11/03/2022

The Good Egg

தீயவிதை (The Bad Seed) எனும் தலைப்பில், தவறான பழக்கங்களை உடைய ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பட்டியலிட்டு, அந்தக் குழந்தை எப்படியானதை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் சொல்லி, உணர்ந்து கொண்ட பின்னும் சமூகம் எப்படி அந்தக் குழந்தையை முன்முடிவோடு பார்க்கின்றது? அதிலிருந்து எப்படி மீண்டு கொள்வது என்பதை எல்லாம் சொல்லி இருப்பார் ஆசிரியர். தொடர்ந்து அதற்கு நேர்மாறாகவும் ஒரு கதையைப் படைத்திருக்கின்றார். அதுதான் The Good Egg.

முட்டை என்பதுவும் ஒரு குறியீடு. ஒரு பெட்டியில் இன்னபிற 11 முட்டைகளோடு 12ஆவது முட்டையாக இது இருக்கும். நல்லபழக்கங்களையே கொண்டிருக்கும். எஞ்சிய முட்டைகள் என்னவெல்லாம் கூடாதன செய்கின்றது என்பதைச் சொல்லி, அவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் இந்த முட்டையானது சரி செய்து கொண்டே இருக்கும். நாளடைவில் மன அழுத்தம் கண்டு, அதன்காரணமாக ஓட்டில் சிறு விரிசல் கண்டுவிடும். உணர்ந்து கொண்ட முட்டையானது வெளியேறிப் போய் வெளியுலக வாழ்வை வாழத்தலைப்படும். அதனால், ஏற்பட்ட விரிசல் மறைந்து விடவே மகிழ்வுடன் மீண்டும் வந்து நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளும். நான்கு வயதுக் குழந்தைக்கான கதை. https://anyflip.com/iege/ruok/basic

பகுப்பாய்வு (inference) செய்யத் தலைப்பட்டால் பல்வேறு பற்றியங்களாக எண்ணங்கள் விரிந்து கொண்டே போகும். எல்லையே இல்லை. அன்றாட வாழ்வில் இடம் பெறக்கூடிய நிகழ்வுகள், எது நல்லது, கெட்டது, மன அழுத்தம் எப்படி ஏற்படுகின்றது? குழுவாதம், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இது தொடர்பாகவும் இணையத்தில் நிறையக் கட்டுரைகளைக் காணலாம். https://childrenslibrarylady.com/the-good-egg-by-jory-john/

உயர்வு, தாழ்வு எனும் பார்வையில் இருவேறு கதைகளை ஆசிரியர் படைத்திருந்தாலும் கூட, இரண்டிலுமே தகாதன துல்லியமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, அவற்றைச் சொல்லிச் சரி செய்வதை விட்டுவிட்டுத் தாமே சரி செய்து கொண்டிருப்பதால் ஏற்படும் பின்னடைவையும் சுட்டிக் காண்பிக்கின்றார். எதிர்மறையென முகஞ்சுழிக்கலாகாது.

சமூகத்தில் மனத்தைக் கொள்ளை கொள்வதற்காகவே பெருமை பேசுதல், உயர்வுநவிற்சி, மகிழ்வூட்டி மீன்பிடித்தல் போன்ற வேலைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. Persuasion is emotional first and rational second. Indeed, we are more likely to yield to persuasion in order to maintain or attain certain mood states than in order to gain knowledge or advance our thinking. https://hbr.org/2015/06/persuasion-depends-mostly-on-the-audience. இதனால்தான் பொய்யுரை பேசி விபூதியடித்தலென்பதும் நம்மிடையே இரண்டறக் கலந்திருக்கின்றது. Choice is yours. Yes, Persuasion Depends Mostly on the Audience!!

இந்தக் கதை உணர்த்தும் மற்றுமொரு கருத்து, work life balance. தன்னார்வத் தொண்டு போற்றத்தக்கதுதான். விளம்பரபோதை, புகழ்வெளிச்சம், குழுக்களுக்கிடையேயான அக்கப்போர் போன்றவற்றால் அதுவேயென இருந்து விடுவதுமுண்டு. உள்மன அழுத்தம், ஓடு விரிசல் கண்டுவிடும். உஷாரய்யா உஷாரு!!

No comments: