11/11/2008

மென் பொருட்களில் என் பொருட்கள்!

நம்மூட்டுத் திண்ணைக்கு வாரவிங்க, வராதவிங்க எல்லார்த்துக்கும் வணக்கம். பதிவுக்குப் பதிவு எசப் பாட்டு பாடுற அண்ணன் மகேசு அவிங்களுக்கு இன்னும் கெளரவப் படுத்த வேண்டியது ஒன்னு இருக்கு. அதாங்க, நம்ப திரைப்பட அனுபவங்களைப் பத்தி எழுதணுமாம். அதுக்கு முன்னாடி அண்ணன் அவிங்களத் தொடர்ந்து, மறுமொழியர்த் திலகம் மலைக் கோட்டையார் அவிங்களப் படுத்துறதுக்கு ஒன்னு. இல்லங்க, கெளரவப் படுத்துறதுக்கு ஒன்னுன்னு சொல்ல வந்தேன். ஏன்னா, அவருதான் இந்தப் பதிவு போடச் சொல்லி கொக்கி போட்டது.

கோடம்பாக்கத்துல ஓடாத படங்களை எல்லாம் வடிவேலு அண்ணன் ஓட்டுறார் இல்ல?! அது மாதர, எங்க பதிவுகளை எல்லாம் செல்லுபடி பண்ணுறதுல இவருதான் நொம்ப முக்கியமானவரு. ச்சும்மா சொல்லக் கூடாது, சங்க்கடமே இல்லாம மறு மொழிகளை வாரி வழங்குவாரு. நொம்ப நன்றிங்க மலைக்கோட்டை!

நாம இவரை நாடோடின்னு எல்லாம் சொல்லி, மதிப்புக் கொறச்சலாப் பேசறது இல்ல பாருங்க. அன்பா, ஊர்மாறின்னு தான் சொல்லுறது. வார நாள்ல ஒரு நாட்ல இருக்காரு. வாரக் கடைசில ஒரு நாட்ல இருக்காருன்னா பாருங்க. ஆனாத் தங்கமான மனுசன். (இப்படிச் சொல்லலைன்னா கோவிச்சுக்குவாரு!) வலைக்குள்ள வந்த ஒடனே, எல்லா ஊட்டுக்கும் சரி சமமாப் போய்ட்டு வருவாரு. ஒரு நாளும் ஒரு ஊட்டுக்குப் போய்ட்டு, இன்னொரு ஊட்டுக்குப் போகாம வந்தது இல்ல. ஆனா, தன்னோட ஊட்டை மட்டும் குப்பை மாதர வெச்சி இருக்காரு. நேத்து அவரூட்டுத் திண்ணைக்குப் போனம் பாருங்க, கசகசன்னு என்னமோ ஒன்னு போட்டுத் தாக்கிடுச்சு. அண்ணா சித்த உங்க ஊட்டையும் பாருங்க. சரி, இனி விபரத்துக்கு வருவோம்,

Amaya software: வலையகப் பக்கங்களை வடிக்க.

WordWeb Pro: ம‌கேசு அண்ண‌ன் சொல்லுற‌ ஆங்கில‌ வார்த்தைக‌ளுக்கு அர்த்த‌ம் பாக்க‌.

Primopdf: ந‌ம்ம‌ எழுத‌ற‌ ப‌திவுக‌ளை ப‌த‌மா(pdf) ப‌துக்கி வைக்க‌.

ம‌த்த‌தெல்லாம், நீங்க‌ எல்லாம் பொழ‌ங்குற‌து தான். அதுக‌ள‌ச் சொல்லி உங்க‌ நேர‌த்த‌ எதுக்கு வீண‌டிக்கோனும்? பொழ‌ச்சிப் போங்க‌!

கொக்கி:

ஒருத்த‌ர் ரெண்டு பேர்த்த‌ச் சொல்லி, ம‌த்த‌வ‌ங்க‌ள‌ விடுற‌துக்கு ம‌ன‌சு வ‌ர‌ல‌. யாருக்கு, எழுத‌ற‌துக்கு ஒன்னும் கெடைக்க‌லையோ, அவிங்க‌ தாராள‌மா கொக்கியில‌ மாட்டுப் ப‌டுங்க‌. பொழ‌ங்குற‌ மெனபொருள் சாமானைப் ப‌த்தி எழுதுங்க‌.


நடந்தா நாடெல்லாம் ஒறவு!

28 comments:

குடுகுடுப்பை said...

பிளாக்கர் மென்பொருள்தானே நான் அத மட்டும் தான் உபயோகிக்கிறேன்.:)

ராஜ நடராஜன் said...

//நேத்து அவரூட்டுத் திண்ணைக்குப் போனம் பாருங்க, கசகசன்னு என்னமோ ஒன்னு போட்டுத் தாக்கிடுச்சு. அண்ணா சித்த உங்க ஊட்டையும் பாருங்க//

சிரிப்புத் தாங்கல:)))))

நம்ம வீடும் அப்படித்தானிருக்குன்னு கதவு,ஜன்னலெல்லாம் மாத்திட்டேன்.இன்னும் தமிழ் மணத்தைக் கூப்பிடறதுதான் பாக்கி.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
பிளாக்கர் மென்பொருள்தானே நான் அத மட்டும் தான் உபயோகிக்கிறேன்.:)
//

அப்ப அதச் சொல்லி ஒரு பதிவு போடுங்க‌!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
நம்ம வீடும் அப்படித்தானிருக்குன்னு கதவு,ஜன்னலெல்லாம் மாத்திட்டேன்.இன்னும் தமிழ் மணத்தைக் கூப்பிடறதுதான் பாக்கி.
//

சீக்ரம் கூப்டுங்க.... வாரோம்!

Mahesh said...

நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு... எங்கெங்க கொக்கி இருக்குன்னு பாத்து போய் மாட்டிக்கிறீங்களே !!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

நசரேயன் said...

நான் எல்லாம் தேடு வண்டி ஆளு, எனக்கு எதுவுமே தெரியாது

பழமைபேசி said...

//Mahesh said...
நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு... எங்கெங்க கொக்கி இருக்குன்னு பாத்து போய் மாட்டிக்கிறீங்களே !!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//

மாட்டிவிட்டுட்டு இப்படிச் சொல்றீங்ளே? :-o)

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் எல்லாம் தேடு வண்டி ஆளு, எனக்கு எதுவுமே தெரியாது
//

நாங்க நம்பிட்டோம்.......

Anonymous said...

//ஒருத்த‌ர் ரெண்டு பேர்த்த‌ச் சொல்லி, ம‌த்த‌வ‌ங்க‌ள‌ விடுற‌துக்கு ம‌ன‌சு வ‌ர‌ல‌.// உண்மையிலேயே உங்களுக்கு நல்ல மனசு

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
உண்மையிலேயே உங்களுக்கு நல்ல மனசு
//

நொம்ப நன்றிங்க... நல்ல பழம சொன்னீங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

///நம்மூட்டுத் திண்ணைக்கு வாரவிங்க, வராதவிங்க எல்லார்த்துக்கும் வணக்கம்.///

பதில் வணக்கம்

http://urupudaathathu.blogspot.com/ said...

///பதிவுக்குப் பதிவு எசப் பாட்டு பாடுற அண்ணன் மகேசு அவிங்களுக்கு இன்னும் கெளரவப் படுத்த வேண்டியது ஒன்னு இருக்கு////

படுத்துங்க படுத்துங்க...

( அது தானே உமக்கு வேலை?? )

http://urupudaathathu.blogspot.com/ said...

///அதுக்கு முன்னாடி அண்ணன் அவிங்களத் தொடர்ந்து, மறுமொழியர்த் திலகம் மலைக் கோட்டையார் ///

மறுமொழியர்த் திலகம் மலைக் கோட்டையார்????


என்னை வெச்சு எதுனா காமடி கீமிடி நடக்குதா??
நான் எல்லாம் பிஸ்கோத்து...

http://urupudaathathu.blogspot.com/ said...

///அவிங்களப் படுத்துறதுக்கு ஒன்னு. இல்லங்க, கெளரவப் படுத்துறதுக்கு ஒன்னுன்னு சொல்ல வந்தேன்////

நம்பாதீங்க.. இது படுத்துறது தான்..
உண்மை வெளி வந்து விட்டது

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஏன்னா, அவருதான் இந்தப் பதிவு போடச் சொல்லி கொக்கி போட்டது.///

கொக்கி போட்டா அனுபவிக்கனும்.. ஆராய கூடாது

http://urupudaathathu.blogspot.com/ said...

//சங்க்கடமே இல்லாம மறு மொழிகளை வாரி வழங்குவாரு.///

சந்தேகமே வேணாம்.. இது எதுக்கோ அடி போடராருன்னு நினைக்குறேன் ..

வேணாம் ...

http://urupudaathathu.blogspot.com/ said...

///நாம இவரை நாடோடின்னு எல்லாம் சொல்லி, மதிப்புக் கொறச்சலாப் பேசறது இல்ல பாருங்க///


என்ன ஒரு பெருந்தன்மை ??
எதுக்கு நம்மள இப்படி வாடி எடுக்குறீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

அன்பா, ஊர்மாறின்னு தான் சொல்லுறது. ////

இதுக்கு நாடோடியே தேவலாம்..

ஊர்மாறின்னா ஏதோ மொள்ளமாறி அப்படின்னு சொல்ற மாதிரியே இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஆனாத் தங்கமான மனுசன். (இப்படிச் சொல்லலைன்னா கோவிச்சுக்குவாரு!) ///

மானத்த விலை பேசுறதுன்னு முடிவாயிடுச்சு ..
நடத்துங்க நடத்துங்க..

வேணாம்ன்னு சொன்னா மட்டும் கேக்கவா போறீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஆனா, தன்னோட ஊட்டை மட்டும் குப்பை மாதர வெச்சி இருக்காரு. நேத்து அவரூட்டுத் திண்ணைக்குப் போனம் பாருங்க, கசகசன்னு என்னமோ ஒன்னு போட்டுத் தாக்கிடுச்சு. அண்ணா சித்த உங்க ஊட்டையும் பாருங்க.////

நம்ம ஊட்ட பாக்க போய்யி தான் , தமிழ்மணத்துல பிரச்சனை வந்துச்சு ...
நம்ம வீடு எப்பவும் இப்படி தாங்க இருக்கும்.. மன்னிச்சுகோங்க ...
அப்புறம் நான் எல்லாம் bachelor.. bachelor வீடு அப்படி த்தான இருக்கும்..
இதுக்கு எல்லாம் போய்..

http://urupudaathathu.blogspot.com/ said...

//வார நாள்ல ஒரு நாட்ல இருக்காரு. வாரக் கடைசில ஒரு நாட்ல இருக்காருன்னா பாருங்க. ////

என்னோட அலைச்சல் உங்களுக்கு கும்மியா தெரியுதா???

http://urupudaathathu.blogspot.com/ said...

//கோடம்பாக்கத்துல ஓடாத படங்களை எல்லாம் வடிவேலு அண்ணன் ஓட்டுறார் இல்ல?!////

அப்போ நான் ஹீரோ இல்லியா? காமெடியனா!!!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்த வேலை முடிஞ்சது.. அப்பால பாக்கலாம்

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஒருத்த‌ர் ரெண்டு பேர்த்த‌ச் சொல்லி, ம‌த்த‌வ‌ங்க‌ள‌ விடுற‌துக்கு ம‌ன‌சு வ‌ர‌ல‌.///

இங்க பாருங்கப்பா ஒரு நல்லவரு வல்லவரு...
இப்படி சொன்னா மட்டும் ஊரு உலகம் நம்பிடுமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///அண்ணா சித்த உங்க ஊட்டையும் பாருங்க. ///

இப்போ போயி பாருங்க.. சும்மா அதிருமுல்ல .

http://urupudaathathu.blogspot.com/ said...

25>>>>>>>>

http://urupudaathathu.blogspot.com/ said...

இங்கிட்டு தான் இருக்கீகளா????/
சொல்லவே இல்ல

பழமைபேசி said...

//
உருப்புடாதது_அணிமா said...
இங்கிட்டு தான் இருக்கீகளா????/
சொல்லவே இல்ல
//
அண்ணாத்த, கொஞ்சம் வேலையா இருக்கேன்....நீங்க நடத்துங்க!