அமெரிக்கத் தமிழ்ச்சமூகத்தில் நிகழும் எல்லாப் பின்னடைவுகளுக்கும் காரணமாகத் தெரிவது ஒன்றேவொன்றுதான். சாய்வுமனப்பான்மை. மாந்தனினின்று அது பிரிக்க முடியாதது. ஆனால் மட்டுப்படுத்த முடியும். ஒருவர் தன்னுமையோடு(individualism being enforced) இருக்கும் போது அது மட்டுப்படும். ஆனால், அரசியல்சார்பு, சாதி, தனிமனித விருப்பு வெறுப்பு என்பன தமிழ் அமைப்புகளைச் சார்ந்த முக்காலே மூணு வீச பொதுக்குழு உறுப்பினர்களின் மனக்கண்களை கட்டிப்போட்டு விடுகின்றன. ஆகவே நாம் அமெரிக்க விழுமியங்களைக் கடைபிடிப்பதில்லை.
எடுத்துக்காட்டாக, அண்மையில் ஒருவரின் முனைவர் பட்டப்படிப்பு, வேலை குறித்தான சர்ச்சை. இந்த நிமிடத்தில் கிடைக்கப் பெறுகின்ற தரவுகளின்படி அவர் சமூகத்தை ஏமாற்றி இருப்பதாகவே தெரிகின்றது. எப்படி அவரால் பல்லாண்டு காலமாக அப்படி இயங்க முடிந்தது? ஒருதரப்பைக் கடுமையாகச் சாடி இயங்கும் போது, மறுதரப்பு அவரைக் கொண்டாடி இருக்கின்றது. அந்தக் கொண்டாட்டத்தில் சமூகத்தின் மனக்கண்கள் செயலிழந்து போயின.
There's no bias when it comes to facts, and there's no bias when it comes to decency. -Jake Tapper
o0o0o0o0o0
நண்பர் அழைத்திருந்தார். பேசினேன். அவர்தரப்பு நியாயங்களைச் சொன்னார். புரிந்து கொள்ள முடிகின்றது. அழைத்துப் பேசியமைக்கு நன்றிகள் உரித்தாகுக. என் கருத்தாக நான் சொன்னது:
1. அணிக்குள் ஒத்திசைவாக இல்லாதநிலையில் வேலை பார்ப்பது கடினம்தான். நான் உங்கள் இடத்தில் இருந்திருப்பேனெனில், பொதுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டவர் குறித்தான பிரச்சினைகளைப் பொதுக்குழுவுக்குத்தான் எடுத்துச் சென்றிருப்பேன்.
2. பிரச்சினை என வந்து விட்டது, ஊடகங்களிலும் பேசு பொருளாகி விட்டது. இங்கே அவர், அவர் தரப்புக் கருத்துகளை அவர் பதிவிடுகின்றார். நீங்கள் உங்கள் தரப்புக் கருத்துகளைச் சொல்லி இருக்கலாம். நீக்கியது தவறு.
3. என் கவலை என்னவெனில், இந்தக் கலாச்சாரம் அடுத்தடுத்த அமைப்புகளுக்கும் பரவி விடக்கூடாது என்பதுதான்.
4. வரி விலக்குப் பெறுகின்ற எந்தவொரு அமைப்பும், பொதுமக்களின் விமர்சனத்துக்கு ஆட்பட்டதே. நல்லெண்ண அடிப்படையில் அமைப்பினரோடு பேசலாம். உகந்த மேம்பாடு கிட்டாதபட்சத்தில், பொதுவெளிக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.
I am sharing here as to be transparent. And, thanks again, for explaining his perspectives.
o0o0o0o0
Cancelling culture is inhuman in my opinion. We are always have our own rights to share our own perspective/explanations. Very scary.
No comments:
Post a Comment