11/19/2022

ஆண்கள் நாள் Nov 19, 2022

அமைப்புகளில் பெண்கள் நாள் கடைபிடிக்கப்படுவதைக் காணலாம். அதேபோல ஆண்கள் நாள் கடைபிடிக்கப்படுவதில்லை. என்ன காரணம்? பெண்களைக் கொண்டாடுவதின் வழி, உணர்வுப்பூர்வமாக நெஞ்சைநக்குவதின் வழி, கூட்டம் சேர்ப்பது மட்டுமே இலைமறையான நோக்கம். உள்ளபடியே பெண்களுக்கான சமத்துவம், உரிமைகள் கோலோச்ச வேண்டுமானால் மறுதரப்புக்குத்தான் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட வேண்டும். இஃகிஃகி. ஆகவே, ஆண்கள் நாள்தான் அமைப்புகளால் முதலில் கடைபிடிக்கப்பட்டாக வேண்டும். அப்படியான நாளைக் கடைபிடித்தால் கூட்டம் சேராது. அங்கு இருக்கின்றது பின்னடைவு.

ஆண்கள் நாளை இரு விதமாக நோக்கலாம். தனிமனிதக் கோணத்தில். பண்பாட்டுக் கோணத்தில்.

தனிமனிதர்களாக, ஆண்களிடத்திலே ஆண்மை என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடிக்கு ஆட்பட்டிருக்கின்றது. காரணம், மனநலக்கேடும், உடல்நலக் கேடும்.

பண்பாட்டுக் கோணத்திலே, ஆண்மை என்பது என்னவென்பதே அறிந்திராத சூழல். ஆண்மை என்பது யாதெனில், ஆண்பாலினத்துக்குரிய சமூக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் தரம் குன்றாமலிருப்பதும். எப்படி மேம்படுத்திக் கொள்வது? பெண்ணியம் என்பது மேம்பட்டுவருகின்றவொன்று,  fluid and ever-changing, like the sea. வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஆண்மை என்பது அப்படியன்று. வரையறுத்துச் சொல்லிவிட முடியும், it’s rigid and enduring, like the mountains. சரி, பண்பாட்டுத் தளத்தில் ஆண்மைக்கான வரையறைகள் என்னென்ன?

1. வாழ்வின் நோக்கம், இலக்கு கொண்டிருத்தல்.

2.மேற்படி இலக்குகளுக்காக திட்டமிட்டிருத்தல்

3.அகவளர்ச்சியோடு இருத்தல்

4.நேர்மையும் வாய்மையுமாய் இருத்தல்

5.காத்திருத்தல், தம்மையும் தம்மோடு இருப்போரையும்

6.மாற்றுப்பாலினத்துக்கு முகமன்னோடு இருத்தல்

தனிமனிதக் கோணத்திலே எப்படி மேம்பாடு கொள்வது?

உலகம் யாவிலும் ஆண்மைக் கோளாறுகள், சிதைவுகள் இருப்பதாய்ச் செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. அரசுகள் பல முன்னெடுப்புகளையும் கையாண்டு கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணமாய் இருப்பவை, மனநலப் பயிற்சியின்மையும் உடல்நலப் பயிற்சியின்மையும்தான். இதன்நிமித்தம், மனநலக்கேடுகளும் உடல்நலக் கேடுகளும். சீர்கேடான உணவுகள், கூடுதலான ஊடகப்புழக்கம், பொருள்வயமான வாழ்க்கை, விளம்பர ஆதிக்கம் உள்ளிட்ட பலவற்றையும் உணர்ந்து முறைப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

https://time.com/6096701/china-masculinity-gender/  After Britain and America, It’s China’s Turn to Worry about Masculinity


2 comments:

anon12 said...

Why men need a separate day when every day of the year is theirs. Fucking moron

பழமைபேசி said...

:-) to set aside a day to think and act.