11/26/2008

தனக்குத் தானே தோண்டிக்கிற குழி!

வணக்கம்! பாருங்க, பல நேரங்கள்ல நமக்கே தெரியாம, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்குவோம். அவசரத்துல தப்பை செஞ்சுட்டு, அவகாசத்துல ஒக்காந்து பொலம்புவோம். அந்த வகையில நம்ம வாழ்க்கையில நடந்த ஒன்னுதானுங்க, இன்னைக்கு நாம சொல்லப் போற விசியம்.

தங்கமணி எதையும் ஒரு தயக்கத்தோடயே செய்துட்டு இருந்தாங்க. சில நேரங்கள்ல, அந்த வேலைய செய்யவும் மாட்டாங்க. அப்ப நாம சொன்னோம், "எங்க ஊர்ல எல்லாம் கர்ப்பிணியா இருக்குறவங்க களை வெட்டப் போவாங்க, விறகு வெட்டப் போவாங்க. இப்பிடியெல்லாம் இருந்தா எப்பிடி அவிங்க வாழ்க்கை ஓடும்"ன்னு. இதைக் கேட்ட அவிங்க, சரி ஒக்காருங்கன்னு சொல்லி, ஒரு கதையச் சொல்ல ஆரம்பிச்சாங்க.

காட்டுல ஒரு நாள், விறகு வெட்டுறதுக்கு ஒரு நிறைமாத கர்ப்பிணி போனாங்ளாம். போயி வெட்டிட்டு, விறகுக் கட்டைத் தலையில வெச்சுட்டு குடிசைக்கு வாற வழியில, வயிறு வலி எடுத்துகிச்சாம். ஒடனே அந்தப் பொம்பளை, வெறகுக் கட்டை கீழ போட்டுட்டு மரத்தோட மறைவுல குழந்தையப் பெத்துகிட்டு, அங்க ஓடுற ஆத்துல எல்லாம் கழுவி சுத்தம் செய்துட்டு, மறுபடியும் குடிசையப் பாத்து போக ஆரம்பிச்சுட்டாங்ளாம்.

இதைப் பாத்த இராசா, எதுக்கு அரண்மனையோட அந்தப்புரத்துல நூத்துக் கணக்கான வேலையாள்? இராணிமார் எல்லாம் அவிங்க அவிங்க பிரசவத்தை, வேலைகளை, அவிங்க அவிங்களே செய்யட்டும்னு எல்லா வேலையாளையும் வேலைய விட்டு அனுப்பிட்டாராம்.

இதைப் பாத்த மந்திரியும், தோட்டத்துல வேலை செய்யுற வேலையாளுக எல்லார்த்தையும் வேற வேலைக்கு அனுப்பிட்டாராம். இதைப் பாத்த இராசா, "என்ன மந்திரி, தோட்டத்துல பூச்செடி கொடிகெல்லாம் காயுது, எதுக்கு வேலை செய்யுறவிங்களை அனுப்பிட்டீங்க?" ன்னு கேட்டாராம்.

மந்திரி சொன்னாராம், "காட்டுல தண்ணி பாய்ச்சியா எல்லாச் செடி கொடி வளருது, அதான் அனுப்பிட்டேன்" னு சொன்னாராம். இராசாவுக்கு கோபம் வந்துச்சாம். அதைப் பாத்த மந்திரி, "இராசா, உங்க கோபம் ஞாயமானதுதான். அதே மாதிரிதான், காட்டுல இருக்குற பொம்பளைகளுக்கு பிரசவம் பாக்குற வலு இருக்கு. வீட்ல இருக்குறவிங்களுக்கு ஒதவி தேவைப்படுது!" ன்னு சொன்னாராம். அப்புறம் இராசா, அந்தப்புரத்து வேலையாளுகளை திரும்பக் கூப்ட்டு கிட்டாராம்.

இந்த கதைய‌ச் சொன்ன தங்கமணி, "இந்தப் பொது அறிவு கூட இல்லாம நீங்க எல்லாம் அப்பிடி என்ன படிச்சீங்க?"ன்னு கேக்க, நாம வழக்கம் போல கீழயும் மேலயும் பாத்ததுதான், வேறென்ன?!

மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டோ?

30 comments:

rapp said...

me the first:):):)

குடுகுடுப்பை said...

அறிவாளி மனைவி கண்ட புலவர் வாழ்க அவர் கொற்றம் வாழ்க, அவர் மனைவியின் சீற்றம் வாழ்க, அதன் பலனை புலவர் அடைக

விஜய் ஆனந்த் said...

:-)))...

அம்புலிமாமா பீர்பால் கதை மாதிரி இருக்கே!!!

நசரேயன் said...

உள்ளேன் ஐயா, அப்புறமா பதிவுக்கு கருத்து போடுவேன்

நசரேயன் said...

/*
இந்தப் பொது அறிவு கூட இல்லாம நீங்க எல்லாம் அப்பிடி என்ன படிச்சீங்க?
*/
பதிவுக்கு சூனியம் வைக்கத்தான்னு நீங்க சொல்லி இருக்கணும்

பழமைபேசி said...

//rapp said...
me the first:):):)
//

Yes, You are!!! :-o)

மோகன் கந்தசாமி said...

///me the first:):):)///

me the seventh!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
அறிவாளி மனைவி கண்ட புலவர் வாழ்க அவர் கொற்றம் வாழ்க, அவர் மனைவியின் சீற்றம் வாழ்க, அதன் பலனை புலவர் அடைக
//

குடுகுடுப்பையாருக்கு ஒரு சோடா குடுங்க....

துளசி கோபால் said...

தங்க்ஸ்ங்க எப்பவுமே கெட்டி(க்காரி)தான்:-)

ஆமாம். இந்த தலைப்புக்கு ஏற்கெனவே நம்ம பதிவர் ஒருத்தர் காபிரைட் வச்சுருக்காரே தெரியுமா?

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
தங்க்ஸ்ங்க எப்பவுமே கெட்டி(க்காரி)தான்:-)

ஆமாம். இந்த தலைப்புக்கு ஏற்கெனவே நம்ம பதிவர் ஒருத்தர் காபிரைட் வச்சுருக்காரே தெரியுமா?
//

யெப்பா... நான் இல்ல.... தலைப்பையே மாத்தப் போறேன் இப்ப....

பழமைபேசி said...

//விஜய் ஆனந்த் said...
:-)))...
//

வாங்க விஜய் ஆனந்த்! வணக்கம்!!

துளசி கோபால் said...

என்னங்க இது....நெசமாவே தலைப்பை மாத்திட்டீங்க!!!!

தலைப்பு உதவி: 'நன்றி வரவணையான்'னு
போட்டாப் பிரச்சனை தீர்ந்துச்சு.

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
என்னங்க இது....நெசமாவே தலைப்பை மாத்திட்டீங்க!!!!
//

எனக்கு அந்த விபரமும் தெரியாதுங்ளே!

துளசி கோபால் said...

சரி விடுங்க.
ம்ம்ம் சொல்ல மறந்துத்டேனே...

இந்த 'கொசுவத்தி'க்கு காபிரைட் என்னிடம்தான். நினைவு வச்சுக்குங்க. ஹோல்ஸேல் பிஸினெஸ்.

நம்மகிட்டேயே பற்றுவரவு வச்சுக்குங்க:-)))

பழமைபேசி said...

//நசரேயன் said...
பதிவுக்கு சூனியம் வைக்கத்தான்னு நீங்க சொல்லி இருக்கணும்
//

வாங்க நசரேயன்! வணக்கம்!!

Anonymous said...

தங்கமணி பேச்சைக்கேட்டு நடந்தா எல்லாம் சுகமே!!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
தங்கமணி பேச்சைக்கேட்டு நடந்தா எல்லாம் சுகமே!!
//

வாங்க! வணக்கம்!!

Mahesh said...

அங்கியும் அப்பிடித்தானா? :(((

Mahesh said...

// குடுகுடுப்பை said...
அறிவாளி மனைவி கண்ட புலவர் வாழ்க அவர் கொற்றம் வாழ்க, அவர் மனைவியின் சீற்றம் வாழ்க, அதன் பலனை புலவர் அடைக //

உளுந்து உருண்டு பெரண்டு சிரிச்சம்ல...

Anonymous said...

மாப்பு...வெச்சுக்கிட்டியே ஆப்பு...!!!

முடி ஏன் இவ்ளோ கொட்டுச்சுன்னு இப்பத்தான தெரியுது ?

எதுக்கும் ஜான்ஸன்ஸ் பேபி ஆயிலை தலையில் நச்சநச்சவென தேய்க்கவும்...

பழமைபேசி said...

//Mahesh said...
அங்கியும் அப்பிடித்தானா? :(((
//

வாங்க மகேசு! நடக்கட்டும், என்ன சொல்ல?!

பழமைபேசி said...

//செந்தழல் ரவி said...
மாப்பு...வெச்சுக்கிட்டியே ஆப்பு...!!!
முடி ஏன் இவ்ளோ கொட்டுச்சுன்னு இப்பத்தான தெரியுது ?
//

வாங்க ரவி அண்ணே! உங்களுக்காவது என்னோட நெலமை புரியுதே?!

S.R.Rajasekaran said...

இது தான் வாங்கிகட்டிகிறது

S.R.Rajasekaran said...

இது தான் வாங்கிகட்டிகிறது

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
இது தான் வாங்கிகட்டிகிறது
//

நல்லா சொன்னீங்க!
அது மட்டும் இல்ல, நகைச்சுவைப் பதிவு ஒன்னை எதார்த்தமா பதியப் போய், அனாமதேய அனபர்கிட்டயும் வாங்கிக் கட்டினேன். அவர் சொன்னதும் ஞாயமாப் பட்டது. அதான்!

குடுகுடுப்பை said...

மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டோ?
//


தலையில மிதிக்கனும் மிதியடி போட்டுகிட்டு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கதையா இருக்கே.. :)

Natty said...

//

முடி ஏன் இவ்ளோ கொட்டுச்சுன்னு இப்பத்தான தெரியுது ?


//

ரிப்பீட்டேய்.....

;))

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நல்ல கதையா இருக்கே.. :)
//

வாங்க! நன்றி!!

பழமைபேசி said...

//Natty said... //

வாங்க Natty !