10/04/2012

இரங்கல்

பிம்பம் காண்பித்துச்
சிரிக்க வைத்த
சற்று நேரத்திற்கெல்லாம்
உடைந்து சிதறி
மரணம் எய்திய
அந்த கடைசி
நீர்க்குமிழிக்குத்
தெரிந்திருக்க
நியாயமில்லை
தன் சாவுக்கும்
அழ ஆள்
இருக்கிறதென்று!!


5 comments:

Anonymous said...

சுமாரான ஒருக் கவிதை .... தொடருங்கள்

வருண் said...

நான் மட்டும்தான் அழுதேன்னு நெனச்சேன்.

நீங்களுமா, மணியண்ணா!

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைத்தது...

Unknown said...

அருமை!மகிழ்ந்தேன்!