11/20/2008

பதிவரின் பரிபாலனம்!

நியூயார்க்(New York)ல வேலை பாக்கும் பதிவரும், அவிங்க அலுவலக பட்சியும் அலுவலக வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும் போது பேசுற பழமைகதான் இது: வேலையில அன்னமுன்னைக் கண்டேன்,
வீதியில அதே பெண்ணைக் கண்டேன்,
அந்தச் செவத்தப்புள்ள நெத்தியிலே - ‍ ஒரு
செந்துருக்கப் பொட்டைக் கண்டேன்!

ஒட்டாரம் பூவே நீ,
ஒசந்திருக்கும் தாழம்பூவே,
கண்ணொளிப் பூவே உன்னைக்,
கண்டுநானு பேச வந்தேனடி!

மானே மரகதமே,
மனசுக் கேத்தக் குஞ்சரமே,
தேனே திரவியமே உன்னைத்
தேடாத நாளில்லை!

ஒடம்பு குத்தும் குளிருல‌,
ரயிலெடுக்கும் பெண்மயிலே!
நீலவண்ணக் கருங்குயிலே - ‍ நான்
நிக்கட்டுமா போவட்டுமா?

வலை மேயும் வெள்ளச்சாமி
பின்னூட்டம் போடும் வேலுச்சாமி
காத்திருக்கேன் உன்னை நாடி - நீ
வந்து பேச லாகாதோ?

ஒதட்டுச் சாயம் மணக்கப் பூசி
ஒடம்புத் திரவியம் தெளிச்சு விட்டு
மனம் நெறஞ்சு வந்திருக்கும்
மங்கையாளே இதோநானு வந்துட்டேன்!

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்!

14 comments:

நசரேயன் said...

ஈவ் டீசிங்ல உள்ள தள்ளாம விட மாட்டீங்க போல தெரியுது

பழமைபேசி said...

//நசரேயன் said...
ஈவ் டீசிங்ல உள்ள தள்ளாம விட மாட்டீங்க போல தெரியுது
//

ரெண்டு பேரு பேசிக்குறது தப்பா?

குடுகுடுப்பை said...

அந்தச் செவத்தப்புள்ள நெத்தியிலே - ‍ ஒரு
செந்துருக்கப் பொட்டைக் கண்டேன்!

யார் அந்த நிறவெறி பிடித்தவர்.

அது சரி(18185106603874041862) said...

//

ஒடம்பு குத்தும் குளிருல‌,
ரயிலெடுக்கும் பெண்மயிலே!
நீலவண்ணக் கருங்குயிலே - ‍ நான்
நிக்கட்டுமா போவட்டுமா?
//

இது வேற ஒரு எடத்துல வேற ஒரு மாதிரியான‌ பொண்ணுக்கிட்ட சொல்ற வசனமாச்சே :0)

நல்லா கவனிச்சி கேட்டீங்களா?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
அந்தச் செவத்தப்புள்ள நெத்தியிலே - ‍ ஒரு
செந்துருக்கப் பொட்டைக் கண்டேன்!

யார் அந்த நிறவெறி பிடித்தவர்.
//

பாவம்ணணே, அவரை விட்டுடுங்க...பொழச்சிப் போகட்டும்.

பழமைபேசி said...

//அது சரி said...
இது வேற ஒரு எடத்துல வேற ஒரு மாதிரியான‌ பொண்ணுக்கிட்ட சொல்ற வசனமாச்சே :0)

நல்லா கவனிச்சி கேட்டீங்களா?
//

அண்ணாச்சி வாங்க.... அந்த எடத்துல உங்களுக்கென்ன வேலை? :-o)

Anonymous said...

//மானே மரகதமே,
மனசுக் கேத்தக் குஞ்சரமே,//

குஞ்சரம் - யானை; கருங்குவளை.

எந்தப் பொருள் சரி?

- அ. நம்பி

பழமைபேசி said...

//nanavuhal said...
//மானே மரகதமே,
மனசுக் கேத்தக் குஞ்சரமே,//

குஞ்சரம் - யானை; கருங்குவளை.

எந்தப் பொருள் சரி?

- அ. நம்பி
//

வாங்க ஐயா! குவளைன்னும் பொருள் கொள்ளலாம். கழுத்தணியுடைய பெண் என்றும் பொருள் கொள்ளலாம்.

Anonymous said...

//வலை மேயும் வெள்ளச்சாமி
பின்னூட்டம் போடும் வேலுச்சாமி//

இவங்கெல்லாம் யாரு

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
//வலை மேயும் வெள்ளச்சாமி
பின்னூட்டம் போடும் வேலுச்சாமி//

இவங்கெல்லாம் யாரு
//
வாங்க, வணக்கம்! அந்த பொண்ணுக்குப் புடிச்ச பதிவருங்க!!

Mahesh said...

//அந்தச் செவத்தப்புள்ள நெத்தியிலே - ‍ ஒரு
செந்துருக்கப் பொட்டைக் கண்டேன்!//

ஆஆஆஆ... அந்த மாதிரி எடத்துல எல்லாம் உங்களுக்கு என்னா வேலை? ரொம்ப ஒட்டுக்க் கேக்கரது ஒடம்புக்காகாது :))))

பழமைபேசி said...

//Mahesh said...
ஆஆஆஆ... அந்த மாதிரி எடத்துல எல்லாம் உங்களுக்கு என்னா வேலை? ரொம்ப ஒட்டுக்க் கேக்கரது ஒடம்புக்காகாது :))))//

ஒரு பழக்க தோசந்தான்! :-o)

Mahesh said...

ஆமா.. "பரிபாலனம்" இதுக்கு தமிழ் வார்த்தை என்ன? பராமரிப்பா?

பழமைபேசி said...

//Mahesh said...
ஆமா.. "பரிபாலனம்" இதுக்கு தமிழ் வார்த்தை என்ன? பராமரிப்பா?
//

ஆமாங்க!