11/17/2008

ரத்தினக்கிளி வாலு!

வணக்கம்! இன்னைக்கு நமக்கு பிரயாண நாளுங்க. கெடச்ச அவகாசத்துல எதையாவது பதியணுமே?! அதான், நாம‌ சின்ன வயசுல சொல்லிகிட்டுத் திரிஞ்ச‌ ஒன்னு.

ஒன்னு: ஒங்கவீட்டுப் பொண்ணு
ரெண்டு: ரத்தினக்கிளி வாலு
மூணு: முருங்கக்காய்த் தோலு
நாலு: நாய்க்குட்டி வாலு
அஞ்சு: அவரக்காப் பிஞ்சு
ஆறு: அருவாமணக் காலு
ஏழு: எலிக்குட்டி வாலு
எட்டு: அத்தமகளக் கட்டு!

15 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

நசரேயன் said...

/*அத்தமகளக் கட்டு!*/
அத்த மக இல்லாதவங்களுக்கு நீங்க பொண்ணு பாத்து கொடுப்பீங்களா?

தங்ஸ் said...

நசரேயன்...அத்த மக இல்லண்ணா இப்படிச்சொல்லுங்க..

சொல்லிக்கோ..சொம்பெடுத்து மாட்டிக்கோ..ரயிலுக்குள்ள பூந்துக்கோ..நல்ல பொண்ணாக் கட்டிக்கோ..

குடுகுடுப்பை said...

ஒம்போது மாமன் மவள சேத்துக்கே
பத்து பழமைபேசிய பாத்துக்கோ

Anonymous said...

வந்துடோம்ல...

பழமைபேசி said...

@@நசரேயன்
@@தங்ஸ்
@@குடுகுடுப்பை
@@Sriram

வாங்க! வருகைக்கு நன்றி!!

http://urupudaathathu.blogspot.com/ said...

உள்ளேன் ஐயா.

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கு அந்த எட்டாவது விஷயம் தான் ரொம்ப புடிச்சது ..
ஹி ஹி ஹி ( எனக்கு அத்தை மகள் கிடையாது )

http://urupudaathathu.blogspot.com/ said...

///வணக்கம்! இன்னைக்கு நமக்கு பிரயாண நாளுங்க.///

Safe Journey

http://urupudaathathu.blogspot.com/ said...

//கெடச்ச அவகாசத்துல எதையாவது பதியணுமே?!////

கிழிஞ்சது ..

அவகாசத்துக்கு எல்லாம் பதிவா??
நல்லா இருங்க .. நல்லாவே இருங்க

http://urupudaathathu.blogspot.com/ said...

இதை படிக்கும் போது எனக்கு வேற ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது ..
ஒரே ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்தது , ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது ..
முடிந்தால் அதையும் பதியுங்களேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

/// குடுகுடுப்பை said...

ஒம்போது மாமன் மவள சேத்துக்கே
பத்து பழமைபேசிய பாத்துக்கோ///

ரிப்பீட்டுக்கிறேன்

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
எனக்கு அந்த எட்டாவது விஷயம் தான் ரொம்ப புடிச்சது ..
ஹி ஹி ஹி ( எனக்கு அத்தை மகள் கிடையாது )
//

:-o)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதே ஸடைல்ல இருக்குற பாட்டு ஒன்னு மறந்து போச்சு, ஞாபகம் வரச்சே வந்து சொல்றேன்.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
இதே ஸடைல்ல இருக்குற பாட்டு ஒன்னு மறந்து போச்சு, ஞாபகம் வரச்சே வந்து சொல்றேன்.
//

மறக்காமச் சொல்லுங்க!