9/14/2022

தமிழ்ப்பணி

2012ஆம் ஆண்டு வரையிலும் தமிழார்வத்தால் அவரவர் பகுதிகளில் இருக்கும் தமிழ் அமைப்புகளுக்குத் தன்னார்வலர்கள் சிறப்புச் சேர்த்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பின் நிகழ்ந்த உலகப் பொருளாதாரப் பாய்ச்சல் என்பது வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத விரைவினைக் கண்டது. ஆகவே குடிவரவும் பெருகியது. அதன்நிமித்தம் தமிழ் அமைப்புகளின் பணப்புழக்கமும் பன்மடங்கு பெருகிப் போனது. அமைப்புகளுக்குள் வணிகமும் புகுந்து விட்டது. நிற்க.

பெரும்பாலும் தன்னார்வலர்கள் ஆர்வத்தின் காரணமாக பொறுப்புகளில் இருப்பர். மறைந்திருக்கும் சக்திகள் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும். இவர்கள் தன்னிலை அறியாமல் அவர்களுக்குப் பணி செய்து கொண்டிருப்பர். அப்படியானவர்களுக்குத்தான் இந்த அறிவுறுத்தல்.

அமெரிக்க நாட்டின் சட்டதிட்டங்களுக்கே முன்னுரிமை. பிற்பாடுதான் பைலா என்பது. எடுத்துக்காட்டாக, கோரம் இருந்தது எனக் குறிப்பிட்டு கூட்டமுடிவுகள் ஆவணப்படுத்த வேண்டும். எதுவும் சொல்லாமல் விட்டாலேபோதும் அது செல்லாததாகி விடும். கோரம் இல்லாத கூட்டத்தின் முடிவுகளை, கூட்ட முடிவுகளாகக் காண்பிப்பது அதனினும் பெருங்குற்றம்.

https://nonprofitlawblog.com/board-meeting-minutes/

அண்ணஞ்சொல்றாரு, தம்பி செய்றான் பார்ட்டிகள் கவனத்திற்கு. Board directors have many responsibilities. Not fulfilling their responsibilities, as well as the visible actions they take, qualifies as misconduct. Here’s a list of areas that fall under fiduciary duties where board director misconduct can occur:

Reviewing financial statements

Overseeing audits

Overseeing investments

Avoiding hard questions and giving in to groupthink

Not knowing and understanding federal, state and local laws

Non-profit organization directors not knowing the laws for the type of non-profit organization they run

Having ex parte discussions outside the boardroom

Failure to cultivate diversity and independence on the board; lax board director recruitment

Overstepping the threshold for lobbying and political activities

Failing to document actions

Having or allowing conflicts of interest

Inconsistency in filing disclosures 

https://www.boardeffect.com/blog/constitutes-board-director-misconduct/

சாலையில் எல்லாரும்தான் அவ்வப்போது விரைவாகச் செல்கின்றோம். எப்போதாகிலும், யாரோ ஒருவர்தாம் பிடிபட்டுத் தண்டங்கட்டுகின்றனர்; தன்னுடைய இன்சூரன்ஸ் பாயிண்ட்டுகளை இழக்கின்றனர். அதற்காக, விரைவாகச் செல்தலே லெஜிட்மேட் என்றாகிவிடாது.

#டேபிளைத்திருப்பு

#தமிழ்ப்பணி

#அமெரிக்கப்பண்பாடு


No comments: