11/08/2008

கதம்பம்!

வணக்கம்! நேற்றைய பதிவைப் பாத்த நம்ம வாசகர்கள், மேலதிகமா சில பாடல்களைத் தெரியப்படுத்தி இருக்காங்க. இதோ, அதுக உங்க கவனத்திற்காக:


தாப்பூ தாமரைப்பூ

தாப்பூ தாமரைப்பூ
தாயார் குடுத்த செம்பகப்பூ
பூ, பூ புளியம்பூ
பொன்னாவரத் தாழம்பூ
அம்மா குத்து
அப்பா குத்து
புள்ளையார் குத்து
புடிச்சுக்கோ குத்து!

பூ, பூ புளியம்பூ

பூ, பூ புளியம்பூ
பொட்டில வெச்சா தாழம்பூ
தாழம்பூவ ரெண்டாக்கி
தங்கச்சி கையில மூணாக்கி
சித்தாத்தா அடுப்புல
கத்தரிக்கா வேகல!
மாமா வர ஜோருல,
மல்லிகைப் பூ பூக்கல!!

டிக் டிக்

டிக் டிக்
யாரது?
திருடன்...

என்ன வேண்டும்?
நகை வேண்டும்...

என்ன நகை?
கலர் நகை

என்ன கலர்?
பச்சைக் கலர்

என்ன பச்சை?
கிளி பச்சை

என்ன கிளி?
பசுங்கிளி

என்ன பசு?
மாடு பசு

என்ன மாடு?
எருமை மாடு

என்ன எருமை?
காட்டெருமை

என்ன காடு?
பூங் காடு

என்ன பூ?
மல்லி பூ

என்ன மல்லி?
குண்டு மல்லி

என்ன குண்டு?
கோலி குண்டு

என்ன கோழி?
ஆண் கோழி

என்ன ஆன்?
ஸ்விச் ஆன்

என்ன ஸ்விச்?
ஃபேன் ஸ்விச்

என்ன ஃபேன்?
உஷா ஃபேன்

என்ன உஷா?
பீ.டி உஷா

என்ன பீ.டி?
ரன்னிங் பீ.டி

என்ன ரன்னிங்?
ஃபாஸ்ட் ரன்னிங்

என்ன ஃபாஸ்ட்?
ப்ரேக் ஃபாஸ்ட்

என்ன ப்ரேக்?
லஞ்ச் ப்ரேக்!


மேற்கண்ட பாடல்களைத் தெரியப் படுத்திய, ஷார்லட் நவசக்தி தமிழ்ப் பண்பாட்டுக் குழுவைச் சார்ந்த செந்தாமரை, ஸ்ரீராம், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருக்கு மிக்க நன்றி!


காணாததை, கண்டு தெரிஞ்சுக்க!
தெரியாத‌தை, கேட்டுத் தெரிஞ்சுக்க!!

19 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

ரொம்ப நல்லாயிருக்கு ..

சின்ன வயசுல பாடி பார்த்தது நியாபகம் வருது

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போ கூட டிக் டிக் பாட்டு பாதி தான் தெரியும் ( ஹி ஹி ஹி )

பழமைபேசி said...

//
உருப்புடாதது_அணிமா said...
ரொம்ப நல்லாயிருக்கு ..

சின்ன வயசுல பாடி பார்த்தது நியாபகம் வருது
//
தான்சானியத் தளபதி வாழ்க!

http://urupudaathathu.blogspot.com/ said...

///
பழமைபேசி சொன்னது…


ஒரு வாரமா வலையில காணோம்! சரி, இன்னைக்கு வந்தாச்சு!!
வந்ததும் நம்ம பக்கம் வந்திருந்தா, நல்ல மனுசன்னு சொல்லலாம். அதான் வரலையே? அப்புறம் எப்படி சொல்லுறது??////////இப்போ சொல்லுங்க.. நான் நல்ல மனுஷனா????
(இப்படி எல்லாம் கேட்டு தான் நல்ல மனுசன்னு பாராட்டு வாங்க வேண்டியதா இருக்கு )

http://urupudaathathu.blogspot.com/ said...

பழமைபேசி said...

தான்சானியத் தளபதி வாழ்க!///

நைஜீரியா போய் தான்சானியா வந்தது டும் டும் டும்...

மறுபடியும் நைஜீரியா போவோம்ல...

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
இப்போ சொல்லுங்க.. நான் நல்ல மனுஷனா????
(இப்படி எல்லாம் கேட்டு தான் நல்ல மனுசன்னு பாராட்டு வாங்க வேண்டியதா இருக்கு )
//

நல்ல மனுசன்!
நல்ல மனுசன்!!
நல்ல மனுசன்!!!

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...

நைஜீரியா போய் தான்சானியா வந்தது டும் டும் டும்...

மறுபடியும் நைஜீரியா போவோம்ல...
//

நாங்களும் மாத்தி சொல்லுவம்ல‌?

http://urupudaathathu.blogspot.com/ said...

பழமைபேசி said...

/ 1. நல்ல மனுசன்!
2.நல்ல மனுசன்!!
3. நல்ல மனுசன்!!!///


அது யாரு புதுசா வேற ரெண்டு நல்ல மனுசனுங்க??

நான் ஒருத்தன் தானே ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///பழமைபேசி said...
நாங்களும் மாத்தி சொல்லுவம்ல‌?////


மறுபடியும் நாங்க கேப்போம்ல??

அப்போ என்ன பண்ணுவீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்புறம் முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்...

மொத போனி நான் தானா??


I'm d First one !!!!

நசரேயன் said...

ஆகா.. அதுக்குள்ள முந்திட்டாரே.
எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

///நசரேயன் said...

ஆகா.. அதுக்குள்ள முந்திட்டாரே.
எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு///


நாங்க எல்லாம் யாரு???
அதுக்கெல்லாம் கிட்னி வேணும் மாப்ள

Mahesh said...

எனக்கென்னமோ ஃபேன், ஸ்விட்ச், ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் சொன்னா மாதிரி ஞாபகம் இல்ல.

"டண் டண்... யாரது.... திருடன்..." அப்பிடித்தான் ஞாபகம்...

பழமைபேசி said...

//Mahesh said...
எனக்கென்னமோ ஃபேன், ஸ்விட்ச், ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் சொன்னா மாதிரி ஞாபகம் இல்ல.

"டண் டண்... யாரது.... திருடன்..." அப்பிடித்தான் ஞாபகம்...
//

எனக்குந்தான்.... Sriram அவிங்களத்தான் கேக்கனும்.

Anonymous said...

Me the escapppu....

அமிர்தவர்ஷினி அம்மா said...

காணாததை, கண்டு தெரிஞ்சுக்க!
தெரியாத‌தை, கேட்டுத் தெரிஞ்சுக்க!!

நன்றி திரு. பழமைபேசி அவர்க்ளே.

உங்களால் தெரியாததை தெரிந்துகொள்கிறேன்.

தற்காலிகமாய் நினைவிலிருந்து அகன்றதையும் வெளிக்கொணர முடிகிறது.

பழமைபேசி said...

//Sriram said...
Me the escapppu....
//

வாங்க Sriram! நீங்க பாட்டைப் பின்னூட்டமாத் தெரிவிச்சதுக்கு நாந்தான் நன்றி சொல்லனும். அடிகடி வந்து போங்க!!

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said... //

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா! வணக்கம்!!

Anonymous said...

Nanri ellam ethukkkunga...

I just shared my thoughts...

Solla ponaal 10 varushathukku appuram intha paadalai ninaivu koora vaithathu ungal pathivu thaan...

Keep rocking...