11/04/2022

No, David!

மிகவும் எளிய கதை.  நான்கு வயதுக் குழந்தைகளுக்கான கதை என்றாலும் கூட, இரண்டு வயதுக் குழந்தைகளிலிருந்தேவும் சொல்லப்படுகின்ற கதை. ஆகாதன ஒவ்வொன்றுக்கும், ‘நோ, டேவிட்’ சொல்லிக் கொண்டே போய், கடைசியில் ‘yes David, I love you' என்பதாக முடிகின்றது. https://fliphtml5.com/kdivq/wokb/basic

இதற்கும் ஏராளமான திறனாய்வுகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. கதை சிறந்த கதை என்றால், கதை பிறந்த கதை இதனினும் சிறப்பு. கதாசிரியர், தமது ஐந்தாவது வயதில்(1964), அவருடைய அம்மா பேசியதைச் சிறு நூலாக எழுதி வைத்திருப்பார். அதில், “No David, I love you" எனும் சொற்கள் மட்டுமே இருக்கும். 1998ஆம் ஆண்டில் அது எப்படியோ அவரது கைக்குக் கிடைக்கின்றது. அதையே நூலாக்கி விட்டார். இன்று அது மிகவும் புகழ்பெற்ற கதைநூல். இதே நூல், அமெரிக்கக் குடிமை, சட்டத்தின் ஆட்சி என்பதற்கான பாடத்திட்டத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. https://www.csusm.edu/slce/civicengagement/literacyandthelaw/unit1/index.html

சொல்லப்படுகின்ற தகவல் உண்மையா? மனத்துக்கு இதமாக இல்லாத நேரத்திலே, இது ஏன் சொல்லப்படுகின்றது? நோக்கம் என்ன? சமூக விழுமியம் சார்ந்த கருத்தா, தன்னலம் சார்ந்த கருத்தா? இவையெல்லாம்தான் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது. The purpose of nonprofit organizations is generally to improve quality of life for others at a community, local, state, national, or even global level.

இன்னாநாற்பதுக்குப் பிறகுதான் இனியவைநாற்பது. இஃகிஃகி, விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுவோம். In the author’s note, the author states, "Of course, 'yes' is a wonderful word. But 'yes' doesn't keep the crayon off the wall." கதைகள் ஆய்ந்து கலந்துரையாடவே! செம்மாந்து போய் மகிழ்ந்திருப்பதற்கானவை அல்ல!

Cheers! Happy Weekend!!

No comments: