9/30/2022

கனன்றெரியும் திரிகள்

“In this day and age, the digital age, you can forget about a resume; you are what your social media says about you.”

கவ்விக் கொள்பவர்கள் கவ்விக் கொள்ளலாம். தம்நிலை அறியாதோர்க்கு அனுதாபங்கள்.

குழுவுணர்வோடு செயற்படும் போது, தன்னுமை, தம்நிலை இழப்புக்கு ஆளாவது தவிர்க்கவே இயலாது. சொல்வதெல்லாம் சரி போலவும், குழுவுக்கு வெளியிருந்து வரும் கருத்துகள் தவறு போலவும்தான் புலப்படும். அதுதான் mob, echo chamber, manipulation, divide & polarize முதலானவற்றின் அடிப்படை, தோற்றுவாய்.

ஆர்வத்தோடும் பற்றோடும் தன்னார்வத் தொண்டு புரியத்தான் வந்திருப்போம். எங்கிருந்தோ வரும் தூண்டுகோல்கள் தீண்டத் தீண்டத் திரிகளாய் நாம் எரிந்து கொண்டிருப்போம்; இருள் அகற்றிக் கொண்டிருக்கும் ஒளியெனும் செருக்கோடு! 

திரிகள் எரிந்து சாம்பலாகிக் கொண்டேயிருக்க, நிலைபெற்றிருக்கும் விளக்குகள் மட்டும் காலாகாலத்துக்கும் ஒளிதரு விளக்குகளாய்ப் புகழெய்தும். ஒளிதரு விளக்குகளாய்ப் புகழெய்தும். அந்த ஒளியின் வெளிச்சத்தில் தவறுகள் ஏதேனும் நிகழ்ந்து விட்டால், அது திரியின் தவறுதானே! கூடுதலாய் ஒளிர்ந்துவிட்ட திரியின் தவறுதானே?! 

விளக்குக்குச் சேதாரமில்லை, தீண்டும் தூண்டுகோல்கள் இருக்குமிடம் யாரறிவார்?!

இத்தனைக்கும் இடையில், மின்னெழுத்துப் புற்றுகள் மலைபோலப் பெருகியிருக்கும். காலத்துக்கும் அழியாத மின்னெழுத்துப் புற்றுகள், மலைபோலப் பெருகியிருக்கும். எரிந்து எரிந்து தீய்ந்து போன திரிகளின் சாம்பலினால் கட்டியெழுப்பப்பட்ட மின்னெழுத்துப் புற்றுகள் மலைபோலப் பெருகியிருக்கும். 

நீ, நீயாக இருந்து விடு! அறமோங்க இருந்துவிடு! எரிவது நீயாகினும், அமெரிக்கத் தமிழ் விழுமியமென மீண்டெழுவாய்!

“In this day and age, the digital age, you can forget about a resume; you are what your social media says about you.”


No comments: