11/14/2008

சனத்தார் அறியாங்க!

இஞ்சி எலுமிச்சங்கா
இளங்கொடி நார்த்தங்கா
இளப்பமாப் போறேன்னு
இனத்தார் அறியாங்க!

தண்ணி எலுமிச்சங்கா
தனிக்கொடி நார்த்தங்கா
சனத்தாரு கண்ணெதிரே
தனித்தனியாப் போறமுன்னு
சனத்தார் அறியாங்க!
தாம நிலை கொள்ளாம!!


காலம் போம் வார்த்தை நிற்கும்! கப்பல் போம் துறை நிற்கும்!!

14 comments:

Anonymous said...

Vandhuttomla...

பழமைபேசி said...

//
Sriram said...
Vandhuttomla...
//
வாங்க ஸ்ரீராம்!

Mahesh said...

இதுல எதோ நுண்ணரசியல் இருக்கா?

பழமைபேசி said...

வாங்க மகேசு! இது பழைய பாட்டு, கலவரம் வரும்போது பாடுற பாட்டு!!

நசரேயன் said...

இஞ்சி இடுப்பு
இளங்கொடி கொடிஇடையாள்
அப்படி ஏதும் உள் குத்து இல்லையே?

Anonymous said...

// வாங்க மகேசு! இது பழைய பாட்டு, கலவரம் வரும்போது பாடுற பாட்டு!! //
யாருக்கு கலவரம் வரும் போது இந்த பாட்டை பாடணும். நமக்கா இல்ல அடுத்தவங்களுக்கா இல்ல இரண்டு பேருக்குமா? இராகவன், நைஜிரியா.

Anonymous said...

Neenga solradha paartha ippa nadantha satta kallori kalavarathula kooda intha paata paadi iruppanga polirukku.

குடுகுடுப்பை said...

அய்யா விளக்கம் கொடுங்கய்யா

பழமைபேசி said...

மகேசு ஐயா வாங்க!
ஸ்ரீராம் ஐயா வாங்க!
நசரேயன் ஐயா வாங்க!
இராகவன் ஐயா வாங்க!
குடுகுடுப்பை ஐயா வாங்க!
வாங்க, வாங்க அல்லாரும் வாங்க!

சரியான பராமரிப்பு, தண்ணீர் இல்லாம‌, இளம் எலுமிச்சைகளும் நாற்றங் காய்களும் வாடி வ‌த‌ங்கி ஒன்னு ஒன்னா அவிஞ்சு போற‌தை ஒப்பிட்டு,
இள‌ங் காளைய‌ருக‌ ச‌முதாய‌த்துல‌ கெட்டுப் போகும் போது பொம்ப‌ளைங்க‌
வெக்கிற‌ ஒப்பாரிதான் இது!

நசரேயன் said...

/*
சரியான பராமரிப்பு, தண்ணீர் இல்லாம‌, இளம் எலுமிச்சைகளும் நாற்றங் காய்களும் வாடி வ‌த‌ங்கி ஒன்னு ஒன்னா அவிஞ்சு போற‌தை ஒப்பிட்டு,
இள‌ங் காளைய‌ருக‌ ச‌முதாய‌த்துல‌ கெட்டுப் போகும் போது பொம்ப‌ளைங்க‌
வெக்கிற‌ ஒப்பாரிதான் இது!
*/
உங்களுக்காகவே எழுதின பாட்டு மாதிரி இருக்கு

பழமைபேசி said...

//நசரேயன் said...
உங்களுக்காகவே எழுதின பாட்டு மாதிரி இருக்கு
//


ஆனா, ஒரு ஆறுதல் சொல்லாமப் போய்ட்டீங்ளே?! :-o(

நசரேயன் said...

/*
ஆனா, ஒரு ஆறுதல் சொல்லாமப் போய்ட்டீங்ளே?! :-o(

*/
போட்டுடமுல்ல அந்த ஓட்டை

பழமைபேசி said...

//
நசரேயன் said...
போட்டுடமுல்ல அந்த ஓட்டை//

ஓ, கணக்கை அப்படி நேர் பண்ணிட்டீங்ளா.... நல்லா இருங்க மகராசா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சூழ்நிலைக்கு தக்க பாட்டு,

பழமொழியும் நல்லா இருக்கும்.