6/08/2008

வெட்டி வேலைங்றது இதான்!!!

ஒன்பதாம் வகுப்பு பாடத்துல வந்த நாடோடிப்பாட்டு

முள்ளு முனையிலே மூன்று
குளம் வெட்டினேன்
ரெண்டு கும் பாழு
ஒண்ணு தன்ணியே இல்லை

தண்ணியில்லாக் குளத்துக்கு
மண்ணு வெட்ட மூணுபேரு
ரெண்டு பேரு நொண்டி
ஒருத்தனுக்குக் கையே இல்லை

கையில்லாத கொவன்
செய்தது மூணு பானை
ரெண்டு பானை பச்சை
ஒண்ணு வேகவே இல்லை

வேகாத பானைக்கும்
போட்டரிசி மூணரிசி
ரெண்டரிசி நறுக்கு
ஒண்ணு வேகவே இல்லை

வேகாத சோற்றுக்கு
விருந்துண்ண மூணுபேரு
ரெண்டு பேரு பட்டினி
ஒருத்தன் உண்ணவே இல்லை

உண்ணா கொத்ன்
கட்டினது மூணு கோயில்
ரெண்டு கோயில் பாழு
ஒண்ணு சாமியே இல்லை

சாமியில்லாக் கோயிலுக்கு
ஆடவந்தார் மூணுபேரு
ரெண்டுபேரு மொட்டை
ஒருத்திக்கு மயிரே இல்ல

அவங்க:என்ன? கோழி முட்டைக்கு சவரம் பண்ணிட்டு இருக்கீங்களா??
நாம:இதோ, வந்துட்டேன்....போயித்தான ஆவனும்?!

2 comments:

Mahesh said...

இந்தப் பாட்டைத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டுருந்தேன்... என் மனைவிக்குப் படிச்சுக் காட்ட.... எனக்கு பாதிதான் மனனம் ஆயிருந்துது... இன்னிக்கு கெடச்சுருச்சு.... ரொம்ப நன்றி...

அப்பறம்... வழக்கம் போல....

அது... 'மூன்று குலம்'ன்னு வருமா 'மூணு குளம்'ன்னு வருமா?

பழமைபேசி said...

//Mahesh said...
இந்தப் பாட்டைத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டுருந்தேன்... என் மனைவிக்குப் படிச்சுக் காட்ட.... எனக்கு பாதிதான் மனனம் ஆயிருந்துது... இன்னிக்கு கெடச்சுருச்சு.... ரொம்ப நன்றி...

அப்பறம்... வழக்கம் போல....

அது... 'மூன்று குலம்'ன்னு வருமா 'மூணு குளம்'ன்னு வருமா?
//

வழக்கம் போல நொம்ப நன்றிங்க..... அது ஒரு எழுத்துப்பிழை! ஒடைய குளம், புக்குளம், செங்குளம்....... ஆமா, நம்ம ஊர்ல ஏழு குளங்க இருக்கே.... உங்களுக்கு அதுகளோட பேரு தெரியுமா? எனக்கு முன்ன தெரியும்.... இப்ப மறந்து போச்சு....