னா? சங்கற்பத்துக்கு எதிரானது!”

“யோவ், என்ன விளையாடுறியா? கற்பம் காணாதபடிக்குக் கபோதி ஆயிடுவே, ஆமா!”

இப்படியெல்லாம் கூட நீங்க வைவீங்களா இருக்கும்! கற்பம் அப்படின்னா இருப்பிடம், கர்ப்பம்ன்னா கருவாதல். அது சரி, எதுக்கும் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு உண்டான கதையப் பார்க்கலாம் வாங்க!

விகற்பம்ன்னா, சரியற்ற கருத்து, அனுமானம் கொள்வது. சங்கற்பம்ன்னா சரியான கருத்து, ஒத்த கருத்து, அனுமானம் கொள்வது. இங்க அமெரிக்காவுல இருக்குற இந்தியர்கள்ல, கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு விகற்பத்துல சங்கற்பமா இருக்காங்க. அது என்ன?

ஆமாங்க, இங்க தட்பவெப்ப நிலைய Fahrenheit அலகுல குறிப்பிடுவாங்க. அதே ஊர்ல Celsiusல சொல்றது வாடிக்கை. இந்தப் பின்னணியில, இங்க இருக்குற நம்மாட்கள்ட்ட போயி 70 Degree Fahrenheitக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு கேட்டுப் பாருங்க. முப்பதுல இருந்து முப்பத்தி இரண்டு இருக்கும்னு விடை உடனே வரும். ஆனா, அது தவறான விடை. அதுக்கு என்ன காரணம்?


ஒரு விகற்ப அனுமானந்தான் காரணம். இங்க சராசரியா 70 டிகிரி பாரன்ஹீட்ல வாழ்றோம். ஊர்ல, 30-32 டிகிரிங்றது சராசரி. ஆக, 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு முப்பது, முப்பத்தி இரண்டு டிகிரி செல்சியசுன்னு ஒரு புரிதல். சரி, எந்த உதவியும் இல்லாம, 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

====================================

நம்ம ஊர்ல climateதான் எதுக்கும் பாவிக்கிறது. இங்க weather! இரண்டுக்கும் என்ன வேறுபாடு? காலநிலை(climate)ங்றது, ஒரு காலத்தை ஒட்டிய தட்பவெப்ப நிலையை இனியொரு காலத்துக்கு உண்டான தட்பவெப்ப நிலையோட ஒப்பிட்டுச் சொல்லக் கூடியது. உதாரணமா, the climate was totally different when I was going to school. நான் குட்டையில மீன் புடிச்சிட்டுச் சிட்டுக பின்னாடி திரிஞ்சப்ப இருந்த காலநிலையே வேற. அப்ப எல்லாம் கூதலுக்கு சின்னாத்தா கடையில வாங்கித் திங்கிற சூடான வடை உருசியே உருசி.

Weather, தட்பவெப்பநிலை அப்படீன்னா, இன்னைக்கு அல்லது குறுகிய காலத்துல இருக்குற நிலைப்பாட்டைச் சொல்றது. இன்னைக்கு தட்பம் இவ்வளவு, வெப்பம் இவ்வளவு அப்படின்னு. ஆமா, கோயமுத்தூர்ல இப்ப தட்பமா, வெப்பமா? நான் அடுத்த மாசம் ஊருக்கு வரலாமுன்னு இருக்கேன், அதான்! இஃகி!!
====================================

என்னடாப்பா நுரைநாட்டியம் எல்லாம் வலுவா இருக்குதாட்ட இருக்கூ? அவன் ஒரு நொரைநாட்டியம், அவம் பேசுறதெல்லாம் ஒரு பேச்சுன்னு?? இப்பிடி எல்லாம் பேசக் கேட்டு இருப்பீங்க. அதென்ன நொரை நாட்டியம்??

இஃகி, ஓடுற வாய்க்கால்ல பார்த்தீங்கன்னா சுழிகள்ல நுரை மேல நின்னுட்டு அங்குட்டு ஓடவும் இங்குட்டு ஓடவும்ன்னு தளுக்காட்டம் ஆடும். அதைப் போல, வீண் பண்ணாட்டுச் செய்துட்டு வாய்ச் சவடால் உட்டுகிட்டு இங்கயும் அங்கயும் ஆடிட்டுத் திரியறதுதானுங்க நொரைநாட்டியம்!

ஏ, யாரப்பா அது நொரைநாட்டியம் அங்க? தொரை, போயி வேலை வெட்டி இருந்தாச் செய்யுங்க போங்க! அதைவிட்டுப் போட்டு, யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!

10/04/2009

பள்ளயம் 10/04/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

---------------------------

நான் எப்படியும் தினம் ஒரு முறையாவது கூகுள் மடல் பேழைக்கு வர்றது உண்டு. வரும் போது, மின்னாடல்த் தெரிநிலையில, இருப்பைக் காண்பிச்சுக்க மாட்டேன்; மாறா உள்ளிரு(invisible)ப்பா இருக்குறதுதான் வழக்கம்! எப்பவாவது ஒருவாட்டி பச்சை வண்ணம் மிளிர விடுவேன். அப்படிதாங்க, நேற்றைக்கு ஒளிரவிட்ட மறு வினாடியே, ‘ப்ளுக்’னு மின்னாடல் பெட்டி மேலெழும்புச்சு!

“நீங்களும் கதிரும் சொந்தக்காரங்களா?”

“ஆமாங்க!”

“எப்படி சொந்தம்?”

“தூரத்து சொந்தம்!”

“அப்படின்னா?”

“அவர் ஈரோட்டுல இருக்காரு; நான், சார்லட், அமெரிக்கால இருக்கேன்!”


அவ்வளவுதான், ஆளே காணோம்! என்னங்யா இது? முன்பின் அறிமுகம் செய்துக்காம உள்ள வந்து கேள்வி கேட்பீங்க...அப்புறம் போயிடுவீங்க... குறைந்தபட்சம் வணக்கமாவது சொல்லிப் பழகுங்கய்யா!


---------------------------

அப்படித்தான் பாருங்க, போன வாரம் வாசிங்டன் போயிருந்தப்ப ஆசான், உயர்திரு. கொழந்தைவேல் இராமசாமி ஐயா அருமையான ஒரு பற்றியம் சொன்னாரு. பொதுவா, இது இந்தியர்களுக்கே உண்டான பழக்கந்தான்.

சக ஊழியர்கள்கிட்டவோ, உயரதிகாரிகள்கிட்டவோ ஒன்னை செய்யச் சொல்லும் போது, ஆங்கிலத்துல ‘Please'ங்ற பதத்தை நாம பாவிப்போம். Kindly do the needfulன்னுவோம். அந்த பதத்தைத் தட்டும் போதே, மனசுல தயவு கூர்வது மாதிரியான ஒரு பணிவு மனசுல தோணுதுதான். அதே நெனப்புல மடலையும் தட்டி வுடுறோம்.

ஆனா, மறுபக்கம் அவன் அதை எப்படி எடுத்துக்குறான்? அது அவனோட பதவியின் நிலையப் பொறுத்து மாறுபடுது. சக நிலையில் இருப்பவனோ, அல்லது கீழ இருக்குறவனோ ஆயிருந்தா பரவாயில்லை. அதே, ஒரு உயரதிகாரியா இருந்தா அதனோட தொனி மாறுபடும். அது உங்களுக்குத் தெரியுமா? உதாரணம்: Please approve my vacation!

தூக்கிவாரிப் போடுதுல்ல? நீங்க என்னதான் ‘please'னு பரிஞ்சி எழுதினாலும், அது அவனை, அதைச் செய்ங்ற தொனியிலதான் இருக்கு! It's more of a direct and demanding. Rather, say, "Will you please approve my vacation when you get a chance?".

”தயவு கூர்ந்து செய்யவும்!” இது நேரிடையா இருக்காம்; ஆகவே மக்கா, ”தங்களுக்கு கால அவகாசம் இருக்கும் போது தயவு கூர்ந்து இதைச் செய்ய முடியுமா?” அப்படீன்னு குழையத் தெரிஞ்சுக்குங்க!

நான் போயி, என்னோட சகாவான Quient Pieskyகிட்ட இதைப் பத்திப் பேசவும், அவன், yeah, we, buggers overused it in America; because of that, you got to work around! but you are alright!! அப்படீன்னான். இஃகிஃகி!!


---------------------------

காத்துல வெண்ணெய் எடுக்குற பய அவன்!
வெறுங் கையில மொழம் போடுற பய அவன்!
ஒன்னுக்கு ஊத்தி மீன் புடிக்கிற பய அவன்!
கோழி மொட்டுக்கு சுருக்கு வெக்கிற பய அவன்!
மொட்டத் தலைக்கு குடுமி வெக்கிற பய அவன்!
காத்துல காப்பி ஆத்துற பய அவன்!
எச்சிக் கையால காக்கா ஓட்டாத பய அவன!
பழசையெல்லாம் இடுகையாக்குற பய அவன்!
- - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - -

(மக்களே! எங்க, உங்களுக்கு தெரிஞ்சதை எடுத்து வுடுங்க பாக்கலாம்!)

---------------------------

ஆசானும் அண்ணனுமான, உயர்திரு நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள்கிட்ட இருந்து, நிறைய தெரிஞ்சிகிட்டேன். அதுகெல்லாம் பிரத்தியேக இடுகையா போடணும். அதுல ஒன்னை இன்னைக்குப் பார்க்கலாம். அவர் சொன்ன பின்னாடிதான், கனடாவுல நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

ஃபிரான்சிஸ் பெர்னாண்டஸ்னு ஒரு நண்பன், யார்க் பல்கலைக் கழகத்துல என்னோட படிச்சான், நெருங்கிய நண்பன், கோவக்காரன் அல்ல; அவன் கோவாக்காரன். நான் படிப்பை முடிச்ச கையோட அமெரிக்காவுக்குள்ள வந்துட்டேன். அவன், கனடிய நடுவண் அரசுக்கு வேலை பாக்கப் போயிட்டான். இன்னும் அங்கதான் வேலை!

வேலை பார்க்குற எடத்துல பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம். இவனுக்கு அலுவலகத்துகுள்ள நுழையும் போதெல்லாம் அடிக்கடி பிரத்தியேக சோதனை; ஆய்வு, இப்படியான சிரமங்கள். காரணத்தை ஆய்ஞ்சி பார்த்ததுல தெரிஞ்சது, அவனோட உடல் தோற்றமும் அடையாள அட்டையில இருக்குற பேரும் பொருந்திப் போகாததுதான் பிரச்சினைன்னு. அப்புறம், ஃபிரான்சிஸ் குமார் பெர்னாண்டஸ் ஆயிட்டான். இப்ப, எந்த பிரச்சினையும் வர்றதில்லையாம்!

ஆக, ஒருத்தனுக்கு பூர்வீக அடையாளம் முக்கியம் மக்கா! கூடவே, கடந்து வந்த வரலாறும் முக்கியம்!! அதைப் போயிச் சிதைக்கலாமா? சிதைக்கலாமா?? நாம், நாமாக இருக்கிற வரையிலும், நமது நமக்கே!

3/24/2009

பள்ளயம் 03/27/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய பதிவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

அமெரிக்காவில்:

பள்ளயத்துல ஒரு படைப்பு அமெரிக்காவைப் பத்தினதா எழுதுறது வழக்கம்! அதான், இன்னைக்கும்!! விசயம் என்னன்னா, ஊரே கதி, நாடே கதின்னு, இருக்குற சனங்களையெல்லாம் தேடித் தேடி, இந்தா புடிச்சுக்கோ, இந்தா புடிச்சுக்கோன்னு கடனட்டை(credit card)ய வலுவுல போயிக் குடுத்தது அந்தக் காலம்.

சொரிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சாக? வாங்குனதுல நெம்பப் பேரு திவால்க் கணக்குல போறாங்களாம். அதனால, நலிஞ்சவங்களா இருந்து, வாங்குன அட்டைய நிலுவை எதுவும் இல்லாமத் திருப்பித் தர்றவங்களுக்கு, இலவசமா $300 திருப்பித் தர்றாங்களாம் இப்ப!

நாட்டுப்புறத்தில்:

இன்னைக்கு கெரமாத்துப் படம் எதுவும் போடலை பாருங்க, அதான் கெரமத்துப் பாட்டு ரெண்டு உங்களுக்கோசரம்! இஃகி!

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

ரெட்டைச் சிலாக்கு
கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

மூக்குச் சிலாந்தி
மூக்குச் சிலாந்தி

நாக்குல வரணும்
நாக்குல வரணும்

ஐயப்பஞ் சோலை
ஐயப்பஞ் சோலை

ஆறுமுக தாளம்
ஆறுமுக தாளம்

ஏழுக்குக் கூழு
ஏழுக்குக் கூழு

எட்டுக்கு முட்டி
எட்டுக்கு முட்டி

ஒம்ப‌து க‌ம்ப‌ள‌ம்
ஒம்ப‌து க‌ம்ப‌ள‌ம்

ப‌த்துக்கு ப‌ழுப்பேன்
ப‌த்துக்கு ப‌ழ‌ம‌டி

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு
============================

ஈரிரிண்டைப் போட‌டா
இறுக்க‌ மாட்டைக் காட்ட‌டா

ப‌ருத்திக் கொட்டை வைய‌டா
முக்க‌ட்டு வாணிய‌ன் செக்க‌டா

செக்கும் செக்கும் சேந்தாட‌
வாணிய‌ன் வ‌ந்து வ‌ழ‌க்காட‌
வாணிச்சி வ‌ந்து கூத்தாட‌

நாலை வ‌ச்சி நாலு எடு
நார‌ய‌ணன் பேரெடு
பேரெடுத்தபின்ன‌ பிச்சையெடு

அஞ்சுவ‌ர‌ளி ப‌சு ம‌ஞ்ச‌ள்
அரைக்க‌ அரைக்க‌ப் ப‌த்தாது
ப‌த்தாத‌ம‌ஞ்ச‌ள் ப‌சு ம‌ஞ்ச‌ள்

ஆக்குருத்த‌லம் குருத்த‌ல‌ம்
அடுப்புத்த‌ண்ட‌ல‌ம் த‌ண்ட‌ல‌ம்
வேம்பு சுட்டா வெங்க‌ல‌ம்

ஏழுபுத்திர‌ச் ச‌காய‌ம்
எங்க‌புத்திர‌ச் ச‌காய‌ம்
மாட்டுப்புத்திர‌ச் ச‌காய‌ம்

எட்டும் பொட்டும்
எட‌க்க‌ண்ணு பொட்டை
வ‌லக்க‌ண்ணு ச‌ப்ப‌ட்டை

ஒம்போதுந‌ரி சித்திர‌த்தை
பேர‌ன் பொற‌ந்த‌து பெரிய‌க‌தை
பெத‌ப்ப‌ம்ப‌ட்டிப் பெரிய‌த்தை

ப‌த்துரா சித்திரா கோலாட்ட‌ம்
ப‌ங்குனி மாச‌ங் கொண்டாட்ட‌ம்
ஆடி வெள்ளி வ‌ந்துச்சுன்னா
அம்ம‌னுக்க‌ல்ல‌ கொண்டாட்ட‌ம்.

திண்ணையில்:

ஒரு பட்டணத்திலே வியாபாரஞ் செய்யும் ஓர் வாணியன் வீட்டில், சில கன்னக்கோல்காரர்கள் கன்னம் போட்டு வீடு சோதிக்கையில் ஒரு திருடன் கையில் ஒரு முடிப்பு அகப்பட, அந்த நேரத்திலே ஆள்வரவு சப்தங்கண்டு எல்லோரும் முகமிட்டவாக்கிலே ஓடிப் போனார்கள்.

முடிப்பகட்டப்பட்ட திருடன் அவ்வூருக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கோயிலில் மறைவிடமாக இருந்து அந்த முடிப்பை அவிழ்த்துப் பார்த்தான். அதில் முத்துகளாயிருந்தன. இது எத்தனை முத்தோவென்று எண்ணிப் பார்க்கையில், ஒரு திருடன் வந்து இதில் எனக்குப் பங்குண்டு என்றான்.

நல்லதென்று இரண்டாய்ப் பகருகையில் ஒரு முத்து மீந்தது. அதை எனக்குனக்கு என்று இருவரும் வாதித்துக் கொண்டிருக்கையில், மற்றொருவன் வந்து எனக்கும் பங்குண்டு என்றான். நல்லதென்று மூன்றாய்ப் பகருகையில் ஒரு முத்து மீந்தது.

இப்படியாக ஆறு திருடர்கள் வாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு முத்து மீந்தது. ஏழாவது திருடனுக்கும் சேர்த்து ஏழு பங்கிடச் சரியாயிருந்தன அந்த முடிப்பிலிருந்த முத்துகள். அப்படியானால், இருந்த முத்துகள் எத்தனை?

3/17/2009

பள்ளயம் 03/17/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய பதிவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

அமெரிக்காவில்:

பள்ளயத்துல ஒரு படைப்பு அமெரிக்காவைப் பத்தினதா எழுதுறது வழக்கம்! அதான், இன்னைக்கும்!! இஃகிஃகி!!! விசயம் என்னன்னா, சில மாகாண அரசுகள்கிட்ட போதுமான நிதி இருப்பு இல்லீங்களாம். ஆக, வருமான வரிப் பிடித்தத்துல இருந்து வர வேண்டி திரும்பு தொகை இப்போதைக்கு வராதாமுங்க. எப்ப வருமோ, என்னவோ போங்க?!

அசைவுகள்

தமிழ் தொனமையான மொழி, செம்மொழி! அதனால, எந்த ஒரு செய்கை, உணர்வு, எதுவானாலும் பிறழ்வும் திரிபும் ஐயமும் குழப்பமும் இல்லாம அப்படியே கொண்டு போய்ச் சேர்க்க வல்லதுங்றது நமக்கெல்லாம் நிறைய நேரங்கள்ல தெரியறது இல்ல. இந்த நிலைமை வந்ததுக்கான காரணங்களை அலசுறதுல, நமக்கொன்னும் கிடைக்கப் போறது கிடையாது! இஃகிஃகி!! அதை விடுங்க, இந்த அசைவுகளை எப்படியெல்லாம் தமிழ் சொல்லுதுன்னு பாக்கலாம் வாங்க.

மேலுக்கும் கீழுக்கும்(vertical) ஏற்படுற அசைவு குலுங்கல். அதையே நாம, "டேய், ஒரு குலுக்கு குலுக்குடா"ன்னும் சொல்லுறோம். இங்கயும் அங்கயும் (horizontal)அசையுறதச் சொல்லுறது அலுங்கல். ஊர் வழில சொல்லக் கேட்டு இருப்பீங்க, "டேய், அலுங்காமக் குலுங்காமக் கொண்டு வரணும்"ன்னு. வளைஞ்சு வளைஞ்சு(circular) அசையுறத சொல்லுறோம், கலங்கல்ன்னு. சாஞ்ச வாக்குல(slant) அசையுறதச் சொல்லுறது மலங்கல்ன்னு. சோள மூட்டை மலங்கிடுச்சுங்றோம். ஒட்டு மொத்தமா நாலாபுறமும் உள்நோக்கி அசைஞ்சி, கசங்கிப் போறதைச் (crush) சொல்லுறது, நலங்கல்ன்னு. அதையே நலுங்குதல்ன்னும் சொல்லுறது. மேற்புறமா நடக்குற அசைவுக்கு சொல்லுறது துலங்கல். அப்படி நடக்குறதால ஏற்படுற அந்த மினுமினுப்பைப் பாத்து சொல்லுறது, ”டேய், புளி போட்டுத் தேச்சதுல சால் நல்லாத் துலங்கிடுச்சு”ன்னு. இப்படி நிறைய அசைவுகள் இருக்கு, அதை இனியொரு நாளைக்குப் பாக்கலாமே? இஃகிஃகி!!

(நன்றி: சித்தகிரி கண்காட்சி)

மேல இருக்குற படத்துல இருக்குற பெரியவர், சாணை பிடிச்சிட்டு இருக்காரு. அந்த சாணைச் சக்கரத்தைப் பத்தி நிறைய எழுத வேண்டி இருக்கு. அதையும் இனியொரு நாளைக்கு வெச்சிகிடலாமுங்க. வெளியூர்ல இருக்கோம், கால அவகாசம் இல்லை, அதான்! இஃகிஃகி!!

நெல்-எள் கணக்கு

கணக்கு குடுத்தா, நாளமேல் உங்கபக்கமே வரமாட்டோம்ன்னு சொல்லுறாங்க. குடுக்காட்டி, என்ன இன்னைக்கு கணக்கு எதுவும் இல்லையான்னு கேக்குறாங்க? அதான், இந்தப் பதிவுல ஒரு சின்னக் கணக்கு. இஃகிஃகி!!

எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல் அளமானால், ஒரு ஆள்பிரமாணம் வெட்டினவனுக்கு எத்தனை நெல்?


8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்

சாண் 8 கொண்டது ஆள் பிரமாணமென்றறிந்து, எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல்லு அ(8). ஆக, மனிதர்மட்டமாவது எண்சாணுயரம். இதை வைத்து 8 சாண் உயர் மனிதனுக்கு எவ்வளவு நெல் என்று கணக்கிடுங்களேன்.இஃகிஃகி!!

எதற்கும் நல்லது கெட்டது கிடையாது!

3/03/2009

பள்ளயம் 03/03/2009

பள்ளையமாம் பள்ளையம்,
பலர் பார்க்கும் பள்ளையம்!
பணிவோடு பழமைபேசி,
பதிவாக்கும் பள்ளையம்!!

பழந்தமிழ்ப் பெருமைபேசும்,
பாரெல்லாம் போய்ச் சேரும்!
பண்பாடு பலவும் பேசும்,
ப‌ண்ணாய்ப் பாடியும் வ‌ரும்!!

பள்ளையமாம் பள்ளையம்,
பலர் பார்க்கும் பள்ளையம்!
பணிவோடு பழமைபேசி,
பதிவாக்கும் பள்ளையம்!!

============================================

நன்றி: சித்தகிரி கண்காட்சி

அட மணி என்னாச்சு? எங்க ஊட்டுல கெடியாரம் கோளாறாயி நின்னு போச்சு. அவன் மண்டையில எதோ கோளாறாட்ட இருக்கூ. இப்படிக் கோளாறு பல இடங்கள்ல புழக்கத்துல வருது. இதுக்கு நடுவுல, ஒருத்தர் வந்து உங்க தோள்ல கையப் போட்டு, உங்களை அந்தப் பக்கமா, "வா, நான் உனக்கு ஒரு கோளாறு சொல்றேன்!"ன்னும் கூட்டிட்டுப் போறதையும் பாத்து இருப்பீங்க. அதோட நின்னுதா இந்தக் கோளாறு? நம்ம குடுகுடுப்பையார் அப்பப்ப மண்டையில கோளாறாயி, "பழமைபேசி வலைஞர்களுக்குள்ள ஒன்னுக்கு ஒன்னு கோள் மூட்டுறான்"ன்னும் சொல்லிட்டுத் திரிவாரு பாருங்க. இஃகிஃகி! அது என்ன இந்த கோளு, கோளாறு எல்லாம்?

கோள் அப்பிடின்னாங்க, ஒரு நிலையில இருந்து விலகிப் போறது. புதன் ஒரு கோள். அந்த மாதிரி, எது ஒன்னும் தன்னோட நிலையில இருந்து விலகி, முறைபிறழ்ந்து போச்சுன்னா, அது கோளாறு ஆகிப் போச்சுன்னு அர்த்தம். வண்டியில‌ கோளாறுன்னா, வண்டியோட அக்கு ஒன்னு செய்ய‌ வேண்டிய வேலைல இருந்து விலகிடுச்சுன்னு அர்த்தம்.

"நான் அந்தப் பதிவர் குழுவுக்குள்ள கலகமூட்டுறதுக்கு ஒரு கோளாறு சொல்லுறேன் வா!"ன்னு சொன்னா, முறையா இருக்குற குழுமத்துக்குள்ள பிறழ்வு செய்ய யோசனை சொல்லுறேன்னு அர்த்தம். கோளாறு சொல்றேன்னா, எதோ அவரு தெரியாத சூத்திரஞ் சொல்ல வர்றாருங்ற அர்த்தத்துல, அது புழக்கத்துல இருக்கு. இஃகிஃகி! ஆனா பழமொழி சொல்லுது, "கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே!" அந்தமாதிரி கோளாறு செய்ற குணம், கோளாறுத்தனம்.

ஆனாப் பாருங்க, கருணைக் கொலைங்ற மாதிரி, இந்தக் கோளாறு சில நேரங்கள்ல நல்ல கோளாறாவும் இருக்கும். நிலையில இருக்குற கெட்டவிங்களைப் பிரிச்சி விடுற கோளாறு நல்லதுதானுங்களே?! மேல இருக்குற படத்துல பாருங்க, குறிப்புச் சொல்லுற பெரியவரு, அந்தம்மாவிகளுக்கு நல்ல பலன்களோட, கெட்டது நடக்காம இருக்க, கிரகங்களோட தாக்கத்தை எப்படிப் பிறழ வைக்கிலாம்ன்னும் கோளாறு சொல்லிட்டு இருக்காரு. இஃகிஃகி!!

============================================

ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:

அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
என்றாயு மேழிர‌ண்டா மென்!

இந்த‌ சூத்திர‌த்தை வெச்சே, அவ‌ன் வாழ்நாள் பூராவும் க‌ற்பூர‌ யாவார‌ம் செய்துட்டு இருந்தானாம். இதுதாங்க அதனோட அர்த்தம். தமிழ் எண்களை நீங்களே கத்துகிடுங்க. இஃகிஃகி!!

கொஞ்சுகின்ற கிளிக்கொப்பாகிய சொல்லையுடைவனே, ௩௫ கழஞ்சு கற்பூரம் ஒரு ஆழாக்கென்றும், அதுவே ஒரு குதிர(நாழி)மென்றும் சொல்லப்படும். நாழி ஒன்றுக்கு உத்தமத் தண்ணீர் நிறை(எடை) ௰௨ என்றும், நாழியொன்றுக்கு மத்திமத் தண்ணீர் நிறை ௰௬ என்றும், அதமத் தண்ணீர் எடை ௰௪ என்றுஞ் சொல்லப்படும்.

அதாவது தண்ணியோட எடைக்கு ஒப்பிட்டு யாவாரஞ் செய்யுறதுங்க. ச்சும்மா, உங்களுக்கு பழங்காலத்துல இப்பிடியெல்லாம் பாட்டுக மூலம் வியாபார யுக்திகளை கையாண்டு இருக்காங்கன்னு சொல்லத்தான் இது. அது சரீ, இனி மெழுகுவர்த்தி யாவாரத்தைப் பத்திக் கீழ பாருங்க!!

============================================

தமிழ்ப் படங்கள்ல‌ நடிக்கிற அழகம்மா ஒருத்தங்க, அமெரிக்கத் தொழிலதிபர் ஒருத்தரை எதேச்சையாப் பாக்கவும், பேசவும், அது கல்யாணத்துல போயி நின்னுச்சாம். அவிங்களும் அமெரிக்கா வந்து, சரி என்ன தொழில் செய்யுறாரு நம்ம வீட்டுக்காரருன்னு ஒரு நாள் போயிப் பாப்பமின்னு, போயிப் பாத்தா, அவரு தேவாலயத்துக்கு முன்னாடி மெழுகுவர்த்தி வித்துகிட்டு இருந்தாராம். ஐயோ, பாவம்! அவங்களும் அதுக்கப்புறம் மெழுகுவர்த்தி வாங்கலையோ, மெழுகுவர்த்தின்னு கூவினாங்களோ, என்னவோ??

============================================

அமெரிக்காவுல வந்துங்க, 37 பேர்த்துல ஒருத்தர் சிறைச்சாலையில இருக்காங்களாமுங்க. அதாவது, மொத்தம் 7.3மில்லியன், 73 இலட்சம் பேருங்க உள்ள இருக்குறது. உலக அளவுல உள்ள இருக்குறவங்கள்ல இது 25%. ஆனா, அமெரிக்காவோட மக்கள் தொகையோ, உலக மக்கள் தொகையில வெறும் 5% மட்டுமே. குற்றங்கள்னு பார்த்தாக்க, கண்டிப்பா வெளிநாடுகள்ல அமெரிக்காவை விட அதிகமாத்தான் இருக்கும். சரி ஒரு பேச்சுக்கு, ஒரே அளவுன்னே வெச்சிகிட்டாலும், அமெரிக்கா வெறும் 5% தானே இருக்கணும். ஆக, வெளிநாடுகள்ல உள்ள இருக்க வேண்டியவங்க எல்லாம் வெளியில இருக்காங்கன்னு தெரிய வருது!! இஃகிஃகி!!

அரண்மனை வாசப்படி அதிகமாக வழுக்கும்!

2/24/2009

பள்ளயம் 02/24/2009


வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய பதிவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

அமெரிக்காவில்:

அமெரிக்க செய்திகள் ஒன்றிரண்டை முதலில் பார்ப்போம். மைக்ரோசாஃப்ட்( Microsoft) நிறுவனம் வேலைக் குறைப்பினால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு, தவறுதலாக விடுப்புத் தொகையில் அதிகமாகக் கொடுத்து விட்டதாகவும், அதைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருப்பது பெருமளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிறுவனம், துவங்கிய நாளில் இருந்து, கிட்டத்தட்ட முப்பது வருடங்களில் இப்போதுதான் முதன் முறையாக வேலைக் குறைப்பின் காரணமாய், பணியாளர்களை விடுவித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில், அமெரிக்காவின் முதுகெலும்பு என்றும், உலகத் தொழிற்பேட்டை என்றும் வர்ணிக்கப்பட்ட டெட்ராய்ட் நகரை மையமாகக் கொண்ட நிறுவனங்களான, GM, Chrysler ஆகியவற்றை சீன நிறுவனம் வாங்க, பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது என்பது, பரபரப்பாக பேசப்படுகிறது. அதே வேளையில், இந்த நிறுவனங்கள் அரசின் உதவித் தொகையை அதிகளவில் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அந்த முயற்சி தோல்வியுறும் நிலையில், விற்பனை செய்வது அல்லது நலிவுற்றதாக அறிவிப்பது என்கிற நிலையில் இருப்பதாக, அதிகாரப்பூர்வமற்ற‌ உள்ளிடைத் தகவல்கள் கூறுகிறது.

எழுது தமிழ், பேச்சுத் தமிழ், தமிலீசு, தமிங்கலம்

தமிலீசு, தமிங்கிலத்துக்கான விளக்கத்தை அன்பர் ஒருவரும், நண்பர்கள் ஏன் நீங்கள் கொச்சைத் தமிழில் எழுதுகிறீர்கள் என்றும் வினவியதின் பொருட்டு, நாம் அவற்றைப் பற்றி அலசுகிறோம் அன்பர்களே. எழுது தமிழ் என்பது, எழுதுவதிலும், மேடைப் பேச்சுகளிலும் வெகுவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முறையான உரையாடல், ஆவணங்கள், கட்டுரைகள், விண்ணப்பங்கள் மற்றும் மேடைப் பேச்சுகளில் இம்முறை பாவிக்கப்பட்டு வருகிறது. இதுவே, ஒருவர் அடுத்தவர் மனதை நெருங்கிச் செல்ல வேண்டுமாயின், இம்முறை உகந்ததாக இருப்பதில்லை. ஆயினும், இதுவே தமிழ்மணம் என்பதை மறுக்க இயலாது.

அடுத்தபடியாக, பேச்சுத் தமிழ் அல்லது வட்டாரத் தமிழ். இது, வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும். ஆனால், மக்களை எளிதில் சென்றடைய முடிகிறது என்பது எம் கருத்து. பதிவுலகில், பெரும்பாலும் இம்முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எம்மைப் பொறுத்தமட்டில், எமக்கு எழுதுவதற்கும் வாகாக உள்ளபடியினால், இச்சாயலில் சரளமாக எழுத முடிகிறது. எனினும் தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன்.

தமிலீசு முறை என்பது, நுட்பம் குறித்த ஒன்று. கணினி உலகத்தில், உருமாற்றி இல்லாத காலங்களிலும், தமிழ் விசைப் பலகை இல்லாத காலங்களிலும், ஆங்கில எழுத்துகளால் தமிழில் தகவல்ப் பரிமாற்றம் செய்ய வேண்டி உள்ளது. தமிழை, ஆங்கில மொழி எழுத்தில் பாவிப்பதையே தமிலீசு என வழக்கத்தில் குறிப்பிடுகிறோம். கூடுமானவரை, இதைத் தவிர்ப்பதும் நன்று என்ற மனப்பான்மையிலேயே பெருமளவில் நம்மவர்கள் இருக்கிறார்கள்.

இறுதியாக வருவது, தமிங்கிலம். தமிலீசுக்கு நேர்மாறானது. தமிழ் எழுத்துகளால், பரங்கியர் மொழியான ஆங்கிலத்தைப் பாவிப்பது. இன்றைய காலகட்டத்தில், தமிழுக்கு நேர்ந்த ஊறு இது என்றால் மிகையாகாது. எங்கும் இம்முறை வியாபித்திருப்பதை நாம் காணலாம். இம்முறை பற்றி நம் எண்ணங்களை மேலும் எழுதி, அனாமதேய அன்பர்களின் வாழ்த்தைப் பெறுவதிலும், அவர்களுக்கு நன்றி சொல்வதிலும் இருந்து விலகியிருப்போமே?! அஃகஃகா!!

நன்றி: சித்தகிரி கண்காட்சி


சூதனம்

மேலே உள்ள படத்தில், எருது ஒன்றுக்கு குளம்புத்தகடு (இலாடம்) பொருத்துவதைப் பார்க்கலாம். பொருத்துபவர், சூதன். தச்சு வேலைகளைச் செய்பவரையும், சூதன் என்றே தமிழில் சொல்வது. சூதனைப் போல், நெளிவு சுழிவுடன், நுணுக்கமாக இருந்து கொள் என்பதே, பேச்சு வழக்கில், சூதனமாக என்பது மருவி, "சூதானமாக இருங்க அப்பு!" என்று ஆனது. படத்தில் இருப்பவற்றைப் பற்றி, மேலும் அதிகமாகக் கூற வேண்டி உள்ளது. கால அவகாசமின்மையால், அவற்றை எதிர்வரும் காலங்களில் காண்போம் மக்களே!!!

படியாதவன் அடி நில்லாது!

2/16/2009

பள்ளயம் 02/16/2009



அயர்லாந்துல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வேதாகம விற்பன்னர் ராபர்ட் கால்டுவெல், தமிழ் மொழியப் படிக்க ஆரம்பிச்சாராம். கொஞ்சம் கொஞ்சமா தமிழுக்கு ஆட்பட்ட அவரு, தமிழ்ல தமிழையே ஆராய்ச்சி செய்யுற அளவுக்கு தமிழ் மேல பற்றுக் கொண்டவரா ஆயிட்டாராமுங்க. அவர்தான், இந்த உலகத்துலயே முதன் முதலா செம்மொழின்னும், நம்ம தமிழ் அந்த செம்மொழின்னு உலகுக்கு அறிவிச்சவராம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++

கொஞ்ச நாட்களுக்கு முன்னால, நாட்டுக்கட்டை, திமிசுக்கட்டைன்னு பல கட்டைகளப் பத்தி பேசிட்டு இருந்தோம். நீங்க, இந்த படத்துல பாக்குறது நாட்டுக்கட்டை. நாட்டுக்கட்டையில இருந்து, தாம்புக் கயிறால மாடுகளை இணையாப் பூட்டி, உழவன் செய்யுற வேலை தாம்பு ஓட்டுற வேலை. அதாவது, கொள், நெல், பயிறு இதுகளை எல்லாம் பயிருல இருந்து பிரிச்செடுக்குற வேலை. களத்துல அறுவடை செஞ்ச கொள்ளுச் செடி, கடலைச் செடி இதுகளைப் போட்டு, அதுகளுக்கு மேல கால்நடைகளை நடக்க வெச்சி, அதை செடியில இருந்து விழுத்துற வேலை.

++++++++++++++++++++++++++++++++++++++++++

ஊர்ல ஐப்பசி மாசம் முச்சூடும் நல்லா அடை மழை பெய்யும், இடைவெளியே இல்லாம. அப்பப்ப கிடைக்குற இடைவெளில ஊரு சனம் ஓடியாடி செய்ய வேண்டிய வேலைகளச் செய்வாங்க. அப்ப சொல்லுற பழமைதான், "டே இராசூ, இன்னைக்கி வெட்டாப்பு உட்டுருக்கு. மளார்ன்னு போயி, தெக்காலூர்ல இருக்குற சின்ன பாப்பாத்தியக் கூட்டிட்டு வந்துர்றா!". ஓயாம நடக்குற ஒன்னுல கிடைக்குற இடைவேளைதாங்க, இந்த வெட்டாப்பு.

++++++++++++++++++++++++++++++++++++++++++

திரைப்படத்துறைல நம்பூர் ஆளுக நெறயப் பேர் வந்து, நம்பூர்ப் பழமயிகளச் சொல்லி பிரபலியப் படுத்துறாங்க. அது நெம்ப நல்லா, சனங்ககிட்டயும் போயிச் சேருது. இராசக்காபாளையத்து சுந்தரத்தண்ணன், சத்தியராசண்ணன், மணிவண்ணன் ஐயாவிங்கன்னு நெறயப் பேர்த்தச் சொல்லிட்டே போகுலாம். அவிங்க சித்த விளக்கமுஞ் சொன்னாங்கன்னா இன்னும் நெம்ப நல்லா இருக்கும். கவுண்டமணி ஐயாவிங்க பிரபிலியப் படுத்துனதுதான், ங்கொக்க மக்கா!

அது ஒன்னுமில்லீங்க கண்ணூ, நம்பூர்ப் பக்கமெல்லாம் ஒருத்தனுக்கு காசு பணம் இருக்குதோ இல்லியோ, தாய்மாமனிருந்தாப் போதும். அதுக்கப்பறம் பாடு பழமை எல்லாம், மாமம்மாரு பாத்துக்குவாங்க, அதான்! இஃகிஃகி!! அப்பிடி இருக்கையில கண்ணூ, அக்காமார் புள்ளயிக, தங்கச்சிமார் புள்ளயிக எல்லாம், மாமம்பின்னாடி காட்டுல மேட்டுல ஓடித் திரிஞ்சு வெளையாடுறதும், பெராக்குப் பாக்குறதும், கண்டொளி வெளையாடுறதும்ன்னு நாலும் நடக்கும்... அப்பப்ப போயி, தோப்புல மாமம் புண்ணியத்துல நாலு சொப்புக் கள்ளுகோடக் குடிப்போம். இஃகிஃகி!!

அப்ப, அங்கங்க இருக்குற பெரிய அம்மினி புள்ளயிகள மாமம்மாரு கூப்புடறது, "ங்கக்கா மக்கா, எங்கடா அல்லாரும்? வாங்க சித்த!"ன்னு. அதாவது, எங்க அக்காவோட மக்காள்ங்றது, ங்கக்கா மக்க(ள்) ஆயி, ங்கொக்கா மக்கன்னும் ஆயிப்போச்சு! ங்கொக்கா மக்கா, பழமயிக பேசுனதுல நேரம் போனதே தெரீல, போயிப் பாடு பழமயப் பாக்கோனும். நீங்களுமா, அப்ப போயிப் பாருங்க சித்த!!

++++++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு!

2/09/2009

பள்ளயம் 02/09/2009

மகா சிவராத்திரி சமீபத்துல, எங்க ஊர், சலவநாயக்கன் பட்டிப் புதூர் சுப்ரமணி அண்ணன், ஆறுக்குட்டி அண்ணனவிக தோட்டத்துக் களத்து மேட்டுல பள்ளயம் போட்டுப் படுகளம் நடக்குமுங்க. தோட்டங் காட்டுல விளைஞ்ச மொச்சை, கொண்டக்கடலை, அவரை, பயறு, கொள்ளுன்னு பலதும் போட்டு வேக வெச்சி, அதுகளை தோட்டங் காட்டைச் சுத்தியுமு இருக்குற நாட்றாயன், பொடாரப்பன், கருப்பராயங் கோயில்ல படப்பு வெச்சி, அவிசாயங் குடுத்துக் கடைசில களத்து மேட்டுல படுகளம் நடக்கும். சாயங்காலம் ஆரம்பிச்சிதுன்னா, வெடியக் காலம் நாலு மணி, அஞ்சு மணி வரைக்கும் இந்த நிகழ்ச்சி நடக்குமுங்க. ஊரே கூடி வேடிக்கை பாக்கும். அண்ணனவிக அந்தியூர்க்கார ஊட்டுப் பசங்கன்னு சொல்லி, எங்க அண்ணந் தம்பி மூனு பேர்த்தையும் நெம்ப நல்லாப் பாத்துகிடுவாங்க. பல தானியங்களையும் கலக்கி வேக வெச்சிப் படப்பு போடுறாங்க பாருங்க, அதைச் சொல்லுறதுங்க பள்ளயம்முன்னு. அந்த ஞாவகத்துல தானுங்க, அவியலுக்கும் கிச்சடிக்குமு தொணையா நம்ம பள்ளயம். இஃகிஃகி!

++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு வாரம் பத்து நாளா, இழு பறியா இருந்த, பொருளாதார வளர்ச்சித் தூண்டுநிதி ($838 billion economic stimulus bill)க்கான மசோதா சித்த நேரத்துக்கு முன்னாடிதேன், ஒரே ஒரு ஓட்டு எச்சா வாங்கி, அமெரிக்க மேல்சபையில செயிச்சு இப்ப அதிபரோட கைச்சாத்துக்கு முன்னேறி இருக்குங்க. நெம்ப நல்ல விசயமுங்க இது. இதனால, வேலை வாய்ப்பு பெருகும், வரிகெல்லாம் குறையும், பங்குச் சந்தையில போட்ட காசு கொஞ்சம் தெப்புத் தேறும்ன்னு எல்லாரும் நெம்ப எதிர்பார்க்குறாங்க.

++++++++++++++++++++++++++++++++++++++++++


கபலை ஓட்டுறதுன்னும், சால் ஓட்டுறதுன்னுஞ் சொல்லுறது இதானுங்க. சின்ன வயசுல, எங்க தோட்டத்துல எங்க அப்பாரு ஓட்டுறதை அப்பிடி நின்னு வேடிக்கை பாப்பனுங்க. காளைக, கிணத்து மேட்டுல, கீழ இருந்து மேல வரும்போது மெதுவா வரும்ங்க, சால்ல தண்ணிய மோந்த பொறகு, ய்ஃகெய்ன்னு சொன்னதுதான் தாமுசம், காளைக ரெண்டும் சல்லுன்னு கீழ போகும்ங்க. அப்ப, ஓட்டுறவிங்க, வடத்து(கயிறு) மேல ச்சங்குன்னு எட்டி லாவகமா உக்காருவாங்க பாருங்க, அது அசத்தலா இருக்கும். அவ்ளோ பெரிய சாலு கெணத்துக்குள்ள இருந்து மேல வார்றதப் பாக்க, அப்பிடியொரு வேடிக்கையா இருக்கும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++

(அன்பால‌)அடக்கி ஆளணும்; இல்ல,
(அன்புக்கு)அடங்கிப் போகணும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++

அப்புறம், இந்த நீக்குப்போக்கு, போக்குநீக்கு, சாக்குப் போக்குன்னெல்லாம் ஊர்ல சொல்லிப் பேசுறதக் கேட்டு இருப்பீங்க. அதுகளக் கொஞ்சம் பாக்குலாமுங்க இன்னைக்கி. அவன் பலே ஆளு, நாலுந்த் தெரிஞ்சவன், முக்கியமா நீக்குப்போக்கு தெரிஞ்சவன்னு சொல்லக் கேட்டு இருப்பீங்க. அதாவது, மத்தவங்ககிட்ட இருக்குற குத்தம்(குற்றம்) கொறைகளைக் கண்டுக்கிடாம, சகசமாப் பழகுறவன்ங்கிறது அர்த்தமுங்க. கெட்டவற்றை மனதில் வைத்துக் கொள்ளாமல் நீக்கும் போக்கு கொண்டவன்ங்றதுங்க.

சரி, அப்ப போக்குநீக்குன்னா? எதோ ஒன்னு வெளியில போறமாதர இருந்தா அது போக்குநீக்கு(make a drain)ங்க. மேல கபலை ஓட்டுறதுல சால் இருக்கு பாருங்க, அதைச் செய்யும் போது, தண்ணி சிந்தாம ஓட்டை ஒடசல் இல்லாமச் செய்ன்னு சொல்லும் போது, வழக்கத்துல சொல்லுறது, "டேய்! சால்ல எந்த விதமான போக்குநீக்கில்லாம இருக்கோனும். இல்லாட்டி, உங்கப்பங்கிட்டச் சொல்ல வேண்டி வரும்!!"ன்னு.

சாக்குப்போக்குங்றது உங்களுக்கு சுலுவுல தெரிஞ்சி இருக்கும். எதானாச்சி சும்மா, ஒப்புக்குச் சப்பான(excuse) காரணத்தைச் சொல்றது. சாக்குங்றதே ஒரு போலியான செய்கை! அதுலவேற, மகாப் போலியான சாக்குன்னு சொல்லுறதுதாங்க நொண்டிச் சாக்கு. இது எப்பிடி இருக்குன்னு பாருங்க?! இஃகிஃகி!

நொண்டிக் குதிரைக்கு, சறுக்கினது சாக்கு!

2/08/2009

திருப்பூர் அவியல், சிங்கப்பூர் கிச்சடிக்குத் துணையாக, அமெரிக்கப்பூர் பள்ளையம்!

வணக்கம்! திருப்பூர்ல இருந்து அவியல், சிங்கப்பூர்ல இருந்து கிச்சடின்னு அட்டகாசமான, அருமையான பதிவுகள் வந்திட்டு இருக்கு. அவிங்க அளவுக்கு நம்மால தர முடியாட்டாலும், முடிஞ்ச அளவுக்கு அவிங்களுக்குத் துணையா நாமளும் அமெரிக்கப்பூர் பள்ளையம் எழுதினா என்னன்னு தோணிச்சி. ஏன்டா, கழகங்கள்லதான் இணை, துணைன்னு போட்டு நொங்கு எடுக்குறாங்க, உனக்கு இங்க‌ பதிவு போடுறதுலயுமான்னு நீங்க கேக்குறது புரியுது அண்ணாச்சி! இஃகிஃகி!!

நாங்கெல்லாம் திருமூத்திமலைத் தண்ணியில வளந்தவிக அண்ணாச்சி! அதான், இதுலயும் துணையா இருக்கலாமுன்னு, இஃகிஃகி!! இந்த நேரத்துல உடுமலைக்கு திருமூர்த்தி மலைத் தண்ணி கொண்டாந்த மகராசருக, வித்தியாசாகர் ஐயா, பெருந்தகை சாதிக்பாட்சா அவிங்களுக்கும், எங்க ஊர் மாதிரியான பட்டி தொட்டிகளுக்குத் திருமூத்திமலைத் தண்ணி கொண்டாந்த அண்ணன் ப. குழந்தைவேலு அவிகளையும் நன்றியோட நினைவு கூர்ந்துகிடுறேன். அரசியல்வாதிகளைக் கும்முறம்ல்ல? அப்பப்ப குளிர்விக்கவும் செய்யணும்... அப்பத்தான் அவிங்க இன்னும் நாலு நல்லது செய்வாக... இஃகி!

பள்ளையம்


அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்!