பழமைபேசி லட்சுமிநாயக்கன் பாளையத்துல பத்தாம் வகுப்பு படிக்கும் போது,தமிழாசிரியர் கோவிந்தராஜ் வாத்தியார் நிறய விசயங்கள் சொல்லுவார். அவர் சொன்ன பழமொழி நெஞ்சுல இருக்கு. ஆனா வரல.சரின்னு என்னோட சோட்டாலி சுல்தான்பேட்டை பழனிசாமிக்கு போன் பண்ணிக் கேட்டேன்.நண்பன் மறக்கலை. அவரு சொன்னதை, பழனிச்சாமி 'கடகட'ன்னு சொன்னான்:
"பொம்பள சிரிச்சா போச்சு
ஆம்பள அழுதா போச்சு
அப்பளம் நனஞ்சா போச்சு
புகையில விரிச்சா போச்சு
வெத்தலை காஞ்சா போச்சு
சோறு குழைஞ்சா போச்சு
மோரு புளிச்சா போச்சு
வலை கிழிஞ்சா போச்சு
அடுப்பு அவிஞ்சா போச்சு"
அப்படீன்னான். மனுசி வர்றத பாத்த நானு, 'பொண்டாட்டி கிட்ட மொறச்சா போச்சு'னு சொல்லிட்டு, அப்புறமா பேசறேன்னு சொல்லி போன வெச்சிட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment