11/10/2008

எலி வ‌ளையானாலும் த‌னி வ‌ளை! புலிக‌ளுக்கு?


புலிகள் இருந்த‌
இடத்துல‌
பூனைகளா?
பெருசாச்
சொல்லுறாங்க‌
தேசியம்!!
ஆனா மறந்துட்டாங்க‌
அது நம்பநாட்டு
தேசிய விலங்கு!!!

தேடித்தான்
அழிப்பாங்க‌
புலிக‌ளை!
பட்டாப்
போடுவாங்க‌
காடுக‌ளை!!
அங்க‌தான்
க‌ட்டுவாங்க‌
வீடுக‌ளை!!!

எலிவ‌ளை
யானாலும்
த‌னிவ‌ளை!
அதுகேட்டாக்க‌
பிடிப‌டுது
குர‌ல்வ‌ளை!!
நாமெல்லாம்
பாக்க‌த்த‌ட்டுது
இன‌த்த‌ளை!!!


வ‌ண‌க்க‌ம்! நாங்க‌ சிறு வ‌ய‌சுல‌ இருக்கும் போது, எங்க‌ ஊர்ப் பக்க‌த்துல‌ இருக்கும் கோட‌ந்தூர் மாரியாத்தா கோயிலுக்குப் போவோம். ம‌லைக‌ளுக்கு உள்ள‌ ந‌ட‌ந்து போக‌ணும். ஒத்தை அடிப் பாதைதான். ப‌ய‌மா இருக்கும். அங்க‌ புலி ந‌ட‌மாட்ட‌ம் நிறைய‌ இருக்கும்னு சொல்வாங்க. கோயிலுக்கும், மத்த மத்த காரியத்துக்காகவும் கூட்ட‌ம் நெற‌ய‌ வ‌ர‌ ஆர‌ம்பிச்ச‌து, மெதுவா அதுகெல்லாம் ஆனை ம‌லைக் காட்டுக்கு ஓடிப் போய்ட்ட‌தாச் சொல்லுவாங்க‌. கிட்ட‌டியில‌ கூட‌, ஆனை ம‌லையில‌ அதுக‌ள‌ப் பாதுகாக்க‌ கூடுத‌ல் க‌வ‌ன‌ஞ் செலுத்த நடவடிக்கை எடுக்குறதாப் ப‌டிச்ச‌ ஞாப‌க‌ம். கோய‌ம்ப‌த்தூர் மாவ‌ட்ட‌த்துல‌ இன்னும் நிற‌ய‌ புலிக‌ள், ச‌த்திய‌ம‌ங்க‌ல‌ம், ஆனைம‌லை, ப‌க்க‌த்துல‌ முதும‌லைல‌ எல்லாம் இருக்குற‌தாச் சொல்லுறாங்க‌.

இந்தியா விடுத‌லை ஆன‌ப்ப‌ 40000 புலிக‌ இருந்த‌தாம். இப்ப‌ வெறும் 1500 தான் இருக்காம். அதுக‌ளை அழிப்பாங்க‌. புலிக‌ளே இல்லையாச்சேன்னு, அதுக‌ இருந்த இடங்களையும் அழிப்பாங்க‌. அப்புற‌ம் இன‌மும் போயி, இட‌ங்க‌ளும் போயி, அடுத்த‌ த‌லைமுறைக்கு எதுவும் இல்லாம‌த்தான் போகும். ஆக‌வே புலிக‌ளை வேட்டையாடுற‌தை நிறுத்த‌ணும், அதுக‌ பாதுகாக்க‌ப்ப‌ட‌ வேணும்.


"மக்கள் இன்றைக்கு வரை புலியை ஒரு பயங்கரமான விலங்கு என்று சொல்லி வருகிறார்கள். உயிரியல் ரீதியான ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அதை `bio-indicator' என்று குறிப்பிடுகிறார்கள். புலி இருக்கும் காட்டை ஒரு வளமான காடு என்று தைரியமாக அறிவித்துவிடலாம். ஆனால் அந்த ஆனைமலைக்கும், முதுமலைக்கும் இப்போது ஒரு ஆபத்து வந்திருக்கிறது. இது வேட்டைக்காரர்களால் வரும் ஆபத்துமட்டுமல்ல, வேறு சிலராலும் ஆபத்துகள் வருகின்றன. வனவிலங்குகளை மையமாக வைத்து உலக அளவில் பெரிய கள்ளச்சந்தையே செயல்பட்டு வருகிறது."

மேல‌திக‌த் த‌க‌வ‌ல்க‌ளுக்கு!இருக்குற‌த‌ விட்டுபிட்டு, ஐயோன்னா வ‌ருமா? ஆத்தான்னா வ‌ருமா??

19 comments:

நசரேயன் said...

ஊருக்கு ஒரு புலி போதும்னு எல்லாம் இடத்தை காலி பண்ணிட்டு போய்ட்டுத்துங்க

நசரேயன் said...

/*
புலிக‌ளை வேட்டையாடுற‌தை நிறுத்த‌ணும், அதுக‌ பாதுகாக்க‌ப்ப‌ட‌ வேணும்.
*/
வடக்கூர் காரங்க தான், இதே சோலியா இருக்காங்க
அவங்களுக்கு தந்தி அனுப்பலாமா?

குடுகுடுப்பை said...

காளமேகம் வேலைய செய்ய ஆரம்பிட்டாரு.

உங்க பக்கம் காட்டுல நெஜமாவெ புலி இருக்காங்க.

Anonymous said...

//அதுகேட்டாக்க‌
பிடிப‌டுது
குர‌ல்வ‌ளை!!
நாமெல்லாம்
பாக்க‌த்த‌ட்டுது
இன‌த்த‌ளை!!!//

இதுவும் காளமேகரின் பாட்டில்லையே!!

பழமைபேசி said...

//நசரேயன் said...
ஊருக்கு ஒரு புலி போதும்னு எல்லாம் இடத்தை காலி பண்ணிட்டு போய்ட்டுத்துங்க
//

அப்பிடியெல்லாம் இல்லீங்க.... இங்கெல்லாம், எதயும் அழிக்கிறது இல்ல.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
உங்க பக்கம் காட்டுல நெஜமாவெ புலி இருக்காங்க.
//

நெசமாத்தானுங்க.... தொண்டாமுத்தூருக்கு மேக்க, அப்பப்ப ஊர்களுக்குள்ள வந்திருச்சுன்னு செய்தி வரும். பாத்ததில்லைங்களா?

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
இதுவும் காளமேகரின் பாட்டில்லையே!!
//

புலியினத்துக்கு இடைஞ்சல்னு நாமளா எழுதினது தானுங்க...

வல்லிசிம்ஹன் said...

இங்க ஜூவில வச்சுப் பார்த்த புலி கூடப் பாவமா இருந்தது. அதது இடத்தில அதது இருந்தாத்தானே நல்லா இருக்கு. புலி நகரத்துக்கும் வரவேண்டாம்.
நாம் அதை வேட்டையாடவும் வேண்டாம்.

Anonymous said...

:) :) :) :) :)

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
இங்க ஜூவில வச்சுப் பார்த்த புலி கூடப் பாவமா இருந்தது. அதது இடத்தில அதது இருந்தாத்தானே நல்லா இருக்கு. புலி நகரத்துக்கும் வரவேண்டாம்.
நாம் அதை வேட்டையாடவும் வேண்டாம்.
//


சரியாச் சொன்னீங்க....காட்டுல அதுகளுக்கு எந்த இடைஞ்சலும் இல்லைன்னா, அதுக நாம இருக்குற இடத்துக்கு வராது பாருங்க.

பழமைபேசி said...

//Anonymous said...
:) :) :) :) :)
//

வாங்க அனாமதேய அன்பரே! ஆனா, நெலமை சிரிக்குற மாதிரி இல்லீங்ளே?

பழமைபேசி said...

//நசரேயன் said...
/*
வடக்கூர் காரங்க தான், இதே சோலியா இருக்காங்க
அவங்களுக்கு தந்தி அனுப்பலாமா?
//

:-o)

ராஜ நடராஜன் said...

ஏய் பாஸ்! பழமைக்கு ஒரு பின்னூட்டம் போட விடய்யா!வந்து வந்து தொண தொணத்துக்கிட்டு குட்டி போட்ட பூனையாட்டம் குறுக்கா நெடுக்கா நடந்துகிட்டு.

பழம யாருங்க அது உங்க ஊருப்பக்கம் புலிகள் இருக்கான்னு கேட்கிறது?தொண்டாமுத்தூர் இல்ல,இப்பெல்லாம் உடுமலை,ஆனைமலை,தமிழ்நாடெங்கும் புலிச் சத்தம் கேட்குது.பத்தாததுக்கு பழம புலியைச் சீண்டாதேன்னு படம் போட்டுக் காண்பிச்சும் நம்பில்லையின்னா என்னா பண்றது?

பழமைபேசி said...

// ராஜ நடராஜன் said... //

வாங்க ராஜ நடராஜன்! வணக்கம்!!

Anonymous said...

புலிகள் பத்தி பேசினாலே பிரச்சினை வருது...

ஆகா மொத்தம் புலிகள் என்றாலே பிரச்சினை வரும் போல...

(நான் காட்டில் இருக்கிற புலிகளை தான் சொல்றேன்...ஆஹா இப்படி சொன்னாலும் அரசியல் ஆயிடும் போல இருக்கே!)

ஆட்காட்டி said...

புலி என்ற கிலி பேரக் கேட்டாலே வருதுள்ள. அது தான் போட்டுத் தள்ளுறாங்கள்.

http://urupudaathathu.blogspot.com/ said...

உள்ளேன் ஐயா

பழமைபேசி said...

// Sriram said... //

வாங்க Sriram! வணக்கம்!!

//உருப்புடாதது_அணிமா //

வாங்க உருப்புடாதது_அணிமா! வணக்கம்!!

பழமைபேசி said...

//ஆட்காட்டி said...
புலி என்ற கிலி பேரக் கேட்டாலே வருதுள்ள. அது தான் போட்டுத் தள்ளுறாங்கள்.
//

ஆகா... கிலியயும் விட்டுடுலாம்...கூடவே புலியயும்.... :-o)