11/28/2008

காந்தி தேச‌ம் சாயாது!!

பண்பான பாரத தேசம்!
அன்பான காந்தி தேசம்!!
துயரான நேர மெல்லாம்
பகவானைப் பார்த் தெழுதோம்!!!

பாம்புக்கோ ரெண்டு கண்ணு
பகவான் கொடுத்த கண்ணு
பாவிப் பயலுக செயலால‌
பாம்பாச் சுருண்ட ழுகுறோம்!

தேளுக்கோ ரெண்டு கண்ணு
தெய்வங் கொடுத்த கண்ணு
பொல்லாத பயலுக செயலால‌
தேளாச் சுருண்ட ழுகுறோம்!!

எங்க ஒத்துமை பாரறியும்,
துங்க மது நாங்கறிவோம்,
சூழ்ச்சி நெடுநாளு கொள்ளாது!
வஞ்சகம் எல்லாநாளும் வெல்லாது!!
ஊரு ச‌ன‌ம் ஓயாது! காந்தி தேச‌ம் சாயாது!!

எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்!

14 comments:

Anonymous said...

//சூழ்ச்சி நெடுநாளு கொள்ளாது!
வஞ்சகம் எல்லாநாளும் வெல்லாது!!
ஊரு ச‌ன‌ம் ஓயாது! காந்தி தேச‌ம் சாயாது!! //

உண்மை.. உண்மை.. பாரத தேசம் என்றுமே சாயாது.. வேற்றுமையில் ஒற்றுமை இதுதான் நம் தேசம்.

பழமைபேசி said...

வாங்க இராகவன் ஐயா!

நசரேயன் said...

/*எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்
*/
நம்புவோமாக..

குடுகுடுப்பை said...

//எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்//

எனக்கு நம்பிக்கை இல்லங்க.வேற எதுனா செவ்வாய்/புதன்னு ஓடி தப்பிச்சாதான் உண்டு.

பழமைபேசி said...

// குடுகுடுப்பை said...
எனக்கு நம்பிக்கை இல்லங்க.வேற எதுனா செவ்வாய்/புதன்னு ஓடி தப்பிச்சாதான் உண்டு.
//
நம்புவோமாக..

பழமைபேசி said...

//நசரேயன் said...
நம்புவோமாக..
//

வாங்க நசரேயன் ஐயா!

நசரேயன் said...

/*//எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்//

எனக்கு நம்பிக்கை இல்லங்க.வேற எதுனா செவ்வாய்/புதன்னு ஓடி தப்பிச்சாதான் உண்டு.
*/
நம்புவோமாக..

பழமைபேசி said...

//நசரேயன் said... //

துணிவுள்ள தேசத்துக்கு சிறுமதியோர் செய்த துயரம் எம்மாத்திரம்? அசைக்க முடியாது! வாழ்க பாரத தேசம்!!

ஆட்காட்டி said...

நம்புவோம்.

பழமைபேசி said...

//ஆட்காட்டி said...
நம்புவோம்.//

வாங்க ஆட்காட்டி ஐயா!

ராஜ நடராஜன் said...

//காந்தி தேசம் சாயாது//

அருமையான தலைப்பு பழமை!

பழமைபேசி said...

ராஜ நடராஜன் said...
//காந்தி தேசம் சாயாது//

அருமையான தலைப்பு பழமை!
//

நன்றிங்க ஐயா!

Maximum India said...

//துணிவுள்ள தேசத்துக்கு சிறுமதியோர் செய்த துயரம் எம்மாத்திரம்? அசைக்க முடியாது! வாழ்க பாரத தேசம்!!//

வழிமொழிகிறேன்

வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//Maximum India said...
வழிமொழிகிறேன்

வாழ்த்துக்கள்
//

வாங்க ஐயா!நன்றி!!