”நான் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களைக் கவனித்தது, அவரிடமிருக்கும் மொழியடிப்படைவாத நோக்குக்காக. அது பாவாணர் மரபு வந்தது. அதை நான் ஏற்கவில்லை. ஆனால் அந்தத் தரப்பு முக்கியம், அது நம் பண்பாட்டுச்சூழலில் இருந்தாகவேண்டும், இல்லையேல் மொழியின் வேர்கள் பிடுங்கப்பட்டு அது பறந்துவிடும் என நினைக்கிறேன்.” -எழுத்தாளர் ஜெயமோகன். https://www.jeyamohan.in/171456/
தேன்தமிழ் மொழி நல்கும் இலக்கியத்தைப் பேணிப்பாதுகாக்கும் குழுவினரே, ஆறே ஆறு சொற்றொடர்களை எழுதுவதில் இவ்வளவு பிழைகளை மேற்கொள்ளலாகுமா?? சிந்திப்பீர், செயற்படுவீர்!!
o0o0o0o0o
வழுவும் பிழையும் திருத்தப்பட்ட வடிவம்:
வட அமெரிக்கத் தமிழர்களுக்கு வணக்கம்!
தொன்மையும் இனிமையும் நிறை தேன்தமிழ் மொழி நல்கும் இலக்கியத்தைப் பேணிகாக்கும் எங்கள் இலக்கியக் குழுவின் வணக்கம்.
2020 துவக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலான குழுவின் நிறைவுக்கூட்டம், வரும் செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெறவுள்ளது!
நம் குழுவால் போட்டி நடத்தப்பெற்றதில், அமெரிக்க மண்ணின் கதைகளை இந்த மண்ணிலேயே விதைத்த நம் எழுத்தாளர்களின் கதைகள் நூலாகி அச்சேறி உள்ளன.
இந்த விழாவில் “அமெரிக்கச் சிறுகதைகள்” எனும் அந்த நூல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நீங்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டும் எழுத்தாளர்களை வாழ்த்தியும், நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
o0o0o0o0o
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். (குறள்)
o0o0o0o0
#டேபிளைத்திருப்பு
#அமெரிக்கத்தமிழ்ப்பண்பாடு
No comments:
Post a Comment