11/03/2008

"அந்தலை சிந்தலை" ன்னா என்ன?

அன்பர்களே, வணக்கம்! வந்துட்டேன் மக்களே, இன்னைக்கும் ஒரு ஊர்ப் பேச்சோட வந்துட்டேன். ஆமுங்க, நாம பேச்சு வழக்குல சொல்லுறத அலசிகினு வர்றோம். பாருங்க, பேச்சு வழக்குல‌ "அந்தலை சிந்தலை ஆயிப் போச்சுடா"ங்றோம். "கால்மாடு தலைமாடு" தெரியாமப் பேசுறான் இவன்ங்றோம். ஆகவே நாம இன்னைக்கு அலசப் போறது "கால்மாடு தலைமாடு" "அந்தலை சிந்தலை" ன்னா என்ன?

நீங்க உங்க விளக்கத்தைப் பின்னூட்டமாப் போட்டுத் தாக்குங்க‌.... நான் என்னோடதை நாளைக்கு பதியுறேன்.

அத்திப் பூவ அறிஞ்சது யாரு? ஆந்தக் குஞ்சை பாத்தது யாரு??
ஆனாப் பதிவருங்க நாங்க அல்லாத்தையும் பாப்பம்ல?!

12 comments:

குடுகுடுப்பை said...

இந்த பழமைபேசி இப்படி அந்தலை,சிந்தலையா கேள்வி கேட்டே இம்சை பண்றாரு. என்ன பண்றது

பழமைபேசி said...

//வருங்கால முதல்வர் //

ஒரு நிமிசம் ஆடிப் போய்ட்டேண்ணே, நாந்தான் அப்படிப் போட்டுட்டனோன்னு!
எனக்கும் பாட்டு எழுதும் போது இப்படியெல்லாம் தோணும். என்ன செய்யுறது, வெளில போட முடியாதே?

நசரேயன் said...

அந்தலை சிந்தலை பத்தி பேசி நான் கந்தலை

கால்மாடு தலைமாடு-
குடுகுடுப்பையார்க்கு வேணா தெரியலாம்

குடுகுடுப்பை said...

//கால்மாடு தலைமாடு-
குடுகுடுப்பையார்க்கு வேணா தெரியலாம்//

இது வேற 'மாடு'

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
இந்த பழமைபேசி இப்படி அந்தலை,சிந்தலையா கேள்வி கேட்டே இம்சை பண்றாரு. என்ன பண்றது?//

தெரிஞ்சதை ச்சும்மா சொல்லுங்கண்ணா...

பழமைபேசி said...

வாக்களிப்பதை வாடிக்கையாகக் கொள்ளாத‌ வட அமெரிக்க வலைஞர் தளபதிக்குக் கண்டனங்கள்!

குடுகுடுப்பை said...

வாக்களிப்பதை வாடிக்கையாகக் கொள்ளாத‌ வட அமெரிக்க வலைஞர் தளபதிக்குக் கண்டனங்கள்!

/
மொதல்ல எலெக்க்சன் நில்லு ஓய்
/

பழமைபேசி said...

//
வருங்கால முதல்வர் said...
மொதல்ல எலெக்க்சன் நில்லு ஓய்
//


நானே எனக்கு ஆப்பு வெச்சிகிட்டேனா?

ஆனாலும் வலைஞர் தளபதி இன்னும் இதைப் பாக்கலையே?

Anonymous said...

மாடு – பக்கம்
கால்மாடு – காற்பக்கம்; படுக்கையில் கால் வைக்கும் பக்கம்
தலைமாடு – தலைப்பக்கம் – படுக்கையில் தலைவைக்கும் பக்கம்

இனி என் யூகம்.

கால்மாடு தலைமாடு:

இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் ஒருவர் அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாமல் முன்னுக்குப் பின் முரணாக எதனையாவது சொல்வது; பிரச்சினையின் தொடக்கமும் முடிவும் அறியாது பேசுவது.

அந்தலை சிந்தலை...?

பழமைபேசியே சொல்லட்டும்.

பழமைபேசி said...

வணக்கம் அ.நம்பி ஐயா! நீங்க சொன்னது ரொம்பச் சரி!!

ரெண்டாவதுக்கு ஒரு சிறு குறிப்பு தர்றேன்.... நீங்க அதுல இருந்து பிடிச்சிடுவீங்க. அந்து! சிந்து!!

Mahesh said...

நானே இங்க சளிப் புடிச்சு மூக்கை சிந்திக்கிடுருக்கேன்.. அந்தலை சிந்தலைன்னே நான் என்ன பண்ன? கால்மாடு தலைமாடு புரியல போங்க.. :)))

பழமைபேசி said...

//Mahesh said...
நானே இங்க சளிப் புடிச்சு மூக்கை சிந்திக்கிடுருக்கேன்.. அந்தலை சிந்தலைன்னே நான் என்ன பண்ன? கால்மாடு தலைமாடு புரியல போங்க.. :)))
//

விளக்கம் போட்டுட்டேன்!!!