9/10/2022

அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் அக்கப்போர்

 https://youtu.be/GYoSQHEWI5Q

இக்காணொலியை ஒரு வாட்சாப் குழுமத்தில் பகிர்ந்திருந்தனர். அதன் நிமித்தம் கலந்துரையாடல் இடம் பெற்றது. அதில் நாம் பகிர்ந்து கொண்ட கருத்துகள் கீழே வருமாறு:

o0o0o0o0o0o0o0o

மனம் திறந்த உரையாடல்கள் நிகழ்வதில்லை. விமர்சனங்கள் வரவேற்கப்படுவதில்லை. ஆனால் நீதிமன்றக் கதவுகள் தட்டப்படுகின்றன. We are in America! American values should be exercised. 😍

o0o0o0o0o0o0o0o

ஆண்டுக்கு ஒருமுறையேனும் பொதுக்குழு கூட்ட வேண்டுமென்பது விதி. கூட்டம் கூட்டப்படுகின்றது. விதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறைந்தபட்ச வருகை இல்லை. பொறுப்பாளர்களுக்கான தோல்வி அது. குறிப்பாக, செயலாளருக்கான தோல்வி அது. கூட்டத்தின் வருகைக்காக அவர் உழைத்திருக்க வேண்டும். சரி, வாழ்வில் சில தொய்வுகள் ஏற்படுவது இயல்பு. மீண்டுமொருமுறை கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்தானே? விதிகளில் குறிப்பிட்டபடி கூட்டி ஆயிற்று. கோரம் இல்லாதபட்சத்தில், கோரம் உள்ள கூட்டம் கூட்டப்பட வேண்டுமென விதிகளில் இல்லை எனச் சொல்லி நழுவுவது அறம்தானா?

o0o0o0o0o0o0o0o

மிகப்பெரும் மாற்றம். தீர்மானம் குறித்து எல்லா பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி விட்டு, இல்லை என்போர் மின்னஞ்சல் அனுப்புக. அல்லாவிடில் தங்கள் வாக்கு ‘ஆம்’ என்றே எனக் கருதப்படும். இஃகிஃகி, பொதுக்குழு உறுப்பினர்கள் மின்னஞ்சல்கள் பார்ப்பதே அரிது. அப்படியே பார்த்தாலும் மெனக்கெட்டு எதிர் ஓட்டாக மின்னஞ்சல் அனுப்புவார்களா? இப்படியான பழக்கத்தை நாடளாவிய அமைப்பே கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகின்றது. இப்படியான எல்லாச் செயல்களும் மேற்கண்ட சூழலுக்கே இட்டுச் செல்லுமென 2017 துவக்கம் எழுதி வருகின்றேன். கண்டுகொள்ளவில்லை. இன்று சிலிர்த்தெழுந்து இருக்கின்றனர். நாம் அமெரிக்காவில் இருக்கின்றோம். 

Five founding ideals of the United States are equality, rights, liberty, opportunity, and democracy. #KeepUpAmericanValues

o0o0o0o0o0o0o0o

ஓர் எழுத்தாளனின் பங்கு என்ன?

கதை, கவிதை, நாடகம், திறனாய்வு முதலான இலக்கியக் கூறுகளினூடாகப் பேசாப்பொருளைப் பேசத் துணிவதும் பொதுப்பார்வைக்குப் புலப்படாதனவற்றைப் புலப்படுத்துவதுமே அவனது பணி. ‘அமெரிக்காவில் தமிழ் அமைப்புகளும் பணிகளும்’ என்கின்ற பொருண்மையிலே நூலெழுதி ஆவணப்படுத்துவானாயின், ஆவணமென்பது காலத்தின் சாட்சியாக என்றென்றும் நிலைத்திருக்கும். அமைப்புகளின் பொறுப்புகளுக்கு வந்து போவோர், தற்காலிகமாக வந்து போவோர் புரிந்து பொறுப்புடன்  செயற்பட வேண்டும். நதியின் ஓட்டத்தில் நாம் ஒருதருணம் பயணிக்கும் பயணி மட்டுமே!

o0o0o0o0o0o0o0o

Basic principles should be adopted first! Otherwise can of worms would prevail in one or the other form.

o0o0o0o0o0o0o0o

 //An Annual General body Meeting of the Members of the Federation shall be held between the fifteenth of May and the fifteenth of September of each year. One third of the delegates and Life members in good standing shall constitute a quorum at any general body meeting or special general body meeting of the Federation.//

இவைதாம் கொடுக்கப்பட்டிருக்கும் விதிகள். மூன்றில் ஒரு பங்கினர் கலந்திருக்க வேண்டுமென்கின்றது. அப்படியான வருகை இடம்பெறவில்லை. அப்படியானால், மே - செப் மாதங்களுக்கிடையேயான கூட்டம் நடக்கவில்லை என்பதுதானே பொருள்? ஆகவே, செப்டம்பருக்குள் கோரத்துடன் கூடிய கூட்டம் நடத்தப்பட்டாக வேண்டுமென்பதுதானே முறை?

இதைக் கேட்காமல், தமிழ், இனம், மொழி, சமயம், அவரவர் வசதிக்கொப்ப அப்படியானவை நிகழக்கூடாதென்றெல்லாம் பேசுவதில் ஒருபொருளுமில்லை.

எந்த அமைப்பானாலும் குறைந்தபட்ச அறம் ஒழுகப்பட வேண்டும். அல்லாவிடில் பொறுப்புகளுக்கு அழகல்ல. பெருமை சேர்க்காது.

o0o0o0o0o0o0o0o

ஒருவர் மாற்றுக் கருத்து வைக்கின்றார். கூர்ந்து கவனிக்க வேண்டும். விழுமியம் பொருந்தியதாக இருப்பின், மாற்றத்தைக் கொணர வேண்டும். இல்லையா, முறையான பதிலைக் கொடுக்க வேண்டும். உள்நோக்கத்துடன் கூடிய எதிர்வினையாக இருக்கும்பட்சத்தில், புறந்தள்ளிவிடலாம். இந்த மூன்று தெரிவுகளுக்கும் அப்பாற்பட்டு, மாற்றுக்கருத்து வைப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனப் பொறுப்பில் இருப்போர் கொந்தளிப்பதெல்லாம் பத்தாம்பசலித்தனமானது. அமெரிக்காவுக்கோ தமிழுக்கோ பெருமை சேர்க்கக் கூடியது அல்ல. தற்காலிகத் தோற்றத்தில் தாம் புகழாளர் போல சுயமோகம் கொள்வதற்கு மட்டுமே உதவக்கூடியது அது. தமிழர்கள் நாம் அனைவரும், அமெரிக்க விழுமியங்களைக் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும். முன்னுரிமை கொடுக்க வேண்டும். அல்லாவிடில், நம் பிள்ளைகளே நம்மை மதிக்க மாட்டார்கள்.

o0o0o0o0o0o0o0o

We should participate in discussions in healthy way. Hope that would add value.

o0o0o0o0o0o0o0o

முழுவதும் கேட்டு முடிச்சிட்டன். நண்பர்கள் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால், தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிறீங்க. நாடளாவிய அமைப்பில் இதேதான் 2017 துவக்கம் நடந்து வருகின்றது. அப்போதெல்லாம் ஒருவர் கூடப் பொதுவெளிக்கு வரவே இல்லை. வேடிக்கை பார்த்தீர்கள். அதுவே ஒப்புதலாகக் கொண்டு, அதே வாடிக்கையானது அடுத்தடுத்த அமைப்புகளுக்கும் பரவிக் கொண்டு இருக்கின்றது. Have fun. வினை விதைத்தவர் வினை அறுப்பர். தினை விதைத்தவர் தினை அறுப்பர். தமிழ் வளர்க்கிறதெல்லாம் அப்பாலிக்கா. முதலில், அடிப்படை அறம், மனிதம்! Simply stick to the basics!!

o0o0o0o0o0o0o0o

வணக்கம். நம் அனைவருக்கும் முன் உள்ள சவால் என்பது, பொதுக்குழுக் கூட்டங்கள் சிறப்புற இடம் பெற வேண்டும். அதற்கு குழு உறுப்பினர்கள் பெருவாரியாகக் கூட்டங்களுக்கு வர வேண்டும். வந்தால் மட்டும் போதாது, கருத்துகளை அச்சத்திற்கிடம் கொடாமல் மனம் திறந்து பேச வேண்டும். அது நடந்தாலே போதும், எல்லாமும் சரியாகி விடும். பிழை, பொதுக்குழு உறுப்பினர்களிடம்தான். அவார்கள் மெத்தனமாக இருந்தால், வல்லான் வகுப்பதே வாய்க்கால்.

o0o0o0o0o0o0o0o

ஒன்று, பொதுக்குழு உறுப்பினர்கள் தத்தம் கடமையைச் செய்ய முன்வர வேண்டும். அல்லது, செயற்குழு உறுப்பினர்கள் கொம்புமுளைத்தது போன்ற உணர்வின்றிச் செயற்பட முன்வர வேண்டும்.

o0o0o0o0o0o0o0o

 Friends, let's not go behind some individual. Let's have fruitful conversation about where/what we are missing so that such odds can't happen further.

o0o0o0o0o0o0o0o

 It is about all Tamil Non-Profit Organizations in general. Having constructive discussion is community work too.

o0o0o0o0o0o0o0o

கருத்துகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். The great thing about social media is how it gave a voice to voiceless people. எதிர்க்குரலை, மாற்றுக்கருத்துகளை, தீங்காகவும் வில்லத்தனம் போன்றும் பார்க்கக்கூடிய மனோபாவம் தமிழ்ச்சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்றது. வைக்கப்படும் கருத்து சரியா, தவறா என்பதுதான் பார்க்கப்பட வேண்டும்.

இந்தக் குழுமத்தில், துவக்கத்திலிருந்தேவும் பார்க்கின்றேன். தமிழ்நிகழ்ச்சிகள் தொடர்பாக விளம்பரச் செய்திகள், தகவல்கள், தேர்தல் குறித்த விளம்பரங்கள் பகிர்வார்கள். பார்த்துவிட்டு சும்மா இருந்து விட வேண்டுமென நினைக்கின்றார்கள். 

திறனாய்வுக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்ற போது, இயலுமானால் தமிழ்ப்பணி செய்யுங்கள். நெகடிவ்வாகப் பேசி, மோட்டிவேசனைக் குறைக்காதீர்கள் என அறிவுரை வழங்கப்படுகின்றது. எதிர்க்குரலை நசுக்கப்பார்க்கும் ஆதிக்க சக்தியின் குரலாகத்தான் நான் இதைப் பார்க்கின்றேன். மன்னிக்கவும். இது அமெரிக்கா. உங்களுக்குத் தெரியுமா? இந்த நிமிடம், அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும். ஓட்டுகள் பதிவாகிக் கொண்டிருக்கும். இது ஒரு தேர்தல் நாடு. வீட்டு உரிமையாளர் சங்கங்கள் முதற்கொண்டு, இலாபநோக்கற்ற அமைப்புகள், உள்ளூராட்சி அமைப்புகளென 3006 கவுண்டிகளில் ஏதோவொரு தேர்தல் நடந்து கொண்டேதான் இருக்கும். தேர்தல் என்றால், எதிரும் புதிருமான கருத்துகள்தாம் களமாடிக் கொண்டிருக்கும்.

அமெரிக்காவில் அமெரிக்கவாழ்வை வாழப்பழகுவோம்! நன்றி!! 🤝🏻😍🙏🏽

o0o0o0o0o0o0o0o

நண்பா, வணக்கம். 2009-2017 வரையிலும் இருந்த அமைப்பு வேற. இப்ப இருக்குற அமைப்பு வேற. விழாவின் இறுதி நாளின் போதேவும் முறையாக சர்வே எடுக்கப்படும். சர்வே முடிவுகள் அப்படியப்படியே பகிரங்கமாக வெளியிடப்பட்டும் வந்தது. இது நீங்க மட்டும் அல்ல. நிறையப் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பரிசு பெறுவர் என எண்ணிக் குழந்தைகளோடு சென்று மனத்தாங்கலுடன் வீடு திரும்பினர். பிரச்சினை என்னன்னா, யாரும் வெளியில தத்தம் உளக்குமுறல்களை, கருத்துகளைச் சொல்வதில்லை. ஆகவே, they take it for granted to ride. Sorry for the loss of $3000.

இது போன்றவற்றை மூடிமறைக்கத்தான் நெகடிவ் பேசாதே என்பது. எங்கு பேச்சு மறுக்கப்படுகின்றதோ, அங்கு ஏதோ பெரிய தவறு நடக்கின்றதென்பதே பொருள்! 😫

o0o0o0o0o0o0o0o

yes man committee

இங்கு பகிரப்பட்ட காணொலிகளில் சொல்லப்பட்டது, ஆதரவாளர்களான ஆமாம்சாமிகளைக் கொண்ட கமிட்டிகளை அமைத்துக் கொள்வார்கள். சொன்னவரே நாடாளாவிய அமைப்பின் அப்படியான கமிட்டியில் முக்கிய உறுப்பினராக இருப்பதுதான் வேடிக்கை. நகைமுரண்! Jokes apart, let's look into it constructively.

நாம் அமெரிக்காவில் இருக்கின்றோம். ஆங்கிலம் முதன்மை மொழி, அமெரிக்கப் பண்பாடு முதன்மை. அதற்காக தமிழ்மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் கைவிட்டு விட வேண்டுமா? இல்லை என்கின்றது அமெரிக்க சாசனம். அமெரிக்கப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் இரு கண்கள் போலே. சில இடங்களிலே அமெரிக்கப் பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் முரண் வருகின்றதென வைத்துக் கொள்வோம். அதற்காகத் தமிழ்க் கண்ணைக் குத்திக் கொள்ள வேண்டுமா? இல்லை. அமெரிக்காவில் இருக்கின்றபடியினாலே, தமிழ்க்கண்ணை அப்போதைக்கு மறைத்துக் கொள்ள வேண்டும். இதுவே தமிழ்நாட்டில் இருக்கும் போது இரு கண்களுக்குமிடையே பிணக்கு வருகின்றது, அமெரிக்கக் கண்ணை அப்போதைக்கு மறைத்துக் கொள்ள வேண்டியதுதான். சரி, அமெரிக்கப் பார்வையில் கமிட்டிகள் எப்படித்தான் இருக்க வேண்டும்?

https://www.senate.gov/committees/ செனட் என்பது ஒன்றிய அரசிலும் உண்டு. மாகாண அரசிலும் உண்டு. கமிட்டிகளிலே பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கு சம இடங்கள். இதுதான் அமெரிக்கப் பண்பாடு. இதைத்தான் நாம் கடைபிடிக்க வேண்டும். காப்போம் அணி, வளர்ச்சி அணி என இரு அணிகள். அட்வைசரி கமிட்டியில் எத்தனை பேர் மாற்றுக்கருத்துள்ளவர்கள் இருக்கின்றனர்? இஃகிஃகி.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். 20 ஆண்டு காலத்தில் பல தமிழ் அமைப்புகளைப் பார்த்தாயிற்று. பெரும்பாலானவற்றில், செயற்குழு என்பது பொம்மைக்குழு. கொம்பு முளைத்தது போல நினைத்துக் கொள்வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இது. அண்ணன் சொல்றாரு, ஆமா போடு என்பதுதான் இவர்களின் வேலையாக இருக்கும். அதுதான் சக்திமிகு அட்வைசரி கமிட்டி இருக்கின்றதே முக்கிய முடிவுகளை மேற்கொள்ள?!

டேபிளைத் திருப்பு! அமெரிக்கப் பண்பாடு போற்றுவோம்!!

God Bless America! 

No comments: