தமிழ் அமைப்புகள் சார்ந்த நண்பர்களிடம் அடிக்கடி சொல்வது, நாம் அமெரிக்க வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென. முறைப்படி எப்படிக் கற்றுக் கொள்வது? இருக்கின்ற எல்லா பால்வாடிக் கதைகளையும் படித்துவிட்டால் போதும் கற்றுக் கொண்டு விடலாம். இஃகிஃகி. பென்சில்வேனியா இலக்கிய வட்டத்தில் நிறையக் கதைகளையும் பகுப்பாய்வுக் கட்டுரைகளையும் கூட எழுதி இருந்தோம்.
நெகடிவ், விமர்சனம், எதிர்மறை என எதிர்மறையாக அணுகும் போக்கு நம்மிடத்தில் தூக்கலாக இருப்பதால், தற்போதைக்கு இரு நெகடிவ் கதைகளைப் பார்க்கலாம். அவை இரண்டுமே 3 அல்லது 4 வயதுக் குழந்தைகளுக்கானது.
o0o0o0o0o0o0
ஒரு டைனோசர்க் குழந்தை, ரெக்ஸ், பள்ளிக்கூடம் செல்லும் நாள் வந்துவிடும். பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைக் கண்டதும் தின்ன வேண்டும் போல இருக்கும். எல்லாரையும் விழுங்கி விடும். ஆசிரியர் வெளியே துப்பிவிடும்படிக் கட்டளை இடுவார். பிள்ளைகள் ரெக்ஸிடம் ஒதுங்கிப் போவர். மாலையில் சோகமாக வீடு திரும்புவாள் ரெக்ஸ். அப்பா டைனோசர் கண்டுபிடித்து அறிவுரை கூறுவார். அடுத்த நாளும் ஒரு பிள்ளையை விழுங்கி விடும். அதற்குப் பின் திருப்பம் நிகழும்.
https://www.camplanoche.com/wp-content/uploads/2020/09/We-Dont-Eat-Our-Classmates.pdf
https://static1.squarespace.com/static/56663dee841abafca76d6f46/t/61676c630f190f177202bc28/1634167907616/We+Don%27t+Eat+Our+Classmates_final+reading+guide.pdf
இரண்டு நிமிடக் கதைதான். ஆனால் பகுப்பாய்வு செய்யத் தலைப்பட்டால் நாள் முழுதும் பேசிக் கொண்டே இருக்கலாம். பல குறியீடுகள், பல படிமங்கள், சொல்லாமற்சொல்லும் பல தகவல்கள்.
o0o0o0o0o0o0
தீய விதை என்பது கதையின் தலைப்பு. தலைப்பே ஒரு குறியீட்டில், படிமத்தில்தான் அமைந்திருக்கின்றது. விதை என்பது ஓர் இனத்தைப் பெருக்க வல்லது. அதில் எப்படி தீயது என்பதாக இருக்க முடியும்? மேலும் விதை என்பது குழந்தைகளைக் குறிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. அப்படியான விதை எப்படியோ தீயபழக்கங்களைக் கொண்டிருக்கும். ஒருவர் மெல்லுவார். தீய விதை என்பதாலே உடனே துப்பி விடுவார். பிறகு அது கழித்துக் கட்டிய கூல்டிரிங்க்கேனில் தங்கிக் கொள்ளும். அந்த கூல்டிரிங்க்கேன் என்பது கூட ஒரு குறியீடு. அதற்குள் இருக்கும் போது சிந்தனைக்கு ஆட்பட்டதாலே மாறுபட்ட விதையாக உருவெடுக்கும். ஆனாலும் பார்ப்போரிடத்தில் அதன்மீதான முன்முடிவு(stereotype) தொடர்ந்து கொண்டே இருக்கும். கடைசிப் பக்கத்தில் ஆசிரியர் அதை மிக நுட்பமாகக் கட்டமைத்து வாசகர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.
https://pubhtml5.com/prye/ixmw
https://theresponsivecounselor.com/2018/06/the-bad-seed-review-and-activities.html
https://childrenslibrarylady.com/the-bad-seed/
o0o0o0o0o0o0
இரண்டு நிமிடங்களில் படித்துவிடக் கூடிய இவ்விரண்டு கதைகளுக்குமே ஏராளமான திறனாய்வுகள், பயிற்சிக் கட்டுரைகள் எனப் பலவற்றை இணையத்தில் நாம் காணலாம். ஒவ்வொன்றும் புதுப்புது புரிதற்தோற்றங்களை நமக்குள் ஏற்படுத்தும்.
இப்படியான எதிர்மறைக் காட்சிகள், எண்ணங்கள் என்பவை நல்லதொரு விளைவை ஏற்படுத்தவே நம் முன்வைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment